நாளை (07/08/2016) காலை 11 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "மன்னாதி மன்னன் " திரைப்படம் , சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது .
http://i66.tinypic.com/jtm9ee.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
Printable View
நாளை (07/08/2016) காலை 11 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "மன்னாதி மன்னன் " திரைப்படம் , சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது .
http://i66.tinypic.com/jtm9ee.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
நாளை இரவு 7 மணிக்கு, சன் லைப் தொலைக்காட்சியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "ராமன் தேடிய சீதை " ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/1zvzy1t.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
http://www.dailythanthi.com/News/Sta...u-Sundaram.vpf
வியட்நாம் வீடு சுந்தரம் மறைவு: தமிழ் திரைப்படத்துறைக்கு பேரிழப்பு; ஜெயலலிதா இரங்கல்
பதிவு செய்த நாள்:
ஞாயிறு, ஆகஸ்ட் 07,2016, 12:46 AM IST
சென்னை,
வியட்நாம் வீடு சுந்தரம் மறைவு தமிழ் திரைப்படத்துறைக்கு பேரிழப்பு என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா இரங்கல்
பழம்பெரும் நடிகரும், இயக்குனருமான வியட்நாம் வீடு சுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பழம்பெரும் தமிழ் திரைப்பட திரைக்கதை ஆசிரியரும், இயக்குனரும், நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். வியட்நாம் வீடு சுந்தரம் திரையுலகம் கண்ட மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர் ஆவார்.
1970-ஆம் ஆண்டு ‘வியட்நாம் வீடு’ என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக திரையுலகில் அறிமுகமானார். இவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘நாளை நமதே’ ஆகிய படங்களுக்கு திரைக் கதை ஆசிரியராக இருந்ததோடு, பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
பேரிழப்பு
இவர் குடும்பப்பாங்கான கதைகளை இயக்குவதில் வல்லவர். வியட்நாம் வீடு சுந்தரம் ‘வியட்நாம் வீடு’ திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது, அறிஞர் அண்ணா விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.
எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான வியட்நாம் வீடு சுந்தரம் மறைவு தமிழ்த் திரைப்படத்துறையினருக்கு பேரிழப்பாகும். வியட்நாம் வீடு சுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாளை நமதே மக்கள் திலகம் சூப்பர் பஞ்ச்
https://youtu.be/XJHRgBvjbic
எதிரிகள் தாக்கும்போது மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு. நாற்காலியில் உருண்டு புரண்டு ரியலாக விழுகிறார். கீழே விழுந்தபிறகு தரையில் படுத்தபடி வலியின் வேதனையை காட்டுகிறார். கடைசியில் காயம்பட்ட தம்பியின் உதட்டில் வழியும் ரத்தத்தை துடைத்து தலையில் தடவிக் கொண்டு அண்ணன் ஆறுதல் கூறும்போது இரண்டு மக்கள் திலகத்தின் நடிப்புக்கும் எவ்வளவு வித்தியாசம். தம்பிக்கு வசனமே இல்லை. தனது நிலையையும் வேதனையையும் பார்வையிலேயே காட்டி பரிதாபப்பட வைக்கிறார். அண்ணன் பேசும் வசனமும் நன்றாக அளவாக நறுக்காக உள்ளது.
https://youtu.be/cpAEbgQnFb4
வசனகர்த்தா அமரர் சுந்தரம் அவர்களுக்கு அஞ்சலி.
தின செய்தி -05/08/2016
http://i65.tinypic.com/1zzjojk.jpg
தமிழ் இந்து -07/08/2016
http://i63.tinypic.com/28tbds8.jpg
http://i68.tinypic.com/24dit4w.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "ரிக் ஷாக் காரன் " டிஜிட்டல் வெளியீடு
குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இன்று காலை 11 மணி அளவில் துவங்கியது .
நிகழ்ச்சியில் விநியோகஸ்தர்கள் திரு. கிருஷ்ணகுமார் , திரு. ராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் திரளாக வந்திருந்து ஆலோசனைகள் தெரிவித்தனர் .
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு, மற்றும் இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் ஆகியோரும் உரையாற்றி, ரிக் ஷாக்காரன் டிஜிட்டல் திரைப்படம் வெற்றி பெற்று, அரிய சாதனைகள் படைக்கும் வகையில் அனைவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்று பேசினார்கள்
முன்னதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீப ஆராதனைகள் செய்யப்பட்டன .
திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டனர் அவர்கள் பக்தர்களின் கேள்விகளுக்கும், வேண்டுகோளுக்கும் செவி சாய்த்த வண்ணம் இருந்தனர்.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்த பல்வேறு நிர்வாகிகள் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்து , சாதனைகள் படைக்க
அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் .
இறுதியில் ட்ரைலர் வெளியீடு பற்றிய அழைப்பிதழ் அனைவருக்கும்
அளிக்கப்பட்டது .
மேடையில் அமைக்கப்பட்ட பேனர்
http://i68.tinypic.com/2afk6eg.jpg
திரு.தம்பாச்சாரி ,மூத்த எம்.ஜி.ஆர். பக்தர் தீப ஆராதனை செய்யும் காட்சி
http://i63.tinypic.com/vxowgw.jpg
திரு.பாண்டியராஜன் , எம்.ஜி.ஆர். பக்தர் தீப ஆராதனை செய்யும் காட்சி
http://i63.tinypic.com/f98j5.jpg
திரு.தேவசகாயம் , எம்.ஜி.ஆர். பக்தர் தீப ஆராதனை செய்யும் காட்சி
http://i66.tinypic.com/j8o8ix.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அருகில் திரு. சாந்தகுமார் .
http://i63.tinypic.com/s2cdg9.jpg
மேடையில் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் இடையே
விநியோகஸ்தர் திரு.கிருஷ்ணகுமார் உரையாடுகிறார். அருகில் திரு. ராமு.
http://i67.tinypic.com/21jrgwl.jpg
http://i63.tinypic.com/2lxjqyf.jpg
விநியோகஸ்தர் திரு. கிருஷ்ணகுமார் உரையாற்றும்போது .
அவருக்கு வலதுபுறம் திரு. ஜெயக்குமார் (கோவை ) அமர்ந்துள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு எம்.ஜி.ஆர் மன்ற அமைப்புகளைச்
சார்ந்த பக்தர்கள்.
http://i66.tinypic.com/17xy5f.jpg
விநியோகஸ்தர் திரு. ராமு பேசும்போது
http://i66.tinypic.com/2lv0ga1.jpg
திரு.ஜெயக்குமார் (கோவை ) பேசியபோது
http://i65.tinypic.com/2nau108.jpg
விநியோகஸ்தர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டபோது
http://i64.tinypic.com/2ah5bo4.jpg
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
http://i66.tinypic.com/2aio9lj.jpg
இனிய நண்பர் திரு லோகநாதன் சார் மக்கள் திலகத்தின் ''ரிக் ஷாக்காரன் ''- டிஜிட்டல் வெளியீடு விழா அழைப்பிதழ் மற்றும் சென்னையில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்களின் ஆலோசனை கூட்டம் பற்றிய செய்திகள் , நிழற்படங்கள் மிகவும் அருமை நன்றி ..
பாரத் எம்ஜிஆர்
பாரத் பட்டம் பெற்று தந்த ரிக் ஷாக்காரன் ''எம்ஜிஆர் என்ற நடிகரின்
தனி மனிதனின் ஆளுமை
சமூக சிந்தனை
போராடும் குணம்
சட்டத்தின் மீது நம்பிக்கை
எதிரிகளை அடக்குதல்
வீரம் - கம்பீரம் - துணிவு போன்ற காட்சிகளில் திறமையாக நடித்து வெற்றி கண்டது மூலம் மக்கள் இதயங்களில் இன்னமும் பாரத் எம்ஜிஆராக வாழ்கிறார் .
ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் டிஜிட்டலில் வெளிவரப்போகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியாக உள்ளது. 1971-ம் வருடம் மிகப் பெரிய வெற்றி படம். மக்கள் திலகத்துக்கு பாரத் விருதை பெற்றுக் கொடுத்தது. சென்னையில் 143 நாள்கள் ஓடியது. தீபாவளிக்கு நீரும் நெருப்பும் படம் வந்ததால் ரிக்க்ஷாக்காரன் படம் மாற்றப்பட்டது. இல்லாவிட்டால் படம் வெள்ளிவிழா கொண்டாடி இருக்கும். அப்படி இருந்தாலும் வேறு தியேட்டருக்கு ஷிப்டிங் ஆகி 175 நாள்களை தாண்டி ஓடியது. இருந்தாலும் ஒரே தியேட்டரில் 175 நாள் ஓடினால்தான் நாம் வெள்ளிவிழா பட்டியலில் சேர்த்துக் கொள்வோம். இதுபோல் மக்கள் திலகத்தின் பல படங்கள் வெள்ளி விழாவை நூல் இழையில் தவறவிட்டிருக்கின்றன.
தஞ்சாவூரில் குலேபகாவலி படம் கொடிமரத்து மூலை கிருஷ்ணா டாக்கீஸில் 160 நாள்கள் ஓடியது. இன்னும் 15 நாள் ஓடியிருந்தால் படம் வெள்ளி விழா கண்டிருக்கும். மதுரையில் ஒளிவிளக்கு திரைப்படம் 147 நாட்கள் ஓடியது. இன்னும் 4 வாரம் அதே தியேட்டரில் ஓடியிருந்தால் வெள்ளி விழா பட்டியலில் அந்தப் படம் வந்திருக்கும். அதிகாரத்தை புரட்சித் தலைவர் துர்பிரயோகம் செய்தது இல்லை. கட்டாயமாக தனது படத்தை ஓட்ட வற்புறுத்தியது இல்லை. முதல்வர் ஆன பிறகும் கூட மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தை 100 நாட்கள் ஓட்ட அவர் தவறான வழியில் செயல்பட்டது இல்லை.சென்னையில் 50 நாள்களை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தேவி பாரடைசில் கடந்தது. மதுரையில் 60 நாட்களை தாண்டியது. திருச்சியில் தியாகராஜ பாகவதர் மன்றம் தியேட்டரில் 50 நாட்களும் பிறகு ராஜா டாக்கீஸில் 28 நாட்களும் மொத்தம் 78 நாள்கள் ஓடியது. சத்தியம் தவறாத தர்மதேவன் புரட்சித் தலைவர். திரைப்படத்துறையிலும் அரசியல் துறையிலும் நேர்மையாக வெற்றி பெற்றார்.
இரண்டு ஆண்டுக்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் படம் வெள்ளி விழா கொண்டாடி உலகில் புது சரித்திர சாதனை செய்தது போல இப்போது ரிக்ஷாக்காரன் படமும் வெள்ளி விழா காண வேண்டும். வாழ்த்துகள்.
பதிவிட முடியாத சூழ்நிலையில் திரிக்கு எப்படி வரவேண்டும் என்று தகவல் தந்த சுஹாராம் அய்யா அவர்களுக்கு நன்றி.
2016 ல் இதுவரை வந்த தமிழ் படங்களில் அப்பா என்ற ஒரு படத்தை தவிர மற்ற நடிகர்கள் நடித்த படங்களின் தலைப்பும் , ஏற்ற வேடங்களும் மனதில் நிற்கவில்லை . ஒரு பாடல் கூட மீண்டும் ஒரு முறை கேட்க தூண்டவில்லை .நடிகர்களுக்கு சமூக அக்கறையும் இல்லை .
1971ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் 45 ஆண்டுகள் கடந்த பின்னரும் அப் படத்தில் இடம் பெற்ற
மக்கள் திலகத்தின் நடிப்பு , காட்சிகளின் பிரமிப்பு , அருமையான உரையாடல்கள் , இனிமையான பாடல்கள்
புதுமையான சண்டை காட்சிகள் , சமூக சீர் திருத்த காட்சிகள் இன்றளவும் மனதில் நிலைத்து உள்ளது . மக்கள் திலகத்தின் எல்லா படங்களும் இனி எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் விறு விறுப்பாகவே இருக்கும் .
இதுதான் மக்கள் திலகத்தின் ஆளுமை . உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை .