நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உண்மை பேசும் அவரது பல ரசிகர்கள் - இவர்களை ஒரு இயக்கத்தை சார்ந்த பலர் இப்படிதான் எப்போது பார்த்தாலும் உண்மையை ஆவணங்களுடன் கூறும்போது, ஆவணம் பார்த்த பிறகும் வீம்புகேன்று அது உண்மை இல்லை என்றும் ஆதாரம் ஆவணம் இல்லாமல் என்னமோ இவர்கள் காற்றில் கூறுவது தான் உண்மை என்பது போல இன்னும் மாயையை கிளப்பி கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று நாம் சற்று சிந்தித்து பார்த்தால் உண்மை உலங்கை நெல்லிக்கனிபோல விளங்கும்.
தகவல் தொழில்நுட்ட்பம் வளர்ச்சிபெறாத காலகட்டத்திலிருந்து இவர்கள் தொடர்ந்து கூறிய பொய்கள், மாய செய்திகள், தூஷணங்கள் மக்களை சென்றடைந்து ஒருவேளை இது உண்மையோ என்று சலனப்பட்டு, குழம்பி ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வரை நம்பவும் செய்தார்கள்.
அனால் தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு முக்கியமாக hub facebook twitter போன்ற சமூக வலைத்தளங்கள் பல வந்தபிறகு நடிகர் திலகம் பற்றிய நடுநிலை நாளேடுகள், நடுநிலையாளர்கள் கூறிய பதிவிட்ட ஆவணங்களை scan செய்து அதை வெளியிடுவதால், வெளிவந்துகொண்டிருப்பதால் மக்களுக்கு உண்மை செய்திகள் உடனுக்குடன் உலகத்தில் எங்கிருந்தாலும் கண நேரத்தில் பார்க்க கிடைக்கிறது,
இதன் மூலம் உண்மைகள் அவர்களை உணர்த்தி, நடிகர் திலகம் அனைவரிலும் சிறந்தவர் என்று ஆக்கபூர்வமாக அறிவுபூர்வமாக முடிவெடுக்க வைத்துள்ளது.
காலம் காலமாக தாம் சொன்ன ஆதாரமற்ற பொய்கள், ஆதாரமற்ற பொய் தகவல்கள், இன்று இவர்கள் வெளியிடும் ஆதாரங்களால் வெளிச்சத்திற்கு வருகிறதே...எங்கே இன்னும் பல உண்மைகள் வெளியில் வந்துவிடுமோ, இன்னும் என்னென்ன ஆதாரங்கள் இவர்கள் வசம் உள்ளதோ, எதை எந்தநேரத்தில் பதிவிடுவார்களோ, அதை உலகெங்கும் உள்ள மக்கள் பார்த்து நம்முடைய நம்பகத்தன்மை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் அந்த குறிப்பிட்ட பலருக்கு வர தொடங்கியதன் விளைவு, இன்று நாம் கண்ணார காண்பது.
தாம் கூறும் கூற்றுக்கு ஒரு ஆதாரம் கூட இல்லை ! அனால் அவை உண்மை என்று மக்கள் நம்பவேண்டும் ..அதே சமயம், இங்கே ஆதாரங்களை பதிவிட்டு விளக்கம் அளிக்கும்போது அது விஷயம் தெரியாமல் பதிவிடுகிறோம்..தெரியாமல் பதிவிடிகிறோம், தவறாக பதிவிடுகிறோம் என்று மறைமுக சாடல் !
இதை படிக்கும் பொது மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டியது !
இங்கு பதிவு செய்பவை அந்த செய்திகளை ஆதாரங்களுடன் பதிவிடுபவை. இது அனைவருக்கும் விளங்கும், புரியும் .
ஆனால் ஆதாரமில்லாமல் பதிவுகள், சும்மா குறை சொல்லிகொண்டிருக்கும் வெதும்பல்கள் இவைகளுக்கு ஆதாரம் எதுவும் பதிவிடுவதில்லை என்பதுடன் பொய் தகவல்கள் யார் பதிவு செய்கிறார்கள் என்றும் புரிந்துகொள்ளவேண்டும் !
ஒரு சிறு உதாரணம் :
கல்வி கண் திறந்த காமராஜர் பசியுடன் படிக்கும் ஏழை குழந்தைகளுக்காக அப்போதைய பாரத பிரதமர் நேரு மூலம் கொண்டுவந்த திட்டம் என்ன திட்டம் ?
மதிய உணவு யார் முதலில் கொண்டுவந்தது ?
காமராஜருக்கு பின் ஒருமுறை மீண்டும் அவர் கொண்டுவந்த திட்டம் சிறிது நவீனபடுத்தி மீண்டும் கொண்டுவரப்பட்டது இல்லை என்று கூறவில்லை.
ஆனால் அந்த திட்டத்தை முதன் முதலில் அறிமுகபடுத்தி, நடைமுறை படுத்தியது காமராஜர் என்பதை உலகறியும் அப்படியிருக்க முதன் முதலாக கொண்டுவந்தது 1977உக்கு பிறகு என்பதுபோல ஒரு பதிவு !
இதிலிருந்தே எந்த செய்தி உண்மை செய்தி என்பதை இதை படிக்கும் மக்கள் உணரவேண்டும் !
Rks