https://docs.google.com/file/d/0Bzx2...p=docslist_api
Printable View
செலுலாய்ட் சோழன் – 56
(From Mr.Sudhangan's Facebook page)
1961ம் வருடம் சிவாஜி வாழ்க்கை மிகப் பெரிய திருப்புமுனையான ஆண்டு!
அந்த வருடம் மார்ச் மாதம் `பாவ மன்னிப்பு’
மே மாதம் `பாசமலர்’!
செப்டெம்பர் மாதம் ` பாலும் பழமும்’
மூன்று மிகப் பெரிய வெற்றிப் படங்கள்!
ஆனால் `பா’ பந்தயத்தில் முன்னனியில் நின்றது ` பாசமலர்’ தான்
மத ஒற்றுமைப் படம் `பாவமன்னிப்பு’
அண்ணன் தங்கை பாசம் ` பாசமலர்’
நல்ல கதை கொண்ட படம் ` பாலும் பழமும்’!
மூன்று படங்களின் பாடல்களுமே காலத்தை மீறி நிற்கக் கூடிய பாடல்கள்!
`பாசமலர்’ படம் பல கலாச்சார அதிர்வுகளை தமிழ்நாட்டில் அலைமோத விட்டது!
லேசான பிணக்கில் இருந்த அண்ணன் – தங்கைகள் பாசத்தை பொழிய ஆராம்பித்தார்கள்!
சிவாஜி வெகு நாட்கள் அப்படி வந்த பல கடிதங்களை பத்திரப் படுத்தி வைத்திருந்ததாக என்னிடமே சொன்னார்!
சிவாஜியையும், சாவித்ரியையும் அண்ணன் தங்கையாகவே பார்க்க ஆரம்பித்தார்கள்1
இனி அவர்களை ஜோடியாக நடிக்க வைக்க முடியாது என்பதை பல இயக்குனர்களும் உணர்ந்து கொண்டார்கள்!
ஆனால் அந்த விபரீத விளையாட்டில் ஈடுபட்டவர் கண்ணதாசன்!
அந்த படம் ஒடவில்லை!
அதைப் பற்றி பின்னால் பேசுவோம்.
1961 ஒன்றில் வந்த இந்த மூன்று படங்களிலுமே சிவாஜி வித்யாசமாக நடித்திருந்தாலும், இதன் வெற்றிக்கு வேறு காரணம் இருந்தது!
இந்தக் காரணத்தை எனக்குச் சொன்னவரும் சிவாஜிதான்!
`படம் வர்றதுக்கு முன்னாடியே சிலோன் ரேடியோவில அந்த படத்தை பாட்டை போட்டுடுவான்! பாட்டு பட்டித் தொட்டியெங்கும் பரவி, எப்படா அந்த படத்தை பார்ப்போம்னு ஜனங்க ஏங்கற அளவுக்கு அந்தப் பாட்டுக்களும் அதன் வரிகளும் பிரபலமாய்ப் போச்சு!
படம் வந்ததும் மக்கள் அப்படியே அதை அள்ளிக்கிட்டாங்க!
`பாலும் பழமும்’ படம் வர்றதுக்கு முன்னாடியே அதில் வந்த `நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும் ! ‘ அந்தப் பாட்டை பாராட்டி பல கடிதங்கள் எனக்கு வந்துச்சு’ என்றார் சிவாஜி!
சிவாஜி சொன்னது எத்தனை உண்மை!
பாவ மன்னிப்பு படத்தில் படம் துவங்கி பல நிமிடங்கள் கழித்துத்தான் முதல் பாடல் துவங்கும்!
அந்தப் பாட்டின் துவக்கத்தில் ஒரு பிறைசந்திரன்! அப்படியே காமிரா வானத்தை விட்டு நகர்ந்து கீழே வரும், அந்த இடத்தில் டேப் தோல் வாத்யம்! அதில் இரண்டு விரல்கள் அதை தட்டும்! அது கீழே இறங்கியபோது அங்கே முழுச் சந்திரனாக இஸ்லாமிய தோற்றத்தில் சிவாஜியின் முகம்!
`எல்லோரும் கொண்டாடுவோம்! அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்; என்று சிவாஜி முகபாவத்துடன் டி.எம்.எஸ், குரல் ஒலிக்கும்!
அவரை சுற்றி அந்தச் சேரியில் இருக்கும் மக்களில் எல்லா இனத்தவரும் சுற்றியிருந்து ` அல்லாவின் பெயரைச் சொல்லி’ என்று கோரஸாக பாடுவார்கள்!
அடுத்த வரியே தன்னிம்பிக்கைக்கு தாவும் வரிகள்!
`கல்லாக படுத்திருந்து களித்தவர் யாருமில்லே’
`கைகால்கள் ஒய்ந்த பின்னே துடிப்பது லாபமில்லே’
வந்ததை வரவில் வைப்போம்!
செய்வதை செலவில் வைப்போன்;
இன்று போல் என்று இங்கே ஒன்றாய் கூடுவோம்’
இந்த பாட்டின் உச்சமே டி.எம்.எஸ். கூட ஒலிக்கும் நாகூர் அனிபாவின் குரல்தான்!
இந்தப் பாட்டு பாடும் போதே பின்னனியில் பிரும்மாண்ட பங்களா உள்ளே அழகான ஜெமினியும் இந்தப் பாட்டை கேட்பார்!
ஒரு ஒலைக் குடிசையில் உலக்கையால் உரலில் குத்திக்கொண்டு சாவித்ரியும் ரசிப்பார்!
பாட்டின் தாள வேகம் குறையும்,
இசை சலனமற்று லேசாக பின்னனியில் ஒரு தொகையறாவைப் போல
`நூறு வகைப் பறவை வரும்!
கோடி வகைப் பூ மலரும்!
ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ;
கருப்பில்லே வெளுப்புமில்லே!
கனவுக்கு உருவமில்லே!
கடலுக்குள் பிரிவுமில்லே!
கடவுளில் பேதமில்லே!
முதலுக்கு அன்னை என்போம்!
முடிவுக்கு தந்தை என்போம்!
கண்ணிலே விண்ணைக் கண்டு
ஒன்றாய்க் கூடுவோம்
மீண்டும் ஒரு தொகையறா
இந்தப் பாடலின் மூலமாக படம் மதநல்லிணக்கத்தை சொல்லிப் போகிறது என்பது புரிந்து போகும்!
அடுத்து ஜெமினிக்கான இந்தப் பாடல் அன்றைய காதலர்களின் காதல் கடிதம்!
`காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஒவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை!
இந்த பாடல் வந்தபோது பலர் கண்ணதாசனிடம் கேட்டார்கள்
கீதையில் கண்ண பரமாத்மா தன்னை ` மாதங்களில் நான் மார்கழி’ என்கிறான்
கண்ணன் சொன்னதைப் போய் ஒரு பெண்ணுக்கு ஒரு காதலன் சொல்வதைப் போல எழுதலாமா ?
ஆண்டாள் – கண்ணன் உறவு எதைச் சொல்லுது தெரியுமா ?
ஜீவாத்மா – பரமாத்மா இணைப்பை காதல் மூலமாகச் சொன்னது!
எல்லாமும் `நான்’ என்றான் கண்ணன்!
அப்படியானால் என் படக் கதாநாயகனும் அவன் தானே!
அந்த அவன் தன்னை விட தன் காதலி மேலானவள் என்று உருகிச் சொன்னால் தப்பில்லை’ என்றார் கண்ணதாசன்!
அடுத்து `கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா ; என்கிற சித்தர் பாடலை அப்படியே காதல் பாட்டாக்கியிருப்பார்!
`அத்தான் என்னத்தான் – அவர்
என்னைத்தான் எப்படி சொல்வேனடி!
அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து
கண்ணைத்தான் எப்படி சொல்வேனடி!
இந்தப் பாடலுக்கு அந்த நாளில் காதல் கொண்ட கன்னியருக்கும், புதமணமான பெண்களுக்கும் மனதுக்குள்
இந்தப் பாட்டும்
அடுத்து வந்த
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்றும் வரும் தூக்க வராது
நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கு துணிவிருக்காது
அதாவது அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு நான்கும் இருக்குமாம் ஆனால் ஆசை மட்டும் அவளுக்கு விடவில்லையாம்
இந்த பாட்டும், பெண்களில் இதயத் துடிப்பானது!
இந்தப் பாடலில் காதலை மட்டுமா சொல்லியிருப்பார் கண்ணதாசன்
கூடவே படத்தின் மூலக்கருவும் இணைந்தே வரும்
மதத்தால் வேறுபட்ட இருவர் காதலிக்கும் பாட்டு அந்தப் பெண் பாடுகிறாள்
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே!
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே!
வேதமெலாம் காதலையே மறுப்பதில்லையே ! அது
மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே
படத்தின் கருவையும் விடாமல், காதலின் மேன்மையையும், இன ஜாதி வேறு பாடு கூடாது என்பதை எப்படியெல்லாம் சொன்னார் கண்ணதாசன்!
இந்த படம் வந்த அந்த நாட்களில், கிராமப்புறங்களில் சைக்கிளில் போகிற எல்லோருமே இந்தப் பாட்டைத்தான் பாடிக்கொண்டு போனார்கள்
(தொடரும்)
திருச்சியில் குடியரசு தினத்தில் சிவாஜிக்கு புகழ் அஞ்சலி பட்டிமன்றம்
இன்று 26-01-2015 குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி புத்துர் 4 ரோடு சந்திப்பில் ஷண்முகா கல்யாண மண்டபத்தில் தெயவமகன் சிவாஜி புகழுக்கு காரணம் அவர் நடித்த பாசப்படங்களா தேசப்படங்களா என்ற சிறப்புமிக்க புகழ் அஞ்சலி பட்டி மன்றம் இனிதே நடைபெற்றது. இதில் நடுவராக வேங்கை சந்திரசேகரும் இரண்டு அணிகளின் பேச்சாளர்களாக இன்பா, கவிஞர் ஜோதி, மதுரை அயயம்பெருமாள், திருச்சி முரளி, திருச்சி நிஜ வீரப்பா முதலியோர் பட்டி மன்றத்தை அலங்கரித்தனர். பொது மக்களும் ரசிகர்களும் பெரிய அளவில் கலந்து கொண்டனர். மண்டபம் நிறைந்து காணபட்டது. இதற்கான ஏற்பாடுகளை திரு. M. சீனிவாசன் செய்திருந்தார்.
Nadigar Thilagam's Contribution towards Important Days of INDIA.... A True Indian by all means !!!
The First National Actor of Tamizhnadu Nadigar Thilagam Sivaji Ganesan Ayya's contribution towards spreading the importance of being an INDIAN is undoubtedly so far the best when compared to any commercial actor despite being one part of it himself.
It is 2015, the tastes of people have changed and so is the field of entertainment. With much hesitation, I thought I should hop the channels every now and then especially, today being a Republic Day. With so much of entertainment options for the people of Tamilnadu, I was quite amazed and surprised that most of the Channels were telecasting our NADIGAR THILAGAM FILMS on this REPUBLIC DAY.
RAJ Tv Showcased - KAPPAL OATTIYA THAMIZHAN
POLIMER Tv Showcased - SIVANTHA MANN
SUNLIFE Showcased - BHARATHA VILAS
MURASU Showcased - RATHTHA THILAGAM
DD Showcased - RAJAPART RANGADURAI
The old songs in many channels had many patriotic songs from Nadigar Thilagam Films .
KUDOS to our NADIGAR THILAGAM - The actor who cannot be forgotten by anybody....!
The FIRST & TRUE NATIONAL ACTOR - LONG LIVE HIS NAME !!!!
மனதுக்கு மிக மிக நெருக்கமான படத்தை ஒரே அலைவரிசையில் உள்ள நூற்றுக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து ரசிக்கும்போது, உணர்ச்சிப்பூர்வமான காட்சியமைப்புகள் நம்மை உணர்ச்சிக் குவியலாக மாற்றிவிடும் போது, ஒவ்வொரு காட்சியும் செதுக்கியது போல் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தை பிரமித்து போய் பார்க்கும்போது, அதிலும் குறிப்பாக அந்த மூன்று பேர் சந்திக்கும் காட்சியை நூற்றுக்கணக்கான தடவை பார்த்திருந்தும் ஒவ்வொரு முறையும் அந்த 7 நிமிடமும் அந்த மூன்று பேரும் வெவ்வேறு நபர்கள் என்றே இப்போதும் மனதில் பதிகிறது என்று சொன்னால் அவன்தான் நடிகன். அதுதான் தெய்வ மகன்!
அன்புடன்
மறந்து போன பழைய பறவை புதிய பறவையாக என்ட்ரி கொடுக்கும் போது குதூகலம் நடிகர்திலகத்தின் வதனத்தில் !! மகிழ்ச்சி கண்களில்!!Quote:
Quote:
பாடல் ஒன்றே காட்சிகளோ இரண்டு மகிழ்ச்சி / சோகம்
பகுதி 1 புதிய பறவை பார்த்த ஞாபகம் இல்லையோ
https://www.youtube.com/watch?v=xNInBEF8E7M
புதிய பறவை வந்த பிறகு பழைய பறவை ரீஎன்ட்ரி கொடுத்தால் அதிர்ச்சி நடுக்கம் தயக்கம் தவிப்பு பயம் குழப்பம் அந்த சோக வதனத்தில் ....?!
https://www.youtube.com/watch?v=0SdHvU6_6LE
Quote:
Quote:
பாடல் ஒன்றே! காட்சிகளோ இரண்டு !! மகிழ்ச்சி / சோகம்
பகுதி 2 பட்டிக்காடா பட்டணமா அடி என்னடிராக்கம்மா......!
வருங்கால மனைவியை பக்கத்தில் வைத்துக் கொண்டு முறைக்கும் முறைப்பெண்ணை சீண்டும்போது குதூகலமே
https://www.youtube.com/watch?v=yOoguw_wQ7Y
மனைவியான பின் புரிதலின்றி பிரியும்போது ....கனத்த மனதின் உணர்வுகளை அதே முறைப்பெண்ணிடம் முறையிடுதல்
https://www.youtube.com/watch?v=7ROmQErLMK0
Quote:
Quote:
பாடல் ஒன்றே! காட்சிகளோ இரண்டு !! மகிழ்ச்சி / சோகம்
பகுதி 3 ராமன் எத்தனை ராமனடி.......அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு
சாப்பாட்டு ராமன் அப்பாவி ! மனதின் ஆசைகளோ 'அடப்பாவி!' நடிகர்திலகத்தின் குஷியாட்டம்!!
https://www.youtube.com/watch?v=cU9_w77CM1k
வாக்குறுதிகள் மீறப்பட்டு மனசாட்சி நசுக்கப்பட்டு எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும் போது ....
https://www.youtube.com/watch?v=2lsAJtWoUIA
Quote:
Quote:
பாடல் ஒன்றே! காட்சிகளோ இரண்டு !! மகிழ்ச்சி / சோகம்
பகுதி 4 .கவரிமான் ....பூப்போலே உன் புன்னகையில்....
உயிரின் உயிராக மகள் சிறுமியாக பெற்றோரை மனம் மகிழ்விக்கும் போது!
https://www.youtube.com/watch?v=_vP2REIiFc4
..
வளர்ந்த மகள் வெறுப்பு நெருப்பில் வாட்டி உயிரை உருக்கும் போது....?!
https://www.youtube.com/watch?v=FscpyQ57YY8