-
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
3
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
http://images.boxtv.com/clips/219/14...6178_14219.jpg
பாலா சுசீலா அம்மாவுடன் இணைந்து பாடிய 'சாந்தி நிலையம்' படப் பாடல். சூப்பர் டூப்பருக்கும் மேலே இந்தப் பாடல் ஹிட்டடித்தது. பாலாவின் குரல் கட்டிக் கொண்ட கள்வனாய் நம்மைக் கட்டிப் போட்டது.'மெல்லிசை மன்னரி'ன் இசை மென்மையாய் மனதை வருடியது. திருடியது.
http://i.ytimg.com/vi/rfdw0GQ7yhc/hqdefault.jpg
'இயற்கை என்னும் இளைய கன்னி'
அடடா! என்ன ஒரு அருமையான பாடல்! எப்படிப்பட்ட ஒரு ஆரம்ப வரி!
இந்த பாடலை விஷூவலாகப் பார்க்கும் போது எனக்கு ஆச்சர்யங்கள் மேலோங்கியபடியே இருக்கும். இயற்கையின் அழகை இவ்வளவு அற்புதமாக இந்த கேமராமேனால் எப்படி படம் பிடிக்க முடிந்தது என்று? என்ன அருமையான லொகேஷன்! காதல் மன்னனாக ஜெமினி என்றால் அப்சரஸ் அன்னமாக காஞ்சனா தேவதை.
'தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ'
என குறும்பு கொப்பளிக்கும் வரிகள். இதை பாலா தன் குல்கந்து குரலில் கொண்டு வரும் அழகே அழகு.
பாடலின் ஆரம்பத்தில் 'ஆஹா ஆ...ஆ' என்று அம்மா ஹம்மிங் தர, 'ஓஹோஹோ' என்று பாலா தொடர்வது கொள்ளை அழகு. 'காதல் மன்னன்' ரெட் டீ ஷர்ட்டும், ஒயிட் பேன்ட்டுமாக இளமை ததும்ப காதல் புரிவது இன்பம். அக்மார்க் தமிழ் இளைய கன்னிகையாக கார் கூந்தல் அழகி காஞ்சனா. நல்ல ஜோடிப் பொருத்தம். (இதே ஜோடி 'அவளுக்கென்று ஓர் மனம்' படத்தில் 'மங்கையரின் மகராணி'யில் அட்டகாசம் புரியும்) குழைத்து வைத்த இயற்கை வண்ணம். கடலையும் மிஞ்சும் ஏரி வனப்பு. ஏற்றமிகு படகு சவாரி.
'பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட'
என்று பாலா குரல் நம் மனதில் என்றும் ஆட,
'பொட்டு வைத்த வண்ண முகம் நீராட'
என்று கன்னத்தில் விரல் தட்டி, வட்டப் பொட்டிட்டு காஞ்சனா நாமை வாட்ட, தாமரையாள் ஏன் சிரிக்க மாட்டாள்?
'கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ'
என்று ஆண் ஜெமினி கொஞ்சம் பெண் பாவம் காட்டுவதும் ரசிக்கத் தகுந்ததே!
'இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ'
என்ற வளமான கவிஞரின் கற்பனை.
'மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெயில் நேரம்தானே
மஞ்சம் ஒன்று போடலாமே'
என்று ஜெமினி நெஞ்சம் தொட்டு கொஞ்சி, பின் கெஞ்சி, காஞ்ச்சுவிடம் (என்னடா இது! சி.க மாதிரி எழுத ஆரம்பித்து விட்டேன்!:)) லைட்டாக அப்ளிகேஷன் போட்டு வைக்க,
தண்ணீரில் சேலை நனையாமல், சேலையை சற்றே தூக்கிப் பிடித்து, காஞ்சனா மான் போலத் துள்ளியபடி,
'தரையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப்பட்டு பேசலாமே'
என அகமகிழ்ந்து சற்று நேரம் கேட்டு சம்மதம் தர சம்மதிக்க ,
இயற்கை உள்ளவரை நாம் இன்புற்று மகிழும் பாடல். நாயகன் நாயகியின் உடைகளில் வண்ணத்துக்கு ஏற்றவாறு எண்ணம் செலுத்தியிருப்பது இப்பாடலின் தனிச் சிறப்பு. அழகான ஆடைத் தேர்வுகள்.
குளுகுளு மலைப்பிரதேசம், இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள், அகன்ற ஆறுகள், கையகல கரையோரப் பூக்கள் மாலையில் மழைத்தூறல் நேரத்தில் மனம் மகிழ வைக்கும் கோணங்கள் என்று
எக்காலமும் நாம் எண்ணி எண்ணி மகிழும் மரகதப் பாடல். தமிழின் மிகச் சிறந்த வண்ண டூயட்களில் எதிலும் முதல்வரின் 'மயக்கமென்ன' விற்குப் பிறகு என்னை மயக்கிய 'இயற்கை என்னும் இளையகன்னி. உங்களுக்கு எப்படியோ?
இளமை கொஞ்சும் பாலாவின் வழுவழு இளநீர்க் குரலில் எத்தனை முறை கேட்டாலும் முதன் முதலாக கேட்பது போன்ற இன்ப உணர்வுதான் எப்போதுமே.
http://i.ytimg.com/vi/LC5-vQtAQx4/hqdefault.jpg
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விடடாள்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக் கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெயில் நேரம்தானே
மஞ்சம் ஒன்று போடலாமே
தரையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப்பட்டு பேசலாமே
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
https://youtu.be/rgVmLYilkMU
-
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
ராஜேஷ்,
உச்சிமலை மேகங்கள் தூறல்கள் போட – அழகான பாடல்..அழகான(?!) கனகா ( பசு மாதிரி வராது..கன்னுக்குட்டி கன்னுக்குட்டி தான்!) :)
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு – கொஞ்சம் சுமார் பாட்டுத்தான்..நன்னா பொரிச்சு வென்னீர்ல போட்டு எடுத்து பின் தயிர்ல நெடு நேரம் ஊறின தயிர்வடையாட்டம் கன்னம்கொண்ட பாலாம்பிகா ராம்கியின் தங்கச்சியா ம்ம் படம் பார்த்ததில்லை.. ரெண்டு பாட்டுக்கும் தாங்க்ஸ்
வாசு,
காலங்கார்த்தால இயற்கையெனும் இளைய கன்னியின் அனலிஸிஸ் வெரிகுட்.. எவ்வளவு தடவை கேட்டாலும்பார்த்தாலும் (காஞ்ச் மட்டும்..! சி.செ. கோவிச்சுக்குவார்) அலுக்காத பாடல்
..
குழைத்து வைத்த இயற்கை வண்ணம். கடலையும் மிஞ்சும் ஏரி வனப்பு. // காஞ்ச் சைத் தானே சொல்கிறீர்கள்..
//'தரையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப்பட்டு பேசலாமே'
என அகமகிழ்ந்து சற்று நேரம் கேட்டு சம்மதம் தர சம்மதிக்க ,// இந்த அந்திப் பட்டுங்கற வார்த்தைப் பிரயோகம் இருக்கே இது இந்தப்பாட்டுல மட்டும் தான் வருது.. வேற எங்கயும் வரலை.. ஸோ என்னா அர்த்தம்னு நிறைய தடவை யோசிச்சுருக்கேன்..
ஆளை அசத்துகின்ற அழகான கன்னியுடன்
..ஆசை துள்ளிவர அன்பங்கு பொங்கிவர
வாலைப் பருவத்தின் வண்ணவண்ணக் கனவுகளை
…வாகாய்க் கோர்த்திடத்தான் கதிரவனும் மேலேறி
மாலை சிரிக்கிறதே மங்கையவள் கன்னமதில்
..மஞ்சள் நிறத்துடனே செஞ்சாந்து பூசியபின்
வேலை செய்யென்று வேல்விழியாள் கண்சிரித்து
..வெட்கம் விட்டுவிட அந்திபட்டு பேசினோமே..!
அந்திப்பட்டுன்னா பட்டும் படாமலும் ஆசை மிகக்கொண்டு ஸ்லைட் டச்சிங் டச்சிங்கோட மாலையில் பேசும் ஸ்வீட் நத்திங்க்ஸ நு நான் நினச்சுண்டிருக்கேன்..ஆன்றோர்கள் தான் சொல்லணும்!:)
காலங்காத்தால கவிதை மாதிரி எழுத வச்சுட்டீங்களே வாசுங்ணா.. தாங்க்ஸ்/.:)
-
cika adhu meera balambika illa.
-
வாசு ஜி. இயற்கை என்னும் இளைய கன்னி பாடல் ஆஹா இசையரசியின் குரலும் மென்மையான அந்த பாலுவின் குரலும் ஆஹா
தாமரையாள் ஏன் சிரித்தாள் தலைவனுக்கோ தூதுவிட்டாள் ...அடி தூள்
உங்கள் வர்ணனை பிரமாதம்
-
ஜி,
வாங்கோ! வாங்கோ! ரொம்ப நன்றி!
ஆமா! சி.க உங்களை கொட்ட கொட்ட முழிச்சிட்டிருப்பாரு அப்படின்னு சொன்னாரே! உங்களுக்கு அது பகல் நேரம்னு அவருக்கு சொல்லப் படாதோ? குழந்தை குழம்பிப் போச்சே.(அப்பாடி! இப்பவாவது சி.க அவரோட எல்லா பதிவுகளையும் படிக்கிறேன் என்று நம்புவாராக)
-
/குழைத்து வைத்த இயற்கை வண்ணம். கடலையும் மிஞ்சும் ஏரி வனப்பு. // காஞ்ச் சைத் தானே சொல்கிறீர்கள்..//
'கடலை' போட்றதுலே சி.க வுக்கு நிகர் சி.கதான்..:)
அந்திப்பட்டு வானம் அப்படின்னு நெறைய படிச்சிருக்கேன் சி.க. அந்திப்பட்டுன்னா சுருக்க பொழுது சாய்ந்துன்னு அர்த்தமாக்கும். ம்க்கும்...இதுல கூட குழப்பமா?
ஆமா! கதிரையும், குளிர்ச்சியும் ஆட்களையே காணோம். கல்நாயக் 3 நாள் சி.எல்.:) மழை பெய்யறதாலே சூரியன் ரவி சார் வரலை போல இருக்கு.
சி.க,
கவிதை ஜோர். அப்படியே 'டக் டக்' ன்னு வந்து அருவியா விழுதே!
அப்படியே இயற்கையை ரசிச்சதற்கும் நன்றி சி.க.
-
//அந்திப்பட்டு வானம் அப்படின்னு நெறைய படிச்சிருக்கேன் சி.க. அந்திப்பட்டுன்னா சுருக்க பொழுது சாய்ந்துன்னு அர்த்தமாக்கும். ம்க்கும்...இதுல கூட குழப்பமா?// ராஜேஷ் ஜி வாசு ஜி தாங்க்ஸ்;;
வாசு ஜி.. அந்திப்பட்டு வானம் சுருக்க பொழுது சாய்ததுன்னு வெச்சுக்கிட்டாலும் மாலையைப் பத்தி என்ன பேசுவாங்க்ணா.. மாலை சூடிக் களிக்க வேண்டிய விஷயங்க்ள் தானே மன்சுல வரும் (ஹப்பாடா மீசைல மண் ஒட்டலை :) )
வேலைன்னு வந்துட்டேன் (இன்னிக்கு லீவா இருந்தாலும்..ஹப்புறம் வரேன்)
//ஆமா! சி.க உங்களை கொட்ட கொட்ட முழிச்சிட்டிருப்பாரு அப்படின்னு சொன்னாரே! உங்களுக்கு அது பகல் நேரம்னு அவருக்கு சொல்லப் படாதோ? // ராஜேஷ் இளைஞரோன்னோ..அவருக்கு ராப்போதுதான் அங்கே.. மெத்த வாங்கினார் தூக்கத்தை வாங்கலை :)
எஸ்வி சார்..வாஙக் வாங்க..ஆளையே காங்கலை..
-
வாசு - நேப்பாளத்தில் மீண்டும் பூகம்பம் என்று கேள்விப்பட்டேன் - உடனே தொலைக்காட்சி யை பார்க்க கைகள் ரிமோட் யை சற்றே தேடின - எதுவுமே நான் வைக்கும் இடத்தில் இருந்தால் தானே ?? - கோபம் கொண்டு மனைவியை சத்தமாக திட்ட ஆரம்பித்தேன் - ஏது இவ்வளவு தையிரியம் என்று நீங்கள் எல்லாம் கேட்பது புரிக்கின்றது - ம்ம் சொல்லிவிடுகிறேன் - அவள் ஊரில் ஒரு வாரமாக இல்லை -
ரிமோட் யும் எடுத்துக்கொண்டு ஊருக்கு போயிருப்பாளோ ?? சந்தேகம் கொண்டு மீண்டும் தீவிரமாகத் தேடினேன் . கால்கள் என்னிடம் கெஞ்சியது - என்னை ஏன் உபயோகம் செய்ய மறுக்கிறாய் என்று - சற்றே அதற்க்கு செவி கொடுத்து ரிமோட் இல்லாமல் டிவி யை போட்டால் , ப்ரெகிங்க் நியூஸ் - மீண்டும் பூகம்பம் - இதன் பாதிப்பை முழுவதாக தெரிந்துக்கொள்ள மனதை மயக்கும் மதுரகான திரியில் வாசுவின் " பாலா " பதிவை படியுங்கள் ------
இப்படியா ஒரு பதிவை போடுவது ? அலசுவது ? எதற்கும் ஒரு எல்லை வேண்டும் . உண்மையான பூகம்பத்தில் மாயிந்தவர்களை விட உங்கள் பதிவுகளை படித்து மயங்கியவர்கள் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர் - இப்படியே போனால் யாரால் இங்கு பதிவுகளை போட முடியும் ?????:)
-
அவள் ஊரில் ஒரு வாரமாக இல்லை// வீட்காரி ஊர்ல இல்லைன்னா இயற்கைய ரசிக்க ஆரம்பிச்சுட்டீங்களாக்கும்..அது சரி..லீவ் அப்ளைலாம் பண்ணலை ..ரெண்டு நாளா போஸ்ட் ஒண்ணும் பண்ணலை..என்னவாக்கும் செஞ்சீர் ஓய்வு நேரத்தில்??:)
-
வெயிற்கேற்ற மழையுண்டு' (ரவி, மன்னிக்க!)
ck - ம்ம் உங்கள் பதிவுகளை பார்க்கும் போது - " நான் தன்னந் தனி காட்டு ராஜா ! " என் காட்டிலே மழை பெய்யுது ---- என்றே பாட வைக்கின்றது - உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ பாக்கி உள்ளது - எப்படி , என்று , எவ்வளவு --- இந்த கேள்விகளுக்குத்தான் பதில் கிடைப்பதில்லை
ம்ம் என்னை பொறுத்த வரையில் 'வெயிற்கேற்ற வெயிலுன்று என்றே சொல்லி என் பதிவுகளை சற்று தூரம் தொடர்கிறேன் ..