dear gopal sir,
thank u very much and very kind of u.
Printable View
dear gopal sir,
thank u very much and very kind of u.
டியர் ஜோ சார்,
தமிழ்நாட்டின் இலக்கியம், கலை, அரசியல் ஆகியவற்றில் மகத்தான பங்களிப்புகளை நல்கியவர் கலைஞர். இந்திய அரசியலில் இன்றும் அவர் ஒரு மிகப் பெரிய ஆளுமையாகத் திகழ்கிறார். என்னைப் போன்று தாய்த்தமிழ் மேல் பற்றுள்ளவர்களுக்கு, அத்தமிழையே பெற்ற தாய்க்கும் மேலாகப் போற்றுகின்ற கலைஞர் அவர்களை எப்படிப் போற்றாமல் இருக்க முடியும். மேலும், கலைஞர் அவர்களின் அயராத உழைப்பு, அசாத்திய பொறுமை, அபார நினைவாற்றல், அரசியல் ராஜதந்திரம், இன்னும் இதுபோன்ற எத்தனையோ அவரது சிறப்பியல்புகள், எல்லாத் தலைமுறையையும் ஈர்க்கக் கூடியவை.
பெருந்தன்மைக்கும், நட்புக்கும் சிறந்த இலக்கணமாகத் திகழும் நமது நடிகர் திலகம், கலைஞர் அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட உயரிய இடத்தை தனது உள்ளத்தில் அளித்திருந்தார் என்பதற்கு கலைஞரின் பவளவிழா நிகழ்வு போன்று பல நற்சான்றுகள் உள்ளன. மக்கள் திலகத்தை, நமது நடிகர் திலகம் 'அண்ணன்' என ஒரு மரியாதை கலந்த பாசத்தோடு அழைப்பார். ஆனால் கலைஞர் அவர்களை மிகவும் உரிமையோடு 'மூனாகானா' என்றே கூப்பிடுவார். கலைஞர் மீதும், எம்.ஜி.ஆர். மீதும் சிவாஜி அவர்கள் கொண்டிருந்த அடிப்படை அன்பு மற்றும் பாசம் (Basic Love & Affection) என்றுமே குறைந்திருந்ததில்லை. அந்தக் கள்ளங்கபடமற்ற குழந்தை உள்ள அன்பில் ஆரம்பித்திலிருந்தே கட்டுண்டதால்தான், எம்.ஜி.ஆர். அவர்கள் பின்னாளில் நடிகர் திலகத்தை சந்திக்கும் போதெல்லாம் கண்கள் குளமாகி உணர்ச்சிப்பிழம்பாகி விடுவார். அத்தகையதொரு கலைக்குரிசிலின் கலப்படமில்லா பாசத்தில் கலைஞரும் கட்டிப்போடப்பட்டதால்தான் இன்றும் நடிகர் திலகத்தை நினைவுகூரும்போது கலைஞர் அவர்கள் உணர்ச்சிமயமாக ஆகி விடுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' நிகழ்வே இதற்கு சரியான சான்று.
மேலும் எம்.ஜி.ஆர். அவர்களும் சரி, கலைஞர் அவர்களும் சரி, "நமது நடிகர் திலகம் - இந்தியத் துணைக்கண்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும்பெருமை தேடித் தந்த - ஒரு கலை உலகப் பொக்கிஷம்" என்பதில் ஒருமித்த கருத்து உடையவர்களாகயிருந்தனர்.
தமிழ்த் திரையுலகின் திசைகளையே மாற்றியமைத்த பெரும் பெருமைக்குரியது, சிவாஜி-கலைஞர் நடிப்பு-எழுத்து கூட்டணி. நானிலம் போற்றும், நட்புக்கு இலக்கணமாகத் திகழும் இவர்களின் நட்பை, நெருக்கத்தை, நல்லுறவை பதிவு செய்தது என் பாக்கியம்.
ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை, அரசியல் அரங்க மாபெரும் சாதனையாளரை, அரசியல் உலக பீஷ்மரை, உலகத்தமிழர்களின் உள்ளங்களில் ஏதோ ஒருநல்லவிதத்தில் உயர்ந்த இடம் பெற்றிருக்கும் நமது உன்னத கலைஞரைப் பற்றி அவரது பிறந்தநாள் சமயத்தில், பாராட்டிப் பதிவுகள் அளித்ததை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்.
2006-ல், ஐந்தாவது முறையாக, தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனவுடன், தமிழக அரசு சார்பில், நமது சிங்கத்தமிழனுக்கு தமிழகத் தலைநகரில் சிலை நிறுவிய முத்தமிழறிஞருக்கு, இதுகூட செய்யாவிட்டால் நான் நன்றிமறந்தவனாவேன்.
இதில் வெறுப்புக்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் இடம் ஏது?!
தங்களின் பாராட்டுக்கு எனது கனிவான நன்றி..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் திரு. Mgr Raju B S,
தங்கள் வருகைக்கு நன்றி..!
பொய்யான தகவல்களையோ, சந்தேகத்துக்குட்பட்ட தகவல்களையோ, எனது பதிவுகளில், எனது அறிவுக்கு எட்டியவரை, நான் என்றுமே அளித்ததில்லை, அளிக்கப்போவதுமில்லை.
"கர்ணன்" காவியம், சென்னை 'பிரபாத்' மற்றும் 'சயானி'யில் 100 நாட்கள் ஓடவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது மிகமிகத் தவறான தகவல். ஏனென்றால், "கர்ணன்" 100வது நாள் சென்னை விளம்பரத்தை என் கண்களால் பார்த்தவன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் உள்ள ஒரு நூலகத்தில் [இப்போது அந்த நூலகம் இல்லை], 1964-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் 'THE MAIL' ஆங்கில மாலை நாளிதழின் தொகுப்பைப் பார்க்க நேர்ந்தது. அதில் "கர்ண"னின் 100வது நாளன்று [22.4.1964 : புதன்], சென்னையில் உள்ள மூன்று திரையரங்குகளிலும் [சாந்தி, பிரபாத், சயானி], 100 நாட்கள் ஓடுவதாக மூன்று அரங்குகளின் சார்பாகவும் மூன்று தனித்தனி விளம்பரங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக கொடுக்கப்பட்டிருந்தன. அந்த ஒவ்வொரு விளம்பரத்தின் அளவும், Book-Notebookக்கு நாம் ஒட்டும் Labelலின் அளவைவிட சற்றுகுறைவாக இருக்கும். அந்த விளம்பரத்தில் என்ன இருந்தது என்பதையும் கூறி விடுகிறேன்.
முதல் விளம்பரத்தில்,
SHANTI
Deluxe Air-Conditioned
TODAY 100TH DAY
Padmini Pictures
KARNAN.
இரண்டாவது விளம்பரத்தில்,
PRABHAT
TODAY 100TH DAY
Padmini Pictures
KARNAN.
மூன்றாவது விளம்பரத்தில்,
SAYANI
TODAY 100TH DAY
Padmini Pictures
KARNAN.
இத்தகைய தகவல்கள் அந்த விளம்பரங்களில் இருந்தன.
இன்னொன்று, காலை நாளிதழ்களில் வரப்போகும் திரைப்பட விளம்பரங்கள் பெரும்பாலும் மாலை நாளிதழ்களில் அதற்கு முந்தைய நாளே வந்துவிடும். ஆனால், "கர்ண"னைப் பொறுத்தவரை, அதன் 100வது நாள் விளம்பரங்கள், 'THE MAIL' மாலை நாளிதழில் 22.4.1964 அன்று மாலைதான் வெளியானது. அந்த நூலகத்தில், பார்த்தவற்றை, குறிப்புகள் எடுத்து எழுதிக் கொள்ளலாமே தவிர, நகல் (xerox) எடுக்க அனுமதிக்கமாட்டார்கள். அப்படி எனக்கு நகல் கிடைத்திருந்தால், "கர்ண"னின் வெற்றி குறித்த கேள்வியே எங்கும் எழாது.
"கர்ணன்", 22.4.1964 அன்று, சென்னையில் இந்த மூன்று திரையரங்குகளில் [சாந்தி, பிரபாத், சயானி] 100 நாட்கள் ஓடியதோடு நிறைவு. 23.4.1964 வியாழன் முதல், இந்த மூன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்:
சாந்தி - Son of Samson(English)
பிரபாத் - ஆத்மபலம்
சயானி - Mere Mehboob(Hindi).
மேலும், "கர்ணன்", 'பிரபாத்' மற்றும் 'சயானி'யில் 56 நாட்கள் மட்டுமே ஓடியதாக கூறினீர்களே..எப்படி சார்..?
"கர்ணன்", 50வது நாளைப் பூர்த்தி செய்தது 3.3.1964 செவ்வாயன்று. 100வது நாளைத் தொட்டது 22.4.1964 புதனன்று. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எந்தப் புதிய தமிழ்த் திரைப்படமும் இந்த இரு அரங்குகளில் வெளியாகவில்லை.
3.3.1964 முதல் 22.4.1964 வரை வெளியான புதிய தமிழ்த் திரைப்படங்கள்:
(சென்னையில் வெளியான அரங்குகளுடன்)
அல்லி - 5.3.1964 - கெயிட்டி, ஸ்ரீமுருகன், ராக்ஸி, ராம்
நல்வரவு - 5.3.1964 - வெலிங்டன், மஹாராஜா, கிருஷ்ணவேணி
என் கடமை - 13.3.1964 - பிளாசா, கிரௌன், புவனேஸ்வரி, சீனிவாசா
பச்சை விளக்கு - 3.4.1964 - வெலிங்டன், மஹாராணி, ராக்ஸி, நூர்ஜஹான்
சித்ராங்கி - 10.4.1964 - பாரகன், மஹாராஜா, புவனேஸ்வரி
நானும் மனிதன் தான் - 13.4.1964 - காமதேனு, மஹாலக்ஷ்மி, பிரைட்டன், ஜெயராஜ்
தவிர, எந்தவொரு வேற்றுமொழித் திரைப்படமோ அல்லது டப்பிங் படமோ கூட, இந்த காலகட்டத்தில், இந்த இரு அரங்குகளில் வெளியாகவில்லை.
"கர்ணன்", முதல் வெளியீட்டில், சென்னையில் 'சாந்தி', 'பிரபாத்', சயானி' ஆகிய மூன்று திரையரங்குகளில், ஒவ்வொன்றிலும் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. மேலும் மதுரை 'தங்க'திலும் 108 நாட்கள் ஓடி சூப்பர்ஹிட். இதுவே மிகமிகச் சரியான தகவல்.
"கர்ணன்" சென்னைப் பதிப்பு 100வது நாள் விளம்பரத்தை தேடும் எனது தொடர் முயற்சிகளில் வெற்றி கிட்டியவுடன் தாங்கள் அளித்த தகவல் தவறு என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுவிடும்.
மேலும், 11 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியதும் உணமை. சில வருடங்களுக்கு முன்னர் அந்தந்த ஊர்களிலுள்ள திரையரங்குகளைத் பலமுறை தொடர்பு கொண்டு, அதற்குப்பின்னர் அவர்கள் சொன்ன தகவல் சரிதானா என்பதனைப் பலமுறை சரிபார்த்து அதன்பின் பதிவிடப்பட்ட தகவல் இது. மேலும், வேலூர் முதற்கொண்ட இன்னும் 4 ஊர்களில், "கர்ணன்" 50 நாட்கள் ஓடியுள்ளதாக தகவல் உள்ளது. அவை இன்னும் சந்தேகத்துக்குட்பட்டவையாக இருப்பதால், வெளியிடப்படவில்லை.
தாங்கள் அளித்த தவறான தகவல்களைத் திருத்திக் கொள்ளவும்.
அன்புடன்,
பம்மலார்.
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
சத்யம்
[6.5.1976 - 6.5.2012] : 37வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : மதி ஒளி : 1.5.1976
http://i1110.photobucket.com/albums/...GEDC5849-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
பம்மலார் சார்,
நீங்கள் ஒரு சேவையாக செய்து வரும் தொண்டினை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. இது ஆத்ம திருப்திக்காக நீங்கள் செய்து வரும் அளப்பரிய தொண்டு. திருவள்ளுவர்,கம்பன், பாரதி வரிசையில் வைத்து போற்றத்தக்க ஒரு மாபெரும் மனிதருக்கு ,அவரின் சரித்திரத்தை ஆதாரத்துடன் பதிவு செய்யும் தங்கள் மேன்மையை ,குறைக்க முயலும் யாரும் ,தங்களையே தரம் தாழ்த்தி கொள்கின்றனர். தமிழ் இனத்தை இந்த இழிவுகள்தான் தாழ்த்தி ,நமக்கு நாதியற்று ,அழிவுகளை அளித்து வருகிறது.இன்று இந்தியாவிலே அனாதையான மாநிலம் தமிழகம்.(சுற்றி நட்பு இல்லாத மாநிலங்கள்).
இலங்கை கதை , எல்லோரும் அறிந்த சோகம்.நம் சரித்திர புருஷர்களை நாம் போற்றி ,நம் தமிழ் பற்றை உலகம் உணர செய்ய வேண்டாமா?
இலக்கியம்,கலை,அரசியல்,தொண்டு, எல்லாவற்றிலும் நமது உன்னதங்களை போற்றி பெருமை கொண்டால்தான் நமக்கு மீட்சி உண்டு.நாம்தான் மொழியையே மறந்தவர்கள் ஆயிற்றே?
நீங்கள் உங்கள் உன்னத பணியை தொடருங்கள்.நாங்கள் எல்லாம் உங்கள் பின்னால்.