-
திரு கல்நாயக் - உங்கள் 3 நாள் விடுமுறை என்பது இந்த திரியை பொறுத்த வரையில் 3 யுகம் - இவ்வளவு தண்டனை எங்களுக்குத் தேவையா ? எங்களுக்கு குமாரசுவாமி அருள் எல்லாம் அதிகமாக இல்லை - அதனால் கணக்கைத்தவறாக போட்டு தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது ... சுப்ரமணிய சுவாமி யை வணங்கிய நாங்கள் , வணங்கிய சில நாட்களிலே , தென்றலையும் , சந்தனத்தையும் தேடி போய்விட்டோம் ..... சீக்கிரம் வந்தால் , கதிரவனை வணங்கி அவனுடைய வெப்பத்தை சற்றே குறைத்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்வேன் - இல்லையென்றால் -- வேண்டாம் -- அப்படி ஒன்று நடக்க வேண்டாம் ----
-
திரையில் மலர்ந்த/பொலிவிழந்த நாவல்கள் – 7
அவள் ஒரு நடிகை..லண்டன் செல்கிறாள் காதலிக்கும் சக நடிகனுடன்.. தன்னை த் தனது கார்டியன் கொலைசெய்தாலும் செய்வார் என்ற பயத்தில் ஒரு வழக்குரைஞரை நியமிக் நியமிக்கிறாள்.. அவரும் லண்டன் வர சூழ் நிலையில் நடிகை இறக்க –களத்தில் இறங்கும் வக்கீல் கொன்றது யார் என்று கண்டுபிடித்தாரா உண்மையிலேயே நடிகை இறந்து விட்டாளா இல்லையா என விறுவிறுப்பாக எழுத்தாளர் சுஜாதாவினால் எழுதப் பட்ட நாவல் “ப்ரியா”
வெகு அழகு..குமுதத்தில் வந்த போது தொடராக ஆவலுடன் படித்த நினைவு.. ப்ரியா படம் ஸ்ரீதேவியில் ரிலீஸ் ஆகவும் சப்புக் கொட்டிக்கொண்டு போய்ப் பார்த்தால் நற.. நற.. கதைக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லை..ப்ரியா சொல்கின்ற வக்கீல் கணேஷ் காரெக்டரில் ரஜினி .. ஹை நல்லா இருக்குமே என்று பார்த்தால் சிங்கப்பூர் பெண்ணைக்கல்யாணம் பண்ணிக்கொள்வதாகக் காட்டி, வக்கீல் கணேஷே படத்தில் நடிப்பதாகக் காட்டி.. கிட்டத் தட்ட பாலைவன வெயிலில் வெறும் காலில் முட்டி போடச்சொன்னது போல் வறுத்தெடுத்து விட்டார்கள்..
ஆனால் கோபால் சொன்னது போல அருவருக்கும் விதமாக இல்லை..காரணம் இளமை ஸ்ரீதேவி..( க்ளைமாக்ஸ் கண்டுபிடித்த புண்ணியவான் யாரென்று தெரியவில்லை..படம் பார்க்கும்போதே திட்டித் தீர்த்தேன்)
எல்லாக்காரக்டர்ஸூக்கும் தக்கனபடி நடிக நடிகையரைத் தேர்ந்தெடுத்து நாவல் பிரகாரமே எடுத்திருந்தாலும் பின்னியிருக்கும் படம்..பட்ஜெட் பற்றாக்குறையால் லண்டன் சிங்கப்பூராக முதல் மாற்றம் என ஆரம்பித்து கட்டக் கடைசி வரை சுஜாதா கதையே இல்லை..
ம்ம் ..இந்த வெயிலில் இந்தப் படத்தை நினைத்தால் கொஞ்சம்பொங்கத் தான் செய்கிறது.. ராஜேஷ் புண்ணியத்தில் நீச்சல் குளம் நினைவு வர அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியும் நினைவில் வர.. கொஞ்சம் கூல் ஆக்கிக் கொண்டேன்..
பாடல்கள் மட்டும் சமர்த்தாய் யூட்யூபில் கேட்டுக் கொள்வது நலம்பயக்கும்..
பாடல் ம்ம் டார்லிங்க் டார்லிங் டார்லிங் ஐ லவ்யூ..
https://youtu.be/XVDQY_P2G0I
நீச்சல் குளப் பாடல்கள் என்று ஆரம்பிக்கலாம் என்று தானிருந்தேன்..பரவாயில்லை அடுத்த பாட் போட்டுக்கலாம்..:)
-
அது சரி..சுற்றிலும் எல்லாம் பிரகாசமாகத் தெரிகிறது..எல்லாமே அழகு…இயற்கை இந்த மேகங்கள் இந்த மழை இந்த வெயில்..
ஏன் என்னருகில் அவள் இருக்கிறாள்..
அது மட்டுமா.. நானும் இளமை பொங்கும் காளை..அவளும் இளமை ததும்பும்காளி (ஓ தப்போ ) சரி கன்னி..
என்னைப் பிடித்திருக்கிறது.. என் வாலிபம் பிடித்திருக்கிறது..இருந்தும் என்ன.. விலகுகிறாள்..அவளுக்குத் தெரியவில்லை..இப்படியே வெட்கியிருந்தால் என்னாகும்.. ஆண்டொன்று போய்விடும்..அதுமட்டுமா வயதுமே போகுமே..
அப்புறம் சிலபேர் மாதிரி லொக் லொக்கென்று பழைய நினைப்பு தான் பேராண்டி பழைய நினைப்பு தான் எனச் சொல்லிக்கொள்ள வேண்டியது தான் ( ஏண்டா உண்மையெல்லாம் சொல்ற – மனசாட்சி இது என்ன உண்மையா.. உன்னை உதைப்பேன்)
*
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் பிபிஎஸ்.. எஸ். ஜானகியின் குரல்கள் பலவருடம்கடந்தும் இளமையுடன்..
*
வாலிபம் என்பது தோட்டம்
வண்ண மலர்களின் கூட்டம்
வாடிய பின்னே மலராது!
கண்களில் பொங்கும் வெள்ளம்
கலகல வென்னும் உள்ளம்
அடங்கிய பின்னே ஆடாது!
என்னென்ன இன்பம்
எங்கெங்கு இன்பம்
எங்கெங்கு உண்டோ
அங்கங்கு செல்வோம்
வா..வா..வா..
இரவென்ற ஊரில்
மனமென்ற தேரில்
துயில் கொண்டு வாழ்வோம்
வா..வா..வா...
*
ஹை..இந்தப் பாட்டிலயும் தேர் வருதே!
https://youtu.be/bvymCpsOMQ0
-
Swimming pool songs - 2
வேதனையைத் தீர்க்க விரைந்தோடி வந்துவிடும்
காதலைப் போலுண்டா காண்..
அது சரி.. இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு.. காதலன் ஏதோ கேட்டுட்டானாம்.. அதுககாக இப்படியா தையா தக்கான்னு குதிச்சுப் பாடறது..பாடிப் பாடி அனலாய்டுச்சோ என்னவோ..குளிக்கவும் செய்றது ஸ்விம்மிங்க் பூல்ல..
நீ கேட்டால் நான் மாட்டேனென்றா சொல்வேன் கண்ணா..வாணிஜெயராம் – குரலில் ஸ்ரீப்ரியா!
https://youtu.be/sOvVC-Hr5wc
-
Swimming pool songs - 3
போன பாட்டில் என்னவேண்டுமானாலும் தருவேன் என்றாள் அந்தப் பெண்..இந்தக்காதலி இருக்காளே காதலன் கொஞ்சூண்டு டச்சிங் டச்சிங்க் பண்ணினது பொறுக்கலையாம்.. ஃப்ரண்ட்ஸ எல்லாம் உதவிக்குக் கூப்பிடறா..(வந்தாங்களா இல்லையா தெரியலை!)
அவளுக்குத் தெரியாதது என்னன்னா
நீராடும் நேரிழையில் நின்றாடும் நீர்த்துளிகள்
போராட வைத்ததே போ..
பின்ன.. நீரும் குளிர்ச்சி அதுல குளிர்ச்சியா மனம் கவர்ந்த காதலி பாடினா நீராடும் பெண்ணிடம் தானாடப் பார்க்கிறான்னுல்லாம் சொல்லக் கூடாது..பாவம் காளை மனசு நம்மள மாதிரி காளைகளுத்தான் தெரியும்..
https://youtu.be/5yS-yFhMqL0
(ஆடியோ தான் கிடைச்சது :sad: ஆ இருந்தேனா வீடியோ கிடைச்சுடுத்து..ராஜஸ்ரீ ந.தி + இளமை..
**
-
**
Swimming pool songs -4
ஆமா ஸ்விம்மிங்க் பூல் நா ஒன்லி லேடீஸ் தானா..தமிழ்ப் படங்கள்ல..இல்லையே..இங்கே அண்ணா தம்பி ரெண்டு பேர் தாங்கள் பார்த்த பெண்ணைப் பற்றி நீந்தியவண்ணம் பாடுகிறார்கள்..
கண்டுவந்த பெண்ணினைக் கண்டுவந்த அண்ணனும்
தன்னை மறந்தங்கு தம்பியிடம் – விண்ணுலக
தேவதைக் குறவென்றே சொல்லவும் தம்பியும்தான்
பாவிலே சொல்கின்றான் பார்..
https://youtu.be/xkxIoWPqaQg
ந.தி + பாலாஜி + யூத்..
-
Swimming pool songs -5
காதல் வயப்பட்டிருக்கும் இளமைப்பருவத்தில் கன்னிக்கு என்ன ஆகும்..
பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ நாணம்..( இந்தப் பாட்டுக்கு ஸ்விம்மிங் பூல் சீன் எதுக்காக வச்சாங்கன்னு ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம்!)
பசியெல்லாம் தானாய் பறந்துதான் செல்லும்
சசியின் சிரிப்பிலே தான் (?!)
மோகன் சசிகலாவின் ..இளமைக் காலங்கள்..!
https://youtu.be/2dgsJXmZrQ0
-
Swimming pool songs -6
வா ரதியே என்றிங்கு வர்ணிக்க வைத்திடுமோ
பாரதிப் பெண்ணிவளின் பாட்டு
அப்படின்னு ரொம்ப காலம் முன்னே என் சித்தப்பா சொல்லியிருக்கார்!
மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி ( இந்த பாட்டுக்கு எதுக்கு ஸ்விம்மிங்க் பூல் – இதையும் ஆராய வேண்டும்!)
https://youtu.be/b-ZNNHnNlRQ
//அவ்ளோ தாங்க எனக்குத் தெரிஞ்ச ஸ்விம்மிங்க்பூல் சாங்க்ஸ்.. மிச்சம் உள்ளதை நீங்க சொல்லமாட்டேன்னு சொல்ல மாட்டீங்க தானே!// :)
**
-
ck - ம்ம் உங்கள் பதிவுகளை பார்க்கும் போது - " நான் தன்னந் தனி காட்டு ராஜா ! " என் காட்டிலே மழை பெய்யுது ---- என்றே பாட வைக்கின்றது - உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ பாக்கி உள்ளது - எப்படி , என்று , எவ்வளவு --- இந்த கேள்விகளுக்குத்தான் பதில் கிடைப்பதில்லை // பாராட்டறீங்களா திட்டறீங்க்ளான்னு தெரியலையே ரவி :) ரொம்ப ரொமான்ஸெழுதி போரடிக்கறேனா..?
-
Ck - திட்டுவதா - அப்படி என்றால் என்ன ? ஏதாவது படத்தின் பெயரா அல்லது தென்றல் , சந்தனம் , காதல் ரம்யம் இவைகளின் மறுபெயரா ? - விளக்கம் தேவை .