சி.க,
ரவி ரொம்ப நல்ல டைப்.:)
Printable View
வாசு - ஒரு சின்ன திருத்தம் . "ரவி மட்டுமே" என்று இருந்திருக்க வேண்டும்
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 81
" வெயிலுக்கேத்த வெயில் உண்டு" தொடர்கின்றது .
பாடல் - மனதில் பதிந்து விடுவதால் இனிமேலும் யாரும் பதிவும் செய்ய முடியாது . காலை உதிக்கும் சூரியன் தன்னம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு - இன்றைய தினம் இனியதாக அமையும் என்று சொல்லும் அவன் கதிர்கள் - மலரும் கமலங்கள் - இன்று எங்களுக்கு புதிய வாழ்வு என்று சொல்லி அகம் மகிழ்கின்றன . பறவைகள் தன் சிறிய சிறகுகளால் பெரிய கனவுலகத்தை காண கூட்டை விட்டு கிள்ளம்புகின்றன - பசுக்கள் தன் மடியை தடவி , வயிற்றைக்கழுவும் அந்த பால் காரனுக்கு எல்லா பாலையும் தந்துவிட்டு தபாலில் தன் குழந்தைக்கு பால் இப்படித்தான் இருக்கும் என்று எழுதிப்போடும் நேரம் - வயதானோர்களுக்கு வயதில் இன்னும் ஒருநாள் என்று எழுதும் காலைப்பொழுது . எந்த நன்றியையும் எதிர்பார்க்காமல் , கணக்கில் தவறு செய்து குமாரஸ்வாமியின் அருளுடன் தப்பித்துக்கொள்லாமல் , என்றுமே நேரப்படி கணக்கில் தவறாமல் நடந்து கொள்ளும் அந்த கதிரவனுக்கும் இணை உண்டோ ??
பாடலை கேளுங்கள் - உண்மையை உணர்வீர்கள் .
https://youtu.be/Qu2sZ8_R0ns
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 82
தங்க மோகன தாமரையே - நீ
செங்கதிர் கண்டு சிரிப்பதினாலே
மங்கையர் வதனம் வாடுதே ! -இளம்
மங்கையர் வதனம் வாடுதே !!!
படம் : புதையல்
கவிஞர் எம்.கே.ஆத்மனாதன்
https://youtu.be/N0rHcktJm8A
வாசு சார்
தமிழில் புதிய வார்த்தைகளைப் போட்டு ஒரு அகராதியைத் தயார் செய்து தாருங்கள் சார். உங்களைப் பாராட்ட வார்த்தைகளைத் தேடி கண் பூத்து விட்டது. எல்லா வார்த்தைகளும் சாதாரணமாகத் தெரிகின்றன.
இருந்தாலும் மனதில் தோன்றியதை அப்படியே சொல்கிறேன்.
நீங்க நீங்கதான்...உங்க எழுத்து ஸ்டைலே தனி.. ஹ்ம்... நாங்களும் எழுதுகிறோம் என்று சொல்லிக் கொள்கிறோம். எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்பதைப் போல..
சி.க. சார்
நீச்சல் குளம் என்றால் சந்தோஷம், உற்சாகம், துள்ளல்.. இதெல்லாம் பாடல் காட்சியில் மட்டுமல்ல பார்ப்பவர்களுக்கும் வரும் தானே..
ஆனால் இங்கே பாருங்கள்..
சந்தோஷமாய் நீச்சலடிக்க விடாமல் காதலன் புலம்புவதை..
இவனையெல்லாம் என்ன செய்ய... படுபாவி ... மூடையே மாத்துறானே..
என்று அந்தக் கால இளைஞர்கள் தியேட்டரில் திட்டியதாக என் பாட்டனார் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்..
[பின்னே... இந்தக் காட்சியை நாம் ரசிக்க வேண்டாமா... ]
https://www.youtube.com/watch?v=CR6Cc2Cge74
ஜெய் சில சமயம் ஸ்டைல் செய்ய முற்படும் போது...
கோபால் ஞாபகம் தான் வருகிறது...
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 83
உன்னை காணும் நேரம்
படம் : உன்னை நான் சந்தித்தேன்
இந்த பார்வை ஓன்று போதும் - காலை , மாலை வேறு எதுவுமே தேவை இல்லை - யாழ் இனிதல்ல , குழல் இனிதல்ல - உன் வார்த்தைகள் தான் இனிது -
ம்ம் இப்படி ஆரம்பத்தில் நாம் கூடத்தான் வர்ணித்தோம் - பலன் அந்த பார்வையில் மிஞ்சி இருப்பது கனலும் , நம் வாழ்வில் கானல் நீரும் தானே !!!
https://youtu.be/sFO4FUO2oMQ
ராகவேந்திரா சார் - உங்களைத்தாண்டி தாண்டி பதிவுகளை போட வேண்டியுள்ளதாக உள்ளது - தாண்டுவதற்கு மன்னிக்கவும்
ராகவேந்திரன் சார், சி.க, ரவி சார்,
இந்தாங்க....ரொம்ப ரொம்ப அபூர்வமான நம்ம ரவியோட பாட்டு.
'அவளுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில்.
ரவியுடன் அம்மா. ராமண்ணா கைங்கரியம். ஆனால் அம்மா இளமை முற்றி நிஜ அம்மா போல் தெரிவார். (அம்மா 'தாய்' படத்தின் 'எங்க மாமனுக்கும்' பாடலை ஞாபகப்படுத்துவார். கொஞ்சம் 'வைரமு'ம். ஆனா ரவி என்றும் இளமை. ராமண்ணா நல்ல ரசிகர். கிளாமரை வரைமுறையோடு காட்டி நம்மை ரசிக்க வைத்தவர். (ராமண்ணாவை பின்னால் பின்பற்றியவர் ஜெகந்நாதன். இவரும் நல்ல பெண் பித்தர்). ரவியையும், ஜெயாவையும் பல படங்களில் ஜோடி சேர்த்து அழகு பார்த்தவர் ராமண்ணா நம் இரண்டாம் கட்ட ரசனைக்குத் தக்கவாறு.:) (நான், மூன்றெழுத்து, பாக்தாத் பேரழகி, அவளுக்கு ஆயிரம் கண்கள்)
'தங்கம் நான் வேண்டும் போது... அங்கம் தருவாளே மாது'
https://youtu.be/QX4NK2mdacw
//ம்ம் இப்படி ஆரம்பத்தில் நாம் கூடத்தான் வர்ணித்தோம் - பலன் அந்த பார்வையில் மிஞ்சி இருப்பது கனலும் , நம் வாழ்வில் கானல் நீரும் தானே !!!// கண்ணோல்லியோ ..இப்படி க் கோபப்பட்டு அழப்படாது :) இதோ இப்போ வந்துடுவாஙக் வீட்டம்மா :)
வாசு, ராகவேந்தர் சார் :)
// ஜெய் சில சமயம் ஸ்டைல் செய்ய முற்படும் போது...
கோபால் ஞாபகம் தான் வருகிறது...// :)
ஹச்சோ கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா எப்படி மறந்தேன்..ஒருவேளை ராத்திரியில எடுக்கப்பட்ட நீச்சல்குளப் பாட்டுங்கறதுன்னால மற்ந்திருக்கலாம் :)
சரி இதுக்கும் ஒரு பாட் எழுதட்டா
கோபத்தைக் கூட்டி குளிர்நிலவு தான்பாட
தாபஙக்ள் மேலெழுதே தான்..!
என் தேகம் சந்தேகம் என்றிங்கு சொன்னீர்
..என்னுயிரும் உம்முயிரும் வேறென்றும் சொல்வீர்
பெண்நெஞ்சம் மென்மையென இருந்தாலும் இங்கு
.பேதமைகள் கொண்டதென்று தானுணர மாட்டீர்
என்னவரே நீரென்று நானிருந்த போது
..ஏந்திழைகள் எங்கிருந்து வந்தாராம் கூறும்
கண்களிலே பார்த்துவிட்டேன் மன்னவரே உந்த்ன்
..கபடங்கள் புரிந்ததய்யா செல்வீரே நீரே!
நன்றி ராகவேந்தர் சார் பாடலுக்கு :)