Quote:
எத்தனை முறைதான் பூங்காக்களிலும் அணைக்கட்டுப் பகுதிகளிலும் மலைக்காடுகளிலும் வயல்வெளிகளிலும் மரங்களைச் சுற்றி சுற்றி காதலர்கள் வேர்த்து விறுவிறுத்து பாடி ஆட முடியும் ?
சைக்கிளில் ஆரம்பித்து ஸ்கூட்டர் பைக் கார் ...எத்தனை வகை காதல் வாகனங்கள் மோகன கீதங்கள்!
சைக்கிளை நிறைய அக்குவேறு ஆணிவேறாக கல்யாணபரிசு, பாசம், பாவமன்னிப்பு, சித்தி.....அலசிவிட்டோம்! ஸ்கூட்டரில் ஆரம்பிப்போம்!
அந்தக் கால சமூக திரைப்படங்கள் நல்ல நல்ல குடும்பக் கதைகளை பின்னி எடுத்தாலும் காதல் தேன் சுவை இல்லையெனில் படங்களை ரசிப்பது கடினமே !
அந்த வகையில் ஸ்கூட்டரை காதல் வாகனமாக்கி நாயக நாயகியர் ஆடாமல் ஓடாமல் ஸ்கூட்டரை மட்டும் ஆட்டி ஓட்டி காதல் புரிந்த கண்கொள்ளா காட்சிகள் !!
அப்போதெல்லாம் காதலி பின்சீட்டில் பில்லியன் ரைடராக அமர்ந்து காதலனைக் கட்டிக்கொண்டு கிளுகிளுப்பேற்ற சேலை உடை வழி செய்யாததால்
ஸ்கூட்டரில் ஒரு பக்கத்து கூண்டு இருக்கை சேர்க்கப்பட்டிருக்கும்! Tandem seat என்று அழைக்கப்படும். ஸ்கூட்டர்கள் / spaghetti இத்தாலியை மூலமாகக் கொண்டவை.! ரோமன் ஹாலிடே, கம் செப்டம்பர் படங்களில் இணைப்பில்லாத ஸ்கூட்டர்களும் போரை அடிப்படியாகக் கொண்ட பல படங்களில் இணைப்புடன் கூடிய ஸ்கூட்டர்கள் பைக்குகளையும் காணலாம்! இப்போதெல்லாம் சூரிதாருக்கு மாறி விட்டதால் இரண்டுபக்கமும் கால்களைப் போட்டுக் கொண்டு குண்டுகுழிகளில் வேண்டுமென்றே காதலன் ஏற்றி இறக்கும்போது பயப்படுவது போல பாவலா பண்ணி கட்டிப்பிடித்து கிளுகிளுப்பேற்றும் பார்ப்பவர்க்கு கடுப்பேற்றும் காதலியரே அதிகம்!!