ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !
1973ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கோவையில் கிராமப்புற மாணவனாக வேளாண்மைப் பொறியியல் பட்டப் படிப்புக்காக அடியெடுத்து வைத்த மறக்க முடியாத தருணம் !Quote:
ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !
ராகிங் என்று சொல்ல முடியாது ஆனால் திகில் பாண்டிகளான சீனியர்களின் பிடியில் நண்பர்கள் கும்பலோடு நானும் சிக்கிக் கொண்ட அனுபவம் !!
வழக்கமான கேள்விகளுக்குப் பிறகு முக்கியமான கேள்வி நீ யார் ரசிகன் என்பதே !
அப்போதைய காலகட்டத்தில் கேம்பஸில் இரண்டு குரூப் ரசிகர்கள்தான் : நடிகர்திலகம் மக்கள்திலகம் !
வார இறுதியில் சனிக்கிழமை இரவு கீரைஸ் சாப்பிட்டு விட்டு ஆடிடோரியம் சென்றால் கொஞ்சம் திகிலாகவே இருக்கும்... அந்த அளவு சிவாஜி எம்ஜீயார் மோதல்கள் !
எனக்கு அடிப்படையில் நடிகர்திலகம் ரசிகன் என்றாலும் ஜெமினியையும் ஜேம்ஸ் பாண்ட் சீன்கானரியையும் ரொம்பவே பிடிக்கும் ! மேலும் பள்ளியிலும் பியூசி படிக்கும்போது கல்லூரியிலும் எனது குரல் சற்று ஏ எம் ராஜாவையும் பிபி சீனிவாசையும் ஒத்திருந்ததால் ஜெமினி பாடல்களை நிறையப் பாடியிருக்கிறேன்! (nambunga boss!) பாட்டுப் பாடவா...என் பேவரிட் சாங் ! அப்புறம் நிலவுக்கு என்மேல்.....
தர்மசங்கடமான சூழ்நிலையில் தப்பிக்க எண்ணி நான் ஜெமினி ரசிகன் என்று சொல்லிவிட்டேன்!
...ஆரம்பித்தது எனக்கு 7.5 (சட்னி சாம்பார் ) அர்ச்சனை அபிஷேகங்கள்...
சிவாஜி எம்ஜீயார் ரசிகர்கள் இந்த விஷயத்தில் ஒற்றுமையாகக் கைகோர்த்து எனக்கு டின் கட்டிவிட முடிவு செய்து விட்டார்கள் !
தொடரும் ... Please visit GG island ...Gemini Ganesan the Romance King thread...for furtherance!