Originally Posted by
Yukesh Babu
உ.சு.வா படம் வெளிவந்த சமயம் நான் PUC (1972) படிப்பு முடித்து பொறியியல் படிப்பை மேற்க்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தேன்.
PUC கல்லூரி விடுமுறை சமயத்தில் உ.சு.வா ரிலீஸ் ஆகியது.
விடுமுறைக்கு எனது உறவினர் இருந்த செஞ்சி என்ற ஊருக்கு சென்றிருந்தேன்.
உறவினர்கள் குடும்பத்துடன், ஒரு பத்து பேர், அனைவரும் தலைவரின் ரசிகர்கள், திருவண்ணாமலைக்கு picnic செல்வது போன்று பயணம் செய்து, ரிலீசான இரண்டாவது நாள் படத்தைப் பார்த்தோம்.
அருமையான அனுபவம்.
படத்தில் தலைவர் நம்மையெல்லாம் அப்படியே மயக்கி விட்டார்.
இந்தியாவை விட்டு வேறு உலகத்தில் இருப்பது போன்ற ஓர் உணர்வை படத்தில் ஏற்படுத்தியாருந்தார்.
அந்த மயக்கத்திலிருந்து என்னை மீட்க சில நாட்கள் ஆயின.
இந்த அனுபவத்தை மறக்க முடியுமா?
1972ல் தினத்தந்தியில் நான் படித்ததாக நினைவு என்னவென்றால், தாய்லாந்து நடிகை மேத்தா ரூங் ரெத்தா அவர்கள் உ.ச.வா படம் வெளிவரும் பொழுது இவ்வுலகில் இல்லை என்பதுதான் அந்த செய்தி.
இந்த செய்தியை அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தது மட்டும் நினைவிற்கு வருகிறது.
முழு விவரம் சரியாக நினைவில்லை.
அதனால்தான் அன்பர்கள் யாருக்காகவாவது தெரிந்திருந்திருக்குமோ என்று கேட்டு பதிவில் எழுதியிருந்தேன்.
by venkat rao his fb page the matter is true?