http://www.mayyam.com/talk/images/misc/sticky.gif Sticky: Sivajiyin Sadhanai Sigarangal by Murali Srinivas
Started by Murali Srinivas, 15th September 2008 01:25 PM 5 Pages •123...5
Printable View
http://www.mayyam.com/talk/images/misc/sticky.gif Sticky: Sivajiyin Sadhanai Sigarangal by Murali Srinivas
Started by Murali Srinivas, 15th September 2008 01:25 PM 5 Pages •123...5
Thread cleaned. Pls don't respond to trolls. Report the offensive posts instead.
இந்த திரியில் பங்கு பெறும் அனைத்து நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.இப்போது நடைபெற்ற குழப்பங்கள் இந்த திரிக்கு புதியவை அல்ல. கடந்த 7 வருடங்களாக பல முறை இது போன்று நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக இந்த திரியின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் இது போன்று பல பெயர்களில் உள்ளே நுழைந்து இங்கே பங்களிப்பு செய்பவர்களை provoke செய்து ஆத்திரமூட்டும் வார்த்தைகளை பிரயோகம் செய்ய வைத்து அதன் மூலம் இந்த திரியின் focus-ஐ திசை திருப்பவும், திரியின் வளர்ச்சியை முடக்கவும் காலங்காலமாக சில vested interests நடத்தி வரும் சூழ்ச்சிக்கு நம்மவர்கள் பலியாவதும் அவர்கள் விரிக்கும் வலையில் நாமே போய் சிக்கிக் கொள்வதும் மிகுந்த வேதனையளிக்க கூடியவை.
இது போன்ற திசை திருப்பும் பதிவுகள், நம்மை provoke செய்யும் பதிவுகள் எத்தனை வந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி தள்ளி நம்முடைய goal என்னவோ அதை மட்டுமே கருத்தில் கொண்டு பங்களிப்பு செய்வோம் என உறுதி கொள்வோம்.
சற்றே அதீதமாய் உணர்ச்சிவசப்படும் நமது ஒரு சில நண்பர்களுக்கு ஒரு extra வேண்டுகோள். இது போன்ற ஒரு சிலர் வந்து நடிகர் திலகம் greatest actor இல்லை என்று சொல்வதால் அவர் அப்படி ஆகிவிடப் போவதில்லை. அதே போன்று நடிகர் திலகத்தின் படங்கள் Box office-ல் சாதனை புரியவில்லை என்று சொன்னால் அது உண்மையாகி விடாது. இப்படி ஒரு பதிவு வந்தால் உடனே நமது ரசிகர்களும் அதற்கு பதில் சொல்கிறேன் என்று பதிய வேண்டிய அவசியமில்லை. காரணம் நமது பதிலை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அவர்களது நோக்கம் கோவத்தை மூட்டுவதும் குழப்பம் விளைவிப்பதுமே. ஆகவே நமது பதில்களில் கண்ணியம் வேண்டும்.
ஆகவே கோவம் தவிர்த்து தேவையில்லாத விவாதங்களை புறம் தள்ளி நடிகர் திலகத்தின் அருமை பெருமைகளை பேசி அவர் புகழ் பட்டொளி வீசி பறக்க அனைவரும் கை கோர்ப்போம்.
அன்புடன்
Thank you Moderators for the timely intervention and action. As you said, the appropriate method is to report trolls to the moderators instead of responding.
முரளி சார் சொன்னது போல் எதிர்காலத்தில் இது போன்ற பதிவுகளுக்கு நாம் பதிலளிக்காமல், மாடரேட்டர்களிடம் இவற்றை விட்டு விடுவதே சாலச் சிறந்தது.
இது போன்ற இடையூறுகளால் பாதிக்க்ப் படுவது கோபால் சாரின் ஆய்வேடு தான். இனி வரும் காலங்களிலும் இது போன்று பாதிக்கப் படாமல் இருக்க கோபால் சாரின் ஆய்வுக் கட்டுரை மற்றும் நடிகர் திலகத்தின் நடிப்பிலக்கண ஆய்வுகளுக்கென தனித் திரி துவங்கப் பட்டுள்ளது.
http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting
இத்தலைப்பினை யொட்டிய விவாதங்களை மட்டும் நாம் இனி அங்கே தொடர்வோம். அனைத்து நண்பர்களும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.
கோபால் சார் இனி நீங்கள் இடையூறில்லாமல் தங்கள் ஆய்வேட்டினை அங்கே தொடருங்கள். வாழ்த்துக்கள். நானும் சேர்ந்து கொள்கிறேன். இது தொடர்பான கருத்துப் பரிமாற்றத்தில் நம் மற்ற நண்பர்களும் கலந்து கொள்வர்
with due respect to Murali and Raghavendra, why should we leave these NT repect-offenders? Of course, we should report to Moderator, but I sincerely believe that we must give back to these back-stabbers.
நல்லவனுக்கு நல்லவனாகவும், கெட்டவனுக்கு கெட்டவனாகவும் இருப்போம்.
This is my opinion.
Regards,
NT fan
Dear TAC
தங்களின் உணர்வுகளிலும் கருத்துக்களிலும் நூற்றுக்கு 1000 சதவீதம் நியாயம் உள்ளது. முரளி சார் சொன்னது போல் இவர்கள் ஏதாவது ஒரு ஐடியில் மாற்றி மாற்றி வந்து எழுதிக் கொண்டு தான் இருப்பார்கள். மாற்று முகாம் எனப்படும் நண்பர்கள் நிச்சயம் இந்த மாதிரி தாக்கி எழுதும் போக்கினைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். இருவருக்கும் இடையில் தூண்டி விட்டு குளிர் காய நினைக்கும் ஒரு சில பதிவாளர்களால் தான் இந்த மாதிரி இடையூறுகள் தோன்றுகின்றன. இவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் இவ்வாறானவர்களைப் பற்றி உரியவர்களிடம் சொல்வதொன்றே சிறந்த வழியாக எனக்குத் தோன்றுகிறது. பதிலுக்கு பதில் என்றால் அதனால் பாதிக்கப் படுவது நம் திரியும் அதன் பங்களிப்பும் தான். எனவே தான் நானும் முரளி சாரும் இந்த அணுகுமுறையில் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
அதற்காக நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதில்லை. கருத்திற்கு கருத்து நாம் அளித்துத் தான் வருகிறோம். இவர்கள் திரும்பத் திரும்ப ஒரே விதமாக கூறுவதிலிருந்தே இவர்களின் நோக்கம் புரிந்து விடுகிறதன்றோ.
இதுவே என் கருத்து.
Hi,
Let peace prevail lets Continue our journey along with NT
Let us move forward in propagating the glory of the greatest
actor.