http://www.youtube.com/watch?v=gncO6P2flgw
Printable View
"கௌரவம் திரைப்படம் பற்றிய ரூசிகர தகவல். அதிசய உலகம் பாடல் உன்னிப்பாக பாருங்கள். சிவாஜி பைப் விடும் புகை கூட இசைக்கு ஏற்றார் போல் . போகிறது"
http://www.youtube.com/watch?v=Q6W6IunESQc
Thanking you for a happy come back and intensive participation with extensive video clippings on NT, Abkhlabhi sir. Hope the sag in this thread will be levelled.
சுடர் விளக்காயினும் அதன் ஒளி நிலைத்திட ஒரு திரிதூண்டுதல் தேவை. ஆரம்பிக்கும்போதே சுடரை அணைத்து ஒளி பரவா வண்ணம் தடுக்க யாரும் எண்ணுவதில்லை. ஒரு கருத்தை மையப்படுத்தி நாம் எழுதும்போது சில அடிப்படை புள்ளிவிவரங்களையும் , செய்திகளையும் ஆய்ந்து ஒரு வடிவப்படுத்தும்போது சில சமயம் பிறரது எழுத்து வீச்சு நாமறியாது வந்துவிடும். அது கருத்துக்கவரல் (Plagiarization) ஆகாது. எடுத்துக்காட்டாக , நான் ஒரு கருத்தரங்கில் ஏற்றத்தாழ்வுகளுடன் தமிழில் கருத்துக்களை வெளிப்படுத்தும்போது என் பேச்சுத்தமிழ் ஆசான் நடிகர்திலகத்தின் பாதிப்பு என்னையுமறியாது ஆட்கொண்டுவிடுகிறதே! .கருத்து வெளியீடுகளை வரிக்குவரி அதன் வரிசைக்கிரமங்களைக்கூட மாற்றாமல் நகலெடுப்பதுதான் தவறு. முரளி அவர்களின் ஆதங்கம் நியாயமானதுதான். ஆனாலும் அவர்தம் கட்டுரைகளின் எப்பகுதிகள் எந்தவகையில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பது தெளிவாகாத நிலையில் யாரும் குற்றம் சுமத்தப்படுவதாக எண்ணி மருகுவது தேவையற்றது.Quote:
இதுவரை என்னுடைய பழைய பதிவுகளை 2008 மற்றும் 2009 காலகட்டங்களில் வந்தவற்றை திரியின் புதிய வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீள் பதிவு செய்து வந்தேன். எனக்கு அந்த சிரமம் வேண்டாம் என்று நினைத்தோ என்னவோ சில நண்பர்கள் என் பதிவுகளை மீள் பதிவு செய்கின்றனர். அவர்களுக்கு மிக்க நன்றி. ஒரே ஒரு வருத்தம். பதிவுகளில் அவர்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு சில நகாசு வேலைகள் செய்து போடுகின்றனர். முழுமையாக எடுத்து போட்டு விட்டால் எனக்கும் மீள் பதிவு போடும் வேலை மிச்சம். Murali Sir's posting