நடிகர் திலகத்தால் மட்டுமே நடித்துக் காட்ட முடிந்த சில நலக் குறைபாடுகள்
குறைகள் இல்லாத மனிதர் எவருமில்லை / உடன் பிறந்த உடல் நல குறைபாடுகள் / இடையில் நிகழ்ந்தவை
நலக்குறை 4 :
காலில் குறைபாடு
Quote:
உடலில் எந்தப் பகுதி சிறிது பாதிக்கப் பட்டாலும் மனமும் சேர்ந்தே சோர்வடைந்து விடும். பெரும்பாலான நடிகர்கள் உடல் சோர்வை வெளிப்படுத்துவர்.ஆனால் மன சோர்வையும் சேர்த்து கண்களிலும் பாவனைகளிலும் உடல்மொழியிலும் சரியான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர்திலகம் ஒருவரே ! சிறந்த உதாரணம் பார்த்தால் பசி தீரும் படத்தில் ராணுவத்தில் குண்டடி பட்டு ஊனமுற்ற காலுடன் நடை பயிலும் சீரான நடிப்பு...ஆலயமணியில் செயலற்ற கால்களுடன் ஊன்றுகோல் துணைகொண்டு அவர் நடத்திய நடிப்பு சாகசம்......