http://i66.tinypic.com/23s658m.jpg
Printable View
இதற்கு முன்பு கடந்த ஆண்டில் 31/10/2014 முதல் சென்னை மகாலட்சுமியில்
தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டசமயம்
http://i65.tinypic.com/x6kc2d.jpg
இன்று காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் திரை எழில் வேந்தன்
எம்.ஜி.ஆர். நடித்த "கண்ணன் என் காதலன் " ஒளிபரப்பாகிறது.
http://i66.tinypic.com/15s6f5x.jpg
சென்னை சைதாபேட்டை கோடம்பாக்கம் சாலையில் உள்ள உணவகத்தில்
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை
முன்னிட்டு, வைக்கப்பட்ட பேனர் நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/102ns5f.jpg
மக்களுக்கு துன்பம் வரும்போது அது அந்த காலமாக இருந்தாலும் சரி...எந்த காலமாக இருந்தாலும் சரி....நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் ரசிகர்கள், பக்தர்கள் தம்மால் இயன்ற உதவிகள் செய்திருக்கிறார்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்திய வெள்ள நிகழ்வுகளில் இரு ரசிகர்கள் குழுக்களும் தம்மால் இயன்ற அளவிற்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உதவிகள் செய்துள்ளதை நண்பர்கள் வாயிலாக தெரிந்துகொள்ள, இணையதளங்கள் மூலம் பார்க்க, நேர்ந்தது...!
இந்த நல்ல காரியங்களை செய்த மக்கள் திலகம் பக்தர்களுக்கும், உதவிகள் செய்வதற்கு ஒரு குழுவாக செயல்பட திட்டமிட்டு வழிநடத்தியுள்ள, திரு எம் ஜி ஆர் அவர்களின் வயதில் மூத்தவராக இருந்தும் செயலில் இளைஞராக உள்ள "முரட்டு பக்தர்" "பழுத்த அனுபவசாலி" மற்றும் "சிறந்த அறிவு" "ஆற்றல்" கொண்டவருமான பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கும், சைதாபேடையை சேர்ந்த "இளம் புயல்" "செயல் வீரர்" திரு ராஜ்குமார் அவர்களுக்கும் நடிகர் திலகம் திரியின் சார்பாக எனது வாழ்த்துக்களையும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
இரு திலகங்களின் ஆன்மாக்கள் தங்களுடைய இந்த நற்செயல்களை பார்த்து பெருமைகொள்ளும், ஆசீர்வாதம் செய்யும் என்பது நிச்சயம் !
வளர்க உங்கள் நற்பணி ! வாழ்க உங்கள் தொண்டுள்ளம் !
Rks
மக்கள் திலக மனிதநேயர்களை மனங்கனித்து வாழ்த்திய மதிப்புமிகு. ரவிகிரண் சூர்யா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை மக்கள் திலகத்தின் திரி அன்பர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.....
நான் என்ன நினகிரோனோ அதை சொல்லிவிடுவேன்..
சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்கள் அறிவது :
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி !
வெள்ளம் வந்த அன்றே, இந்த நிவாரண பணிகளில் முழுமையாக புயல் வேகத்தில் இறங்கி, சமூக பணியாற்றியவர் சைதை திரு. ராஜ்குமார் அவர்கள். இத்தனைக்கும், பிரதான ஜோன்ஸ் சாலையில், முழங்கால் அளவு நீர் ஓடிகொண்டிருக்கும்போதே, அவர் களப்பணியாற்றினார். பின்னர்தான் நான் அவருடன் இணைந்து செயலாற்றினேன். மேலும், நான் கல்லூரியில் பணிபுரிவதால், அரசாங்கமும், கல்லூரி நிர்வாகமும் எனக்கு தொடர் விடுமுறை அளித்த காரணத்தால்தான், நானும் இந்த பணியில் பங்கேற்க முடிந்தது. எனவே என்னுடைய பங்கு பெரிதல்ல.
இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் பங்கேற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், தேறுதலும், உதவிகளும் நல்கிய நடிகர் திலக திரி அன்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.