http://i1065.photobucket.com/albums/...psynnidopr.gif
Printable View
https://scontent-sin1-1.xx.fbcdn.net...0d&oe=561370BA
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Nadigar Thilagam Maraium Thilagamalla Endrum Makkal Manathil Nilaithu Nirkum Thilagam.
Mr Senthilvel,
Congratulation for your 1000 wonderful posts. Keep the momentum going.
Regards
https://fbcdn-profile-a.akamaihd.net...ca7e375cc114ab
Malai Murasu Murali added 2 new photos.
# ஜூலை 21 - சிவாஜி கணேசன் நினைவு நாள்...!
சமீபத்தில் நடந்தது அது....
“வீரபாண்டிய கட்டபொம்மன்” மறு வெளியீட்டுக்கான , டிரைலர் வெளியீட்டு விழா என நினைக்கிறேன்.. .
பிரபு மேடையில் அமர்ந்திருக்கிறார்......
வைரமுத்து பேசுகிறார் :
“சிவாஜியின் மரணத்தைப் பார்த்தபோது நினைத்தேன்...
இறந்து கிடப்பவன் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் மட்டும்தானா..?
ஒரு உடலில் நூறு ஜென்மங்கள் வாழ்ந்தவர் சிவாஜி கணேசன்...
இந்த உடம்புக்குள் அப்பர் இறந்து கிடக்கிறார்...
இந்த உடம்புக்குள் ராஜ ராஜ சோழன் இறந்து கிடக்கிறான்...
இந்த உடம்புக்குள் கரிகால் பெருவளத்தான் சேரன் செங்குட்டுவன் இறந்து கிடக்கிறான்...
இந்த உடம்புக்குள் ஜூலியஸ் சீசர் இறந்து கிடக்கிறான்...
இந்த உடம்புக்குள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இறந்து கிடக்கிறான்...
இந்த உடம்புக்குள் வீரபாண்டியகட்டபொம்மன் இறந்தும் இறவாமல் கிடக்கிறான் என்றுதான் நினைத்துக் கொண்டேன்...
யாருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு..?
சிவாஜி என்ற நடிகனுக்கு சாவே கிடையாது..”
# வைரமுத்து பேசப் பேச பிரபு கண்களில் கண்ணீர் வழிந்தோடியது....
பிரபுவுக்கு மட்டும்தானா..? பார்த்துக் கொண்டிருந்த என் கண்களும் பனித்துப் போனது....!
உண்மைதானே ...? அந்த உண்மைக் கலைஞன் , உன்னத நடிகனுக்கு ஏது இறப்பு..?
ஜான் ஆசீர்
https://scontent-ord1-1.xx.fbcdn.net...0e&oe=561B438E
https://scontent-ord1-1.xx.fbcdn.net...8a&oe=5613DBA4
நடிகர் திலகமே உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு
எப்பொழுதும் உங்கள் நினைவுதான்
உலகம் உங்களை என்றும் மறவாது
ஆயிரம் பதிவுகளை கண்ட அன்பு நண்பர் செந்தில்வேல்
மேலும் பல ஆயிரம் பதிவுகள் காண வாழ்த்துக்கள்
Vikatan EMagazine
ஜூலை 21: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று..
இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்தின் நினைவுநாள் இன்று...
https://scontent-ord1-1.xx.fbcdn.net...fe&oe=5610F706
மன்னவன் சென்றானடி! இன்று சிவாஜி கணேசன் நினைவு தி
21 ஜூலை
2015
06:09
பதிவு செய்த நாள்
ஜூலை 21,2015 00:31
http://img.dinamalar.com/data/largen...ge_1300530.jpg
காலத்தாலும் எண்ண ஓட்டத்தாலும் உலகமெல்லாம் இருக்கும் தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற்ற நிறைந்து இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படத்தில் 'சக்சஸ்' என்ற முதல் வசனத்தைப் பேசி நடிப்பில் பிரபலமானார். 'சிவாஜி கண்ட இந்து ராஜியம்' என்ற நாடகத்தில் நடித்ததைக் கண்டு இவருக்கு 'சிவாஜி' என்ற பட்டத்தை பெரியார் கொடுத்தார். காதல், வீரம், சோகம் என்ற அனைத்து கதாபாத்திரத்திலும் தனது முத்திரையை பதித்தவர். நடிப்பில் இவரை மிஞ்சியவரை காண்பது அரிது என்று நேருவால் பாராட்டப் பெற்றவர்.நடிகர் திலகம், நவரசத் திலகம், சிம்மக்குரல் கணேசன், கலைகுரிசல் கணேசன், பத்மஸ்ரீ கணேசன் என சிவாஜி கணேசனை அழைப்பதில் பெருமைப்படுகிறேன் என தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் புகழாரம் சூட்டப்பெற்றவர்.
'பராசக்தி' முதல் 'பூப்பறிக்க வருகிறோம்' என 288 படங்கள் வரை நடித்துள்ளார். இதில் 100 க்கும் மேற்பட்டவை வெள்ளி விழா படங்கள். நடிக்கும் போது அந்த படத்தின் கதாபாத்திரமாகவே மாறிவிடுவது இவரது சிறப்பு.1959 ல் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம். 200 நாட்களுக்கு மேல் இப்படம் ஓடியதால், 1962 ல் உலகத் திரைப்பட விழாவிற்கு எகிப்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற சிறப்பு பெற்றது.காமராஜரின் விசுவாசியாக இருந்ததால் காங்கிரசின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார். 1967 ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தோல்வியை கண்டு துவண்டு விடாமல் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டியவர் சிவாஜி கணேசன். தமிழக ஜனதா தள தலைவராகவும் சிவாஜி கணேசன் இருந்தார்.
எல்லோரிடமும் அன்பாகவும், நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். நவரச திலகமாக ஒன்பது வேடங்களில் நடித்த நவராத்திரி, அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் பாசமலர், செக்கிழுத்த செம்மலாக நடித்த கப்பலோட்டிய தமிழன், புரட்சி வீரனாக நடித்த சிவந்தமண் போன்ற எண்ணற்ற படங்கள் சிவாஜி கணேசனின்பெருமையை எடுத்துக் கூறும். காலத்தால் மறக்க முடியாத அந்த மாபெரும் நடிகர் மண்ணை விட்டுமறைந்தாலும், மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம்பெற்றிருப்பார்.- ஏ.எஸ்.பி.சிவசுந்தரம், மதுரை
தினமலர்
1000 பதிவுகள் அள்ளி வழங்கிட்ட செந்தில்வேல் சாருக்கு என் மனப்பூரவமான வாழ்த்துக்கள்.