கலிய பெருமாள் சார்
இது வரை காணாத மக்கள் திலகத்தின் சினிமா - அரசியல் அபூர்வ படங்கள் -கட்டுரைகள் -அருமை .
உங்களது பதிவுகள் மக்கள் திலகம் திரிக்கு பெருமை சேர்க்கிறது .
தொடர்ந்து அசத்துங்கள் சார்
Printable View
கலிய பெருமாள் சார்
இது வரை காணாத மக்கள் திலகத்தின் சினிமா - அரசியல் அபூர்வ படங்கள் -கட்டுரைகள் -அருமை .
உங்களது பதிவுகள் மக்கள் திலகம் திரிக்கு பெருமை சேர்க்கிறது .
தொடர்ந்து அசத்துங்கள் சார்
A special mention is about the writing skill of MGR I have read some of his literary works in every work his writing skill is like conversing with us and not just a write up. This book is no different. When we read a chapter in some places our mind will ask a question, that question will be in the next sentence and when MGR explains that question some times we find a doubt and that same doubt will be in next line. It appears that we are not reading the book, it is like MGR talking to us.
http://i125.photobucket.com/albums/p...ps7ec40948.jpg
More images can be found in this post.
http://mgrroop.blogspot.in/2009/07/mgr-book.html
MGR Speech
Below is the part of the speech delivered by MGR in front of highly educated people in Chennai Manavazhagar Mandram Muthamil Vizha held in the year 1964. He spoke for two days yes, not two hours. Without any body help and any hints.
The Extract of his speech
வைத்திய நிபுணரிடம் ஒரு கத்தியைக் கொடுத்து, அறுத்து விடு என்று கூறுவதற்கும் ஒரு கொலைகாரனிடம் கத்தியைக் கொடுத்து அறத்துவிடு என்பதற்கும் அதிக வித்தியாசமிருக்கிறது. இதன் பொருளை இடம், பொருள், ஏவலாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அறுத்து விடு என்பது ஒரு கருத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறது என்றாலும் வைத்தியனிடம் கொடுக்கப்படும் கத்தி ஒரு குழந்தையின் வாழ்வுக்கு வழி செய்வதாக அமையும். அதே போல, கொலைகாரனிடம் கொடுக்கப்பட்ட கத்தி, ஒன்று மறியாத குழந்தையைக் கொலை செய்யப் பயன்படும் என்ற வித்தியாசம் இருப்பதை உணரலாம். உண்மையான பொருளை ஒரு வார்த்தையில் அடைத்துவிட முடியாது.
அடிமை என்ற சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கலாம். அடிமை என்பவன் பிறருக்கு ஏவலனாக ஆக்கப்பட்டவன் என்றும் கூறலாம். பொதுவாக அடிமை என்பதற்குத் தொண்டு செயல் என்ற பொருளையும் கொள்ளலாம்.
வாழ்வுக்கும் எண்ணத்திற்கும் வரம்பு கட்டி விட்டால், அதையும் அடிமையென்று சொல்லத்தானே வேண்டும்?
கருத்துக்குக் கருத்து விவாதிக்க வேண்டும் அதற்குப் பிறகே ஒரு முடிவைச் சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு, எல்லாம் எனக்குத் தெரியும் என்று ஆட்சிப் பீடத்திலிருப்போர் தம் கருத்தையே சாதித்தால் அது மற்றவரை அடிமைப்படுத்துகிற செய்கைதானே நீதி மன்றத்திற்கு வருவதற்கு முன்னரே, நீதிபதி தீர்ப்பபை எழுதி விடுகிறார் என்றால் என்ன அர்த்தம்? இப்படி இருக்கலாமா சுதந்திர நாட்டில்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சியாளர் ஆட்சிப் பீடமேறிய பிறகு, மக்களை அடிமையாக அவர்களைப் பலவந்தபடுத்திக் கருத்துக்களைத் திணிக்கின்றனர். இதுதான் நாம் பெற்ற சுதந்திரமா?
தொண்டு என்பது விரும்பி ஏற்றுக் கொள்வது, அடிமை என்பது அடிமைகளாக ஆக்கிக் கொள்ளுகிற, அல்லது ஆக்கப்படுகிற நிலை.
கட்சிக்கு அடிமைகளாக்க நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். இன்று நாட்டிலே உள்ள நிலைமை இது. ஆட்சியினரிடத்திலே எந்தக் கருத்தை சொல்வதற்கும் அதிகாரம் இல்லாமல் மக்கள் பேசாமலிருக்கிறார்களென்றால், அடிமைத்தனம் என்பதுதான் பொருளே தவிர, அது தொண்டு அல்ல.
நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உன்னத இலட்சியத்திற்கு என்னைத் தொண்டனாக ஆக்கிக் கொண்டவன். நான் விரும்பி ஏற்றுக் கொணட் தலைவன் முன்னால் தொண்டனாக இருக்கிறேன்.
மக்கள் குறைகளை மந்திரிகளிடம் கூற வந்தால், அதைக் கேட்காமல், ஆறுதல் கூடக் கூறாமல் அலட்சியமாக இருப்பது சுதந்திரம் பெற்றதற்கு அடையாளமா? ஏழைகள் வாழ்வை ஏற்ற செய்ய வேண்டிய அமைச்சர்கள், அவர்களை மென்மேலும் வாட்டி வதைக்கும் போக்கில் அரசு செலுத்தும் போது, சுதந்திரம் என்பது வெறும் கேலிக் கூத்தென்பது தவிர வேறென்ன?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள், மக்களை அடிமைகளாக நினைக்கும் அவல நிலை மாறினாலன்றிச் சுதந்திரம் என்ற சொல்லுக்கு அடிமை என்றே பொருள் கொள்ள வேண்டும்.
PERUMUGAI VELLORE
http://i45.tinypic.com/erhead.jpg
MGR has written an account about Gandhiji and Nethaji Subash Chandra Bose in his Biography “Nan En Piranthen”. In this chapter MGR goes into details the feeling towards Gandhiji and Nethaji and also mentions the reason why he left the Congress party.
Below article was forwarded K.P.Ramesh from Dubai. This post is from srimgr.com
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பேச்சுக்கள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. என் உள்ளத்தில் அவரை ஒரு ஆதர்ச புருஷராக ஏற்றுக் கொண்டிருந்தேன். நிமிர்ந்த அவருடைய முகம், கம்பீரமான பார்வை, சின்னஞ் சிறு கைக் குழந்தையின் முகத்தில் எப்படிக் களங்கமே காண முடியாதோ, அதுபோல் தெளிவான, பசுமையான, சுய நலத்தின் வரிக்கோடுகள் எதுவும் இல்லாத தெளிந்த முகம்...
இப்படிப்பட்ட அவருடைய படத்தைப் பார்க்கும் போதெல்லாம், சுவாமி விவேகானந்தரின் உருவம்தான் என் நினைவுக்கு வரும். அப்படிப் பட்டவர், பட்டாபி சீதாராமை எதிர்த்து, அகில இந்திய காங்கிரசின் தலைவர் பதவிக்குப் போட்டி இட்டார்.
வெற்றி நேதாஜிக்குத்தான்! ஆனால், முடிவு அறிவிக்கப்பட்டவுடன், காந்திஜி, "பட்டாபி தோல்வி, என் தோல்வி...' என்று சொன்னார்; காங்கிரஸ் கட்சியே அதிர்ந்தது. அரசியலைப் பற்றி எதுவும் சரியாகப் புரியாத எனக்குக் கூடக் கலக்கம்.
"அப்படியானால், நேதாஜி, காந்திஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இல்லையா?' என்ற கேள்வியால் ஏற்பட்டதல்ல அக்கலக்கம்.
காந்திஜியின் மனதில் கூட தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற எண்ணத்திற்கு இடமிருக்கிறதா!
காந்திஜியைப் பற்றி விமர்சனம் செய்ய எனக்கு சிறிதும் அருகதை இல்லை என்பதை உண்மையாக இப்போதும் உணர்ந்தவனே ஆனாலும், அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையில் ஒரு சிறு விரிசல், எப்படியோ என், உலகம் அறியாத உள்ளத்தில் ஏற்பட்டு விட்டது.
திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக் கொண்டேன்... "காந்திஜிக்கு கூட இப்படித் தோன்ற இயலுமா?' என்று. ஆனால், "விருப்பு வெறுப்புகளைப் பாராது, வேண்டியவர், வேண்டாதவன் என்பதைப் பற்றி கவலைப்படாது, தன் தூய லட்சியத்திற்கு சேவை செய்கிறவர்கள் யார் என்பதைத் தெரியப்படுத்தாவிட்டால், தன்னைப் பின்பற்றுகிறவர்கள் தவறான பாதையில் அழைத்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டு விடுமானால், தன் லட்சியமே தவறான பாதைக்கு இழுக்கப்பட்டு விடுமானால், அதை எப்படி அந்தப் புனித உள்ளம் அனுமதிக்கும்; ஏற்கும்?' என்று இன்னொரு மனம் சொல்லிற்று.
இதையும் என் உள்ளம் எனக்கு அறிவுறுத்தாமலில்லை. இருப்பினும், ஏதோ ஒரு பெரிய ஏமாற்றம். அதிலும், மகாத்மாவை வணங்கிப் பதவியேற்றுப் பேசிய நேதாஜியின் பேச்சு, எனக்கு மேலும் நேதாஜியின் மேல் அனுதாபத்தையே ஏற்படுத்தியது.
அவர் பதவியிலிருந்து விலகியது என்னை மீளாத் துன்பத்துக்குள்ளாக்கியது என்றால் பொருத்தமுடையதே ஆகும்.
நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கு இது மட்டும்தான் காரணம் என்றில்லாவிட்டாலும், இதுவும் ஒரு காரணம் என்று சொல்வதில் தவறில்லை.
— "நான் ஏன் பிறந்தேன்' கட்டுரைத் தொடரில், எம்.ஜி.ஆர்.,
VALLALAR SATHUVACHARI VLR
http://i46.tinypic.com/2emddlg.jpg
A short story written by MGR.
MGR wrote an article titled “After Fame” (புகழுக்குப்பின்) in 1961. This is an extract from the article. MGR narrates a small story how a person should lead the life, how much fame lasts in this world.
ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற ஒரு திறமைசாலியைக் கண்டான். அந்தத் திறமைசாலி மாடு பிடிப்பதில் மாவீரன். இவனுக்கு அவன் மீது அளவற்ற பற்று ஏற்பட்டது. அந்த திறமைசாலிக்கு ஒரு நாள் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு திறமைசாலியைப் போற்றிப் புகழ்ந்தனர் மக்கள். சிறுவனும் உள்ளம் பூரித்துத் திறமைசாலியைப் போற்றினான்.
அந்தத் திறமைசாலியை ஒரு முறையாவது தொட்டு மகிழ வேண்டுமென்ற ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டால் அதுவே தன் வாழ்வில் பெறக்கூடிய பெரும் பாக்கியமாகக் கருதினான். அந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்காக அவன் எடுத்த முயற்சி மிகப் பெரியதாக இருந்தது.
காலம் சுழன்றது.
இப்போது சிறுவன் வாலிபனானான். இவனுக்கு இருந்த ஆர்வத்தால் இவனே பெரிய திறமைசாலியானான். சந்தர்ப்பமும் கிடைத்தது திறமையைக் காட்ட…
நாளடைவில் மிகப் பிரபலமானவனாக மாறி, ஏராளமான புகழ் மாலைகள் சூட்டப்பட்டான்.
ஒரு நாள் இந்த புதிய திறமைசாலியான வாலிபனுக்கு மாபெரும் வரவேற்பு விழா நடந்தது. இவனை பலரும் சூழ்ந்து கொண்டார்கள். எல்லாருக்கும் தர்மம் செய்து கொண்டே வந்தான். அப்போது ஒரு பிச்சைக்காரன் அவனிடம் காசு கேட்டதோடு உன் புகழாவது நிலையானதாக இருக்கட்டும் என்று வாழ்த்துக் கூறவே, வாலிபன் அவனை உற்று நோக்கினான்.
அவனுக்குத் திகைப்பாகி விட்டது. காரணம் இது தான். முன்பு யாரைத் தொடுவதைப் பெரிய பாக்கியமாக இவன் கருதினானோ, அவனே தான் இப்போது இவனிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.
வருவான், போவான் என்பவை வாழ்க்கையின் இரு வினை முற்றுக்கள். அவை திரும்பத் திரும்ப வரும் போகும் இதுவே இயற்கை.
ஆகவே கலைஞர்களைப் பொறுத்த வரையில் திறமையைக் காண்பிப்பதிலே போட்டியேற்படுவதில் தவறில்லை. ஆனால் இன்னொருவனுடைய திறமை தன்னுடைய அழிவுக்குக் காரணமென்று நினைப்போமானால் – நம்மையும் நம்மை ஆட்டிப்படைக்கிற சக்தியையும் ஏமாற்றுகிறோம் என்று தான் பொருள்.
ராமமூர்த்தி சார்
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் போஸ்டர்ஸ் அணி வகுப்பு அபாரம் .
வேலூர் நகரம் மட்டுமின்றி அதன் சுற்று இடங்களில் வைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவரின் நிழற் படங்கள் மக்கள் திலகத்தை
நேரில் பார்ப்பது போல் உணர்வு ஏற்படுகிறது .
இன்னும் மூன்று நாட்களுக்கு எண்களின் கண்களுக்கு விருந்து வைக்க போகும் உங்களுக்கு நன்றி
================================================== ================================================== ============
சினிமாவின் சக்தியை எம்.ஜி. ஆர். தவிர ஒருவரும் நன்றாக பயன் படுத்திக் கொள்ளவில்லை. இனி எவரும் இவ்விதம் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் சொல்ல முடியாது.
ஒரு முறை இயக்குனர் காசிலிங்கம், ஏ.எஸ்.ஏ. சாமி, டான்ஸ் மாஸ்டர் குமார், நான் (மறைந்த எம்.என்.நம்பியார்) ஆகியோர் சினிமாவுக்கு போனோம். யார் டிக்கெட் எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, சற்றும் யோசிக்கமால் திரு. எம்.ஜி. ஆர். அவர்களே எங்கள் எல்லோருக்கும் டிக்கெட் எடுத்து விட்டார்கள்.
வசதியாக இல்லாத காலத்தில் கூட எம்.ஜி.ஆர். மற்றவர்களுக்கு அதிகம் உதவியிருக்கிறார்கள். தன்னை நேசித்தவர்களுக்கன்றி தன்னை பகைத்தவர்களுக்கும் அவர் அதிகம் உதவியது எனக்கே தெரியும். உதாரணம் சொல்ல தேவையில்லை.
எல்லோருக்குக்ம் மரியாதை தருவது என்பது அவருடன் பிறந்த ஒரு பெரிய குணம். யாராயிருந்தாலும் அவர்களுக்குரிய மரியாதையை தர அவர் தயங்கியதே இல்லை.
மறைந்த நடிகர் எம்.என்.நம்பியார் அவர்கள் - ஒரு பேட்டியில்
================================================== ================================================== =============
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i49.tinypic.com/2m61laa.jpg