SATHUVACHARI GANDHI NAGAR VLR
http://i48.tinypic.com/35mf5na.jpg
Printable View
SATHUVACHARI GANDHI NAGAR VLR
http://i48.tinypic.com/35mf5na.jpg
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1977ல் அ.தி.மு.க சந்தித்த முதல் பொது தேர்தலுக்கு எழுதிய கடிதம்
ரத்ததின் ரத்தமே
1967 1976
இந்த எண் மாற்றத்தைப் புரிந்து கொள்ளுங்கள் - லஞ்ச ஊழலாட்சியைத் தமிழக மக்கள் தூக்கி எறிந்தது 1967 - 1976. இருமுறையும் அமரர் அண்ணாவின் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்ற வரலாறு உருவாக்கப்பட்டு விட்டதாக உலகம் இப்போதே பேசுகிறது. எத்தனை பேர்களைக் கொலைக்காரக் கொடுமையாளர்களால் பலி வாங்கிவிட முடியும்? நூறா? ஆயிரமா? பத்தாயிரமா? ஒரு லட்சம் என்றே வைத்துக் கொள்வோம் இப்போதே அண்ணா தி.மு.கழகத்தில் ஏறத்தாழ பதினேழு லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறோம். மீதியுள்ள கழகக் கண்மணிகளாகிய நம்மை என்ன செய்து விட முடியும்? அப்போது சட்டம் இந்த கொலைக்கார, கொள்ளைக்கார கும்பலை நேர்மையின் உதவியுடன் நீதியின் முன் நிறுத்தும் நியாயச் சட்டமும் உங்களின் உரமிக்க கொள்கைப் பிடிப்பில் வலிவும், இப்போது நம்மைத் துன்பத்திற்குள்ளாக்கும் தீயவர்களைச் சுட்டெரிக்கும். ஆம் இந்தத் தமிழகத்தில் இதுவரை இந்தத் துன்மதியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட களங்கம் துடைக்கப்படும்.
எனது ரத்ததின் ரத்தமே! எழுந்திருங்கள்! கச்சையை இறுகக் கட்டுங்கள் நாம் எதற்கும், யாருக்கும் பயந்தவர்களோ, பதுங்கி ஒடிவிடுபவர்களோ அல்ல என்பதை நமது வீரமிக்க செயலால் தமிழகத்தின் நல்ல விதியை உலக வரலாற்றில் எழுதிக் காட்டுவோம். நாம் அமரர் அண்ணாவின் தம்பிகள். நமக்கு என்றும் தோல்வியே கிடையாது. நாளை நமதே மக்கள் நம் பக்கம் வெற்றியும் நமதே.
வேள்வி பதில் பகுதி
(1) அரசியல், கலை இரண்டுக்குமுள்ள வேறுபாடு என்ன?
எம்.ஜி.ஆர் பதில் - அரசியல் மேடை அரசியலுக்காக உள்ளது. சமூக, பொருளாதாரத்தைப் பாதுகாக்க இயங்கும் ஒரு அமைப்பு அரசியல். கலை மேடை கலைக்காக உள்ளது. மனித உணர்ச்சிகளை நேர்மையான வகையில் உருவாக்கவும், கட்டுப்படுத்தவும், சோர்வுற்ற மனித உள்ளத்திற்கு அமைதியைக் கொடுக்கவும், மறந்துவிட்ட பண்பினை நினைவு படுத்தவும் தெரிய வேண்டிய உண்மைகளை உணர்த்தவும், வாழ வேண்டிய முறைகளை வகுத்துக் கொடுக்கவும், வாழ்க்கை நிலையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றிச் சமத்துவ போதனை செய்யவும் உள்ளது கலை.
(2) ராஜாஜி அவர்களைப் பற்றிய உங்கள் கருத்து யாது?
எம்.ஜி.ஆர் பதில் - விலைமதிக்க முடியாத முத்துக்களோடு விவரமறிய முடியாத எத்தனையெத்தனையோ விந்தைப் பொருள்களை யெல்லாம் தன்னகத்தே மறைத்து வைத்துக் கொண்டு, அலைக்கரங்களால் மண்ணைத் தழுவியும் தழுவாமலும், ஒரு நிலையில் ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாத ஆழ்கடல் போன்றவர் ராஜாஜி என்று கூறலாம் அல்லவா.
(3) பெரியாரை எதற்கு ஒப்பிடலாம்?
எம்.ஜி.ஆர் பதில் - தானும் வளர்ந்து, தன்னில் தோன்றும் விழுதுகளையும் தனித்து ஊன்றச் செய்து, தன்னில் வந்து ஒதுங்குவோருக்கெல்லாம் (அவர்கள் கள்வர்களாகவும் இருக்கலாம் களவு கொடுத்தவர்களாகவும் இருக்கலாம்) நிழல் தரும் ஆலமரத்திற்கு ஒப்பிடலாம்.
ரூப் சார்
மக்கள் திலகத்தின் புத்தகங்கள் பற்றிய தொடர் பதிவுகள் அருமை ,
இது வரை படித்திராத பல தகவல்கள் -உங்கள் பதிவுகள் மூலம் படிக்க முடிந்தது .
நன்றி ரூப்
(4) தமிழ்நாட்டில் வறுமை அடியோடு தீரும் நிலை என்று பிறக்கும்?
எம்.ஜி.ஆர் பதில் - எல்லா வளங்களும் இருந்து அன்புவளம், பண்புள்ள அறிவு வளம் ஆகியவை இரண்டுமே அதிக அளவில் வற்றாத ஊற்றுப் போல் சுரக்கும் நிலையில் இன்றைய தமிழ்நாடு இருக்கின்ற காரணத்தால், அதன் வளமெல்லாம் சுரண்டப்படுவதை கூடப் பெருந்தன்மையோடு பொறுத்துக் கொண்டிருக்கிறது. அந்த அன்பும் பண்புள்ள அறிவும் எந்த அளவுக்கு எத்தகையவரிடம், எவ்விதம் செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு என்றைக்கு முடிவு செய்து செயற்படுமோ, அன்று தான் வறுமை அடியோடு தீரும் நிலை பிறக்கும்.
(5) சிறந்த பேச்சாளராக விளங்க நாங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை பற்றி விரிவாக விளக்கவும்?
எம்.ஜி.ஆர் பதில் - ஒரு கொள்கையில் பரிபூரண நம்பிக்கை வேண்டும். அந்தக் கொள்கை பற்றிய விரிவான - ஆழமான விளக்கங்களை அறிந்திருக்க வேண்டும், எந்த மொழியில் கருத்துக்களை வெளியிட விரும்புகின்றோமோ அந்த மொழியில் பேசும்போது வார்த்தைப் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும். நமது பேச்சைக் கேட்கின்றவர்கள் அதிசயத்தோடு கவனிக்காமல் அக்கறையோடு கவனிக்கும்படி பேச வேண்டும்.
Everybody knows about MGR's philanthropic nature. Here in this answer MGR says the difficulties he faced when he tried to get a conclusion to help or not.
(6) தாங்கள் அளிக்கும் நன்கொடைகள் நல்ல முறையில் செலவழிக்கப் பட்டிருக்கின்றனவா? என்று தாங்கள் கவனிப்பதுண்டா?
எம்.ஜி.ஆர் பதில் - சிலவற்றைப் பற்றிச் சொன்னால் எனக்கும் உங்களுக்கும் வேதனை தருவதாயிருக்கும் சிலர் நான் நம்பும்படியான பொய்களைச் சொல்லிப் பலனைப் பெற்றதண்டு. அதை அறிந்த நான் எச்சரிக்கையாக இருக்க முயன்றதன் விளைவாக உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு நான் பயன்பட முடியாமற் போனதும் உண்டு.
(7) உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
எம்.ஜி.ஆர் பதில் - ரசிகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான் உண்மையான ரசிகர்களாக இருக்க வேண்டும். வேறு குழப்பங்களில் சிக்கிக் கொண்டு தேவையற்ற விபரீதத்திற்கு ஆளாகி விடக்கூடாது.
The above question and answers were taken from Samaneedhi.
This is the speech given by MGR on 14th August 1981 on the eve of Indian Independence day celebration.
This speech was telecasted in Doordarshan and AIR.
சுதந்திர தின விழாவில் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் பரட்சித்தலைவர் உரை.
நாம் வடுதலை பெற்றது ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது. நாம் விடுதலை பெற்று 34 ஆண்டுகள் ஒடிவிட்டன.
விடுதலை பெற்ற அன்றைக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் நள்ளிரவில் அமரர் பண்டித நேரு அவர்கள் இன்று உலகம் துயில் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவு நேரத்தில் இந்தியா சுதந்திரத்திற்குள் விழித்தெழுகிறது என்று குறிப்பிட்டார்கள்.
அமரர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முதல் தவறுகளுக்காக நாம் வெள்ளைக்காரர்களை குற்றம் சாட்டவோ குறை சொல்லவோ இயலாது என்றார்கள்.
என்றைக்கோ எப்போதோ பேசப்பட்ட அவர்களின் வார்த்தைகளை இன்றைக்கும் நினைத்து பார்ப்பதற்கு நாம் கடமைபட்டவர்களாக இருக்கின்றோம்.
நமது விடுதலை போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. தன்னை அதற்கு முன்பாக உலகில் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவு அற வழியில், அன்பு வழியில் போராடி ஒரு நாடு விடுவித்து கொண்டதில்லை.
இன்று பட்டொளி வீசி பறக்கிற தாயின் மணிக்கொடியை பார்த்திருக்கிறோம். பரசவமடைகிறோம். ஒங்கி பறக்கிற இந்த கொடியை உயர பறக்க விடுவதற்காக சொந்த பந்தங்களை சொத்து சுகங்களை ஏன் தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்கள் எத்தனை பேர்.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள? என்று ஒரு வினாவைத் தொடுத்து, அதற்கு ஒரு நிபந்தனையாக கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின், என்று விதிவகுத்தார் திருவள்ளுவர். கற்பு என்ற ஒரு சொல்லில் எல்லா நற்பண்புகளுமே அடங்கும் என்ற உண்மையை உறுதிபடுத்தவே கற்பென்னும் திண்மை என்று வலியுறுத்திக் கூறினார் வள்ளுவர். பெண் கற்புடன் அதாவது, நற்பண்புகளுடன் விளங்கினால் அவளைக் கைப்பிடித்த ஆண் மகனின் வாழ்வு விளங்கும். அது மட்டுமல்ல, அந்தப் பெண்ணும், ஆணும் சேர்ந்து வாழும் வாழ்வினால், அவர்களின் குடுமப்ம் ஒரு கோயிலாக ஒளி வீசும். அந்த இல்லற ஆலயத்தில் இல்லை, என்ற குறை இராது. இன்பம் பொங்கிப பெருகும். இதனால் இவர்கள் வாழும் ஊர் விளங்கும். இவர்கள் பிறந்த நாடு உயரும். நாட்டில் நல்லறங்கள் செழிக்கும். செல்வம் கொழிக்கும். பெண் என்ற ஒரு சக்தி சமுதாயத்தின் கண் என்று சொல்லத்தக்க அளவுக்கு ஆற்றலுடையதாக இருப்பதை உலகம் என்றுமே அறிந்து பாராட்டியுள்ளது. ஆண் அறிவும், ஆற்றலும் நிரம்பப் பெற்றவனாக இருப்பினும். அவனுக்கு வாய்க்கும் பெண் எழிலும், ஏற்றமும் பெற்றிந்தால் மட்டும் போதாது. எல்லா நற்பண்புகளுக்கும், பிறப்பிடமாகத் திகழ்ந்தேயாக வேண்டும். இல்லையென்றால், அதாவது எதிரிடையான குணங்களைப் பெற்றிருந்தால், இருவருடைய வாழ்வுமே பாதிக்கப்படும். இல்லறமும், நல்லறமாக இராது.
திருக்குறள் விழாவில் எம்.ஜி.ஆர். பேசியது - 1972.
நன்றி வினோத் சார்
என்னால் போய்தான் படம் எடுக்க முடியவில்லை
முடிந்தால் நம் மக்கல்திலகம் ஒப்பற்ற மாசற்ற பாசமிகு
தலைவனை பற்றிய செய்திகளை தினமும் ஒரு லைவ்
ப்ரோக்ராமே நடத்தலாம் எங்கள் ஊரில் மட்டும்
Actor jayam ravi
தமிழில் வந்த எந்தப் படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?
- ரஜினி, புதுச்சேரி.
நிறைய படங்கள் இருக்கு. எனக்கு எம்.ஜி.ஆரின் படங்களை ரொம்பவே பிடிக்கும். நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். இப்போதும் எம்.ஜி.ஆர். படங்களின் தீவிர ரசிகன் நான். அவரின் படங்களில் மட்டும்தான் ஒரு மேஜிக் இருக்கும். "உலகம் சுற்றும் வாலிபன்', "எங்கள் வீட்டுப் பிள்ளை', "மதுரை வீரன்' என எல்லாப் படங்களும் பிடிக்கும்.
அதில்... "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' படம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் பார்த்த பொழுதுபோக்குப் படங்களில் ரசனையான படம் அதுதான். இப்போது வரை ""திறந்துடு சீசே... வசனத்தின் வரிகள் மனசில் பச்செக்கென ஒட்டியிருக்கு. சினிமாவின் தொழில்நுட்பம் வளராத கட்டத்தில் வந்த அந்த சினிமா, இப்போதுள்ள பிரம்மாண்டங்களை விட எனக்கு பெரிதாகத் தெரிகிறது. இப்போது அந்த படத்தை ரீமேக் செய்ய பெரும் தொகை பிடிக்கலாம். ஆனால் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்
புதிய பஸ் நிலையம் கிரீன் சர்கள்
முன்பகுதி மற்றும் பின் பகுதி
http://i48.tinypic.com/evcm1e.jpg
http://i45.tinypic.com/14oa8uh.jpg