http://youtu.be/ICtx3azLcQo
Printable View
தேர்தல் களத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள்
http://i58.tinypic.com/108cydy.jpg
1957 பொது தேர்தலில் முதல் முறையாக திமுக போட்டியிட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். திரை உலகில் மக்கள் திலகத்தின் செல்வாக்கும் அவருடைய படங்கள் படைத்த சாதனைகள் மூலமும் பல ரசிகர்கள் எம்ஜிஆர் மீது கொண்டுள்ள அபிமானத்தால்திமுக உறுப்பினர்களாகவும் - அனுதாபிகளாகவும் மாறினார்கள் . தேர்தல் நேரங்களில் களப்பணி ஆற்றி திமுக வெற்றிக்கு கடுமையாக உழைத்தார்கள் .
தொடர்ந்து 1962 பொது தேர்தலிலும் எம்ஜிஆர் மன்றங்கள் மற்றும் ரசிகர்கள் தீவிரமாக ஒட்டு வேட்டையாடி திமுகவின் வெற்றிக்கு உழைத்தார்கள் .1967ல் நடந்த எதிர்பாராத மக்கள் திலகத்தை கொல்ல நடந்த முயற்சி எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்த நேரத்தில் மக்கள் திலகம் உயிர் பிழைத்த சம்பவம் ரசிகர்களுக்கு மேலும் அவர் மீது பக்தியும் அளவு கடந்த பாசமும் ஏற்பட்டு ஒரு ஆட்சி மாற்றத்தையே உருவாக்கி விட்டது .
1971ல் நடந்த பொது தேர்தலில் எம்ஜிஆரின் முழு சக்தியும் , அவருடைய மன்றங்களின் பேராதரவும் எந்த அளவிற்கு வலிமையாக இருந்தது என்பதை அறிய முடிந்தது .
1972 - அரசியல் மாற்றங்கள் - 1973 திண்டுக்கல் இடைதேர்தல் - 1974 கோவை - புதுவை நாடாளுமன்ற சட்ட மன்ற இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் திலகத்தின் அரசியல் சக்தி பற்றி உலகமே வியந்து பாராட்டியது .
1977-1980 -1984 நடந்த மூன்று பொது தேர்தல்களிலும் மக்கள் திலகத்தின் செல்வாக்கு மீண்டும் நிரூபிக்கப்பட்டது .
மக்கள் திலகத்தின் மறைவிற்கு பின்பும் நடந்த 1989-1991-1996-1998-1999-2001-2004 - 2009-2014-ஒன்பது பொது தேர்தல்களிலும் எம்ஜிஆரின் பெயரும் , அவருடைய மன்ற உறுப்பினர்களின் தீவிர ஆதரவும் ஒரு மாபெரும் சக்தியாக இருப்பது ஒரு உலக சாதனை .
57 ஆண்டுகள் தேர்தல் களத்தில் தொடர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆரும் - அவருடைய ரசிகர்களும் ஈடு பட்டு வருவது உலகில் எந்த ஒரு தலைவருக்கும் தொண்டருக்கும் கிடைக்காத பெருமை .
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நாடோடி " -46 ஆண்டுகள் நிறைவடைந்தது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
சமுதாய/சமூக சீர்திருத்த கருத்துக்கள் நிறைந்த நிறைவான படம்.
கருப்பு வெள்ளை படம்.
அன்பு மனம் ,கொடை குணம் ,தேச சேவை இவற்றினை ஒருங்கிணைத்து
குணக்குன்றாக , தியாகு என்கிற கதாபாத்திரத்தில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி
என்கிற பேதத்தை ஒழித்து உலகில் ஒரே ஜாதி மனித ஜாதிதான் சாலச் சிறந்தது
என்னும் தத்துவத்தை போதித்த வேடத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தனது
இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.
முதல் வெளியீட்டில் வண்ணப்படமான அன்பே வா , நான் ஆணையிட்டால், முகராசி, [போன்ற படங்களுக்கு இடையே வெளியாகி சராசரி வெற்றியை பெற்றாலும் மறு வெளியீடுகளில் சக்கை போடு போட்ட படம்.
1966-ல் புரட்சி நடிகர் நடித்து வெளிவந்த 9 படங்களில் இதுவும் ஒன்று.
முதல் வெளியீட்டில் பார்க்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் மறு வெளியீடுகளில்
பலமுறை பார்த்து ரசித்த படம்.
நாகேஷின் நகைச்சுவை , புரட்சி நடிகரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்
சிறப்பு அம்சம்.
ஆர். லோகநாதன்.