19-06-60 அன்றைய தேதியிட்ட " கல்கண்டு " (ஆசிரியர் : தமிழ்வாணன் ) வார இதழிலிருந்து ..............
1. வாசகர் எரியோடு ஏ. பூபாலன் அவர்கள் தொடுத்த வினா .. எம். ஜி. ஆர். இலவச மருத்துவமனை எப்படி இருக்கிறது ?
தமிழ்வாணன் அவர்ளின் பதில் : ஒரு நாளைக்கு 500 ரூபாய் கேட்கிறது. கோடீசுவரனால் கூட இன்று (1960ல்) ஒரு நாளைக்கு 500 ரூபாய் தர்மம் செய்ய முடியாதே ! தன் எதிர்காலத்திற்கென்று ஒரு சிறு தொகையை ஒதுக்கி கொள்ளும் ஒர் எண்ணம் கூட இன்னும் பிறக்க வில்லையே இந்த எம். ஜி. ஆருக்கு.
2. வாசகர் திருவானைக்காவல் எஸ். தென்னரசு விடுத்த மற்றொரு வினா : விஜயபுரி வீரனில் நடித்த ஆனந்தன், எம். ஜி. ஆராக வந்து விட்டார். இனி மேல் எம். ஜி. ஆருக்கு ஆபத்து தான் என்று பெசிக்கொண்டார்களே, என்ன ஆயிற்று ?
தமிழ்வாணன் அவர்ளின் பதில் : காக்கை எத்தனை முறை முழுகி முழுகி குளித்தாலும் கொக்காக முடியுமா ? எம். ஜி. ஆர். கத்தியாலோ, புத்தியாலோ மக்கள் மனதில் இடம் பெற வில்லை. தன்னுடைய பண்பால் மக்கள் மனதைப் பற்றிகொண்டவர் எம். ஜி.ஆர். ஆனந்தர்கள் ஆயிரவர் வந்தாலும் எம். ஜி. ஆரை அசைக்க முடியாது.
மேற்கூறிய இந்த இரு பதில்களில், பொது நலன் ஒன்றையே கருதி சுயநலமின்றி வாழ்ந்தவர் நம் வள்ளல் பெருமான் எம். ஜி. ஆர். என்றும், எத்தனை நடிகர்கள் வந்தாலும், எம். ஜி. ஆருக்கு நிகராக முடியாது என்ற உண்மையை உணர்த்தியிருக்கிறார் தமிழ்வாணன். இன்று வரை அது தான் நிலை.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்