-
பொங்கும் பூம்புனல்
இன்னொரு சூப்பர் ஹிட் கலக்கல் பாட்டு...
என்னைப் படம் பிடித்துப் பார்த்தானடி... என ஈஸ்வரி ஆரம்பிக்கும் போதே தூள் கிளப்பும்...
அவள் மர்லின் மன்றோவாம்.. இவர் மார்லன் பிராண்டோவாம்...
சுவையான வரிகள்...
சந்திரபாபுவின் மறக்கமுடியாத பாடல்..
நிமிர்ந்து நில் படத்திலிருந்து புடிச்சாலும் புடிச்சா இவ புளயங்கொம்பா பிடிச்சா
http://play.raaga.com/tamil/browse/m...-Nill-T0001738
-
பொங்கும் பூம்புனல்
Super orchestration... guitar... trumphet... sax... clarionet... voice effects ... violin..... thavil ... flute... dolak... tabla...
மேற்கூறிய அத்தனை இசைக்கருவிகளும் இருந்தும் கூட பாடல் இரைச்சலில்லாமல் தந்திருக்கும் மெல்லிசை மன்னரின் இசையமைப்பு...
ஈஸ்வரியின் இணையில்லா குரலில் இப்பாடல்... இனிக்கும்... என்பதில் ஐயமில்லை...
அவன் ஒரு சரித்திரம் படத்திலிருந்து...
http://play.raaga.com/tamil/song/alb...nnangal-261204
-
பொங்கும் பூம்புனல்
இரு இளம் பெண்கள் தோழியரோடு உரையாடும் போது இடம் பெறும் பாடல்.. ஈஸ்வரியும் இசையரசியும் இணைந்து கலக்கும் பாடல்..
தங்கைக்காக படத்திலிருந்து மெல்லிசை மன்னரின் இசையில்
அழகே நீ ஒரு கதை சொல்லடி..
பாட்டின் துவக்கத்தில் வரும் பியானோவாகட்டும்... சரணங்களின் முன் வரும் சாக்ஸஃபோன் ஆகட்டும்.. அட்டகாசம்..
http://play.raaga.com/tamil/album/Thangaikkaga-T0002392
-
ராகவ் ஜி வாங்க வாங்க பொங்கும் பூம்புனலை அள்ளி தருக தருக
-
காலையில் செம விளாசல் குரு ராகவேந்தர் ஜி உங்கள் பொங்கும் பூம்புனல் .சென்னை சூப்பர் கிங் ரைனாவின் ரன் மழை போல் வேந்தரின் பாடல் மழை
மன்னிக்கணும் முதலில் எல்லோருக்கும் காலை வணக்கம் .அதை சொல்ல மறந்துட்டேன்
-
கிருஷ்ணா ஜி வாங்கோ வாங்கோ
-
வாசு சார்
உங்கள் ராஜா சேவை கலக்கல். நேற்று ஜெயா மொவீஸ் கொடுத்த ஞாயிறு விருந்து நமது ராஜா . மனதில் நிறைந்த கதாபாத்திரங்கள் எத்துனை எத்துனை சேகர்,குமரேச ஓதுவார் ,முருகேச ஓதுவார்,நியூஸ் ரீல் பட்டாபி ராமன் ,இடைவேளை ராஜாராமன்,ஜனகனமன ஜானகிராமன்,கமிஷினர் பிரசாத்,நாகலிங்கம்,தர்மலிங்கம் ,ராதா,தாரா,குமார் ,ஜம்பு,பட்டை கிருதா விஸ்வம், இன்ஸ்பெக்டர் ஹரிக்ரிஷ்ணன் (படத்தில் இவர் பெயர் தெரியவில்லை ),படத்தின் தயாரிப்பாளர் சந்தர் என்ற பாபு ,எல்லாவற்றிகும் மேலாக சிகப்பு மண்டை ரங்கா எல்லாமே அருமை .
-
காலை வணக்கம் ராஜேஷ், கிருஷ்ணா ஜீ....
-
மார்னிங் ராஜேஷ் ஜி
விஜயா கிருஷ்ணமுர்த்தி பற்றி எழுதி உள்ளீர்கள் .எனக்கு பிடித்த அருமையான இசை அமைப்பாளர்
-
பொங்கும் பூம்புனல்
சுறுசுறுப்பான காலை வேளை கூட தூக்கத்தை வரவழைத்து விடும் இப்பாடல்... தாலாட்டுப் பாடலென்றால் அதற்கு இசையரசியை விட்டால் வேறு யார்..
சுதர்ஸனம் இசையில் பூமாலை படத்திலிருந்து கட்டை விரல் வெல்லக் கட்டி..
http://play.raaga.com/tamil/browse/m...aalai-T0001779