http://i61.tinypic.com/2hz4a5i.jpg
Courtesy: Malar Magazine, Malaysia and Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i61.tinypic.com/2hz4a5i.jpg
Courtesy: Malar Magazine, Malaysia and Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/eg9wn5.jpg
Courtesy: Malar Magazine, Malaysia and Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/f24u92.jpg
Courtesy: Malar Magazine, Malaysia and Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/r88rhd.jpg
Courtesy: Malar Magazine, Malaysia and Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/xbzhbk.jpg
Courtesy: Mayil Magazine, Malaysia and Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு .
20.9.1968
46 ஆண்டுகள் நிறைவு நாள் .
1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
படம் ''ஒளிவிளக்கு ''
பிரம்மாண்ட வண்ணப்படம்
மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .
குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .
திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .
1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .
ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .
சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .
நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்
மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி
சோ வின் சந்திப்பு
ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்
அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை
கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி
சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்
வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .
சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .
கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி
மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை
''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்
பாடல் காட்சி - புதுமை
திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .
தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -
மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .
இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை
மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .
மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -
உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''
ஒளி விளக்கு- 20.9.1968
விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…
1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.
திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!
லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.
சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.
லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?
துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!
ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!
சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!
சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!
குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!
சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.
திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.
சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.
சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!
திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.
ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!
சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.
ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.
சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே!
குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.
சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!
கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!
திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி! ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.
ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே.
வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.
இதில் இடம் பெற்ற , ஆண்டவனே , உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.
1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது , அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது.
மக்கள் திலகத்தின் நூறாவது படம் ஒளிவிளக்கு.
ஜெமினியின் முதல் வண்ண படம் ஒளிவிளக்கு .
நூறு காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த படம் - மதுரை - மீனாக்ஷி .-ஒளிவிளக்கு .
மதுரை -திருச்சி -குடந்தை - இலங்கை - நூறு நாட்கள் -ஒளிவிளக்கு .
பெங்களூர் நகரில் மூன்று அரங்கில் எட்டு வாரங்கள் ஓடி சாதனை.
வேலூர் நகரில் மூன்று அரங்கில் திரையிட்டு இணைந்த நூறு நாட்கள் ஓடியது .
மறு வெளியீட்டில் பலமுறை தென்னகமெங்கும் வெளிவந்து இன்று வரை வசூலில் சாதனை படைத்தது வருகின்றது .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.
யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.
அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.
இந்தப் படத்தில் பி.சுசீலா பாடிய 'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு...தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு... ஆன்டவனே உன் பாதங்களை கண்ணீரில் நீராட்டினேன்...'
என்ற பாடல் தான் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் உயிருக்காகப் போராடிய போது...இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள கோயில்களில் எல்லாம் ஒலித்தது.
1986 இல் நான் 'பொம்மை' பத்திரிகையில் பணியாற்றிய போது...நடிகை சௌகார் ஜானகி அவர்களைப் பேட்டி கண்ட போது...ஒளி விளக்கில் அவர் பாடி நடித்த இந்தப் பாடல் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்...இப்படி...
'.... உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலம் பெறப் பிரார்த்தனை செய்வது போலப் படத்தில் நான் பாடிய பாடல் ....பதினைந்து வருடங்கள் கழித்து உண்மையாகவே அவர் உயிருக்காகப் போராடிய போது மக்களால் பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டது...என்னை நெகிழ வைத்தது...' என்றார்.
உண்மை தான். இந்தப் பாடலில் மட்டுமல்ல... எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட பல பாடல்களில்... வரப் போவதை முன் கூட்டியே சொன்ன ஒரு தற்செயலான தீர்க்க தரிசனத்தை நானும் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.