ஆம் நல்ல அருமையான இசையமைப்பாளர் . உயரத்திற்கு போக முடியவில்லை பாவம்
Printable View
தேஷ் ராகத்தில் அமைந்த கன கச்சித பாடல் ஒன்று நினைவிற்கு வந்தது
எஸ் ராஜேஸ்வர ராவ் இசையில் 1944இல் வெளியான பூம்பாவை படத்தில் இடம் பெற்ற 'ஓம் நமச்சிவாய என' பாடல் ” நடிப்பிசைப்புலவர் ” என்று அழைக்கப்பட்ட , புகழ் பெற்ற பாடகரும் ,நடிகருமான கே.ஆர்.ராமசாமி பாடியது . இதற்கு ஒலி அல்லது ஒளி வடிவம் கிடைக்கவில்லை . ராகாவில் தேடி பார்த்தேன்
http://upload.wikimedia.org/wikipedi...mpavai1944.jpg
இதற்கு இசை ராஜேஸ்வர் ராவ் தானா ? ஹிந்து ராண்டார் கை விமர்சனத்தில் இசை அமைப்பாளர் யார் என்று சொல்லப்படவில்லை பாடல்கள் கம்பதாசன் என்றும் மதுரை மாரியப்ப சுவாமிகள் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது
Poompavai is the first tamil film composed by the stalwart composer Addapalli Rama Rao.
Vijaya Krishnamurthy and Joseph are also introduced as music directors in the film.
ராஜேஷ் சார்
குலேபகாவலி கதா இசை விஜய கிருஷ்ணமுர்த்தி அண்ட் ஜோசப் இசை அமைத்த முதல் படம் என்று படித்தேன். இந்த ஜோசப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா
அப்படியே ஏ.வி.எம்.ராஜன் ராஜஸ்ரீயைப் பார்த்து பாடுவதை கண்டும் மகிழுங்கள்.
http://youtu.be/Wy9W8xbBMX0
மெல்லிசை மன்னன்!- வாலி
என்னை -எங்கே எப்போது பார்த்தாலும் -'எப்படி யிருக்கிறார்?’ என்று...அவர் பற்றி அவர்கள் கேட்பார்கள்;
அவர்பால் அவர்களுக்கு அவ்வளவு மரியாதை;
அதற்குக் காரணம் அவரது - விசும்பை விஞ்சி நின்ற வித்துவத்துவம்;அவரைக் காணாவிடத்தும்
அவர் மாட்டுக் கனிந்திருந்தது -அவர்கள் அனைவர்க்கும்... ஓர் ஓவாக் காதல்!
'அதுசரி;
அவர் யார்? அவர்கள் யார்?
சொல்லவில்லையே!’ என்று
சொல்கிறீர்களா? சொல்கிறேன்!
'பூ மழை பொழிகிறது’ - இது விஜயகாந்த் நடித்த படம்; இசை r.d. பர்மன்!
'ரகசியபோலீஸ்’ - இது சரத்குமார் நடித்த படம்; இசை லட்சுமிகாந்த் பியாரிலால்!
'தாய் வீடு’ -இது ரஜினிகாந்த் நடித்த படம்;இசை பப்பி லஹரி!
'தர்மம்’ -இது சத்யராஜ் நடித்த படம்;இசை உஷா கன்னா!
நான்கு படங்களும், நான் பாடல்கள் எழுதிய படங்கள்; இந்தப் படங்களின் இசையமைப்பாளர்களாகிய -நால்வரைத்தான் -
நான் குறிப்பிட்டேன் 'அவர்கள்’ என்று; அந் நால்வரும் நலம் விசாரித்த -அந்த 'அவர்’
ஆரெனச் சொல்கிறேன்; அதற்கு முன்பு, நான் கொஞ்சம் - என் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் வரை போக வேண்டியிருக்கிறது!
என் ஊரில் -என் தெருவில் -என் வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி, அதே வரிசையில்...
'சம்பத்’ என்றொரு சினேகிதன்; அவனுடைய சகோதரியின் கணவர் பெயர் திரு.ரங்கனாதன்.
அந்த ரங்கனாதன், திருச்சியிலிருந்து திருவரங்கத்திற்குத் தன் மாமனார் வீட்டிற்கு வரும்போதெல்லாம் -
'டேய்! உங்க அத்திம்பேர்கிட்ட என்னை அறிமுகம் பண்ணி வைடா!’ என்று நான் சம்பத்தை நச்சரிப்பேன்.
அதற்குக் காரணம் -
திரு.ரங்கனாதன் திரையுலகத்தோடு தொடர்பு உடையவர்!
சினேகிதன் சம்பத் வீட்டில் ஒரு gramo phone இருந்தது; h.m.v. கம்பெனி தயாரித்தது.
சாவி கொடுத்து இசைத் தட்டு மேல் ஊசியை உட்கார்த்தினால் -
'செந்தமிழ்த் தேன் மொழியாள்’ - கேட்கலாம்; 'பிறக்கும் போதும் அழுகின்றாய். இறக்கும் போதும் அழுகின்றாய்’ - கேட்கலாம்.
முன்னது டி.ஆர்.மகாலிங்கம்; பின்னது சந்திரபாபு!
இந்தஇசைத் தட்டுகளை - திரு.ரங்கனாதன் கையோடு கொண்டுவருவார், நான் 'சோறு தண்ணி’ இல்லாமல் கேட்பேன்.
ஒருமுறை திரு.ரங்கனாதனிடம் 'திராவிடப் பொன்னாடே’ போடச் சொல்லி வேண்டினேன்.
'வாலி! நான் ஒரு கேள்வி கேட்பேன்; அதுக்கு கரெக்டா பதில் சொல்லிட்டா - எத்தனெ தடவெ வேணும்னாலும் அந்தப் பாட்டெ நான் போடுவேன்!’ என்றார்அவர்; 'கேளுங்க சார்!’ என்றேன் நான்.
'h.m.v. கம்பெனியின் logo வாக - ஒரு mega phone முன்னாடி உட்கார்ந்திண்டு இருக்கிறதே - ஒரு நாய்...
அது - ஆண் நாயா? பெண் நாயா?’ - இப்படி ரங்கனாதன் கேட்டதும், சற்றும் யோசிக்காமல் நான் -
'சார்! அது ஆண் நாய்!’ என்றேன்.
'எப்படி?’ என வினவினார் ரங்கனாதன்.
'h.m.v. என்றால் - his master's voice என்று அர்த்தம்; தன் எஜமானனின் குரலைச் செவிமடுக்கும் அந்த நாய், பெண் நாயாயிருந்தால் -
h.m.v. என்பதை - her master's voice என்று குறிப்பிட்டிருப்பார்கள்’ என்றேன்.
ரங்கனாதன் மகிழ்ந்தார்; உடனே, நான் இதுதான் தருணமென்று -
'சார்! நான் விஸ்வநாதன் ராமமூர்த்தியோட பரம ரசிகன். ஒரு தடவை நீங்க மெட்ராஸ் போறச்சே - என்னையும் அழைச்சுண்டு போய் அறிமுகப்படுத்திவெக்கணும் சார்!’ என இறைஞ்சினேன்.
ஏன் அவரிடம் அப்படிக் கேட்டேன் என்றால் -
கண்ணதாசன் தயாரித்த 'மாலையிட்ட மங்கை’; 'கவலையில்லாத மனிதன்’ - இந்தப் படங்களுக்கெல்லாம் பண உதவி செய்தவர் திரு.ரங்கனாதன்.
கண்ணதாசனின் ஆருயிர் நண்பர்; இவரைப்பற்றி கண்ணதாசன் 'வனவாச’த்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
திரு.ரங்கனாதனை, சினிமா வட்டாரத்தில் 'அம்பி’ என்றுதான் அழைப்பார்கள்!
ஏன் இதை இவ்வளவு விரிவாக எழுதினேன் எனில் -
எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு பாட்டா வது எழுதினால்தான், எனக்கு ஜன்ம சாபல்யம் என -
ஸ்ரீரங்கநாதரை வேண்டிக்கொண்டே இருந்தேன் நான்.
பிரார்த்தனை வீண் போகவில்லை; பெருமாள் திருக்கண் மலர்ந்தருளினார்.
விஸ்வநாத அண்ணனிடம் - 1963-ல் ஆரம்பித்து,
நாளது வரை நாலாயிரம் பாடல்கள் எழுதிவிட்டேன்.
நாலாயிரமும் நாலாயிரம்தான்; திவ்யப் பிரபந்தம் போல் திரைப் பிரபந்தம்!
இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும், இறவாத பாடல்களை -
ஈங்கு விசுவநாதனின் ஆர்மோனியம்தான் ஈன்றது. எம்.ஜி.ஆர்; சிவாஜி - இவ் இருவரின் உதடுகளிலும் விசுவநாதனின் உன்னத மெட்டுகள் உட்கார்ந்ததால் தான்,
உலகத்தார் உள்ளங்களில் அவர்கள் போய் அமர முடிந்தது!
சாதா வார்த்தைகள், அவரது சங்கீதத்தில் தோய்த்தெடுத்த பின் - சாகாவார்த்தை கள் ஆகும்!
பின்னைக்கும் பின்னையாய்; முன்னைக்கும் முன்னையாய் -
பிறங்கும் பரம் பொருள் போல், விஸ்வநாதனின் வித்வத்வம் -
பிராசீனத்திற்கும் பிராசீனமாய்; நவீனத் திற்கும் நவீனமாய், விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது எனலாம்.
'லலிதாங்கி’யையும், 'ஆபோகி’யையும் லகுவாகக் கையாள்வார்; அதே, லலிதத் தோடும் லாகவத்தோடும் -
waltz;
jazz;
- இன்ன பிற மேலை நாட்டு இசை வகைகளையும், piano-வில் பிலிற்றுவார்.
விஸ்வநாதனின் வித்தகம் பற்றி, ஒற்றை வரியில் ஓதுவதாயின் -
விரலிலும் குரலிலும் கலைமகள் கடாட்சம் விரவி நிற்கும் புண்ணியவான் அவர்!
அற்றை நாளில், அவரது பாடல்களில் accordion அழகுற இசைக்கப்படுவதைக் காணலாம்; மற்றும் cello; double-bass- எனப்படும் violin குடும்ப வாத்தியங்களை யும், அவற்றின் தனித்தன்மை துல்லியமாகத் துலங்குமாறு பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
Violin-களில் - chromaric; மற்றும் pizzicato பாணிகளை இடமறிந்து இடம் பெறச் செய்வார், தான் இசைக்கும் பாடல்களின் பின்னணியில்; அவர் அறியாத மேலை நாட்டுச் சங்கீதமே இல்லை.ஆயினும், அவ் அறிவை அளவோடு பயன்படுத்துவார்; சந்தனம் நிறைய இருக்கிறதே என்று - புட்டத்தில் பூசிக்கொள்ள மாட்டார்.
என் வாழ்வும் வளமும் அவரிட்ட பிச்சை; what i am today i owe him!
வட நாட்டு இசையமைப்பாளர்கள், மிகுந்த மரியாதையோடு -
'எப்படியிருக்கிறார்?’ என நலம் விசாரித்தது -
அண்ணன் விஸ்வநாதனைப் பற்றித்தான்!
ஹோட்டல் கன்னிமாராவில் -
சில ஆண்டுகள் முன்னம்,
'சந்திரமுகி’ படம், கேஸட் வெளியீட்டு விழா நடந்தது; நான்தான் வெளியிட்டேன் - திருமதி.ஆஷா போன்ஸ்லே பெற்றுக்கொண்டார்.
சிவாஜி அவர்களின் புதல்வர்கள், திரு.ராம்குமார்; திரு.பிரபு இருவரும் -
அந்த விழாவில் விஸ்வநாத அண்ணனைக் கௌரவித்தார்கள்; அப்போது நான் விஸ்வநாத அண்ணனைப்பற்றி ஒரு கவிதை வாசித்தேன்.
ரஜினி, அந்தக் கவிதையைக் கேட்டுவிட்டுக் கண்ணீர் மல்க - 'அண்ணா! இந்தக் கவிதையை அப்படியே நான் பாலசந்தர் சாரைப் பார்த்து பாடணும்னு தோணுது’ என்றார்.
அந்தக் கவிதையின் சில வரிகளே நினைவில் உள்ளன; அவை இதோ!
'அண்ணனே! மெல்லிசை -
மன்னனே! - உன்னை
சந்திக்கு முன் - எனக்கு
சோற்றுக்கே வக்கில்லை; உன்னை -
சந்தித்த பின் - எனக்கு
சோறு தின்னவே நேரமில்லை!
வெறும்
விறகு; நான் -
வீணையானேன் - உன்
விரல்பட்ட பிறகு!
பலரிடம் நான்
பாட்டு எழுதியிருக்கிறேன்; என்
வரிக்கெல்லாம்
வருமானம் வந்தது;
உன்னிடம் பாட்டெழுத
உட்கார்ந்த பின்புதான் - என்
வருமானத் திற்கெல்லாம்
வரி வந்தது!’
- இப்படிப் போகும் அந்தக் கவிதை; நான் சொல்ல வருவது யாதெனில்...
'இசையே! எனக்கு
இசை!’ என -
இசையைத் தனக்கு
இசைய வைத்து - அன்னம்
இசைந்த
இசையை -
இசைத்து
இசைத்து - அதன்
இசையைப் பெருக்கிய
இசையமைப்பாளர் -
எம்.எஸ்.வி. அவர்களுக்கு 'ஏன் பத்மா விருதுகள் வழங்கப்பட வில்லை?’ எனப் பலர் கேட்கலாம்.
அதற்கு அடியேன் சொல்லும் பதில் இதுதான்:
'விஸ்வநாதன் சாதனையை - அளப்பது
விருதா?
விருது
வரா விடில் -
விஸ்வநாதன் சாதனைகள் - ஆகுமோ
விருதா?’
ராஜேஷ்..
அதை மட்டும் விட முடியுமா ? இதோ அதுவும் வந்தாச்சு ( கொஞ்சம் வீடியோ குவாலிட்டி சுமார்தான் )
கோபால் ஜி, கிருஷ்ணா ஜி, வாசு ஜி.. இந்த ஹீரோயின் யாரு ?
http://youtu.be/ws-fliwssVk
அழகே உருவாய் அவள் வந்தாள் பாட்டுக்கும், குங்குமம் பிறந்தது மரத்திலா குமரிப்பெண்ணின் இதழ்களிலா..பாட்டுக்கும் தாங்க்ஸ் மதுண்ணா..சந்திரன் பிறந்தது வானிலா ஆடவர் கண்களிலான்னு போயும் போயும் ஏவிஎம் ராஜனைப் பார்த்துப் பாடறது மட்டும் பொறுக்க முடியலை!!
""அந்தக் காலத்தில் நாகராஜராவ் என்றொரு புகைப்படக் கலைஞர் இருந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர்களெல்லாம் அவரிடம்தான் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள். பிறகு எம்.ஆர். பிரதர்ஸ் என்று பல இடங்களில் கலர் பட ஸ்டுடியோக்கள் வைத்திருந்த முருகப்பன் பெரிய பெயரோடும், புகழோடும் விளங்கினார். இன்றைக்கு இருக்கும் கலர் போட்டோவுக்கு அவர்தான் அடித்தளம் போட்டார். கலர் போட்டோ இயந்திரங்களை முதன் முதலில் தமிழ்நாட்டுக்கு எடுத்து வந்தவர் அவர்தான். பின்னர் நான் ஸ்டுடியோக்களில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது பத்திரிகை புகைப்படக் கலைஞரான "ஸ்டில்ஸ்' ரவி, நடிகர்களைச் செட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று புகைப்படம் எடுப்பார். அவரிடம் படங்களை வாங்க பத்திரிகை நிருபர்கள் போட்டி போடுவார்கள். அதுபோல சாரதி என்றொரு புகைப்படக் கலைஞர் இருந்தார். வித்தியாசமான கோணங்களில் படங்களை எடுப்பதில் வல்லவர். அவரின் கோணத்தை பார்க்கும்போது, இந்தப் படம் எப்படியிருக்குமோ என்று தோன்றும். படத்தை பார்த்த பின்னர் ஆச்சரியம் அளிப்பார். அது போல்தான் இன்றைக்கு புகைப்பட கலைஞராக இருந்து இயக்குநராக மாறியுள்ள கே.வி.ஆனந்த் வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார். இவர்களைப் போல் நீங்களும் மாற வேண்டும். உணவு, உடை, உறைவிடம் போன்று, இன்றைக்கு செல்போன், கேமரா, கம்யூட்டர் ஆகிவிட்டது. இவற்றில் நிச்சயம் நீங்கள் முத்திரை பதிக்க வேண்டும்.''
- சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படக் கலை கற்றுக் கொள்ளும் மாணவர்களிடம் இப்படி பேசினார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.
http://3.bp.blogspot.com/-Ck_KCdvLrm.../s1600/027.jpg
முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகள். தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருவிழா இறை நம்பிக்கை, பகிர்வு உணர்வு, ஈகை, ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கட்டும்.