-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் - 25/04/20 அன்று வின் டிவியில் வெளியான தகவல்கள்
--------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு சொந்தக்காரர் .குற்றால , குறவஞ்சி பாடல் ஆகியவற்றிற்கு ஆதரவு காட்டிய எட்டாவது வள்ளல். கவிஞர்களுடன் எம்.ஜி.ஆருக்கு இருந்த உறவு என்பது மிக பெரிய இலக்கியத்தோடு அமைந்த நாடக தன்மை வாய்ந்தது .குறிப்பாக கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் கவித்துவம் கொண்டதாகவும், தமிழின் பெருமையை உணர்த்துவதாகவும் இருந்தன. ஆகவே எம்.ஜி.ஆர். அவர்கள் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் பற்றிய விவரம் அறிந்து அவற்றை தன்னுடைய திரைப்படங்களில் புகுத்தி , அவருக்கு புகழ் சேர்ப்பதோடு, மக்களுக்கு நன்மை பயக்கும் கருத்தான பாடல்களை அறிமுகப்படுத்தினார் . சந்திரோதயம் படத்தில் எம்.ஜி.ஆர். பத்திரிகை ஆசிரியராக நடித்தார் . ஒரு பத்திரிகையானது மக்களுக்கு எந்த மாதிரி செய்திகளை பிரசுரம் செய்து வெளியிட வேண்டும். எந்த மாதிரி செய்திகளை வெளியிடக்கூடாது என்ற கருத்தை மேம்படுத்தி சொல்லியிருப்பார் . பத்திரிகை என்பது என்ன ? அதன் குணாதிசயங்கள் என்ன என்பதை விளக்கும் டைட்டில் பாடலாக புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று பாடல் அமைந்திருக்கும் .
கவிஞர் பாரதிதாசன் , கவிஞர் பாரதியாருக்கு தாசனாக , எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற திரைப்பட பாடலில் அறிமுகம் ஆனார் .கவிஞர் பாரதிதாசன் இயற்றிய சித்திர சோலைகளே, உமை இங்கு திருத்த இப்பாரினிலே என்ற பாடல் நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தில் இடம் பெற்றது . இந்த பாடலில் தொழிலாளர் வர்க்கத்திற்கும் கவிஞருக்கும் உள்ள ஈடுபாட்டை உணர்த்துவதாகவும் தொழிலாளர்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே என்கிற அற்புதமான வரிகள் அமைந்திருக்கும் .. இந்த பாடலை விரும்பி ஏற்று, பட தயாரிப்பாளரான காமாட்சி ஏஜென்சிஸ் (நடிகை கே.ஆர். விஜயாவின் நிறுவனம் ) நிறுவனத்திடம் வலியுறுத்தி , வெள்ளை உடையில் , இயல்பான தன் நடிப்பில் அசத்தியிருப்பார் .
1965ல் வெளியான கலங்கரை விளக்கம் என்ற படத்தில் முதன் முதலாக கவிஞர் பாரதிதாசன் பாடலான சங்கே முழங்கு பாடலை இடம் பெற செய்தார் . படத்தில் ஒரு காட்சியில் தன் காதலியை இழந்து சோகமாக இருக்கும்போது ,தன் நண்பரின் வேண்டுகோளுக்கு ஏற்ப அந்த பாடல் காட்சியை நாடக அரங்கில் காண்பதாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாடலில் வரும் எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்ற வரிகள் இன்றைக்கும் மேடைகளில் தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் இந்த வரிகளை பேச்சாளர்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த பாடல். தமிழுக்கு எதிராக இந்தி எதிர்ப்பு என்கிற மொழி போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த நேரம். எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்த சமயம் தமிழனின் உணர்ச்சிகளை விவரிக்கும் இந்த பாடலை தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியின் அனுமதியோடு இடம் பெற செய்தார் எம்.ஜி.ஆர். . இந்த பாடலில் கவிஞர் பாரதிதாசன் , உருவம் இரு பக்கமும் அடங்கிய புத்தகம் ஒன்றுசுழன்று கொண்டே இரண்டாக பிளந்து அதில் இருந்து நடிகை சரோஜாதேவி சங்கு முழங்கியபடி தோன்றும் காட்சி இடம் பெற்றிருக்கும் .
மன்னாதி மன்னன் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் அச்சம் என்பது மடமையடா , அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற , தமிழன் உணர்ச்சியும், திராவிடர் எழுச்சியும் நிறைந்த பாடலை அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர். 1960ல் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அந்த காலத்தில் ஒலிக்காத தி.மு.க. மேடைகளே இல்லை . அ தி.மு.க. வை எம்.ஜி.ஆர். தொடங்கிய பின்னரும் ,அ. தி.மு.க. மேடைகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டன .எம்.ஜி.ஆர் தன் காரில் பயணிக்கும்போது ஒலிக்காத நாளே இல்லை எனலாம் .
பொதுவுடமை கருத்துக்களை தனது திரைப்பட பாடல்களில் புகுத்துவதற்கு பிரத்யேக கவனம் செலுத்தினார் எம்.ஜி.ஆர். அதன்படி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பலவற்றை தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டார் . இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் மாட்டு வண்டியில் பயணித்தபடி வயக்காட்டில் பாடும் காடு வெலெஞ்சு என்ன மச்சான் நமக்கு கையும் காலும்தான் மிச்சம் என்ற பாடலில் பட்ட துயர் இன்னும் மாறும், ரொம்ப கிட்ட நெருங்குது நேரம், நானே போட போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம். நாடு நலம் பெறும் திட்டம் , என்ற வரிகளின்படி , தனிக்கட்சி ஆரம்பித்து, முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து பல நல்ல திட்டங்களை தீட்டினார் . தான் முதல்வராவதற்கு 20 ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட பாடல். இதில் இருந்து எம்.ஜி.ஆர். எப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரிசி என்பதை அறிந்து கொள்ளலாம் . பாடலில் பானுமதி மாடாய் உழைப்பவன் வாழ்க்கையில் பசி வந்திட காரணம் என்ன மச்சான் என கேள்வி கேட்க , அங்கு சேரக்கூடாத இடத்தில செல்வம் சேருவதால் அவனுக்கு வரும் தொல்லையடி என்று எம்.ஜி.ஆர். பதிலளிப்பார் .
1975ல் பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் , கவிஞர் பாரதிதாசன் பாடலான புதியதோர் உலகம் செய்வோம் , கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் . இதே வரிகள் சந்திரோதயம் டைட்டில் பாடலிலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் அதே வரிகள் இந்த படத்தில் வேறு ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுவுடமை கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் .புனிதமாக அதை எங்கள் உயிர் என்று காப்போம் என்று வரிகள் வரும்படி புதிய விளக்கத்தை பொதுவுடைமை பற்றி கவிஞர் பாரதிதாசன் எளிதாக எழுதினார். எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து, வளர்ந்து வந்த சமயத்தில் மிக சரியான வகையில் , மக்களை கவரும் வண்ணம் பயன்படுத்திக் கொண்டார் .
எம்.ஜி.ஆர். தன் திரைப்படங்களில் தன்னை பாட்டாளிகளின் தோழனாக, மீனவ சமுதாயத்தின் காவலனாக, ஏழை எளியோரின் துயர் துடைப்பவனாக நடித்த படங்களின் எண்ணிக்கை அதிகம் . குறிப்பாக படகோட்டி படத்தில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான் , எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான் , கரைமேல் இருக்க வைத்தான், பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் .என்ற பாடலில் ஒருநாள் போவார், ஒருநாள் வருவார் , ஒவ்வொரு நாளும் துயரம். ஒரு ஜான் வயிறை , வளர்ப்பவர் துயரை ஊரார் நினைப்பது சுலபம் என்ற கவிஞர் வாலியின் பாடலில் மீனவ சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கை துயரத்தை அடக்கி , தனக்கே உரிய பாணியில், சோகத்தோடு நடித்து அசத்தினார் .தொடர்ந்து கொடுத்ததெல்லாம் கொடுத்தான், பாடலில் உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று, ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை . படைத்தவன் மேல் பழியுமில்லை. பசித்தவன்மேல் பாவமில்லை, கிடைத்தவர்கள் பிழைத்துக் கொண்டார் . உழைத்தவர்கள் தெருவில் நின்றார். இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார். மடி நிறைய பொருளிருக்கும் . மனம் நிறைய இருள் இருக்கும் . என்றகவிஞர் வாலியின் வைர வரிகள் எம்.ஜி.ஆரின் இமேஜுக்கு பெரும் பலம் சேர்த்தன . இந்த பாடல்கள் மூலம் கவிஞர் வாலி உச்சத்தை தொட்டார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞர் ஆனார் வாலி . ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர். நாடக துறையில் இருந்த சமயத்தில் ஆர்வத்தின் காரணமாக இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டதால், பிற்காலத்தில் அந்த திறமையை தன் பாடல்களில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அமைந்தது . அதன் காரணமாக அவரது பாடல்கள் காலத்தால் அழியாமல் , இன்றும் மக்களால் ரசிக்கப்படுகின்றன .
எம்.ஜி.ஆர். முதல்வரானபின் 1977ல் வெளியான படம் மீனவ நண்பன் தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானதும், ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக சில நாட்கள் மீனவ நண்பன் படத்திற்கான தன்னுடைய காட்சிகளில் நடித்து முடித்துதான் பதவி ஏற்றார். இந்த படத்தில் மீனவ சமுதாயத்தின் குறை தீர்க்கும் தலைவனாக நடித்திருப்பார் . இந்த படத்தில் அப்போதைய எதிர் கட்சியான தி.மு.க.வை சாடும் வகையில் பட்டத்து ராஜாவும், பட்டாள சிப்பாயும் ஒன்றான காலமிது என்ற பாடல் அமைந்திருக்கும் . இந்த பாடலில் கோட்டை கட்டி கும்மாளம் போட்ட கூட்டங்கள் என்னானது . பல ஓட்டை விழுந்து தண்ணீரில் மூழ்கும் ஓடங்கள் போலானது என்ற வரிகள் வரும்இந்த பாடல்கள் வரிகள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியில் அப்போது பலத்த வரவேற்பை பெற்றது . .
1974ல் வெளியான,நடிகர் அசோகன் சொந்தமாக தயாரித்த நேற்று இன்று நாளைதிரைப்படத்தில் அரசியல் நெடி மிகுந்த வசனங்கள் இருந்தன தனது கட்சியின் கொள்கைகள், எதிர்க்கட்சியின் ஊழல்கள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துரைக்க நல்ல வாய்ப்பாக எம்.ஜி.ஆர். பயன் படுத்தி வெற்றியும் பெற்றார் . நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்ற பாடலில், மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார் , தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் .வீதிக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே, தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே. ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார். தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார். இந்த வரிகள் தி.மு.க. கட்சியை நேரடியாக தாக்குவது போலிருக்கும்.
1971ல் வெளியான ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் கவிஞர் வாலியின் அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் . அது ஆணவ சிரிப்பு என்கிற பாடல் வரும் எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்தபோது வெளியான படமாக இருப்பினும் , பாடலிலுள்ள வரிகள் , கருத்துக்கள் , அவர் அ தி.மு.க.வை தொடங்கியபின் பார்க்கும்போது தி.மு.க.விற்கு எதிரான கருத்துக்கள், எம்.ஜி.ஆர். கணக்கு கே ட்டது குறித்த எழுப்பிய கேள்விகள் போன்று பாவித்து ரசிகர்கள் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பை அளித்தனர் . .
தேர்தல் பிரச்சாரங்கள், பொது கூட்டங்களில் கலந்து கொள்ள செல்லும்போது எதிர்க்கட்சியினர் எம்.ஜி.ஆரைதிரைமறைவாக இருந்து தாக்க முற்படுவதாக அவ்வப்போது தகவல்கள் அவருக்கு கிடைக்கும் . எப்போதும் தன்னுடன் சில ஸ்டண்ட் நடிகர்கள் பாதுகாப்பிற்கு உடன் வைத்துக் கொள்வார் . காவல்துறையினரை விட அவர்களையே அதிகம் நம்புவார் . ஒருமுறை திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது மணப்பாறை அருகிலே உள்ள கிராமத்தில் ஒரு ஓலை குடிசையில் வயதான பெண்மணி தயார் செய்த சாப்பாட்டை சாப்பிட்டு அங்கேயே தங்கியுள்ளார் . பின்னர் திண்டுக்கல் வெற்றிக்கு பிறகு மறுமுறை மணப்பாறை சென்றபோது அதே ஓலை குடிசைக்கு சென்று தனக்கு உணவளித்த அந்த தாயை சந்தித்து ஒரு தூக்கு வாளியில் பணக்கட்டுகளை அடுக்கி பரிசளித்தார் வள்ளல் எம்.ஜி.ஆர். .இந்த சம்பவம் பின்னர் அந்த ஊர் முழுவதும் பரவி,அந்த பெண்மணி பிரபலம் ஆனார் . இதே போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த வரலாறு உண்டு. சொல்லிக் கொண்டே போகலாம் . தான் ஆட்சிக்கு வந்ததும் ஏழை எளியோர் தங்கும் ஓலை குடிசைகளுக்கு இலவசமாக ஒரு விளக்கு என்ற திட்டத்தை உருவாக்கி ஏழை மக்களின் ஒளி விளக்காக திகழ்ந்தார் .
ஒரு தொண்டனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் பயணித்து பின்னர் சாலைகளில் கார் செல்லமுடியாத தருணத்தில் , குறுகலான பாதைகளில் நடந்தே சென்று பங்கேற்று , மணமக்களுக்கு பரிசளித்து அவர்களை ஆசிர்வதித்து வந்தார் . இந்த மாதிரி சம்பவங்கள் கூட நிறைய உண்டு .நீதிக்கு தலைவணங்கு படத்தில் நான் பார்த்தா பைத்தியக்காரன் பாடலில் ஜாதி, மதம் ,இனம்,மொழி பார்ப்பவன் நானில்லை. நான் நெருப்பினால் நடப்பவன்டா ஆனால் நீதிக்கு பயந்தவன்டா , தர்மத்தை அழிக்க வந்தால் உயிரை தந்தேனும் காப்பவன்டா , ஊருக்குள் நீ செய்யும் அநியாயம் நான் உள்ளவரை நிச்சயம் நடக்காது .இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் நாளை உன்னுடைய ஆட்டத்தை நான் முடித்து வைப்பேன் என்ற பாடல் வரிகள் தி.,.மு.க.வின் அராஜக ஆட்சிக்கு எதிராக எழுதப்பட்டு அரங்குகளில் எம்.ஜி.ஆர். ரசிகர்களால் அபார வரவேற்பை பெற்றது .
தேடி வந்த மாப்பிள்ளை என்ற படம் 1970ல் வெளிவந்தது .அதில் வரும் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடல் மிக பிரபலம் . தேர்தல் பிரச்சாரங்களில் , அ, தி. மு.க. பொது கூட்டங்களில் இந்த பாடல் அதிகம் உபயோகத்தில் இருந்தது . இப்போதும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சில அமைச்சர்கள், எம்.ஜி.ஆர். அபிமானிகள் தங்களது செல்போனில் ரிங்க்டோனாக வைத்துள்ளனர் .தாயின் பெருமைகள், சிறப்புகள் இந்த பாடலில் அழகாக வடிவமைத்து இருப்பார்கள் . பெற்றெடுத்து பேர் தொடுத்த அன்னை அல்லவோ, நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ . தாய் பாலில் வீரம் கண்டேன் . தாலாட்டில் தமிழை கண்டேன் .அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம் பிள்ளையினால் பன்னீர் ஆகும். ஆசை தரும் கனவுகள் எல்லாம் அவனால்தான் நனவுகள் ஆகும் என்ற வரிகள் பாராட்டை பெற்றன .
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் சண்டைக்காட்சி ஒன்று எடுப்பதற்காக செங்கல்பட்டு அருகில் ஒரு இடத்தில ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து மூலம் செட் அமைத்தார்கள் . அந்த செட் அமைப்பை பார்வையிட அடிக்கடி செங்கல்பட்டு சென்று வந்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்காத பட்சத்தில் அருகில் உள்ள கிராமத்தில் சென்று ஏதாவது வாங்கி வருமாறு இருவரை பணித்து ரூ.100/- கொடுத்து அனுப்பினார் . அவர்கள் வேகவைத்த வேர்க்கடலை, சீனிக்கிழங்கு வாங்கி வந்தனர் . அதை தானும் உண்டு அனைவருக்கும் பகிர்ந்தளித்தார் .மீண்டும் மீண்டும் தான் செங்கல்பட்டிற்கு செல்லும்போதுதன்னுடன் வருபவர்களுக்காக தனக்கு பிடிக்கிறதோ இல்லையோ அந்த பெண்மணியிடம் வேர்க்கடலை, சீனிக்கிழங்கு வாங்கிவிட்டு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு வாருங்கள் என்று பணித்துள்ளார் .எம்.ஜி.ஆர். முதல்வரானபின்பு , அந்த வயதான பெண்மணி இறந்து போன தகவல் யார் மூலமோ எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகிறது ,உடனே எம்.ஜி.ஆர். கார் மூலம் செங்கல்பட்டு சென்று அந்த குடிசைக்கு சென்று அந்த பெண்மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார் என்பது வரலாறு . இந்த மாதிரி யாரும் எதிர்பார்க்காத, கனவிலும் காணாத சம்பவங்கள்,ஏழைகளுக்கு செய்த உதவிகள் எம்.ஜி.ஆர். விஷயத்தில் ஏராளம் உண்டு. இந்த செயல்களும் மனித இதயங்களில் ஆழமாக பதிந்தனால்தான் எம்.ஜி.ஆர் வாக்கு வங்கி என்பது கணிசமான அளவில் கிராமப்புற பகுதிகளில் பெருகி உள்ளது என்று சொல்வதுண்டு .
நிகழ்ச்சியில் கீழ்கண்ட பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன
1. சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம் .
2.சித்திர சோலைகள் - நான் ஏன் பிறந்தேன்
3.அச்சம் என்பது மடமையடா - மன்னாதி மன்னன்
4.காடு வேலன்ச்சு என்ன மச்சான் - நாடோடி மன்னன்
5.தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி
6.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி
7.புத்தன் இயேசு காந்தி பிறந்தது - சந்திரோதயம்
8.பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும் - மீனவ நண்பன்
9.நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று - நேற்று இன்று நாளை
10.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் -ரிக்ஷாக்காரன்
11.நான் பார்த்தா பைத்தியக்காரன் - நீதிக்கு தலை வணங்கு
12.வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை........ Thanks...
-
வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆரும் :::
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்களுக்கெல்லாம் அகரமே முதலானது. அதைப்போல ஆதிபகவன் என்னும் தெய்வமே உயிர்களின் முதலானது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.
ஆனால் அறிஞர்களின் சிலரின் கருத்துப்படி. திருவள்ளுவரின் தாய் ஆதி என்றும் , பகவான் என்பவர் அவருடைய தந்தை என்றும் சொல்லப்படுகிறது. இதன்படி பார்த்தால் தாயும் தந்தையுமே உலகத்தில் உயிர்களுக்கும் முதல் என்றும் பொருள் ஆகிறது. வாழும் மனிதர் ஒவ்வொருவரும் இதை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும் ?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன் தாய் திருமதி சத்தியபாமாவை தெய்வத்துக்கு நிகராகவே வைத்திருந்தார் என்பது உலகறிந்த உண்மை. தான் வாழ்ந்து வந்த ராமாவரம் தோட்டத்தில் தன் தாய்க்கு ஒரு கோயிலே கட்டியிருந்தார் அந்த உத்தம மகன். ஒவ்வொரு நாளும் அவர் வெளியில் செல்லும்போதும் கார் ஒரு நிமிடம் அந்தக் கோயிலின் முன் நிற்கும். வலதுபக்கம் திரும்பி தன் தாயின் திருவுருவத்தை அவர் வணங்கிய பிறகே கார் முன்னோக்கி நகரும்.
எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் போதும் தாயே துணை என்று சொல்வார் . அதைப்போலவே எதையாவது எழுதும்போதும் தாயே துணை என்று காகிதத்தின் மேலே எழுதுவார். உலகம் போற்றும் சத்துணவுத் திட்டத்தை ஆரம்பிக்கும்போது அதன் தொடர்பான முன் குறிப்புகளை எழுதும்போது ஒவ்வொரு பக்கத்தின் மீதும் தாயே துணை என்று தமிழ்நாட்டு முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எழுதிய முப்பத்தாறு குறிப்புகள் உலகப் பிரசித்தி பெற்றவை.
நினைவழியா இரண்டரை வயதில் இறந்து விட்ட தந்தையாரின் திருவுருவப் படத்தையும் பூஜை அறையில் தாயின் படத்தோடு வைத்து வணங்கினார்.
தாயையும் தந்தையையும் சேர்த்து வணங்கியதால் தான் அவர் மக்களின் தலைவராக உயர்ந்தார். மற்றவர்களுக்கும் அவருடைய முக்கியமான அறிவுரை, தாயைப் பெருமைபடுத்துங்கள். தாயின் வயிறு எரியாமலும் தனது செய்கையால் தாயின் மனம் புண்படாமல் இருக்கும்படி நடந்து கொள்வது தான் ஒரு மகனுடைய மிகப்பெரிய கடமையாகும் என்பது தான்.
அதனால்தான் தன் தாயை பற்றி ஒரே வரியில் சொன்னார். நான் காணாத கடவுளை விட காணும் கடவுளைத்தான் கண்ணால் கண்ட என் தாயை தான் பெரிதும் மதிக்கிறேன்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் வாழ்க......... Thanks...
-
நமது...
**மக்கள் திலகம் **குழு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
**முன்னேற என்ன வேண்டும் நல்எண்ணம் வேண்டும், தன் உழைப்பாளே உண்ணவேண்டும் **
**மக்கள் திலகம் **
ஓங்குக #பொன்மனச்செம்மல் #புகழ்...... Thanks...
-
புரட்சித் தலைவருக்கு தற்பெருமை பிடிக்காது. ஆனால் பெருமைக்கு புரட்சித் தலைவரை பிடிக்கிறது . ஏனென்றால் மக்களுக்கு அவரை பிடிக்கிறது. அதனால் உலகத்தில் இருக்கும் எல்லா நல்லனவற்றுக்கும் அந்த மனிதப் புனிதரை பிடிக்கிறது ...
நன்மை செய்வதையே தன் கடமையாக வாழ்ந்து காட்டியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்... நம் அனைவருக்குமே முன்னோடி என்றால் புரட்சித்தலைவர் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களே ... !
கொடை வள்ளல் எம்ஜிஆர் புகழ் வாழ்க.... Thanks...
-
நன்றி மறவாத
நல்ல மனம் வேண்டும்
அதுவே என் மூலதனம்
ஆகும் தலைவர் பாடல் வரிகள்
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அம்மா வின் ஆசியுடன் காலை வெற்றி வணக்கம் நம்வாழ்வு நம் கையில் வீட்டில் உள்ளே இருப்போம் நல்லது நடக்கும்..... Thanks...
-
#எம்ஜிஆர் #ஆட்சி #சாதனைகள் #நூறு...
1.சத்துணவு திட்டம் 01-07-1982 முதல் அமுல்படுத்தப்பட்டது.
2.பெரியார் சீர்திருத்த எழுத்துக்கள அமுலாக்கம்
3.கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிகள் உருவாக்கம்
4கிராம தன்னிறைவு திட்டம் தொடக்கம்
5.பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தலைவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டன.
6.புதிய போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டு 4316 புதிய பேருந்து வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
7.குடிசைகளுக்கு இலவச மின் வசதி அளிக்கப்பட்டது.
8.காவல்துறைகள் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
9.பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அமுல்படுத்தப்பட்டது.
10.பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கபட்டன.
நாளை தொடரும்-
எம்.ஜி.ஆரின் ஆட்சி சாதனைகள் 100 தொடர்ச்சி-
11.கரூர் அருகே புகளூரில் நாட்டிலேயே முதல் முதலாக கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டது.
12.சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தார்.
13.அரிசியின் விலையை தன் ஆட்சி முழுவதும் கட்டுபாட்டில் வைத்திருந்தார்.
14.அனைத்து பொருள்களின் விலைவாசியும் கட்டுபாட்டில் இருந்தன.
15.பண்டிகை காலங்களில் கூடுதல் அரிசி நியாயவிலைக்கடைகளில வழங்கபட்டன.
16.பாரதி பாரதிதாசன் அண்ணா பெரியார் காமராஜர் பெயர்களில் பல்ககலைகழகங்கள் உருவாக்கப்பட்டன.
17.நாட்டிலேயே முதல் முறையாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.
18.முக்கியமாக தன் பெயரில் எவ்வித திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகம் தொடங்கப்படுவதற்கு முன்னரே மறைந்து விட்டார்.
19.தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் தனி பலகலைகழகம் கண்டார்.
20.மகளிருக்கென அன்னை தெரசா பெயரில் கொடைக்கானலில் தனி பல்ககைழகம் கண்டார்.
நாளை தொடர எம்ஜி.ஆர்.ஆட்சி சாதனைகள் 100
பகுதி 3 தொடர்ச்சி
31.பொறியியல் கல்வியில் பெரும் புரட்சியாக தமிழ்நாட்டில் சுயநிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற்கொள்ள செய்தார்.இதன் மூலம்ஆசிரியர்கள் பலரும் வேலை வாய்ப்பினை பெற்றனர்.
32.ஏழை மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில்பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நுழைவுத் தேர்வினை அறிமுகப்படுத்தினார்.
33.திரையரங்குகளில் compound Tax முறையை அமல்படுத்தி திரை உலகினருக்கு உதவினார்.
34.அரசு அலுவலகங்களில் கோப்புகளில் குறிப்புகளை தமிழில் எழுதப்பணித்தார்.
35.அரசு நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
36.தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக மாநிலக்கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுபபினர்கள்(சத்தியவாணி முத்து,பாலாபழனூர்) மத்திய அமைச்சரவையில் இடம் பெறச்செய்தார்.
37.தமிழகத்தின் பல தொகுதிகளில் புதியவர்களையும் சாதரணமானவர்களையும்,அடிமட்ட தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிபெறச்செய்து M.L.A. M.P.ஆக்கி அழகு பார்த்தார்.
38.தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து தீர்வுகள் காண முயற்சிகள் எடுத்தார்.
39.தமிழகத்துக்கு கூடுதல் அரிசி மத்திய தொகுப்பிலிருந்து வழங்க வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.
40.தெலுங்கு கங்கை திட்டம் கொண்டுவந்து சென்னை நகரின் தண்ணீர் பஞ்சம் போக்கினார்.
நாளை தொடரும்...
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி5
41.நலிந்த பிரிவு மக்களுக்காக 30 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
42.பத்தாம் வகுப்பு மற்றும் புதுமுக வகுப்பு (பி.யூ.சி) படித்தவர்களுக்காக மாதாந்திர நிவாரணம் அளிக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
43.வணிகர்களுக்கு"ஒரு முறை வரி விதிப்பு " திட்டத்தை அமுல்படுத்தினார்.
44.கிராம கைவினைக் கலைஞர்களுக்கு இலவச தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
45.விபத்து மற்றும் இடர் உதவித்திட்டத்தையும் அமுல்படுத்தினார்.(இப்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான்.இந்த தகவல் பல மாதங்களுக்குமுன் ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட செய்தியாகும்.)
46.நெசவாளர்,தீப்பெட்டி தொழிலாளர்,பனை ஏறும் தொழிலாளர் இவர்களுக்கான விபத்து நிவாரணத்திட்டத்தை அமுல்படுத்தி பின்னர அதனை விரிவு படுத்தினார்.
47.மீனவர்களுக்கும் நெசவாளர்களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.
48.கட்டிட தொழிலாளர் கிராமக் கைவினைஞர் கை வண்டி இழுப்போர் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும் பணி ஓய்வு பலன்கள் கிட்டவும் திட்டம் துவக்கினார்.
49.காவலர்களுக்கு தனி வீட்டு கழகம் அமைத்து அவர்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.
50.உலக வங்கி உதவியுடன்விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
தொடரும் எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள்100
பகுதி6
51.ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்திட்டத்தின்கீழ் ரூபாய் 10000வழங்க உத்தரவிட்டார்
52.விதவை மறுமணத்திட்டத்தின் கீழ் தம்பதியர்களுக்கு ரூ.5300 வழங்க உத்தரவிட்டார்.
53.கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தாழ்த்தப்பட்டோரை மற்ற இனத்தவர்கள் மணம் புரிந்து கொண்டால் தலா ரூ.4300 வழங்க உத்தரவிடப்பட்டது.
54.10000 ஏழை தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டது.
55.மதுரை மாநகரில்ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழறிஞர்களை கவுரவப்படுத்தினார்.
56.நக்சலைட்டுகளை அறவே ஒழித்து தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழச்செய்தார்.
57.Encounters இல்லாமல்தமிழகத்தில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினார்.
58.புதிய தொழிற்கொள்கையை ஏற்படுத்தி அன்னிய முதலீடுகளுக்கு அடிகோலினார்.
59.தமிழறிஞர்கள் திரைப்பட கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு கலைமாமணி விருது தொடர்ந்து வழங்கிடச்செய்தார்.
60.ஆஸ்தான அரசவைக் கவிஞர் பதவி நாமக்கல் கவிஞருக்குப்பிறகு நீண்ட காலம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது.கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தகுதியான ஒருவருக்கு அப்பதவி வழங்கப்படவேண்டும் என கருதி கவிஞர் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவி வழங்கி ஒரு அமைச்சருக்குரிய சலுகைகளையும் அளித்து அழகு பார்த்தார்.
நாளை தொடருமஎம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி7
61.சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் wholesale steel market ஐ மிகப்பெரிய அளவில்திருவொற்றியூரை அடுத்துள்ள சாத்தங்காடு என்ற இடத்தில் நிறுவினார்.
62.ஆசியாவிலேயே பெரிய அங்காடி கோயம்பேட்டில நிறுவிட திட்டம் தீட்டி செயல்படுத்த முனைந்தார்.
63.சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நவீன கருவிகளுடன் புதிய கட்டிடம் கட்டிட ஏற்பாடு செய்தார்.
64.தமிழகமெங்கும் கிராம மக்களின் வசதிக்காக அதிக எண்ணிக்கையில் சுகாதார மையங்கள் அமைத்தார்.
65.சென்னை கோட்டுர்புரத்தில் வெள்ளம் சூழ்ந்தபோது முழங்கால் அளவு நீரில் அதிகாரிகளுடன் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்ய உத்தரவிட்டார்.பொதுமக்களை நேரடியாக சந்தித்த முதல்வர் என இபபோதும் போற்றப்படுகிறார்.
66.சென்னை திருவல்லிக்கேணியில் அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின் குளத்தை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந் தேரோட்டத்தை நடைபெறச்செய்தார்.
67.முறையான நிர்வாகமில்லாமல் நன்கு பராமரிக்கப்படாமல் பாழடைந்த புராதன கோயில்களை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவந்து அவைகளை சீரமைத்தார்.
68.நாட்டின் முன்னேற்றத்திற்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடைமுறைபடுத்திய இருபது அம்ச திட்டத்தின் கீழ் ஒரு அம்சமான கொத்தடிமை ஒழிப்புத் திட்டத்தை முழுயைாக செயல்படுத்தினார்.
69.அறிஞர் அண்ணாவன் பவள விழா மூதறிஞர் இராஜாஜி எழுச்சி கவிஞர் பாரதியார் மற்றும் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பகுத்தறிவுப்பகவலன் பெரியார் ஆகியோரின் நூற்றாண்டுவிழாவினை தமிழக அரசு சார்பில் கொண்டாடி சிறப்பு செய்தார்.
70.அரசு விழாக்களில் ஆடம்பரத்தை தவீர்த்து சிக்கனத்தைக் கடைபிடித்தார்.
நாளை தொடரும்-
எம்.ஜி.ஆர் சாதனைகள்100
பகுதி8
71.தமிழக அரசின் சார்பில் அளித்த முதல்வருக்குரிய வாகன வசதியை தவிர்த்து சொந்த காரிலேயே பயணித்து அனைவருக்கும் முன்னோடியாய் விளங்கினார்.
72.1977 முதல் 1983 வரைபெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் 449 தமிழகத்தில் அமைக்கப்பட்டன.இவற்றின் மொத்த மூலதனம் ரூ850 கோடி ஆகும்.
73.தொழிலாளர நலவாரியம் மூலம் தொழிறசாலைகளில் தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து கிளர்ச்சி வேலைநிறுத்தங்கள் இன்றி உற்பத்தி திறன் பாதிக்கப்படாவண்ணம் செயலாற்றினார்.
74.சென்னை புறநகரில் TAMIN என்றழைக்கப்படும் தமிழ்நாடு மினரல்ஸ் தொழிற்சாலையை நிறுவினார்.1979ல் தமிழகத்தின தொழில் வளர்ச்சி 5.2சதவீதத்திலிருந்து 1982ல் 12.1சதவீதமாய் உயர்ந்தது.
75.இது தவிர மத்திய அரசின் நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3ஆவது இடத்தைப பிடித்தது.
76.1977-78ல் தமிழகத்தில் 2124 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி 1983-84 ஆம் வருடத்தில்3344 மெகாவாட்டாக உயர்ந்தது.
77.20000 இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார்.
78.கடுமையான வெள்ளத்தின்போது ரேஷன் கடைகளில் அரிசி விலையை ரூ1.75ஆக குறைக்க உத்தரவிட்டார்.
79.அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவேட்டில் தமிழில் கையொப்பமிட ஆணை பிறப்பித்தார்.
80.பெயர் பலகை விளம்பர பலகைகளில் முதலில் தமிழில் எழுதப்படவேண்டும் என உத்தரவிட்டார்.
நாளை தொடரும்-: எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி 9
81.தமிழ் சான்றோரகளின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாட வழிவகுத்தார்.
82.வறுமையில் வாடும் தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கிட ஏற்பாடு செய்தார்.
83.திருக்குறள் நெறி பரப்பிடும் வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார்.அதற்கு திருக்குறள் முனுசாமி என்ற அறிஞரை தலைவராக நியமித்தார்.திருவள்ளுவர்
திருநாளன்று சிறந்த அறிஞர்களுக்கு திருக்குறள் விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
84.தமிழகத்தின் பழங்கலைகளைப் பாதுகாக்க பழங்கலை இயக்ககம் ஒன்றை உருவாக்கினார்.
85.சிறந்த எழுத்தாளருக்கு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் திரு.வி.க..விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
86.மதுரையில் சங்கப் புலவர்களை கௌரவிக்க நினைவுத்தூண் ஒன்று நிறுவினார்.
87.மேலும் அதே மதுரை மா நகரில் தமிழன்னை சிலையையும் நிறுவினார்.
88.காவலர்கள் சீருடையில மாற்றங்கள் கொண்டு வந்தார்.
89.சென்னை வெப்பேரியில் கால்நடை மருத்துவ பல்கலை கழகம் நிறுவ அடித்தளமிட்டார்.
90.பல்வேறு புதிய அரசுக் கட்டிடங்களை தானே திறக்காமல் தன் தலைமையில் நடைபெற்ற விழாக்களில் எளிய மேஸ்திரிகளைக் கொண்டு திறக்கச் செய்து எளியவர்களையும் கௌரவித்தார்.
நாளை தொடரும்-
எம்.ஜி.ஆரின ஆட்சி சாதனைகள்100
நிறைவுப்பகுதி 10
91.திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையே புதிய தலைநகரை உருவாக்க தீர்மானித்து அதற்கான வேலைகளை தொடங்குமுன்னர் எப்போதும் முட்டுகட்டை போடும் சில தலைவர்களின் போராட்டம் காரணமாக அவருடைய மனதுக்குகந்த முடிவை தள்ளி போடவேண்டியதாயிற்று.பின்னர் அவரின் உடல்நலக்குறைவால் திட்டம் நடைபெறவில்லை.இன்றும் பல கருத்தாய்வளர்களால் அத்திட்டம் மட்டு்ம் நிறைவேவறியிருந்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.
92.மற்றொரு அவரது முடிவாக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கிடு அமுல்படுத்தப்பட்டது.இதுவும் அவரது எதிர்ப்பாளர்களால் முடக்கப்பட்டது.அதன் காரணமாக இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களில் பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய மக்களுக்கு கடைக்க வேண்டிய சலுகைகள் பெற முடியாமற போயிற்று.
93.சத்துணவுத்திட்டம் இந்தியாவுக்கும் முன்னோடீத்திட்டமாக இன்று உள்ளது.ஐ.நா.வின் நிறுவனங்கள் சத்துணவால் குழந்தைகளுக்கு பல பிணிகள் நீங்கியுள்ளதை ஆவணப்படுத்தி உள்ளன.
94.பூரண மது விலக்கு 1977 முதல் 1980 வரைஅமுல்படுத்தினார்.அதன் பிறகு அமுல் படுத்த முடியாமைக்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன.
95.பெண்களுக்கென பேரூந்துகள் அவரது ஆட்சியில்தான் முதன்முதலாக இயக்கப்பட்டன.
96.சுற்றுலாத்துறை மேம்பட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
97.குடிசைகளுக்கு வீட்டுக்கொரு மின்விளக்கு திட்டத்தினை அமுல்படுத்தினார்.
98.மின்சாரத்தேவையை மனதில் கொண்டு குந்தா போன்ற நீர் மின்நிலையங்களை அமைத்தார்.காற்றாலைகள் அமைத்திட அரசு உதவி அளித்தார்.
99.தமிழக மக்களின் நலனை மனதிற்கொண்டு மத்தியில் அமையும் மாற்று கட்சிஅரசுடனும் சுமுக உறவு கொண்டு தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை கொண்டுவர ஏற்பாடு செய்தார்.
100.பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கிட அன்றைய பிரதமர் ராஜிவிடம் உதவி வேண்டினார்.முதலில் மறுத்த ராஜிவ் பின்னர் எம்.ஜி.ஆரின் மீதுள்ள அன்பின் காரணமாக சம்மதித்தார்.இத்திட்டங்களையெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லவில்லை.எம்.ஜி.ஆர் சொன்னதை செய்தார்.சொல்லாததையும் செய்தார்.முக்கியமாக செய்ததை சொல்ல மாட்டார்
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
அவரது மனித நேயத்தைப் போற்றுவோம்.
அடுத்து எம்.ஜி.ஆரின் திரைப்பட சாதனைகள் 100 -தொடரும்.
நன்றி:அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நலச்சங்கம் ,தமிழ்நாடு மற்றும் தி இந்து(தமிழ்)............ Thanks VN.,....
-
திரையுலகிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட, அவர் என்மீது கொண்டிருந்த அன்பு குறையவில்லை. தி.நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள்.
அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, 'என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன!' என்றார்.
'நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்!' என்றேன்.
இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!
'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.
'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.
பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த
விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார்.
நான் விடைபெற்றுக்கொண்டேன்.
அடுத்த 2 தினங்களில் திரையரங்கு கட்ட
அனுமதி வந்தது அரசிடமிருந்து !
- நான் நாகேஷ் நூலிலிருந்து .
( படம் ; எம்ஜிஆர் - ஜானகி அம்மையாருடன்
உணவருந்தும் நாகேஷ் , மனைவியுடன் )....... Thanks...
-
எம்.ஜி.ஆர். படங்களில் 'திருடாதே' முதல் 50 க்கும் மேற்பட்ட படங்களில் சண்டைப் பயிற்சியாளராக பணி புரிந்தவர் ஷியாம் சுந்தர். நல்ல தோற்றமுடைய இவர் நடிப்பதற்காக சினிமாவிற்கு வந்தவர். ஆனால் சண்டைப் பயிற்சியாளராகிவிட்டார்.
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரான பின்
ஷியாம் சுந்தர் படிப்படியாக சினிமாவைவிட்டு விலகி பெங்களூரு போய்விட்டார்.
ஒரு நாள் புகைப்படக் கலைஞர்
திரு ஆர். என். நாகராஜராவ் அவர்களிடமிருந்து எனக்கு போன்
வந்தது, "உங்களுக்கு ஒரு அதிசயம்
காத்திருக்கிறது. உடனே வாருங்கள்" என்று.
அதன்படி நேரில் சென்றால், அங்கு
திரு ஷியாம் சுந்தர் எனக்காக காத்திருந்தார். ராவ் அவரது நீண்ட கால
நண்பர்களில் ஒருவர். ஏற்கனவே அவரிடம் ஷியாம் சென்னை வந்தால், தெரிவிக்கும்படி சொல்லியிருந்தேன்.
திரு ஷியாம் சுந்தர், எம்.ஜி.ஆரது
ஆஸ்தான சண்டை பயிற்சியாளரல்லவா, பழகும் தன்மையில் மனதை நெகிழ வைத்தார்.
ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது உறவினர் இல்லத்தில் சந்தித்து பேசி
படங்கள் எடுத்து 'தினமலர்' தீபாவளி மலரில் எழுதினேன்.
ஷியாம் சுந்தர், சிவாஜி நடித்த
'சிவந்த மண், தியாகம் படங்களிலும்
பணி புரிந்திருக்கிறார் எம்.ஜி.ஆரின்
அனுமதி பெற்றே.
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan...... Thanks...
-
ஒரு முறை எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார் வேனில் ரோட்டின் இரு மறுங்கிளும் மக்கள் திரளாக நின்று கோஷமிட மாலை போடவும் ஆராவாரமாக வந்து கொண்டிருந்தார் ஏழுமலை என்ற கிராமத்தை அடைந்தவுடன் திடீரென வேன் நின்றது ஏன்? என்று பார்க்கையில் ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் வழியை மறைத்து படுத்துக்கொண்டார் உடனே வேனை விட்டு எம்ஜிஆர் இறங்கி விட்டார் குழந்தைகள் மற்றும் வயதான மூதாட்டிகளுக்கு முதலிடம் கொடுப்பார் எல்லோரும் அறிந்ததே!
என்ன வேண்டும் எழுந்திரியுங்கள் என்றதும் எம்ஜிஆரை முதன் முதலில் அருகில் பார்த்த பாட்டிக்கு கண்ணீர் பொங்குகிறது வாய் வார்த்தை வரவில்லை பின் தளத்த குரலில் நீ நல்லா இருக்கனும் ராசா சரிம்மா என்னனு சொல்லுங்க ஒன்னும் இல்லப்பா என் வயலு ரெண்டு வருசமா விளச்சலே இல்ல ஓ பாதம் பட்டா விளையும் னு சொன்னாங்க... அதா நல்ல மழை பெய்தால் தானா விளையும் அம்மா சரி வாங்க எங்கே? இருக்கு என்றார் தலைவர் அந்தா தெரியுது பாருப்பா என்றதும் கூட்டத்தில் விசில் பறக்குது கூட்டம் பின் தொடர எம்ஜிஆர் யாரும் என் பின்னே வரக்கூடாது வயல் கெட்டு விடும் என்று கட்டளையிட்டவாரே வேஷ்டியை தூக்கி பிடித்து கொண்டு ஐந்து நிமிடத்தில் சென்று தன் செருப்பை கழட்டி விட்டு வயலை தொட்டு வணங்கி விட்டு திரும்பினார் தலைவர்
பச்சை பசேலான வயலில் வெள்ளை ஜிப்பா வேஷ்டியில் வெள்ளை கலர் தொப்பி கருப்பு கண்ணாடி தங்கமான நிறத்தில் அவர் முகம் நேரடியாக அன்று அவரை பார்த்த கண்கள் தூங்கி இருக்கவே முடியாது
பின்பு அந்த பாட்டி தயாராக வைத்திருந்த குண்டு சோடாவை கொடுக்க தன் பெருவிரலால் ஒரே அமுக்கு அமுக்கி இரண்டு மடக்கு குடித்து விட்டு பாட்டியை கட்டி பிடித்து விட்டு கை ஆட்டிக் கொண்டே வேனில் ஏறி பறந்தார் எம்ஜிஆர் இது தான் கூட்டத்தில் எல்லோரும் பார்த்தது
ஆனால் பாட்டியின் முந்தானை கொசவத்தில் பேப்பரில் சுற்றிய பணக்கட்டு யார் கண்ணுக்கும் தெரிய வில்லை அதை கட்டிப்பிடிக்கும் போதே தனது ஜிப்பாவில் இருந்து மாற்றி விட்டார் தலைவர் சென்ற பின் அந்த பாட்டியை கட்டிப்பிடித்த பெண்கள் எத்தனை பேர்? அவ்வளவு சந்தோஷம்
பின் தன் உதவியாரிடமும் ஓட்டுனரிடமும் என்னை எவ்வளவு தூரம் நம்பி இருக்கும் இந்த மக்கள் எல்லோருக்கும் எப்படி நான் உதவ போகிறேன் என்று தனது கருப்பு கண்ணாடியை கழட்டி கர்சிப்பால் கண்ணை தொடைத்து கொண்டே பயணமானார் #பொன்மனச்செம்மல்
நீங்க நல்லா இருக்கனும்
நாடு முன்னேற....
என்ற பாடல் தூரத்தில் ஒலித்த வண்ணமே இருந்தது
மீண்டும் வருவேன் நண்பர்களே!
#எல்லாபுகழும்எம்ஜிஆர்கே... Thanks...
-
வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியக்கூடாது என நினைப்பவர் எங்கள் தங்கம் ஏழைகளின் இதய தெய்வம்...... Thanks...