டியர் பம்மலார்,
இளைய தலைமுறை படத்தைப் பற்றி இளைய தலைமுறையைச் சார்ந்த தாங்கள் தரவேற்றியுள்ள செய்தியும் நிழற்படமும் பிரமிக்க வைக்கின்றன. முதலில் பதிவான பாடல் வரிகள் சற்று சாதாரணமான அல்லது பாமரத் தனமான வரிகளாயிருந்தன. தான் ஒரு கல்லூரி பேராசிரியர் பாத்திரமேற்று நடிப்பதால் அந்தப் பாத்திரத்தின் தன்மையினை அவ் வரிகள் சிதைக்க வாய்ப்புள்ளது எனக் கருதி அதே கருத்தினை கண்ணியமாக, ஒரு பேராசிரியரின் தரத்திற்கேற்றவாறு எழுதச் செய்து மீண்டும் பதிவு செய்ய வேண்டுகோள் விடுத்தார் நடிகர் திலகம். முதலில் பதிவாகி நடிகர் திலகம் மாற்றச் சொல்லி வேண்டுகோள் விடுத்த பாடல்
பொம்பளையா லட்சணமா பொடவையைக் கட்டு
அதை மாற்றி நடிகர் திலகத்தின் வேண்டுகோளுக்கேற்ப வரிகள் மெருகூட்டப் பட்டு பதிவான பாடல்
சிங்காரத் தேர் கூட திரை போட்டுப் போகும் அது கூட உனக்கில்லையே
மெல்லிசை மன்னரின் இசையில் எல்லாத் தலைமுறை இளைஞர்களுக்கும் பொருந்தக் கூடிய உயர்வான கருத்துள்ள பாடல்
இளைய தலைமுறை இனிய தலைமுறை
அதே போல் மிகவும் இனிமையான ஒரு பாடல் (தயாரிப்பாளரின் விருப்பத்திற்கேற்ப பாபி இசையை தன் பாணியில் இப்பாடலில் மெல்லிசை மன்னர் புகுத்தியிருப்பார்), கேட்டாயே ஒரு கேள்வி. டி.எம்.எஸ். சுசீலா குரலில் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்.
இதே போல் சுசீலாவின் குரலில் மிகச் சிறந்த பாடல் ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன் பாடல் - இப்பாடல் துள்ளுவதோ இளமை, நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் போன்ற பாடல்களின் பாணியில் அமைந்திருக்கும். சுசீலாவின் குரல் சொக்க வைக்கும்.
இளைய தலைமுறை படத்தின் அனைத்துப் பாடல்களையும் கேட்டு மகிழ
http://www.inbaminge.com/t/i/Ilaya%20Thalaimurai/
பம்மலார் சார், மீண்டும் நன்றிகள்.
இப் படத்தில் மாணவர்களுக்கு பேராசிரியர் அறிவுரை கூறும் காட்சியில் ஒவ்வொரு மாணவரும் அடுத்தடுத்து அவரிடம் பணிய, ஸ்ரீகாந்த் மட்டும் தன்னுடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்ள மாட்டார். அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பு இயல்பு நடிப்பு என்றால் என்ன என்பதை மற்ற நடிகர்களுக்கு விளக்கிக் கூறும் வண்ணம் இருக்கும். இப்படத்தின் நெடுந்தகடு இன்னும் வரவில்லை. நம் நண்பர்களிடம் இருந்தால் அதனை இங்கே தரவேற்றி இப்படத்தின் சிறப்பை தற்போதைய தலைமுறை ரசிகர்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.