-
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"
# இது எப்போதோ ஒருமுறை நான் எழுதியது...!
ஆனால் இப்போதும் , எம்.ஜி.ஆர்.பற்றி என் கண்ணில் படும் ஒவ்வொரு செய்தியும் , நான் எழுதியதை மேலும் மேலும் உறுதி செய்கின்றன..!
# இதோ , ஒரு வெண்பொங்கல் செய்தி..!
# அந்தக் கால தேர்தல் பிரச்சார சமயங்களில் , அண்ணா - காமராஜர் – கருணாநிதி - எம்.ஜி.ஆர். போன்ற அரசியல் தலைவர்கள் , முக்கியமான நகரங்களில் , ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து பிரச்சாரம் செய்து விட்டுப் போவார்களாம்..!
அவர்கள் பேச்சைக் கேட்பதற்காக அன்று மாலை முதலே பக்கத்து கிராமங்களில் இருந்து , மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து , கூட்டம் கூட்டமாக காத்துக் கிடப்பார்களாம் !
ஒரு வழியாக நள்ளிரவில்தான் தலைவர்கள் மேடைக்கு வந்து சேருவார்களாம்..!
அவர்கள் பேசி முடித்து விட்டுப் போன பிறகு , அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அங்கேயே....அந்த பிரச்சார திடலிலேயே துண்டை விரித்துப் போட்டுத் தூங்கி விடுவார்களாம்..! வேறு என்ன செய்வது..? விடிந்த பிறகுதான் ஊருக்குப் போக முதல் பஸ் வரும்..!
எந்தத் தலைவர் வந்து பேசி விட்டுப் போனாலும் , இதுதான் நிலைமை..!
வருவார்கள்...பேசுவார்கள்...செல்வார்கள்..!
ஆனால் ..ஒரே ஒரு தலைவர் மட்டும் , நள்ளிரவில் வந்து பேசி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போகும் முன் , தன் கட்சியை சேர்ந்த அந்த ஏரியாவின் பொறுப்பாளரைக் கூப்பிட்டு , திடலில் தங்கி இருக்கும் மக்கள் அனைவருக்கும் , காலை எழுந்தவுடன் சுடச்சுட சாப்பிட வெண்பொங்கல் கொடுத்து அனுப்ப ஏற்பாடு செய்ய சொல்லி விட்டு , அதற்கான செலவையும் கொடுத்து விட்டுத்தான் போவாராம்..!
அவர்.....வேறு யாராக இருக்க முடியும்..?
எம்.ஜி.ஆர்.!
சில வேளைகளில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் கூட , எம்.ஜி.ஆரின் இந்த வெண்பொங்கலை சாப்பிட்டு விட்டு , எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களாக மாறிய அனுபவங்களும் உண்டாம்..!
# எண்ணிப் பார்க்கிறேன்...!
என்ன அவசியம் வந்தது எம்.ஜி.ஆருக்கு...?
மற்ற தலைவர்களைப் போலவே ..வந்தோமா..? பேசினோமா..? புறப்பட்டுப் போனோமா? என்று இல்லாமல் , எதற்காக அங்கே இருக்கும் மக்களின் அடுத்த நாள் காலை பசியைப் பற்றி கவலைப்பட வேண்டும்..?
அதனால்தான் மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன்..!
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"........ Thanks...
-
சகோ அந்த ஒரே ஒரு நல் இதயத்தை வைத்து கொண்டு பல கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை அடித்து விட்டார் நம் தலைவர்....... Thanks...
-
பகவானின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரம் மற்றும் கூர்ம அவதாரம் மிகவும் முக்கியமானது மச்ச அவதாரம் குறிப்பிடுவது மீன்கள் இந்த மீன்கள் குஞ்சு பொறித்து கண்ணும் கருத்துமாக தன் மீன் குஞ்சுகளை வளர்க்கும் அது போல பகவான் அவனது படைப்பில் மனித ஜீவராசிகளை கண்ணும் கருத்துமாக சதாசர்வகாலமும் பாதுகாப்பார் என்பது உணர்த்தும் மச்ச அவதாரம் அது போல் கூர்ம அவதாரம் ஆமைகள் தன் முட்டைகளை கடற்கரை மணலில் ஆழத்தில் குழி தோண்டி தன் முட்டைகளை இட்டு திரும்பவும் கடலுக்குள் சென்று விடும் ஆனால் அந்த ஆமைகளின் எண்ணம் எல்லாம் அந்த முட்டைகள் மேல் தான் இருக்கும் முட்டைகளை மற்ற விலங்குகள் அழித்து விடுமோ என்ற அச்சத்துடன் காலத்தை ஓட்டும் அது போல் பகவானும் மக்களுக்கு துன்பம் நேராமல் மக்களை பற்றியே சதா சர்வகாலமும் நினைத்து க்கொண்டிருப்பார் இந்த இரண்டு அவதாரங்களின் குணங்கள் தலைவர் திரு எம் .ஜி. இராமச்சந்திரன் அவர்களுக்கு அமைந்தது தெய்வ கடாட்சம் என்று சொன்னால் மிகையாகாது.......... Thanks.........
-
Well said! We are lucky enough for living in his period and He stays with us! We thank the God!...... Thanks...
-
நண்பர் முத்துசாமி சொன்னது போலவே அவரின் கடைசி காலங்களில் ஒரு நல்ல தாயே போன்றே மனிதாபிமான முறையில் வாழ்வாங்கு வாழ்ந்து வந்தார் என்பது தான் உண்மை அவர் நல்லவர் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிலைத்து வாழ் கிரார் அவர் தான்..... Thanks...
..
-
தாய் மனம் உலகில் போற்றுதற்குரியது மக்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் திகழும் அம்மையப்பன் கலியுகத்தில் தன் பணியைத் தொடர அவரால் படைக்கப்பட்டவர் தான் தாயுள்ளம் கொண்ட பொன்மனச்செம்மல்.... Thanks...
-
தினமும்..திரு.எம்.ஜி.ஆர்..
திரை காவியங்களை சின்னதிரையில் ஒளிபரப்பி
தமிழ் மக்கள் அனைவரையும்
இந்த ஊரடங்கும் காலத்தில் வெளியே வராமல்..தடுத்து மன.
நிம்மதியை கொடுத்த..
அனைத்து சின்னதிரை
சேனல்களுக்கு.நன்றி.நன்றி.. நன்றி...... Thanks...
-
#எதிரிகள்னா #யாரு???
எஸ் எஸ் சிவசங்கர் என்ற திமுக பிரமுகரின் எம்ஜிஆர் பற்றிய நினைவலைகள்...
ஆட்டோவில் போகும் போது பார்த்தேன், சாலை ஓரத்தில் ஒரு நாற்காலி. நாற்காலி மேல் மக்கள் திலகம் எம்ஜிஆர் படம். மாலை போடப்பட்டிருந்தது. நாற்காலி அருகே பிளாட்ஃபார்ம் மீது ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். கண்களில் லேசான கலக்கம். “விழியே கதை எழுது” கனவுப் பாடலாகக் கூட இருக்கலாம்...
1984 ஆம் ஆண்டு. கிராமங்கள் தோறும், எம்ஜிஆர் படம் வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். சுற்றி தாய்மார்கள் சோகமாக அமர்ந்திருப்பார்கள். ஸ்பீக்கரில் “இறைவா, உன் கோவிலிலே எத்தனையோ மணி விளக்கு” பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.
எம்ஜிஆர் அப்போது அமெரிக்காவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலும் வந்தது.
பரவலாக திமுக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள்.
1980 தேர்தலில், 600 வாக்கு வித்தியாசத்தில் எனது தந்தையார் தோல்வி அடைந்திருந்ததால், இந்த முறை வெற்றி உறுதி என நினைத்திருந்த நேரத்தில் தோல்வி.
இப்படி எம்ஜிஆரோடு அரசியல் பகை இருந்தாலும், கொள்கை மாறுபாடு இருந்தாலும், எம்ஜிஆர் படங்களை விரும்பி ரசித்தவன் தான். ஆனால் பள்ளியில் நண்பர்களோடு விவாதிக்கும் போது எம்ஜிஆரை தீவிரமாக விமர்சித்தவன்.
1987... அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் நான். மூன்றாவது செமஸ்டர் முடிந்து விடுமுறை. நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து, ஹாஸ்டலுக்கு வந்து விட்டோம் நண்பர்களுடன்... திடீரென ஊரே மயான அமைதி. எம்ஜிஆர் மறைவுச் செய்தி.
நாடே ஸ்தம்பித்த்து. எங்கும் பயணிக்க முடியாத நிலை. உணவுப் பிரச்சினை. ரேடியோவை வைத்தால், டொய்ங், டொய்ங், சோக இசை. ஹாஸ்டலின் டீவி ரூமில் இருக்கும், டீவியை பார்த்து மரண நிகழ்வுகளை தெரிந்து கொண்டோம். கலைஞரின் இரங்கல் செய்தி வந்தது.
நினைவுகளிலிருந்து மீண்டேன்...
அந்தப் பாட்டியை பார்த்தவுடன், இப்படியான எம்.ஜி.ஆர் குறித்த நினைவுகள்...
என்னோடு பயணித்த ஏழு வயது மகன் கேட்டார்,”அப்பா எம்ஜிஆர் படம் தானே ?” தொப்பி, கண்ணாடி இல்லாத ராஜா காலத்து உடையில் எம்ஜிஆர் படம்.
“எப்படி தெரியும்பா?”...இது நான்
“என்னாப்பா எம்ஜிஆர எனக்குத் தெரியாதா?”
என்று அசால்ட்டா கூறிய என் மகனை வியப்புடன் பார்த்தேன்........ Thanks.........
-
தலைவரே பாடி இருக்கிறார்! தாய்வழி வந்த தங்கங்கள் யாவரும் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! எனவே தாய்வழி உறவை அழிக்கமுடியாது! தாய்வழி உறவு இருக்கும் வரை நாளை இருக்கும் வரை நம் தலைவர் இருப்பார்! புகழ் மிளிரும்!..... Thanks...
-
எங்க வீட்டில் என்தாய் என்னுடைய 7ம் வயதில் தலைவரை போட்டோவில் காட்டி எங்களிடம் சொன்னார்"இவருதான் எம்.ஜி.ஆர்.மக்களுக்கு நிறைய நல்லது செய்கிறார்"என்று.நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னோம்"இவர்தான் நம்ம எம்.ஜி.ஆர் தாத்தா.அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சொல்கிறார்கள்"எம்.ஜி.ஆர் தாத்தா.அவர் நம் குடும்ப உறவு........ Thanks...