Article in MaalaimalarAttachment 2276
Printable View
Article in MaalaimalarAttachment 2276
Dear Ramajayam Sir,
I hope your Devathai may be seeing VM now and she also will be having the same feeling.
Yesterday sorry for disturbing you when you were watching the movie.
Where you watched VM?
How was the response?Due to personal reasons i could not come to Chennai to see the Movie.
Regards,
Shivaji Mohan - Bangalore
வங்கக் கடலலை தாலாட்டும் கடலூரில் வசந்த மாளிகை திருவிழா
வங்கக் கடலலை தாலாட்டும் கடலூரில் வசந்த மாளிகை திருவிழா
கடலூர் நியூசினிமா நேற்று திருவிழாக் கோலம் பூண்டது அரங்கு பேனர்களால் நிரம்பி வழிந்தது. எங்கு திரும்பினும் தலைவர் முகம்தான். சாலையில் வருவோர், போவோர், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் நியூசினிமா திரையரங்கை சில நிமிடங்கள் நின்று பார்த்து ரசித்தபடியே சென்றார்கள். நேற்று காலைக்காட்சி 300 பேர்களுக்கு மேல் கண்டு ரசித்தனர்.(காலைக் காட்சிக்கு புத்தம் புது படங்களுக்குக் கூட கடலூரில் 100 பேருக்கு மேல் இருக்கமாட்டார்கள்) இரண்டு காட்சிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. காலை 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளது. மற்ற இரண்டு காட்சிகளுக்கு 'பதவி' என்ற ஏதோ ஒரு படத்தைப் போட்டிருந்தார்கள். (மேட்னி 'பதவி' படத்திற்கு மொத்தம் பதினைந்தே பேர்கள்தான் வந்திருந்தார்கள்).மாலைக் காட்சிக்கு நான் சென்றிருந்தேன். ரசிகர்கள் தலைவர் பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்து ஆரவாரக் கூச்சலிட்டனர். மாலைகள் அணிவித்து மகிழ்ந்தனர். வாண வேடிக்கை நடத்தி விண்ணை அதிர வைத்தார்கள் ரசிகர்கள். கற்பூர ஆராதனையை நம் கடவுளுக்குக் காட்டி களிப்படைந்தனர். 'சிவாஜி புகழ் வாழ்க' என்ற கோஷம் விண்ணை எட்டியது.
சரியான விளம்பரமே இல்லை. கடலூரில் எங்குமே போஸ்டர்கள் ஒட்டப்படவில்லை. தியேட்டரிலேயே ஒரு போஸ்டர் கூட மருந்துக்கும் இல்லை. எல்லாமே நம் ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்தான். அப்படியிருந்தும் மாலைக்காட்சி நன்றாகவே போனது. பலருக்கும் படம் வந்தது தெரியவே இல்லை. இன்றுதான் சூடுபிடிக்கும் என்று ரசிகர்கள் கூறினார்கள்.
இப்போது கடலூர் திருவிழாக் காட்சிகளின் புகைப்படங்கள்.
http://i1087.photobucket.com/albums/...2/DSC00194.jpg
http://i1087.photobucket.com/albums/...2/DSC00196.jpg
மாலைகள் மற்றும் தேங்காய்களுடன் ரசிகர்கள் மாலை 4 மணிக்கெல்லாம் ரெடி
http://i1087.photobucket.com/albums/...2/DSC00205.jpg
மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவரின் ஆர்வம்
http://i1087.photobucket.com/albums/...2/DSC00207.jpg
http://i1087.photobucket.com/albums/...2/DSC00209.jpg