ஜோ,
நன்றி. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.படத்திற்காக முதலில் எழுதப்பட்ட திரைக்கதையில் திலகன் தோன்றிய அந்தக் காட்சி இடம் பெறவில்லை. திலகன் வி.பி.கே.மேனன் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தனிடம் நான் இந்த படத்தில் நடிப்பேன்.எனக்கு ஒரு காட்சியாவது வைக்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டு வாங்கி நடித்தார். அவருக்காகவே நடிகர் திலகம் நடித்த contractor-ஐ மிரட்டி ஊரை விட்டு போக சொல்லும் அந்த காட்சியை உருவாக்கி ஆனால் நடிகர் திலகத்தை பார்த்தவுடன் அவர் சிறு வயதில் தனக்கு உதவிய அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து நடிகர் திலகத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு பழைய உதவிக்கு நன்றி சொல்லும் காட்சியாக அது உருப்பெற்றது. இதன் மூலம் தன வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டதாக திலகன் பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.அவர் மட்டுமல்ல, அந்த படத்தில் பங்கு கொண்ட நெடுமுடி வேணு, சோமன், ஜகதீஷ், மணியம்பிள்ளை ராஜு போன்றவர்களும் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த அந்த வாய்ப்பை தங்களின் வாழ்நாளில் கிடைதற்கரிய பேறாக கருதினார்கள்.
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான திக்குரிசி,சத்யன், நசீர், மது, சோமன், மோகன்லால்,வேணு, திலகன் என்று அனைவரோடும் இனைந்து நடித்த நடிகர் திலகத்தை மிஸ் செய்தவர் மம்மூட்டி மட்டுமே. இந்த இணையும் இரண்டு முறை ஒன்று சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தும் தவறி போனது. ஒரு முறை கோவை செழியன் தயாரிப்பில் ஜோஷி இயக்கத்தில் தந்தையாகவும் மகனாகவும் நடிக்க இருந்தார்கள். மற்றொரு முறை சுஹாசினி இயக்கத்தில் நடிகர் திலகமும் மம்மூட்டியும் இணையும் படம் ஒன்று [தமிழன் என்று பெயர் சூடியதாக் நினைவு]. இரண்டுமே நடிகர் திலகத்தின் உடல் நிலையால் அறிவிப்போடு நின்று போனது. இதை தவிர மலையாள சினிமாவின் magnum opus என்று சொல்லகூடிய மகாபாரதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு இதிகாச காவியத்தை மலையாள இலக்கிய சிற்பி எம்.டி அவர்களும் [M.T.வாசுதேவன் நாயர்] இயக்குனர் ஹரிஹரன் அவர்களும் உருவாக்கும் முயற்சியின் ஆரம்ப கட்ட ஆலோசனைகள் நடைபெற்றன. [இந்த கதாசிரியர் -இயக்குனர் கூட்டணிதான் மலையாள சினிமாவின் மறக்க முடியாத காவியங்களான ஒரு வடக்கன் வீர காத மற்றும் பழசி ராஜா போன்ற படங்களை தந்தவர்கள்]. இந்த இதிகாச படத்தில் நடிகர் திலகம் பீஷ்மாச்சாரியாராக வேடம் புனைய இருப்பதாகவும், அதே படத்தில் மம்மூட்டி மோகன்லால் போன்றவர்களும் நடிக்க இருப்பதாகவும் பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. ஆனால் மலையாள சினிமாவால் தாங்க முடியாத பட்ஜெட் என்பதால் அந்த project தொடர முடியாமல் பொய் விட்டது.
நடிகர் திலகமும் மம்மூட்டியும் இணைய முடியாமல் போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப் பெரிய வருத்தம்.
அன்புடன்