evergreen boxoffice emperor now ruled the gulf country
Printable View
மே தினம் - புரட்சித்தலைவர் தினம்
http://i60.tinypic.com/6fcsg7.jpg
'உழைப்பவரே உயர்ந்தவர்' என்னும் உயர்ந்த கொள்கையுடைய நம் கோமான், தான் தோன்றிய திரைப்படங்கள் அனைத்திலும் உழைப்பின் உயர்வையும், உழைப்பாளிகளின் வியர்வையின் மதிப்பையும் தெளிவாக எடுத்துகூறி, உழைப்பின் மகத்துவத்தை உலகே அறியும்படி செய்தார். பாட்டளிகளின் தோழனாக திரையில் தோன்றியதுமட்டுமல்லாது, தான் தமிழகத்தின் முதலமைச்சர் ஆன பின்பு, அனைத்தையும் செய்தும் காட்டினார். உலகிலேயே நிழலில் சொன்னதை நிஜத்தில் செய்து காட்டிய ஒரே தலைவர் புரட்சித்தலைவர்தான். எனவே மே தினம் - புரட்சித்தலைவர் தினம் என்பதில் என்ன மாற்று கருத்து இருக்க முடியும். புரட்சிதலைவர் தொழிலாளர்களுக்கு செய்த சாதனைகளில் சில துளிகள் கீழே:
1. கட்டிட தொழிலாளர், கிராமக் கை வினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர், போன்றவர்களுக்கு
ஆயுள் காப்புறுதியும், பணி ஒய்வு பலன்கள் கிட்ட வழி செய்யும் திட்டம் துவக்கினார்.
2. மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும், சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.
3. தொழிளார்களுக்கு (நெசவாளர், தீப்பெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலாளர் உட்பட), விபத்து நிவாரண திட்டத்தை அமல்
படுத்தி பின்னர் அதனை விரிவு படுத்தினார்.
4. நாட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்த விவசாயிகளு க்கு, வானம் பொய்த்த போது, வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையை பெரும் அளவில்
(ரூபாய் 325 கோடி) தள்ளுபடி செய்தார். இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்தது. பாசனத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த 3.31 லட்சம் பம்பு
செட்டுகளுக்கு புதிதாக மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார். 10.5 லட்சம் சிறு விவசாயிகள் இதனால் பயன் பெற்றனர்.
5. பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் முறையை அமல் படுத்தினார்.
6. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்திட்டார்.
7. தொழிலாளர் நல அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாளர் நல வாரியம் மூலம், தொழிலாளர்கள் குறைகள் அவ்வப்போது
களையப்பட்டு, தொழிற்சாலைகளில், தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து, கிளர்ச்சி, போராட்டங்கள், வேலை
நிறுத்தமின்றி, உற்பத்தி திறன் பாதிக்கப்படா வண்ணம், கவனமுடன் செயலாற்றினார்.
8. 1977ம் ஆண்டு முதல் 1983 வரை, பொன்மனச் செம்மலின் பொற்கால ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் எண்ணிக்கை 449 ஆகும். இவற்றின் மொத்த
மூலதனம் அந்த கால கட்டத்தில் 850 கோடியாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு
பெற்றனர்.
9. 20,000 இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டார் உன்னதமான நம் உத்தமத் தலைவர்.
10. 1979ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5.2 சதவிகிதம். இது 1982,ம் ஆண்டில் 12.1 சதவிகிதமாய் உயர்ந்தது. இது நம்
தலைவரின் மகத்தான சாதனை.
சாதனைகளைப் பட்டியலிட்ட பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
OLIVILLAKU RUNNING SUCESSFULLY SECONDWEEK IN NELLAI CENTRAL
LINK GIVEN BELOW
http://entertainment.oneindia.in/mov...Vilakku+8.html
2011- NATARAJ - ADIMAI PEN - BANGALORE
http://i59.tinypic.com/vo6ihh.jpg
கல்கியின் அமர காவியமான ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைத் தயாரித்து , தானே நடிக்கவும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். பெரும் விருப்பம் கொண்டிருந்தார். கமல் ஹாசனுக்கும் அதே ஆசை. இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக இயக்கும் ஆரம்பக் கட்டப் பணிகளில் இறங்கி, பிறகு அதன் பிரமாண்டம் கருதி கைவிட்டார். ஆனால், …
இப்போது மேஜிக் லாண்டர்ன் எனும் குழு , மூன்றே கால் மணி நேர
நாடகமாக , பொன்னியின் செல்வன் மேடை நாடகத்தை சென்னையில் அரங்கேற்ற உள்ளார்களாம் .
## பொன்னியின் செல்வனுக்குப் பெருமை யாரும் சேர்க்க வேண்டாம் , மேடை நாடகம் என்ற பெயரில் ஒரு காவியத்தின் பெருமையை சீரழித்து விடாதீர்கள் !