Dear friends,
Those who would like to watch Vietnam Veedu by YGM on 7th March 2009 (inaugural play), can avail concessional rates on the tickets through our website, www.nadigarthilagam.com. Pls refer the site for more info.
Raghavendran.
Printable View
Dear friends,
Those who would like to watch Vietnam Veedu by YGM on 7th March 2009 (inaugural play), can avail concessional rates on the tickets through our website, www.nadigarthilagam.com. Pls refer the site for more info.
Raghavendran.
வாரம் ஒரு படம் பகுதியில் நம்முடைய இணையதளத்தில் (www.nadigarthilagam.com), தற்பொழுது யோகசித்ராவின் இளைய தலைமுறை படம் இடம் பெற்றுள்ளது.
ராகவேந்திரன்
விகடன் சினிமா விமர்சனம்: அன்னையின் ஆணை
சந்தர் - சேகர்
சந்தர்: ஹலோ சேகர், எங்கே இப்படி?
சேகர்: மார்லன் பிராண்டோ படம் ஒண்ணு ஓடுகிறதே, அதைப் பார்க்கப் போயிருந்தேன்!
சந்தர்: என்ன மிஸ்டர் அளக்கறே? எனக்குத் தெரிந்து அப்படி ஒரு படம் எங்கேயுமே ஓடலியே?
சேகர்: தமிழ்நாட்டு மார்லன் பிராண்டோ சிவாஜிகணேசன் நடித்த படம்!
சந்தர்: ஓ... சிவாஜியா? ஏன் அந்த மார்லன் பிராண்டோ தான் ஆங்கில நாட்டின் சிவாஜிகணேசனாக இருக் கட்டுமே! நீயா அவருக்குப் பட்டங்களெல்லாம் கொடுக்காதே!
சேகர்: நான் கொடுக்கலே. படத்திலேயே கொடுத்திருக்காங்க! 'சாம்ராட் அசோகன்' நாடகம் ஆன பிறகு, கணேசனை இப்படிப் புகழ்ந்து பாராட்டுகிறார் கருணாகரர்.
சந்தர்: சரி, ஸ்டோரி என்ன?
சேகர்: கொஞ்சம் புதுமை! பிளாஷ்பாக் கதையும் நேர்முறைக் கதையையும் மாற்றி மாற்றிக் காட்டுகிறார்கள்.
சந்தர்: 'அவுட்லைன்' சொல்லேன்?
சேகர்: பலரை வஞ்சித்து வாழுகிறார், பணக் கார பரோபகாரம். மானேஜர் சங்கர் இல்லாத சமயம் அவர் மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயல்கிறார். விஷயம் அறிந்த சங்கர், சண்டைக்குப் போகிறான். ஆனால், தந்திர மாக அவன் மீதே கொலைக் குற்றம் சாட்டி விடுகிறார் பரோபகாரம். சங்கர் சிறைப்படுகிறான்.பிரசவ வேதனையில் இருக்கும் தன் மனைவியை நினைத்துக்கொண்டு, ஒரு நாள் சிறையிலிருந்து தப்பித்துவிடுகிறான். ஆனால், போலீசாரால் சுடப் பட்டு இறந்துவிடுகிறான். அந்த இடத்தில் கணேசனின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது!
சந்தர்: என்னது... வந்த உடனேயே இறந்துவிடுகிற வேஷமா அவருக்கு?
சேகர்: முழுக்கக் கேளேன்... இறந்தது தந்தை கணேஷ்! பிறகுதான் மைந்தன் கணேஷ் வருகிறார்.
சந்தர்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? டபிள் ரோலா?
சேகர்: டபிள் மட்டும் இல்லை இன்னும் அநேக ரோல்கள்! கல்லூரி மாணவனாக கலாட்டா செய்யும் போதும், சாம்ராட் அசோ கனாக நடிக்கும்போதும், பரோபகாரத்தைப் பழி வாங்கும்போதும் அவருடைய நடிப்பில் எவ்வளவு முகபாவங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், உள்ளப் போராட்டங்கள்! அநேக இடங்களில் இங்கிலீஷிலேயே வெளுத்துவாங்குகிறார். லவர்ஸ் அறிமுகமே பிரமாதம்! 'பூப்பறிக்கக் கூடாது என்ற போர்டு கண்ணுக்குத் தெரியவில்லையா?' என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்கிற தோரணையே ஜோர்! அப்புறம் 'வெரி மிஸ்ச்சிவஸ் கேர்ள்'னு அலட்சியமாக...
சந்தர்: வில்லன் யார்?
சேகர்: பரோபகாரம் ரங்காராவ்தான் வில்லன். நம்பியார் அவருக்கு மேலே பெரிய வில்லன். எம்.என். ராஜத்தை மயக்கி, கடைசியில் வேறு வழியில்லாமல் மணந்துகொண்டு, பரோபகாரத்திற்கும் அவர் மகள் சாவித்திரிக்கும் தீங்கு செய்கிறார். இந்தப் படத்தில் எல்லோர் நடிப்புமே அற்புதம். ஆனால், அன்னையின் ஆணையை நிறைவேற்ற பரோபகாரத்தைப் பழிவாங்கும் படலம்தான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இருந்தாலும் நாராயண மூர்த்தியின் டைரக்ஷனும், மாறனின் வசனங்களும் பிரமாதம். எல்லாவற்றையும்விட சிவாஜி நடிப்புதான்...
சந்தர்: சிகரமா..?
சேகர்: சாதாரண சிகரமல்ல; எவரெஸ்ட்!
(நன்றி: விகடன்.காம்)
This thread seems to be deserted. What happened? On the personal side, my PC was/is down and no access at office. Would be back soon and hope to see more activity by then.
Regards
அவர் பெரியவர்
சமீபத்தில் வீனஸ் பிக்சர்ஸ் "கல்யாண பரிசு" வெள்ளி விழா விஜயா கார்டனில் கொண்டாடப்பட்டது. நாகய்யாவை குணச்சித்திர நடிகர் என்று ஸ்ரீதர் குறிப்பிட்டார், நாகய்யா பேசுகையில் " நான் குணச்சித்திர நடிகன் என்று இளைஞர் ஸ்ரீதர் குறிப்பிட்டார். இருக்கலாம். அனால் அது பத்து ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது உங்கள் முன் ஒரு குணச்சித்திர நடிகர் இருக்கிறார். அவர் எந்த பாத்திரத்திலும் அற்புதமாக நடிக்கும் தகுதி உள்ளவர். அவர் தான் இந்தியாவின் பெருமையை உயர்த்தக்கூடிய ஒப்பற்ற கலைஞர்" என்று கூறிவிட்டு "இதோ இருக்கும் சிவாஜி கணேசனைத்தான் குறிப்பிடுகிறேன்" என்றார். சபையிலே கரகோஷம் வானைப் பிளந்தது. நாகய்யா அனுபவமும் வயதும் முதிர்ந்த உயர்ந்த நடிகர். அவர் சிவாஜி கணேசன் தன்னை விட உயர்ந்தவர் என்று கூறி மேலும் உயர்வு பெற்று விட்டார். அவர் பண்பு பாராட்டத்தக்கது.
சுஜாதா
சென்னை
பேசும் படம் - நவம்பர் - 1959
[நன்றி பாலகிருஷ்ணன்]
அன்புடன்
சிவந்த மண் வெற்றியை பற்றி இங்கே ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டோம். அண்மையில் சித்ராலயா கோபுவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவல். சிவந்த மண் எங்களுக்கு மிகப் பெரிய வெற்றிப் படம். நாங்கள் செலவழித்ததை விட கூடுதலாக எங்களுக்கு லாபம் கிடைத்த படம். அதன் இந்தி பதிப்பு "தர்த்தி" தான் எங்களுக்கு கஷ்டத்தை கொடுத்தது. அது கூட வட இந்திய விநியோகஸ்தர்கள் எங்களை ஏமாற்றி விட்டனர். ஸ்ரீதர் அவர்களை பெரிதும் நம்பினார். ஆனால் உண்மையான வசூலை எங்களுக்கு சொல்லாமல் நஷ்டக் கணக்கு காண்பித்து விட்டார்கள் என்று சொன்னார்.
இதற்கும் மேல் ஸ்ரீதரே சொன்ன பதில்.
உங்களுக்கு சிவந்த மண் வெற்றிப் படம் இல்லை என்று சிலர் சொல்லுகிறார்களே?
(என்.என்.சுந்தர், திருவனந்தபுரம்)
அவர்கள் - இதையே வருமான வரித் துறை அதிகாரிகளிடம் போய் சொன்னால் - எனக்கு பெரிய உதவியாக இருக்கும்.
சித்ராலயா - 10.07.1970
அன்புடன்
ஜோ, நீங்கள் கொடுத்துள்ள வலைப்பூ இணைப்பில் ஆண்டவன் கட்டளை படத்திற்கு இவ்வளவு ரசிகர்களா என்று அவர் கேட்டிருக்கிறார். அந்த படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று அவரிடம் சொல்லுங்கள்.
"ஜோ, நீங்கள் கொடுத்துள்ள வலைப்பூ இணைப்பில் ஆண்டவன் கட்டளை படத்திற்கு இவ்வளவு ரசிகர்களா என்று அவர் கேட்டிருக்கிறார். அந்த படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று அவரிடம் "
Adhaane...
Dear friends,
Another new feature, rare information and images, added in our website, www.nadigarthilagam.com.
On 16th May 2009, Veerapandiya Kattabomman completes 50 years of its release. A function is being contemplated.
Await for more details.
Raghavendran.