நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்
புதிய தொடர்
http://www.kryingsky.com/Stan/Biogra.../StanEarly.gif
நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர், நடிகர் திலகம் என்றெல்லாம் நாம் புகழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் இலக்கணம் உள்ளதா, அப்படி என்றால் அதில் உள்ள இலக்கணம் என்ன, அவருடைய நடிப்பு எந்த வகையை சேர்ந்தது, அல்லது எந்த விதத்தை சார்ந்தது, இப்படி பல்வேறு விவாதங்கள் கருத்துப் பரிமாற்றங்கள், எதிர்காலத்தில் வரக் கூடும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல் அவருடைய நடிப்பை மிகை என்று வர்ணிக்கும் நண்பர்களுக்கும், அவர்களுக்குத் துணை போகக் கூடிய நமது ரசிக நண்பர்களுக்கும் இந்தத் தொடர் தெளிவைத் தரும் என்று நான் நம்புகிறேன். இந்தத் தொடரை மிக விரைவில் தொடங்க நினைத்துள்ளேன். நடிப்பைப் பற்றியும் அதன் கோட்பாடுகளைப் பற்றியும் உலக அளவில் இலக்கணம் போல் விளங்குவது ஸ்டானிலாவ்ஸ்கி எழுதியுள்ள நூலாகும். இவருடைய காலம் 1863-1938. திரைப் படம் என்பது அறிவியல் ரீதியாக உலக அளவில் மக்களை சென்றடையத் தொடங்கிய கால கட்டத்தில் தான் இவருடைய வாழ்க்கை காலமாகும். இவருடைய நாடு ருஷ்யா. இவர் மறைந்த போது நடிகர் திலகம் 10 வயது குழந்தை. கல்வி யறிவில் நாட்டமின்றி நாடகத் துறைக்கு சென்று தன் வாழ்க்கையத் தொடங்கிய காலம் என்று கொள்ளலாம். கிட்டத் தட்ட படிக்காத மேதையாக விளங்கிய நடிகர் திலகம், நிச்சயமாக ஸ்டானிலாவ்ஸ்கி கோட்பாடுகளைப் படித்து தன் நடிப்பை அமைத்தவர் இல்லை என்பது தெளிவாகிறது. அப்படிப் பட்ட நடிகர் திலகத்தின் நடிப்பில் ஸ்டானிலாவ்ஸ்கியின் பல கோட்பாடுகள் விளக்கமாகவும் உதாரணமாகவும் அமைந்துள்ளன என்பது வியப்புக்குரிய செய்தியாகும். அந்த கோட்பாடுகளையும் நடிகர் திலகத்தின் நடிப்பையும் ஒரு சேர ஆய்ந்து எழுதுவதே இத்தொடரின் நோக்கம். எங்கெங்கு சாத்தியமோ அங்கங்கு காட்சிகளும் துணைக்கு இணைக்கப் படலாம்.
இத்தொடருக்கு தங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்