Dear Sir,
Thanks is not required. I wrote it with Genuine Intention but it misrepresented the content. This is Kaliyuga. So obviously, there is no value for Genuinity.
Printable View
Subbu,
How to protest? Give Mail ID or Hand Cell No of Randor Guy Ranga Durai to do the same.
நண்பர் சுப்பு அவர்கள் சொன்னதை முழுக்க ஒப்புக்கொள்கிறேன். இந்த ராண்டார் கய் என்பவரைப்பற்றி பலமுறை நான் இங்கே எச்சரித்திருக்கிறேன். நடிகர்திலகத்தின் படங்களை மட்டம் தடடுவதையே வேலையாகக் கொண்டு அலைபவர். (எவனெவனோ முட்டி மோதிப் பார்த்து மூக்குடைபட்டுப் போய்விட்டான்கள். இந்த ராண்டார் எம்மாத்திரம்).
இருப்பினும் நமது ரசிகர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக, நடிகர்திலகத்தின் படங்களை பற்றி அவர் என்ன எழுதிக் கிழித்திருக்கிறார் என்பதைக்கூட சரியாகப் படிக்காமல் படத்தின் பெயரை மட்டும் பார்த்து விட்டு அதை அப்படியே இங்கே மறுபதிவு செய்வதை நிறுத்த வேண்டும். அத்துடன் அப்படிப்பட்ட குப்பைகளுக்கு 'லிங்க்' தருதையும் நிறுத்த வேண்டும்.
ஒருமுறை பொதிகை தொலைக்காட்சியில் இந்த ராண்டாரின் பேட்டியைப் பார்த்திருக்கிறேன். நடிகர்திலகத்தை கொண்டு பிழைப்பை நடத்திவிட்டு அவர் பெயரையே உச்சரிக்க மறுக்கும் ஏ.வி.எம்.சரவணன், எம்.எஸ்.விஸ்வநாதன், வாலி இவர்களைப் போலவே இந்த ஆள் வாயிலிருந்தும் அந்த மூன்றெழுத்து பெயரே வந்ததே தவிர, நடிகர்திலகம் உள்பட வேறு யாரைப்பற்றியும் பேசவில்லை. அப்போதே தெரிந்தது இவர் எப்படிப்பட்ட ஆள் என்பது.
எனவே இவரை எல்லாம் ஒரு விமர்சகராக அல்ல, மனிதனாகக் கூட மதித்து அவருடைய கிறுக்கல்களை இங்கே மீள்பதிவு செய்யவேண்டாம் என நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்....
அன்புள்ள ராகுல்ராம் சார்,
புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் இப்படி ஒரேநேரத்தில் பல தியேட்டர்களில் மெகா ரிலீஸாகப் பார்த்து மகிழ விரும்புவது பிரம்மாண்டப் படங்களையே தவிர குடும்பப்படங்களை அல்ல. இதை கர்ணன் நமக்குத் தெளிவாக உணர்த்திவிட்டது.
அந்தப் பிரமாண்டங்களிலும் அடிக்கடி மக்கள் கண்களில் பட்டிராத பிரம்மாண்டம்தான் வேண்டும் என்று மக்கள் சொன்னதை திருவிளையாடலும் வெளிப்படுத்தி விட்டது. (வெளியீட்டில் குளறுபடி முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை).
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களோடு மக்களின் எதிர்பார்ப்புக்களும் சேர்ந்தால் மட்டுமே மீண்டும் ஒரு கர்ணன் வெற்றியை ஈட்ட முடியும் என்பதை வசந்தமாளிகையும் காட்டிவிட்டது.
அந்தவகையில் மக்களிடம் சர்வே எடுத்த தங்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்கது, நடிகர்திலகத்தின் முதல் பிரம்மாண்ட வண்ணப்படமான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்பதில் சந்தேகமேயில்லை.
'பாசமலர்' பேர்வாங்கிய படம் என்பதால் தப்பிப்பிழைத்து விட்டது என்று நினைக்கிறேன். இதைநம்பி மீண்டும் பார்மகளே பார், படித்தால் மட்டும் போதுமா, இருவர் உள்ளம் என்று இறங்கினால் நிச்சயம் ஏமாந்து போவார்கள். இப்போது கூட முதல்வாரத்திலேயே 'புல் ஆகாவிட்டாலும் நல்ல கூட்டம் இருந்தது' போன்ற கமெண்ட்கள்தான் வந்துள்ளன. அதிலும் ஞாயிறு வரை அது ரசிகர்கள் தினம். திங்கள் முதல்தான் குடும்ப வாரம் துவங்கும். அதன்பிறகு தாக்குப்பிடித்து நிற்பதுதான் உண்மையான வெற்றி. 'பாசமலர்' அதைச்சாதிக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். (ஆனால் சென்னையில் அத்தனை அரங்குகளில் வெளியான படம் இரண்டாவது வாரத்தில், சாந்தியில் மட்டும், அதுவும் இரண்டு காட்சிகள் என்ற விளம்பரம், இன்னொரு கர்ணன் கனவைத் தகர்த்து விட்டது).
ஆனால் அதுதான் சாக்கு என்று 'நவராத்திரி'யை டிஜிட்டல் செய்கிறேன் என்று கிளம்பிவிடக்கூடாது. அவையெல்லாம் நல்லதாக நாலு பிரிண்ட்கள் (35 எம்.எம்.மில்) வைத்துக்கொண்டு ஒவ்வொரு தியேட்டராக மாற்றி, மாற்றிப்போட்டு, நல்லவசூல் பார்த்து, 'இணைந்த இத்தனையாவது வாரம்' என்று போஸ்ட்டர் ஒட்டவேண்டிய படமே தவிர ஒரே நேரத்தில் 60 தியேட்டர்களில் டிஜிட்டல், சினிமாஸ்கோப்பில் வெளியிட வேண்டிய படமல்ல.
வீரபாண்டிய கட்டபொம்மனை டிஜிட்டல், சினிமாஸ்கோப், ரீஸ்டோரேஷன் செய்து வெளியிட விரும்புவோர் முதலில் வாங்கவேண்டியது நெகடிவ் உரிமையோ அல்லது வினியோக உரிமையோ அல்ல. புத்தபுதிய கூரான கத்திரி, ஒரு தீப்பெட்டி இவைதான். கத்திரி, மூன்றரை மணிநேர படத்தை இரண்டேகால் மணிநேர படமாக குறைக்க. தீப்பெட்டி, வெட்டியவற்றை தீவைத்துக்கொளுத்த. (இருந்தால் திரும்பவும் சேர்த்துவிடுவார்கள்).. அதற்காக பந்துலுவையும் நாம் குற்றம் சொல்லபோவதில்லை. மூன்றரை மணிநேரத்துக்கு ஐந்து நிமிடம் குறைவாக ஓடினாலும் அதுபடமல்ல என்று முடிவு செய்யும் ரசிகர்களைக் கொண்டிருந்த காலத்தில் அவர் இந்தப்படத்தை எடுத்தார். ஆனால் இப்போதுள்ள இளைஞர்கள் எந்தப்படத்தையும் இரண்டேகால் மணிநேரத்துக்குமேல் பார்க்கதயாராயில்லை.
பத்மினிக்கு 'இன்பம் பொங்கும் வெண்ணிலா' ஒன்று போதும், 'அஞ்சாத சிங்கம் என் காளை'யை தூக்க வேண்டும். படத்தின் நீளத்தைக்கூட்ட கருணாநிதி, முத்துலட்சுமி, குலதெய்வம் ராஜகோபாலுக்கெல்லாம் டூயட், அதுவும் வெள்ளையனை விரட்ட வீரப்போர் புரிந்தவன் வரலாற்றுப் படத்தில். கருமம்டா சாமி. 'ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி' பாடலை கண்மண் தெரியாமல் வெட்டி வீச வேண்டும். வெள்ளையத்தேவன் காளை மாட்டை அடக்கியதும் பத்மினி விடும் லுக் போதும். அப்புறம் பத்மினி மாறுவேடத்தில் வைத்தியராக வரும் பூரா காட்சியையும் வெட்டி உடனே கொளுத்த வேண்டும். வரலட்சுமி, பத்மினி, ராகினி புதிர் போட்டுப்பாடும் 'டக்கு டக்கு' பாடலை கொஞ்சமும் யோசிக்காமல் டக் டக் கென்று வெட்டியெறிய வேண்டும்.
பிரிட்டிஷ்காரர்கள், கட்டபொம்மன், வெள்ளையத்தேவன், ஊமைத்துரை, தானாபதிப்பிள்ளை, எட்டப்பன், ஜாக்சன், பானர்மேன், டேவிட்சன் இடம்பெறும் காட்சிகளனைத்தும் அப்படியே இடம்பெற வேண்டும். தர்பார் காட்சிகள், போர்க்களக்காட்சிகள் கொஞ்சமும் குறையாமல் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்புறம் பாருங்கள் படத்தின் தரத்தையும் விறுவிறுப்பையும்.
கட்டபொம்மனை மேலும் மேலும் வலியுறுத்தக் காரணம், இன்றைய தலைமுறையினர் அதிகம்பேர் பார்த்திராதது, அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படாதது, கூடவே பிரம்மாண்டம் மற்றும் கண்ணைக் கவரும் வண்ணப்படம். எனவே பிரம்மாண்ட மறு வெளியீட்டுக்கு இப்போதைக்கு நம் கண்ணில் தெரிவது 'வீரபாண்டிய கட்டபொம்மன்' மட்டுமே.
'அதெல்லாம் முடியாது, நான் 'பார் மகளே பார்' படத்தை டிஜிட்டல், சினிமாஸ்கோப் செய்து 80 அரங்குகளில் ஒருசேர திரையிடுவேன்' என்று கிளம்பினால் தடுப்பதற்கு நாம் யார்?....
கார்த்திக் சார்,
randor Guy பற்றி நீங்கள் சொன்னதை அப்படியே ஏற்கிறேன். இவன் ஒரு அற்ப பயல். நம் போன்றவர்களெல்லாம் பிழைப்பு தேடி போய் விட்டதால் இவன் போன்ற ....... விமர்சகன் போர்வையில் பொய் சொல்லி இழி வாழ்க்கை வாழ்கின்றனர்.
Restoration and ரிலீஸ் பற்றி நீங்கள் சொன்னதை இரண்டு விதமாக பார்க்கலாம்.
1)இருவர் உள்ளம், பா series போன்ற படங்களெல்லாம் ஒரிஜினல் நெகடிவ் பெற பட்டு டிஜிட்டல் restoration செய்ய பட்டு கலைஞர் டிவி செய்தது போல செய்தால் டிவி சேனல்கள் தங்கள் TRP rating எகிற செய்ய முடியும்.(இருவர் உள்ளம் magic ). நீங்கள் சொல்வது லிமிடெட் ரிலீஸ் செய்து காசு பார்க்கலாம். ஒரு நூறு படங்களாவது இப்படி செய்ய பட வேண்டும்.
2)வீரபாண்டிய கட்டபொம்மன் ,புதிய பறவை,திருவிளையாடல்,தில்லானா மோகனாம்பாள் ,சிவந்த மண்,வசந்த மாளிகை ,கெளரவம் போன்றவை சரியான உரிமம் பெற பட்டு ஒழுங்கான restoration ,டிஜிட்டல், ஒரிஜினல் soundtrack கொண்டு செய்ய பட்டு கர்ணன் போல ரிலீஸ் செய்ய பட்டு (நல்ல விளம்பர உத்தியுடன்) வெளியிட பட்டால் கர்ணன் அளவு வெற்றி வாய்ப்பு உண்டு.(திருவிளையாடல் திடீர் தோன்றல் திட்ட மிட படாமல்,வசந்த மாளிகை பிரிண்ட் தரம் படு மோசம்.)
3)உத்தம புத்திரன், தெய்வ மகன் இரண்டும் வண்ணம் பெற்று புது தரம் கொண்டால் எல்லா
சாதனைகளையும் முறியடிக்கும் என்பது சர்வ நிச்சயம்.
அன்புள்ள கோபால் சார்,
நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த "தர்மம் எங்கே" படத்தின் அலசல் கட்டுரை மிகவும் அருமை. இப்படம் நமது திரியில் சாரதா அவர்களுக்கு, முரளி சீனிவாஸ் சார் அவர்களுக்கு, மற்றும் எனக்கு மிகவும் பிடித்த படம். (அவர்கள் இருவரும் இப்படம் பற்றி எழுதிய பதிவுகளைத் தேடிப்பார்த்து விரைவில் பதிக்கிறேன்).
தொய்வடைந்த திரைக்கதையால் பெரும் வெற்றி பெறமுடியாமல் போன படம் என்பது உண்மை. பழைய உடைகளை சுவரில் மாட்டி வைத்திருப்பது சர்வர் சுந்தரத்தை நினைவூட்டியது. விறுவிறுப்பான ஆரம்பம், இடைவேளைக்குப்பின் சற்று இழுத்தாலும் கிளைமாக்சில் மீண்டும் நம்பியார் வந்ததும் சூடு பிடிக்கும். சுதந்திர பூமியில், வீரமென்னும் பாவைதன்னை, பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே மூன்று பாடல்களே போதுமானது. மற்ற இரண்டும் போர்.
சிறப்பான ஆய்வுக்கட்டுரைக்குப் பாராட்டுக்கள், நன்றிகள்...
Dear chandrashekar sir,
many more happy returns of the day.may god and nt bless you
Chandrasekhar Sir,
Wish you many more happy returns of the day!!!
Yesterday late evening saw about last 30 minutes of " Anbalippu " in Tamil Murasu. A serious problem which India is facing today, i.e. developing industries & real estate at the cost of agriculture, is the core of this film. Though the issue was not seriously discussed, the film clearly delivered the message in its own way. NT as usual was perfect as a villager.
VERSATILITY....thy name is Nadigar Thilagam Sivaji Ganesan.
Ulloorla eduthukitta, even good actors like Raghuvaran & Prakash Raj (most of the time, Prakash's dialogue delivery reminds me of Poornam Viswanathan ...enna, PV konjam slow, PR konjam fast!!), perform almost in the same manner. "Getting into the skin of the character" mbaingale....i think they fail to achieve it.
Director K. Balachander nicely captured the VOICE of NT fans by intelligently writing a dialogue in "Ethiroli".
It goes like this ...I'm just paraphrasing....(Nagesh is the actor)......" enna sollu, avan avandhanya. Vakkeelna vakkela maaridran, judge na judge'a maaridraan.....".
தர்மம் எங்கே ... சில நினைவுகள் ... [ மீள் பதிவுகள் ]
சாரதா அவர்களின் வலைப்பூவிலிருந்து
மேற்கண்ட பதிவு இடம் பெற்ற வலைப்பூவிற்கான இணைப்பு - http://ennangalezuththukkal.blogspot...g-post_20.htmlQuote:
எண்ணங்கள் எழுத்துக்கள்
Thursday, January 20, 2011
தர்மம் எங்கே
(சில எண்ணங்கள், சில நினைவலைகள்)
http://2.bp.blogspot.com/_0EOhWaq0qv...am+Enge-bw.jpg
இப்படத்துக்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மத்தியில் '1972ன் திருஷ்டிப்பொட்டு' என்ற் செல்லப்பெயர் உண்டு. காரணம், 1971 இறுதியில் வெளியான 'பாபு' வில் தொடங்கி 1973ல் முதல் படமான 'பாரதவிலாஸ்' வரையில் நடிகர்திலகத்தின் வெற்றிநடை தொடர்ந்தது (அவற்றில் பாபு, ஞானஒளி பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் நான்கும் கருப்பு வெள்ளைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது). அவற்றில், 72 மத்தியில் வந்த 'தர்மம் எங்கே' மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்தது. அதற்கு முதற்காரணம் (சிவந்தமண், ராஜராஜ சோழன் போல) இப்படத்துக்கு ஏற்பட்டிருந்த அளவுக்கு மீறிய, அபரிமிதமான எதிர்பார்ப்பு, இரண்டாவது காரணம் ஓட்டை விழுந்த திரைக்கதை இவைகளே.
கதாநாயகன் படம் முழுவதும் வில்லனுடன் போராடி, இறுதியில் அவனிடமிருந்து ஆட்சியை மீட்பதாக இருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் முரளி அவர்கள் சொன்னது போல, இடைவேளையின்போதே பிரதான வில்லன் நம்பியாரிடமிருந்து ஆட்சியைக்கைப்பற்றி விட, அதோடு வில்லன் நம்பியார் தலைமறைவாகிவிட, அதன்பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில் 'மாப்பிள்ளை - மைத்துனன்' சண்டையில் படம் நகர்கிறது. இவ்வளவு பிரமாண்டமான படத்தை இழுத்துச்செல்ல முத்துராமன் எல்லாம் ஒரு வில்லனா?. நல்ல வேளையாக கிளைமாக்ஸில் மீண்டும் நம்பியார் தோன்ற, கொஞ்சம் விறுவிறுப்பு கூடுகிறது.
தர்மம் எங்கே பற்றி விரிவாக விளக்கமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த முயற்சி மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது. காரணம், காட்சிகள் கோர்வையாக வரவேண்டும். படம் பார்த்து வெகுநாட்கள் ஆகி விட்டதால், காட்சிகளை வரிசையாக நினைவுக்கு கொண்டு வருவதில் சற்று சிரமம். ஆனால் படத்தின் முக்கியமான, விசேஷமான காட்சிகளைப்பற்றி எழுதலாம் என்று எண்ணம். இப்படத்தின் வீடியோ கேஸட், அல்லது CD அல்லது DVD எங்குமே கிடைக்கவில்லை. தியேட்டர்களிலும் வெகுநாட்களாக திரையிடப்படவில்லை.
இப்படம் பற்றி முன்னொருமுறை என் தந்தையுடன் பேசும்போது அவர் சொன்ன தகவல்கள். (தர்மம் எங்கே வெளியான காலத்தில் தனக்கேற்பட்ட உணர்வுகளை அவரே சொல்கிறார். அவர்து வார்த்தைகளில்.. இதோ)
"நான் கல்லூரிப்படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த சமயத்தில் வெளியான படம் இது. நாங்கள் (சிவாஜி ரசிகர்கள்) யாருமே பட்டிக்காடா பட்டணமாவோ அல்லது வசந்த மாளிகையோ இந்த அளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் எதிர்பார்த்தது 'தர்மம் எங்கே' படத்தைத்தான். ஆனால் இதற்கு முன் வெளியான பட்டிக்காடா பட்டணமா பெற்ற பெரிய வெற்றியைப்பார்த்து, தர்மம் எங்கே படம் அதையெல்லாம் முறியடிக்கும் சாதனைப்படமாக இருக்கப்போகிறது என்று எதிர்நோக்கினோம். அப்போதைய 'மதிஒளி' பத்திரிகையிலும் தொடர்ந்து அந்தப்படத்தின் செய்திகளும், ஸ்டில்களும் வெளியாகி எங்கள் உற்சாகத்துக்கு தீனி போட்டன.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் மாலையில் அண்ணாசாலை 'சாந்தி' திரையரங்கின் கார் பார்க்கிங் வளாகத்தில் கூடி அப்போதைக்கு ஓடிக்கொண்டிருக்கும் அவருடைய படங்களைப் பற்றி விவாதிப்போம். இந்த நடைமுறை எங்களுக்குப் பிறகும் பல ஆண்டுகளாக தொடர்ந்தது. அப்போது சாந்தியில் 'பட்டிக்காடா பட்டணமா', பக்கத்தில் தேவி பாரடைஸில் 'ராஜா', அதையடுத்த பிளாசாவில் 'ஞான ஒளி' என்று அனைத்தும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருக்க, 'தர்மம் எங்கே' படம் பற்றித்தான் எங்களுக்குள் ஒரே பேச்சு. இதனிடையே 'ஓடியன்' திரையரங்கில் (தற்போது 'மெலோடி') தர்மம் எங்கே ஸ்டில்கள் வைக்கப்பட்டு விட்டன என்று அறிந்ததும், நாங்கள் கூடும் ஜாகை ஓடியனுக்கு மாறியது. தினமும் மாலையில் கூடி, அந்தப்படத்தைப் பற்றித்தான் பேச்சு. ரிசர்வேஷன் தொடங்கியபோதே படம் வெளியாகும் நாள் போல கூட்டம். மளமளவென டிக்கட்டுகள் பல நாட்களுக்கு விற்று தீர்ந்தன. அப்போதெல்லாம் முதல் வகுப்புக்கு மட்டுமே ரிசர்வ் செய்யப்படும். மற்ற கிளாஸ் டிக்கட்டுகளை காட்சி நேரத்திலேயே கியூவில் நின்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
சனிக்கிழமையன்று படமும் வெளியானது. (நடிகர்திலகத்தின் படங்கள் வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகாது, சனிக்கிழமைகளில்தான் ரிலீஸ் ஆகும்). முதல்நாள் முதல் மேட்னிக்காட்சிக்கு போயிருந்தோம்.ரிலீஸ் தினத்தன்று சீக்கிரமே அரங்குக்கு போனோம். (எங்கள் அலுவலகம் சனிக்கிழமை களில் அரைநாள் மட்டுமே). 'ஓடியன்' அரங்கின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய கட்-அவுட்டுகள் வைக்கப் பட்டிருந்தன. அது போக கொடிகள், தோரணங்கள், பல்வேறு மன்றங்களின் பேனர்கள். (அப்போதெல்லாம் இதுபோன்ற திருவிழாக்கள் "அந்த இரண்டு ஜாம்பவான்களின்" படங்களுக்கு மட்டும் தான்). மேட்னி ஷோ துவங்கியது. படம் துவங்கியதிலிருந்து ஆரவாரம், கைதட்டல், விசில் பறந்தன. குறிப்பாக முதல் ஒரு மணிநேரம் படம் டெர்ரிஃபிக். நடிகர்திலகத்தின் படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படமாக இருந்தது. அதற்கேற்றாற்போல சூப்பர் வில்லன் நம்பியார், மற்றும் சூப்பர் ஜோடி ஜெயலலிதா. இடைவேளையின்போதே எல்லோர் மனதிலும் ஒரு எண்ணம்... படம் பெரிய வெற்றிதான் என்று. ரசிகர்கள் மத்தியில் உற்சாக கொண்டாட்டம். இடைவேளையின்போது, 'கேட்'டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் படம் எப்படி என்று சைகையால் கேட்க, உள்ளே நின்ற ரசிகர்கள் அனைவரும் கட்டை விரலை உயர்த்திக்காட்ட... தியேட்டருக்கு வெளியே அப்போதே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
ஆனால் இடைவேளைக்குப்பின்னர், படத்தின் போக்கு அப்படியே மாறிப்போனது. நடிகர்திலகத்தின் கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டது திரைக்கதை. ஒரு நல்ல் மக்கள் தலைவனாக காட்டாமல், ஒரு அகம்பாவம் பிடித்தவராக காண்பிக்கப்போக ரசிகர்களின் உற்சாகம் குன்றிப்போனது. பொது மக்களும் இப்படி ஒரு கதையின் போக்கை எதிர்பார்க்கவில்லை. போதாக்குறைக்கு, வில்லன் நம்பியாரையும் தலை மறைவாக்கி விட்டனர். படம் தொய்ந்து போனது. படம் முடிந்து வெளியே வந்தபோது ரசிகர்களின் உற்சாகம் காணாமல் போனது. இதனிடையில் படம் நன்றாக இல்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவ, பத்திரிகை விமர்சனங்களும் காலை வாரிவிட.... சரியாக 48 நாட்களில் 'ஓடியன்' அரங்கில் படம் தூக்கப்பட்டு, ஒரு ஆங்கிலப்படம் திரையிடப்பட்டது".
.........என் தந்தை 'தர்மம் எங்கே' நினைவுகளில் ஆழ்ந்து போனார்.
இனி எனது விளக்கம் தொடர்கிறது
‘தர்மம் எங்கே’ முழுக்ககதையும் வரிசையாக நினைவுக்கு கொண்டுவர முடியாமல் போனாலும், சில முக்கியமான காட்சிகள் நினைவில் வந்துபோகிறது. அதில் சில....
படத்தின் முன்பாதியில், நள்ளிரவில் சர்வாதிகாரி நம்பியாரின் ஆட்களால் துரத்தப்பட்டு ஓடி வரும் சிவாஜி, பூட்டியிருக்கும் ஒவ்வொரு வீட்டு கதவாக தட்டி, அடைக்கலம் கேட்டுக் கதற, யாருமே கதவைத் திறக்க மறுக்க, தாகத்தால் ஒருவீட்டின் வாசலில் இருக்கும் மண்பானையை எடுத்து வாயில் கவிழ்ப்பார். அதில் சொட்டு நீரும் இல்லாமல் காலியாக இருக்க, சோர்வுடன் தன் வீட்டுக் கதவு கூட பூட்டியிருப்பது கண்டு, கதவைப்போட்டு அடிப்பார், உள்ளே கதவைத் திறக்கவிடாமல் அவருடைய அம்மாவையும், தங்கையையும் (குமாரி பத்மினி) வீட்டிலுள்ளோர் கையைக் கட்டி வாயைப்பொத்தி அமுக்கிப் பிடித்திருப்பார்கள். அதற்குள் துரத்தி வரும் வீரர்கள் நெருங்கி விட, வேறு வழியின்றி காட்டுக்குள் ஓடிப்போவார். இந்த இடத்தில் திரைக்கதையும், சிவாஜியின் நடிப்பும் நம்மை பதை பதைக்க வைக்கும். (நைட் எஃபெக்டில் சூப்பரான வண்ண ஒளிப்பதிவு கண்களை கொள்ளைகொள்ளும்).
சர்வாதிகாரி நம்பியார், தன்னை எதிர்ப்பவர்களின் பெயர்களைக் கேட்டு ஒரு ஏட்டில் குறித்து வைத்து, அவர்களைப் பழிவாங்குவார். சிவாஜி பதவிக்கு வந்ததும், தன்னை எதிர்க்கும் ஒருவனின் பெயர்கேட்டு முதன்முதலாக ஏட்டில் குறிக்கப்போகும் சமயம், பின்னணியில் இடியோசை போல நம்பியாரின் சிரிப்பொலி கேட்டு திகைத்து பின்வாங்குவது, திருலோகசந்தரின் டைரக்ஷனைக் காட்டும் நல்ல இடம்.
படத்தின் கிளைமாக்ஸ், செஞ்சிக்கோட்டையில் படமாக்கியிருப்பார்கள். நம்பியாரும் அவரது ஆட்களும் சுற்றி நின்று துப்பாக்கியால் சுட (நம்பியார் இடைவேளைக்குப்பின்னால் மீண்டும் தோன்றுவது இந்த இடத்தில்தான்) சிவாஜி தன் தங்கையை இழுத்துக்கொண்டு ஒவ்வொரு தூணாக மறைந்து மறைந்து முன்னேறுவதும், இறுதிக்காட்சியில் பாம்புகள் இருக்கும் கொட்டடிக்குள் விழுந்து விடும் நம்பியார் அந்த பாம்புகள் கடித்து இறப்பதும் நல்ல கட்டங்கள். (அவ்வளவு பெரிய, பெரிய பாம்புகள், தன் உடம்பின் மீது ஏறி ஊரும்போது நம்பியார் மரக்கட்டை மாதிரி கிடக்கிறாரே. எவ்வளவு தைரியம் வேண்டும்?. நடிக்க என்று வந்துவிட்டால் எதையெல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது?)
நம்பியாரிடமிருந்து அதிகாரத்தை நடிகர்திலகம் கைப்பற்றுவதோடு நிறுத்தி 'இடைவேளை' கார்டு போடுவார்கள். இடைவேளை முடிந்து, முதல் பாடல் 'நான்கு காலமும் உனதாக' என்ற பாடல்தான். தலைமைப் பொறுப்பில் அமர்ந்த நாயகனைப் பாராட்டி, ஜெயலலிதாவும் குழுவினரும் பாடி ஆட, அதை சிம்மாசனத்தில் அமர்ந்து நாயகன் ரசிப்பதாக படமாக்கப் பட்டிருக்கும். அதில் நான்கு வித பருவங்களைப்பற்றி ஜெயலலிதா பாடும்போது, அதற்கேற்ப பின்னணி காட்சிகளும் மாறும். ஆனால் பாடல் சுமார் ரகம்தான்.
'சுதந்திர பூமியில்', 'பள்ளியறைக்குள் வந்த', 'வீரம் என்னும் பாவைதன்னை' பாடல்கள் மனதைக் கவர்ந்த அளவுக்கு இது கவரவில்லை. இவை மூன்றும் மூன்று முத்துக்கள். ஆனால் கண்ணில் காணக்கிடைக்கவில்லை. 'SHIVAJI HITS' என்ற பெயரில் VCD / DVD தயாரிப்பவர்கள் கூட இதுபோன்ற பாடல்களைக் கண்டுகொள்வதில்லை.
'பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே' பாடல் இரவு நேர சூழ்நிலையில் ('நைட் எஃபெக்ட்'), படகில் நடிகர் திலகமும் கலைச்செல்வியும் பயணிக்கும்போது, சுற்றிலும் வாண வேடிக்கைகள் கண்ணைக்கவரும் (அதற்கு ஏற்றாற்போல அற்புதமான ஒளிப்பதிவும், கலரும்).
அதுபோல 'சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்' பாடல் அவுட்டோரில் அழகான லொக்கேஷன்களில், மலர்நிறைந்த கூடையை நடிகர்திலகம் முதுகில் சுமந்துகொண்டு, புன்னகை மாறாத முகத்துடன் பாடிவரும் அழகு. (இப்பாடல் முழுக்க அவர் முகத்தில் ஒரு கம்பீரமான புன்னகை தவழும்).
இரு அருமையான பாடல்களோடு, இன்னொரு நெஞ்சையள்ளும் பாடல்...
'வீரம் என்னும் பாவைதன்னை கட்டிக்கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலைதன்னை சூடிக்கொள்ளுங்கள்
நாலுபக்கம் கூட்டமுண்டு பார்த்துக்கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தையுண்டு நம்பிக்கொள்ளுங்கள்'
நடிகர்திலகம் மாறு வேடத்தில் வந்து, சிறையிலிருந்து தன் கூட்டத்தினரை மீட்டுச்செல்லும் காட்சி இது. (கிடாருக்குள் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்து சுடும் உத்தியெல்லாம் அப்போதே பயன்படுத்தப்பட்டு விட்டது).
'தர்மம் எங்கே' படம் 1972 தொடர் வெற்றிக்கோட்டைத் தொட முடியாமல் போனாலும், தரத்தில் எந்தப்படத்துக்கும் குறைந்தது அல்ல. பட வெளியீட்டின்போது நடந்த பிரமாண்ட 'ஒப்பனிங்' திருவிழாவைப்'பொறுத்தவரை, அந்த ஆண்டின் இரண்டு வெள்ளிவிழாப்படங்களைவிட இது முன்னணியில் இருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு படத்தின் ஸ்டில்கள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதில் முன்னிலை வகித்தது 'மதி ஒளி' மாதமிருமுறை இதழ்.
1971 துவக்கத்தில் நடிகர்திலகத்துக்கு இருந்த சற்று தொய்வு நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, ஆளாளுக்கு நடிகர்திலகத்துக்கு சவால் விடத்துவங்கினர். (Imagine, that was Public Election time too, where NT was canvassing for Congress (O), headed by Perundhalaivar Kamaraj) தொய்வு நிலைக்குக் காரனம் அவரது படங்களின் புற்றீசல் போன்ற படையெடுப்பு. 'பாதுகாப்பு' படத்தில் துவங்கி 'பிராப்தம்' வரையில் நான்கு மாதங்களில் ஏழு படங்கள்.
'சவாலே சமாளி'யின் வெற்றி, கேலி பேசியவர்களை ஓரளவு வாயடைக்க வைத்தது எனினும் 'பாபு'வில் துவங்கி தொடர்ந்து நான்கும் வெற்றி மேல் வெற்றி பெறத்துவங்க.......
'தர்மம் எங்கே' படத்தில் கையில் வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்கைப்போட்டு, அதன் கீழே... "நாக்குத்தடுப்பேறி சவால் விட்ட தறுக்கர்கள் எங்கே?" என்ற வாசகத்தையும்...
நம்பியாருக்கு எதிராக வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்தைபோட்டு.... "சவால் விட்டவனெல்லாம் சவக்குழிக்குப் போய்விட்டான்.. நீ எம்மாத்திரம்?" என்ற வாசகத்தையும் 'மதி ஒளி' வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி, பெரிய எதிர்பார்ப்பைத்தூண்டி விட்டது.
Some images from the film Dharmam Enge
http://i872.photobucket.com/albums/a...rmamengey2.jpg
From pammalar's treasures
Quote:
பொக்கிஷப் புதையல்
பட விளம்பரம் : தினத்தந்தி : 19.3.1972
http://i1094.photobucket.com/albums/.../GEDC3906a.jpg
[ஏப்ரல் 1972 வெளியீடாக விளம்பரம் அளிக்கப்பட்டுள்ள "தர்மம் எங்கே", பின்னர் சற்றேறக்குறைய மூன்றரை மாதங்கள் கழித்து, 15.7.1972 அன்று வெளியானது.]
ஒரிஜினல் பாட்டுப் புத்தக முகப்பு
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3895.jpg
ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தினுடைய பின் அட்டை
http://i1094.photobucket.com/albums/.../GEDC3896a.jpg
சினிமா குண்டூசி : ஜூன் 1972 : அட்டைப்பட விளம்பரம்
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/.../GEDC3892a.jpg
பொக்கிஷப் புதையல் : சினிமா குண்டூசி : ஜூன் 1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
இக்காவியம் குறித்து நடிகர் திலகம்
http://i1094.photobucket.com/albums/.../GEDC3897a.jpg
கலைச்செல்வியின் கூற்று
http://i1094.photobucket.com/albums/.../GEDC3899a.jpg
டைரக்டர் திருலோக் அவர்களின் கருத்தோவியம்
http://i1094.photobucket.com/albums/.../GEDC3900a.jpg
அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/.../GEDC3904a.jpg
தூள் பரத்தி விட்டீர்கள் ராகவேந்தர் சார்.நன்றி.
அடுத்து நம் தவ புதல்வனை கொஞ்சுவோம்.
Well said Subbu and Rangan.
மறக்க முடியுமா இந்த அனல் பறக்கும் சண்டைகாட்சியை.
https://www.youtube.com/watch?v=9-HE9HfJ1Eo
நான்கு காலங்களும் உனதாக !
https://www.youtube.com/watch?v=pQ-JhAGEn9g
https://www.youtube.com/watch?v=UqnNOMbt-nM
சில பாடல்களை கேட்கும்பொழுது உடனே குதூகலம் வரும்...சில பாடல்களை நாம் கேட்கும்போது உடனே நிறுத்தி..இதை இரவில் கட்டாயமாக உறங்கும் முன் கேட்கவேண்டும் என்று தோன்றும். அப்படி தோன்றவைக்கும் ஒரு பாடல் மேலே கூறியுள்ள பாடல்...இரவின் மடியில் இதை கண் மூடி கேட்டால்...அடேயப்பா...காட்சிகள் நம் கண் முன் கொண்டு நிறுத்தும் பாடல்...!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சந்திரசேகர் சார்!
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன் .
மாந்தோரண பாட்டில், மாப்பிள்ளை பெண்ணுக்கு என்ற வரிகளில் கண்கள்,பாவங்களுடன் நடிகர்திலகம் புரியும் ஜாலம்!!!!?????
Quote Originally Posted by kaliaperumal vinayagam
உண்மை ரவி சார். திரையில் திருமுகமும் மறைவில் மறுமுகமாய் விளங்கிய நடிகர்கள் மத்தியில், நிழல் மற்றும் நிஜத்தில் ஒருவராய் விளங்கியவர் ஒரு தாய் மக்களின் நாயகன் மக்கள் திலகம்தான். தான் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பற்றி துளிகூட அக்கறை இல்லாமல், பணம் தருகிறார்கள் எப்படியும் நடிக்கலாம் என்று நடித்தவர்களிடையே, தான் நடிக்கின்ற நடிப்பு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், தீய பழக்க வழக்கங்களைக் களைய ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று நினைத்ததோடு மட்டுமல்லாது அதை நடத்தியும் காட்டிய, நினைத்ததை முடித்தவர். திரையில் கூட மது அருந்தி நடிக்க அஞ்சிய மது அருந்தா மாமேதை. அதைத்தான் தன் திரைப்பட பாடலில் "நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினைத் தந்தாகணும், நாட்டுக்கு படிப்பினைத் தந்தாகணும்" என்றார்
இந்த சமூக அக்கறைதான் இன்னும் இவர் பெயரை உலகில் மங்காமல் வைத்திருக்கிறது. இப்படி ஒரு சமூக அக்கறை இல்லாதவர்கள் இருந்தும் என்ன? இல்லாவிட்டால் என்ன?
Unquote
திரும்ப திரும்ப ஒரே பல்லவி ,நீதி கருத்து,நல்லவன் வேடம்(??) என்று. எதுவுமே உரிய பலன் கொடுத்து போய் சேர்ந்த மக்களை இம்மியளவேனும் உயர்த்த பயன் பட்டதா?அல்லது சொன்னவர்கள் மட்டுமே வாழ்க்கையை உயர்த்தி கொண்டார்களா? படிப்பில் நாட்டம் செலுத்தாமல் மதுக்கடை சென்றவர்கள் யார்? வன்முறையை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்கள் யார்? வாழ்க்கையில் மூளை சலவை செய்ய பட்டு மற்றதை காண மறுத்து வாழ்க்கையை வீணாக்கி கொண்டவர்கள் யார்?
நடிகரின் வேலையே கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக நடிப்பதுதானே?
எஸ்வி சார்,
நாங்கள் எங்கள் வழியில் சென்று யாரையும் புண்படுத்தாமல் நாகரிகமாக எங்கள் ஆய்வுகளை ,கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறோம். உங்கள் திரியில் எங்களை அனாவசியமாக வம்புக்கிழுத்து தூண்டுவது தொடர் நிகழ்ச்சியாகி கொண்டுள்ளது. திரும்ப திரும்ப கூறுகிறேன். நாம் நமது கருத்துக்களை கூறலாமே தவிர ஒருவர் மற்றவரை தாக்கினால் ,நாம் விரும்பும் நாயகர்களை நாமே அவமதிப்பதற்கு சமம்.
உதாரணம் மேலே குறிப்பிட்ட பதிவு,அதற்கு எங்கள் சுப்பு சாரின் பதில் பதிவு.
அதுசரி கலியபெருமாள் சார்,
உங்கள் வாக்கியங்களே ஒன்றுக்கொன்று முரண் படுகின்றன. திரையில் திருமுகம்,மறைவில் மறுமுகம் என்பது தொடக்கம். அடுத்த வரி பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயாராய்....
பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நடித்தவர்கள் எப்படி திரைக்கு திரு முகம் காட்டியவர்கள் ஆவார்கள்?
எங்கேயோ இடிக்குது?குத்துதே? அபூர்வ சகோதரர்கள் படத்தில் வருவது போல இந்த துப்பாக்கி முன்பக்கமாகவும் சுட்டு பின் பக்கமாகவும் சுட்ட மந்திர துப்பாக்கி ஆகி விட்டதே?தயவு செய்து விளக்குவீர்களா?
நண்பர்களே,
பதிலுக்கு பதில் என்று நாம் போய்க்கொண்டிருந்தால் அதற்கு முடிவே கிடையாது. போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் என்று நம் பணியைத் தொடர்வோம். காலம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். உண்மை என்றுமே அடைந்து கிடக்காது.
http://youtu.be/jGAeoj0z1sc
தில்லான மோகனாம்பாள்
1968 ல் வந்து , இன்றும் கலக்கும் படம் . நானும் என் நண்பர்களும் (ஒரு 6 நண்பர்கள் ) ஒரு முடிவு செய்து உள்ளோம் . பிரதி வாரம் விடுமுறை நாள் ல் ஒரு NT படத்தை பார்க்க வேண்டும் என்று . ஒரே கண்டிஷன் படத்தின் பிரதி பிரமாதமாக இருக்க வேண்டும் என்றது தான் . அந்த பொறுப்பு என்னக்கு , என் என்றல் இதில் அதித ஆர்வம் உள்ளவன் நான் , மேலும் 6 வருடமாக த்வத் வாங்கி கொண்டு இருக்கிறேன்
என் நண்பன் வீட்டில் Home தியேட்டர் இருக்கிறது , பெரிய ஸ்க்ரீன் , சினிமா தியேட்டர் போலே , so இடம் அவன் வீடு அந்த வகையில் முதல் முதல் ல் இந்த படத்தை பார்க்கலாம் என்று முடிவு செய்தோம் .
ஏற்கனவே இந்த படத்தை பல முறை பார்த்தால் மீண்டும் ஒரு முறை பார்க்கும் பொது ஒரு சில விஷயங்கள் புதிதாக தெரிந்தது , அதை அடிப்படியாக கொண்டு எழுத போகிறேன் , இதில் உள்ள அம்சங்கள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் இருந்தாலும் , ஒரு சின்ன ரசிகன் , ஆவலுடன் எழுவதாக எண்ணி கொண்டு உங்கள் நல்லாசிகளை வழங்க கேட்டு கொள்கிறேன்
எது பிரமாண்டம் ,நம் நாட்டின் கலைகளை , ஸ்டெல்லார் cast கொண்டு திறம்பட இயக்கி ,நடித்து , திறம்பட இசை அமைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த படம் தான் இந்த காவியம்
முன்னால் முதல்வர் திரு MGR அவர்கள் ரஷ்ய delegates க்கு இந்த படத்தை திரையிட்டு நம் நாட்டின் பெருமையை நிலை நாட்ட ஒரு பொக்கிஷம் இந்த படம்
இனி
இந்த படத்தின் பெயர் போடும் போதே பிரமாண்டம் நம்மளை தொற்றி கொள்கிறது , BGM ஸ்கோர் மற்றும் திரை எங்கும் ஜெனகளும் , நாம் ஒரு திருவிழாவை காண போவது தெரிகிறது
முதல் காட்சியில் (மோகனா) அலங்காரம் செய்து கொண்டு தன்னை தானே ரசித்து கொண்டு இருக்கிறார் , அது ஒரு 5 -6 உருவங்களை நம்மளுக்கு காட்டுகிறது (ஒளிபதிவு : KS பிரசாத் , படத்தொகுப்பு : ராஜன் , TR நடராஜன் )
அதை தொடர்ந்து இரண்டு நாதஸ்வரம் வாசிப்பது கேட்கிறது , அது தான் சிக்கல் சண்முகசுந்தரம் மற்றும் தங்கரத்தினம் (சிவாஜி & AVM ராஜன் )
கோவில் ல் வெடி சத்தம் NT க்கு இடயுறு செய்ய அவர் கச்சேரி யை பாதியில் நிறுத்தி செல்கிறார் , அவர் இந்த சத்தம் குறித்து தன் தம்பி இடம் பேசும் பொது , அவர் குரலில் ஒரு தளர்ச்சி , காரணம் அவர் நாதஸ்வரம் வாசித்தல் , குரல் வலம் கொஞ்சம் தொய்வு , அதை அழகாக காட்டி இருப்பார்
அவர் செல்லும் பொது , மோகனா வை பார்த்த உடன் மனசை பரி கொடுக்கிறார் , இருந்தாலும் இரண்டு திறமைசாலிகளுக்கு இடையில் வரும் ஈகோ , அவர்களை சுற்றி ஒரு மாய சுவரை எழுபிகிறது
சத்திரத்தில் சிவாஜி யை காண வரும் ஜில் ஜில் ரமாமணி யை சிவாஜி அன்புடன் விசாரிப்பதும் , அதே சமயம் அவர் தோல் மேல் கை போடும் பொது அதை நாசுக்காக தவிர்ப்பதும் , ஆன் பெண் நட்புக்கு ஒரு இலக்கணம் . பாலையா ஜில் ஜில் யை நுகர்வது ஒரு நல்ல தமாஷ் , மனோரமா பேச்சு ஆற்றல் மூலம் கவர்கிறார் . அவர் நாகலிங்கதிடம் நான் ஒரு பக்கம் ஆடுகிறேன் , மோகனா ஒரு பக்கம் ஆட்டும் என்று சொல்லும் பொது அவர் வெகுளி குணம் வெளி படுகிறது
AVM ராஜன் சொல்லி , பாலையா நடனத்தை காண permission கேட்பது , அதை மென்னு முழுங்குவது , பிறகு தப்பித்து செல்வது , கோவில் ல் சிவாஜி யை பார்த்து ஒளிவது பாலையா
பலே ஐயா
மறைந்து இருந்து பாடல் , நடனம் self explanatory . (சொல்ல தேவை இல்லை )
ரயில் ல் பத்மினி வரவை எதிர் பார்ப்பதும் , அவர் வந்ததும் பாலையா விடம் இடம் மாற சொல்வதும் , விளக்கு அணிந்த உடன் , மனசு மனசும் பேசுவதும் , காதல் ஓவியம்
அதில் பாலையா CK சரஸ்வதி உடன் வம்பு இழுப்பது நல்ல தமாஷ்
ரயில் நின்ற உடன் BGM ஒரு வித கீச்சு குரலில் ஒலிக்கும் , அது இந்த ஜோடி பிறிவதனால் தானோ
அங்கே நாகேஷ் சிவாஜி யை வரவேற்க வருகிறார் , ஆணால் மாளிகை யில் வாசிக்க சூழ்நிலை சரி இல்லாதனால் அவர்கள் வெளியே வந்து வாசிப்பதும் , வெளி நாட்டவர்கள் ஆடுவதும் , காவியம்
அந்த காட்சியில் நாகேஷ் செய்யும் சேஷ்டை க்கு ஒரு சபாஷ் ,உடம்பை வில்லாக வளைந்து ஓடி வருவதும் , பின் ஆடுவதும் , நாகேஷ் டாப்
பாலாஜி யின் சூழ்ச்சியால் சிவாஜி பத்மினி யை வெறுக்க நேர்கிறது (நாகேஷ் யின் கூட்டு , அவர் புத்தி சாதுர்யம் , கூடவே வடிவாம்பா வின் பேராசை )
நாகபட்டினத்தில் மனோரமா வின் கம்பெனி ல் மனோரமா உடன் அவர் தவில் வாசிப்பதும் , மனோரமா நாதஸ்வரம் வாசித்து ஆடி கொண்டே உகர்வதும் , சிவாஜி அடிக்கும் கமெண்ட்ஸ் , சிரிப்பு க்கு உத்தரவாதம்
சிவாஜி யை மலாயா வுக்கு போக விடாமல் இருக்க பத்மினி அவரை போட்டிக்கு அழைக்க , சிவாஜி ஒத்து கொள்கிறார் (male ஈகோ வின் அற்புத காட்சி அமைப்பு )
பாலாஜி மனம் திருந்தி பத்மினி யை தன் தங்கையாக ஏற்று கொள்கிறார் .
வைத்தி (நாகேஷ் ) நாகலிங்கதுடன் சேர்ந்து நடனத்தை நடக்க விடாமல் தடுக்க முயற்சிக்கிறார் )
நடன முடிவில் , பத்மினி க்கு தில்லான மோகனம்பாள் என்று ஒரு பெயர் கிடைகிறது
சிவாஜி கத்தியினால் குத்த பட்ட உடன் துடித்து உழுவதும் , கண் முழித்து கை வரவில்லை என்று ஏங்குவதும் ஒரு கலைஞன் யின் ஏக்கம்
ஆஸ்பத்திரியில் பெண் nurse தன்னை கவனிப்பதை தவறாக நினைத்து விலகுவது , அந்த nurse தன் தந்தை சிவாஜி யின் ரசிகர் அதனால் தான் இப்படி கவனிக்கிறேன் என்று சொன்ன உடன் அவர் முகத்தில் காடும் பாவம் . அந்த nurse சிவாஜி யை கிணத்து தவளை என்று சொன்னதை ஒத்து கொள்வது போல் அமைகிறது
நலம்தானா- சாக வரம்
நாகேஷ் அதை காண வரும் பொது , முதல் வரிசை யில் அமர்வதும் , அந்த சீட் யில் உக்கார வேண்டியவர் வந்ததும் , சமல்லிப்பதும் , சவடால் வைத்தி
நாகேஷ் இப்போ நம்பியார் உடன் சேர்ந்து மோகனா வை ராஜாவுக்கு (நம்பியார்) ஆசை நாயகி ஆக்க முயல்கிறார் , அந்த முயற்சி சிவாஜி &பத்மினி யை சேர்க்கிறது . முடிவில் சுபம்
இந்த படத்தின் கதை ஆனத விகடன் ல் வந்த போதே இந்த படத்தின் நாயகன் சிவாஜி தான் என்று மக்கள் எண்ணினார்கள் , சிவாஜி யை மக்கள் மனசில் வைத்து இருந்தார்கள் , இந்த படத்துக்கும் தேசிய விருது அவர்க்கு கிடைக்க வில்லை , ஸ்டேட் award கூட இல்லை (பத்மினி , மனோரமா வுக்கு கிடைத்தது )
இந்த படத்தில் தாங்களே நாதஸ்வரம் வாசிப்பதை போல் மக்கள் நினைகிரர்களே என்று கேட்டதற்க்கு
நம்மவர் அளிக்கும் பதில்
வெறும் நடிப்பு தான் , நான் வாசிக்க வில்லை , முக பாவங்களில் அப்படி செய்தேன் அந்த பாராட்டு , மதுரை சேதுராமன் , பொண்ணு சாமி
க்கு தான் சேர வேடும்
இசை (மாமா மகாதேவன் , பாடல் : கண்ணதாசன் )
எது செட் எது ஒரிஜினல் என்று தெரியாத வண்ணம் அரங்கம் அமைத்தது கங்கா
ஒரு படத்தில் பங்கு பெற்ற அனைவரும் சாக வரம் பெற்ற படம் என்று இந்த படத்தை சொல்லலாம்
ராகுல்,
ஒரு சிறிய ஆலோசனை. நான் கூட மற்றவர்கள் மிக சிறந்த முறையில் ஆய்வு செய்து விட்ட படங்களை மறு ஆய்வு செய்வதை தவிர்ப்பேன். உதாரணம்- தேவர் மகன்(p _r ),தில்லானா மோகனாம்பாள்(பலர் ,சமீபத்தில் p _r ,முரளி) .நான் உன்னிடம் எதிர்பார்ப்பது இதுவரை யாரும் தொடாத படம்.
சரியாகச் சொன்னீர்கள் சுப்பு சார்,
குடிக்காதவர் போல நடிப்பது மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்கு. மற்றபடி உண்மையில் சமூக அக்கறை இருந்திருக்குமானால் தன ஆட்சியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி மக்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்டிருக்க வேண்டும். செய்யலையே.
எழுதக்கூடாது, கண்டுகொள்ளக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் மக்கள் திலகத்தின் புகழையும், பெருமையையும் பாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் 'மற்ற நடிகர்கள்', 'மற்ற நடிகர்கள்' என்ற வசவு அதிகமாக இருக்கிறது. (Not ALL there, but one Hubber).
சமூக அக்கறை என்பது குடிக்கும் வேடத்தில் நடிக்காமல் இருப்பதில் மட்டும்தானா?. உடன் நடிக்கும் கதாநாயகியரை ஆபாசமாகக் காட்டுவதில் இல்லையா?. அவர் இடம்பெறும் எத்தனை டூயட்களில் நாயகியர் ஆபாசமாக உடையணிந்து நடித்துள்ளனர். குறிப்பாக "அழகிய தமிழ்மகள்" பாடலாகட்டும், "நீ என்னென்ன சொன்னாலும் கவிதை" பாடலாகட்டும், "இன்னொரு வானம் இன்னொரு நிலவு" பாடலாகட்டும், "அங்கே வருவது யாரோ" பாடலாகட்டும் கதாநாயகியரான மஞ்சுளா, லதா ஆகியோரின் உடைகள் படு ஆபாசம். இதுபோல ராமன் தேடிய சீதையிலும் ஒரு பாடலில் ஜெயலலிதா ரொம்ப ஆபாச உடையில் ஆடியிருப்பார். (இதுபோல பல பாடல்கள், சாம்பிளுக்கு மட்டும் இவை. இவற்றை மட்டுமே இல்லைஎன்று மறுக்கட்டுமே). இது ஒன்றும் இல்லாத குற்றச்சாட்டு அல்ல. அனைத்துப்பாடல்களும் இணையத்திலும் கிடைக்கின்றன. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின்றன. பார்த்து கன்பர்ம் பண்ணிக்கொள்ளலாம். அவர்தான் தன படங்களின் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்துபவராயிற்றே. அவர் சொன்னால் வீரப்பன் கேட்க மாட்டாரா?. அசோகன் கேட்க மாட்டாரா? அல்லது நீலகண்டன் கேட்க மாட்டாரா?. "மற்ற" நடிகர்கள் போல நடித்தோமா, ""பணம் வாங்கினோமா"" என்று போகிறவர் அல்லவே. அனைத்திலும் நுழைந்து பட்டை தீட்டுபவராயிற்றே. கதாநாயகியரை ஆபாசமாகக் காட்டுவது சமூக அக்கரையில் சேர்த்தியில்லையா?. மற்ற நடிகர்கள் படங்களில் இடம்பெறவில்லையா என்று கேட்கக்கூடாது. உங்கள் கூற்றுப்படி அவர்கள் “சமூக அக்கறை இல்லாதவர்கள்”. இவர் அப்படியல்லவே. மூச்சுக்கு மூச்சு 'தாய்க்குலம்' , 'தாய்க்குலம்' என்று உச்சரிப்பவர் படத்திலா இப்படி ஆபாசம்?...
அலுவல் நிமித்தமாக நான்கு நாட்கள் வெளியூரில் இருந்ததால். திரியைப் பார்க்கமுடியவில்லை.
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை திரியில் தெரிவித்த நண்பர்கள் திரு.கோபால் சார், ராகவேந்திரன் சார், முரளி சீனிவாஸ் சார், சுப்பிரமணியம் ராமஜெயம் சார், வினோத் சார், ஹரிஷ் சார், கல்நாயக் சார் மற்றும் தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்த பம்மலார் சார் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி.
என்றும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள் தங்கள் அனைவரின் வாழ்த்தும், ஆதரவும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.
இத்திரியில் 2011 ஆம் ஆண்டு பதிவிட்டதை இங்கு மறுபதிவிட்டிருக்கிறேன். (அதன்பிறகு இணைந்துள்ள நண்பர்களுக்காக)
பிறந்த நாள் வாழ்த்துக்களை திரியிலும், தொலைபேசியிலும், முகநூல் மூலமாகவும் அளித்த நண்பர்களுக்கும் மற்றும் உங்களைப் போன்ற பல்லாயிரக்கான ரசிக இதயங்களின் நட்பை எனக்களித்த விண்ணிலிருந்து எனை வாழ்த்தும் கலை தெய்வம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்ப இவ்வுலகில் என்னைப் படைத்த இறைவனுக்கும் இந்த நேரத்தில் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
இந்த நேரத்தில் என்னுடைய சில உணர்வுகளை இத்திரியில் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.
சிறு வயது முதலே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகராக இருந்த எனக்கு, வேலையில் சேர சென்னை வந்தபோது நடிகர்திலகத்தை நேரில் சந்திப்பேன் என்றுகூட நினைத்தது கிடையாது. ஆனால் கடவுள் சித்தம் - அவரிடமே வேலைக்கு சேரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருடைய கட்சி அலுவலகப் பொறுப்பாளாராக பணியாற்றும்போதும், அவர் அரசியலைவிட்டு விலகிய பிறகு சிறிது காலம் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்தில் பணியாற்றியபோதும், அந்த மகானுடன் பழகியது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாகும்.
பொக்கிஷப் பதிவுகளை அள்ளி வழங்கும் ரசிக மாமணிகள் உள்ள இத்திரியில் - என்னுடைய வாழ்நாள் பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்து வரும் மூன்றை இணைப்பாக இங்கு அளித்துள்ளேன்.
1 ) 1985 ஆம் ஆண்டு அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் அட்டையை திரு. தளபதி சண்முகம் அவர்களிடம் இருந்து பெற்றது.
http://i1234.photobucket.com/albums/...ps9fb8176e.jpg
2 ) நடிகர்திலகத்தின் விசிட்டிங் கார்டு (அவருக்கு விசிடிங் கார்டு தேவையா என்ற கேட்பது எனக்குத் தெரிகிறது) சந்தனத்திலானது. வெளிநாடு செல்லும்போது மட்டும் உபயோகப்படுத்துவது.
http://i1234.photobucket.com/albums/...ps10a4ac62.jpg
3 ) 25 - 08 - 1988 அன்று அலுவலகத்திற்கு வந்த நடிகர்திலகத்திடம் நாளை எனக்கு பிறந்த நாள் என்று சொன்னபோது, தன்னுடைய புகைப்படத்தில் கையெழுத்திட்டு, வாழ்த்து தெரிவித்து, எனக்கு அளித்த புகைப்படம் இது.
http://i1234.photobucket.com/albums/...pscd1ae38c.jpg
நட்பு கலந்த நன்றியுடன்,
kartik sir.you are absolutely right SOME HUBBERS NOT ALL in the other thread always dragging NADIGARTHILAGAM for no reasons, he was always doing his job according to the directions given by direcor and others NOT OF HIS OWN UNLIKE OTHER ACTORS, BECAUSE HE HAD FAITH AND CONFIDENCE ON HIS PERFORMANCES ALWAYS, WHICH HE HAS VERY WELL SUCCEEDED. Atleast hereafter will they stop their dialahes.
இப்போதுதான் ஒருவரை ஒருவர் மதிப்பதை பற்றி பேச்சு வந்தது. புதிதாக ஒருவர் பாசமலரை பற்றி துவங்கி விட்டார். என்னுடைய ஒரே பதில். எங்கள் படங்களை நாங்கள் கவனிக்கிறோம். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அந்த காலத்தில் வயிற்றெரிச்சல் பிடித்து அலைந்தது போதாதென்று இந்த காலத்திலுமா?
நடிகர்திலகத்தின் நட்சத்திர அந்தஸ்தை மூன்று பத்தாண்டுகளில் எவருமே நெருங்க கூட முடிந்ததில்லை என்பதை நாம் ஆதாரத்தோடு காட்டிய பிறகும் பொய்கள் ,புனைசுருட்டுகள் நிற்கவில்லை. அமைதியோடு வாழ, சிலருக்கு விருப்பமில்லை போலும். நம் படங்கள் ஓடுவதில் நம்மை விட அவர்களுக்குத்தான் அக்கறை அக்காலத்திலும் இக்காலத்திலும். 1952-1960 ,1961-1970,1971-1980 மூன்று பத்தாண்டுகளிலும் சிவாஜியின் success Rate அருகில் கூட யாரும் நெருங்க முடிந்ததில்லை. எந்த ஒரு திரையுலக பிரபலத்திடம் கேட்டாலும் சொல்வார் No 1 என்றால் படவுலகில் சிவாஜி மட்டுமே என்று. ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை 1958,1965,1971 ,1973 என்று ஓரிரு படங்கள் மற்றோருக்கு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தொடர்ச்சியான வெற்றி நாயகன் நடிகர்திலகம் மட்டுமே. 1950 களில் ஜெமினி நடிகர் திலகத்திற்கு அடுத்து நம்பர் 2 இடத்தில் இருந்தார். 1960 களில் நிறைய நடிகர்கள் நுழைந்து அரசியலும் நுழைந்த காலத்திலும் நடிகர்திலகம் No 1 ஆகவே தொடர்ந்தது பெரிய அதிசயம். அதிலும் அவர் இளைத்து இளமை மீண்டதும் ,அவர் எல்லா Genre படங்களிலும் நடித்து ABC மூன்றிலும் முடிசூடா மன்னனாகவே விளங்கினார். அவரின் புகழுக்கு அரசியல் துணையோ, பிரச்சாரங்களோ,பத்திரிகை பலமோ ,என்றுமே தேவை பட்டதில்லை. அந்த கால ராணி,தினத்தந்தி போன்ற பத்திரிகை பாமர மக்களிடையே அந்த தமிழனுக்கு எதிராகவே தவறான செய்திகளை போட்டும் நடிகர்திலகத்தின் புகழை அசைக்க கூட முடிந்ததில்லை.
எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடனில் எழுதியது போல "அவர் மறைவின் போது மட்டுமே அழுதவர் கண்ணீரில் உண்மை இருந்தது."
Good day guys,
After long time, good to see our friends again.
Belated Happy birth day to Chandrasekar sir.
Congrats and thank you Rahulram sir... for wonderful writing about TM.Even though so many reviews yours one is brisk and fresh like our NT movies.
Gopal sir, சாதனை என்றாலே நமது நடிகர் திலகம் தான் என்று அனைவருக்கும் தெரியும். நமது வேலை நமது நடிகர் திலகம் புகழ் பாடுவது மட்டுமே. துங்குபவர் போல் நடிப்பகர்களை எழுப்புவது கஷ்டம்
http://i1302.photobucket.com/albums/...psef81cf00.png
http://i1302.photobucket.com/albums/...ps6f4b3616.png
http://i1302.photobucket.com/albums/...ps285d0672.png
http://i1302.photobucket.com/albums/...ps02bb8709.png
http://i1302.photobucket.com/albums/...ps1e4ec0d5.png
http://i1302.photobucket.com/albums/...psa5add462.png
http://i1302.photobucket.com/albums/...pse59d010a.png
http://i1302.photobucket.com/albums/...psd6c75db8.png
http://i1302.photobucket.com/albums/...psa276f898.png
http://i1302.photobucket.com/albums/...ps7cac43c7.png
Dear Friends,
I already informed you that, I will search the posts of Saradha mam and Murali Srinivas sir about the wonderful movie “Dharmam Enge”. Fortunately our Raghavendar sir already re-produced the post of Saradha mam from her blog.
So, I re-produce the post of our Murali Srinivas sir about ‘Dharmam Enge’. Now over to Murali sir…..
தர்மம் எங்கே படம் சம்பந்தப்பட்ட தகவல்களை வழக்கம் போல சுவையாக வழங்கி இருக்கிறார் சாரதா. சாரதாவின் போஸ்டை படிக்கும் போது, எனக்கு மீண்டும் அந்த நினைவுகள். அந்த கால கட்டத்தில் NT பல படங்கள் நடித்து கொண்டிருந்தார், 1972-இல் முதலில் ராஜா வெற்றிகரமாக 100 நாட்களை கடந்தது. பிறகு வெளியான ஞான ஒளி-யும் வெற்றி. மூன்றாவதாக வெளி வந்த பட்டிக்காடா பட்டணமா (May 6th,1972) மகத்தான வெற்றி பெற, NT ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த நேரம். சாரதா குறிப்பிட்டது போல தர்மம் எங்கே-விற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும். சொந்த படம் வேறு. நான் பழைய போஸ்ட்-இல் சொன்னது போல ஒரு ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தர்மம் எங்கே. Plan-படி ஜூலை 1 அன்று வெளியிடப்படுவதாக இருந்தது. PP படத்திற்கு 56 நாட்கள் Gap. த.எ. படத்திற்கு 56 நாட்கள் Gap விட்டு தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 ரிலீஸ் அதன் பிறகு 70 நாட்கள் Gap, நவம்பர் 4 அன்று தீபாவளி. அன்று வசந்த மாளிகை ரிலீஸ்.இப்படி இருந்த திட்டம் PP- யின் அசாதாரண வெற்றியினால் மாறியது. த.எ. இரண்டு வாரங்கள் தள்ளி போடப்பட்டு ஜூலை 15 அன்று வெளியானது. படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியதால், முக்தா ஸ்ரீநிவாசன் தனது தவபுதல்வனை சொன்ன மாதிரியே ஆக் 26 அன்று வெளியிட்டார்.(படம் வெளி வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் தான் NT-யின் தாயார் ராஜாமணி அம்மையார் காலமானார்.ஆனாலும் படம் வெளியிடப்பட்டது). இந்த நேரத்தில் ராஜாவின் மகத்தான வெற்றியை தொடர்ந்து பாலாஜி நீதி- யை விரைவாக எடுப்பதை பார்த்த ராமாநாயுடு, தனது வசந்த மாளிகையை செப் 29 அன்று வெளியிட்டார். நீதி டிசம்பர் 7 அன்று வெளியானது. 1972 தீபாவளிதான் NT படம் வெளி வராத தீபாவளி. அதற்கு பிறகு 1987 தீபாவளிதான் மிஸ் ஆனது.
Coming to தர்மம் எங்கே., இந்த படம் ரிலீஸ் ஆன நேரத்தில், நடிகர் திலகத்தின் ரசிகர்களின் மத்தியில் இருந்த உணர்ச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. படம் ரிப்போர்ட் சுமார் என்று வந்த போதும்,தியேட்டரில் மிக பெரிய கூட்டம். The atmosphere was electric. You could actually touch it. இரண்டாவது நாள் மாலை காட்சி,அது போல ஒரு மக்கள் வெள்ளத்தை நான் பார்த்ததில்லை. அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. பிளவுபடாத நேரம். இந்த படத்தின் கதைப்படி அன்று இருந்த அரசியல் சூழ்நிலைக்கேற்ப பொடி வைத்த வசனங்கள்,அதுவும் ரசிகர்களை உசுப்பேற்றி விட்டது. அரங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் நடிகர் திலகம் வாழ்க என்று விண்ணதிர குரல்கள். நாங்கள் உள்ளே நுழையும்போது படம் ஆரம்பித்துவிட்டது. முதல் காட்சியே நடிகர்திலகம் அறிமுகமாகும் பாடல் காட்சி(சுதந்திர பூமியில் பல வகை மனிதரும்). தொடர்ந்து NT-யின் தங்கையாக வரும் குமாரி பத்மினியை ஒரு அடியாளிடமிருந்து காப்பாற்ற முத்துராமன்,அவனை கொலை செய்துவிட, ஊர் மத்தியில் எல்லோரையும் சோதனை செய்யும் வீரர்கள், அந்த நேரம் முத்துராமனின் உடையில் படிந்திருக்கும் ரத்தக்கறையை NT கவனித்து,அதை யாருக்கும் தெரியாமல் முத்துராமனிடம் சுட்டிக்காட்ட, முத்துராமன் மெதுவாக அந்த இடத்தை விட்டு விலக, ஆரம்பமே அமர்களமாக இருக்கும். அந்த விறுவிறுப்பு மட்டும் இடைவேளைக்கு பிறகு இருந்திருந்தால்,படம் மிக பெரிய வெற்றி பெற்றிருக்கும். இப்படி இருந்தும் முதல் 10 நாட்கள் மதுரையில் படம் எல்லா காட்சிகளும் House Full.
இந்த படத்தில் இடைவேளைக்கு முன்னால் நம்பியாரின் கோட்டைக்கு ரகசியமாக 5 பேர் சென்று புரட்சியை நடத்த முடிவு எடுக்கப்படும். பெண் என்பதால் JJ வேண்டாம் என்று NT சொல்லுவார். பிறகு வண்ண காசுக்களை எல்லோரும் எடுக்க செய்து அதில் சிவப்பு(?) வண்ணம் யார் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் செல்வதாக முடிவாகும். JJ-விற்கு அது கிடைக்க, மீண்டும் எதிர்ப்பு வரும். அப்போது JJ பேசும் ஒரு வசனம்"நான் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவள். என்னை யாரும் நிராகரிக்க முடியாது".
ஆங்கில மூலப்படத்தில் கதாநாயகன் இறுதியில் பீரங்கி குண்டுக்களுக்கு இரையாகி இறந்துவிடுவதாக இருக்கும். தமிழிலும் அப்படிதான் முதலில் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் தான் தலைப்பு கூட கேள்விக்குறியாக வைக்கப்பட்டது. (இடைவேளைக்கு முன்னால் "தர்மம் எங்கே? நியாயம் எங்கே? நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே?" என்ற சீர்காழி பாடலும் இடம் பெற்றது).ஆனால் அந்த காலத்தில் நடிகர்திலகத்தின் தொடர் வெற்றிகள் சோக முடிவை சந்தோஷ முடிவாக மாற்றியது. சோக முடிவிற்காக வைக்கப்பட்ட தலைப்பை கடைசி காட்சியில் முத்துராமனை விட்டு ஒரு வசனம் பேச வைத்து "தர்மம் எங்கே என்று கேட்டவர்களுக்கு,அது இங்கே இருக்குன்னு நீ நிரூபிச்சிடே" என்று Justify பண்ணுவார்கள்.மதுரையில் 49 நாட்கள் ஓடின இந்த படம் AVM ராஜன் நடித்த பதிலுக்கு பதில் வெளியான போது(செப் 2,1972) மாற்றப்பட்டது..
thiru ragavendra and mr.gopal avarhalukku pudhiavaahia ennai receive seithatharkku nandri. mattrum ungal ellorudaya pathivuhalum armai. athodu neriyana correct -aana thahavalkalai perithum ethirnoakkum anban...
நண்பர்களே,
இன்றைய தினமலர் செய்தித்தாள் வலைத்தளத்தில் வந்துள்ள ஒரு உருக்கமான கடிதம்..உங்கள பார்வைக்கு..(நன்றி:தினமலர்)
================================================== ================================================== =======================
சினிமா நூற்றாண்டு விழா கமிட்டிக்கு சிவாஜி ரசிகனின் கண்ணீர் கடிதம் - ஸ்பெஷல் ஸ்டோரி!
22
Sivaji fans request to 100th Indian Cinema Celebration Committee : Special Story
அன்புள்ள சினிமா நூற்றாண்டு விழா அமைப்பாளர்களுக்கு அடியேன் சிவாஜி ரசிகனின் அன்பு வணக்கம்...
நம்ம பாரத தேசத்துக்குள்ள சினிமா வந்து 100 வருஷம் ஆகிப்போச்சுங்களாம். நம்ம தமிழ்நாட்டுக்குள்ள சினிமா வந்து 75 வருஷம் ஆகிப்போச்சுங்களாம். அந்த விபரமெல்லாம் எனக்கு தெரியாதுங்க. நான் வணங்குற தெய்வம், என் அன்பு அண்ணன் சிவாஜி பத்திதான் எனக்கு தெரியுமுங்க. விழுப்புரம் கணேசனா இருந்தவரு சிவாஜி கணேசனா மாறின கதைதான் தெரியுமுங்க. பராசக்திலேருந்து பூப்பறிக்க வருகிறோம் வரைக்கும் 300க்கும் கூடுதலா அவர் நடிச்ச படங்கதான் தெரியுமுங்க. சிவபெருமான், சிவத் தொண்டர், வீரபாகு, கிருஷ்ணன், இப்படியாப்பட்ட கடவுள்கள நாங்க அவர் உருவத்துலதாங்க பார்த்திருக்கோம். கப்பலோட்டிய தமிழன், பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜசோழன் இவுங்களையும் அவர் உருவத்துலதாங்க பார்த்திருக்கோம். இன்னிக்கு நாலு வேடத்துல நடிக்கிறோம் அஞ்சு வேடத்துல நடிக்கிறோம்னு பீத்திக்கிறாங்களே அன்னிக்கே 9 வேஷத்துல நடிச்ச மனுஷன் அவரு. சஸ்பென்ஸ் திரில்லர் படம் எடுக்குறோம்னு பெருமையா சொல்றாங்களே. புதிய பறவையை விடவாய்யா ஒரு சக்சஸ் த்ரில்லர் வேணும்.
அவரு பண்றதெல்லாம் ஓவர் ஆக்டிங்குன்னு அவருக்கு பிடிக்காதவங்க சிலபேரு சொல்லுவாங்க. அந்த காலத்துல அதுதான்யா நடிப்பு. அவரும் தேவர் மகன், முதல் மரியாதையில நீங்க சொல்ற யதார்த்த நடிப்ப காட்டலியா. சிலபேரு அவரு ரொம்ப சிக்கனவாதி, யாருக்கும் எதுவும் செய்றதில்லேன்னு நாக்குல பல்லுபடாம சொல்லுவாங்க. மற்றவங்க மாதிரி உதவி பண்ணிக்கிட்டு அதை பப்ளிசிட்டி பண்ணிக்க தெரியாது அவருக்கு. வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை இருக்கே பாஞ்சாலங்குறிச்சியில அதுக்கு இடமும் வாங்கி கொடுத்து சிலைய அமைச்சும் கொடுத்தது யாரு.. இன்னும் நிறைய இருக்கு.
மக்களுக்காக கட்சி ஆரம்பிச்சு சொத்துல பாதிய இழந்தது யாருக்காவது தெரியுமாய்யா?, பொய் சொல்லத் தெரியாம, துரோகம் பண்ணத் தெரியாம வேளைக்கு ஒண்ண பேசத்தெரியாம அரசியலுக்கு நாம லாயக்கில்லேண்ணு ஒதுங்கினவருய்யா அவரு. காமராசர் ஒருத்தரை மட்டும்தான் கடைசி வரைக்கும் தலைவரா நினைச்சு வாழ்ந்தவரு. இன்னிக்கு புதுசா நடிக்க வர்றவங்க ரெண்டு படத்துலயே நாலு பங்களா கட்டிக்கிறாங்களே. ஆனா என் தலைவனுக்கு இப்பவும் அன்னை இல்லமும், ராயபுரம் சிவாஜி பிலிம்சும், சூரக்கோட்டை பண்ணையும்தான்ய்யா சொந்தம்.
இதையல்லாம் நான் ஏன் உங்களுக்கு எழுதுறேன்னா. சினிமாவோட 100வது பிறந்த வருஷத்தை கொண்டாடப்போறீங்க. ரொம்ப சந்தோஷம். அம்பது வருஷம் சினிமா நடிப்புன்னு வாழ்ந்தானே என் தலைவன் அவனுக்கு என்னய்யா செய்யப்போறீங்க. இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்கீங்க. அவரு செத்த அன்னிக்கு சினிமா உலகமே கூடி அழுததோட சரி, அதுக்குபிறகு அவரை மறந்துட்டு அவுங்கவுங்க வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த நடிகர் சங்கம் என்னிக்காவது அந்த மனுஷனோட பிறந்த நாளை நினைவு நாளை கொண்டாடி இருக்கா. ஆளுயரத்துக்கு அவரோட படத்தை மாட்டி வச்சிருக்காங்களே அதுக்காவது ஒரு மாலைய வாங்கிப் போட்டிருப்பாங்களா. ஆனா மேடையில பேசுறப்போ மட்டும் சிவாஜியை பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன்னு நாக்கூசாம சொல்லுவாங்க.
அடையார் சத்யா ஸ்டூடியோவுக்கு எதிர்ல 2005ம் வருஷம் 22ந் தேதி சிவாஜி மணிமண்டபம் கட்டப்போறோம்னு பூமி பூஜை போட்டப்ப அம்புட்டு சந்தோஷப்பட்டோம். இன்னிக்கு 8 வருஷம் தாண்டிப்போச்சு யாராவது அதை எட்டிப்பார்த்திருக்கீங்களாய்யா. அரசாங்கம் ஒதுக்கின 12 கிரவுண்டு இடமும் சும்மா கிடக்குது. அரசு ஒதுக்கின இடத்தை பயன்படுத்தலேன்னா குறிப்பிட்ட வருஷத்துக்கு பிறகு அரசாங்கம் அதை எடுத்துக்கும் அந்த வருஷத்தையும் நெருங்குது தெரியுமாய்யா? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரெண்டு நடிகராவது ஆட்சிக்கு வேண்டியவங்களா இருக்கீங்க. யாராவது இதை அரசாங்கத்தோட கவனத்துக்கு கொண்டு போயிருக்கீங்களா?
சிவாஜி மணிமண்டபத்துல தியேட்டர் வரப்போவுது, நாடக கொட்டகை வரப்போவுது, நடிப்பு கல்லூரி வரப்போவுது, சிவாஜி மியூசியம் அமைச்சு அதுல அவரோட போட்டோ அவர் அணிந்த உடைகள் எல்லாத்தையும் வைக்கபோறோம்னு கதை கதையா சொன்னீங்க; எல்லாம் எங்கேய்யா போச்சு. சினிமால காட்டுற மாதிரியே சிவாஜி ரசிகனுக்கும் சீன் காட்டிட்டீங்கல்ல. அன்னிக்கு ஒரு கோடி ரூபாய்ல கட்டப்போறதா திட்டம் சொன்னீங்க. இன்னிக்கு ஒரு கோடி ரூபாய்ல காம்பவுண்டு சுவர்கூட கட்ட முடியாதுங்களே.
சரி அதுபோகட்டும் விடுங்க, அம்மா மணிமண்டபத்துக்கு இடம் கொடுத்தாங்க. அதை கட்டினா பேரு அம்மாவுக்கு போயிடும்னு, அய்யா அதை அப்படியே போட்டுட்டு நாற்பதாண்டுகால நண்பனுக்கு சிலை வைக்கறேன்னு பீச் ரோட்டுல சிலை வச்சாரு. அதுக்கு இன்னய வரைக்கும் தினமும் மாலைபோடுறது சிவாஜி குடும்பந்தான்யா. அட அதுக்குகூடவா நடிகர் சங்கத்தால முடியாம போச்சு. அரசாங்கம் சார்புல பிறந்த நாள் நினைவு நாளுக்கு அமைச்சருங்க மாலை போட்டு மரியாதை செய்வாங்க. அந்த லிஸ்ட்டுலகூட என் தலைவன் இல்லய்யா. அட நீங்களாவது அவரது பிறந்த நாள், நினைவு நாளுக்கு அவரது சிலைக்கு மாலை போட்டிருக்கீங்களா. கர்நாடகாவுல போயி பாருங்க ராஜ்குமாரோட பிறந்த நாளை தீபாவளி மாதிரி கொண்டாடுறாங்க. தெலுங்கு பக்கம் போயி பாருங்க என்.டி.ஆரை தெய்வமா கொண்டாடுறாங்க. நீங்க அந்த அளவுக்கு செய்யவேணாம்யா. அந்த மனுஷனை நினைச்சாவது பார்க்கலாமுல்ல.
இன்னும் நிறைய வவுத்தெரிச்சல் இருக்குது. யாருகிட்டபோயி சொல்றதுன்னுதான் தெரியல. ஏதோ நீங்க விழா கொண்டாடப்போறதால உங்ககிட்ட சொன்னா எதுனாச்சும் செய்வீங்கல்ல அதான் சொன்னேன். குறைஞ்ச பட்சம் அவரோட மணிமண்டபத்துக்காவது ஒரு வழி சொல்லாம நீங்க சினிமா 100 விழா கொண்டாடினீங்கன்னா சாமி இல்லாம தேர்திருவிழா கொண்டாடின மாதிரிதான் இருக்கும். தப்பா எதுனாச்சும் சொல்லியிருந்தா மன்னிச்சிருங்க சாமிங்களா.
அன்புள்ள
சிவாஜி ரசிகன்
சுகாராம்,
நீங்கள் பதிவுகளை மாற்றி மாற்றி போடுவதால் ,குழம்பி விட்டீர்களா? இங்கு சுத்தமான சுகாதாரமான, நெறியான, நேர்மையான, ஆதாரத்துடன் கூடிய உண்மை செய்திகளை மட்டுமே எதிர்பார்க்கலாம். நடிகர்திலகம் தன வாழ்வில் காந்திய,காமராஜ் வழியில் நெறிமுறைகளை கடைபிடித்தது போல, படித்த ,பண்புள்ளவர் கூடும் இடமாக இந்த திரி புகழ் அடைந்துள்ளது.நீங்களும் நேர்மையான பதிவுகளை இங்கு இடலாம். உங்களுக்கு பிடித்த நடிகர்திலகத்தின் படங்களுக்கு ஏற்கெனெவே விமர்சனங்களும் ,ஆய்வுகளும் நடந்தேறி விட்டன. கூடிய விரைவில் லிங்க் தருகிறேன்.