http://i59.tinypic.com/2yv47wm.jpg
http://i60.tinypic.com/21oyk9w.jpg
Printable View
இதுவரை பார்த்திராத பொக்கிஷமான புகைப்படங்கள் திரு.எஸ்.வி.சார். நன்றிகள். திரு.அசோகன், திரு. சொர்ணத்தை தவிரவும், சொர்ணம் அருகே கும்பிட்டபடி நிற்பவர் திரு. மாடக்குளம் தர்மலிங்கம். அவருக்குப் பின் உயரமாக நிற்பவர் திரு.ஜஸ்டின். வேறு யாராவது தெரிந்தால் நண்பர்கள் சொல்ல வேண்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சகோதரர் திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கு,
நேற்று நான் வெண்ணிற ஆடை நிர்மலா ஐ.பி.கொடுத்தவர் என்பதால் எம்.எல்.சி. ஆக முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அது தொடர்பாக நெட்டில் இருந்து தகவலை பதிவிட்டதற்கு நன்றி. ஆனால், நிர்மலாவுக்கு எம்.எல்.சி. பதவி கிடைக்கவில்லை என்பதற்காக மேலவையை தலைவர் கலைக்கவில்லை. 1984ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடாத திமுக தலைவர் கருணாநிதி அப்போது மேலவை உறுப்பினராக இருந்தார். மேலவை கலைக்கப்பட்டதற்கு பின்னால் சில அரசியல் மற்றும் அரசுக்கு தேவையில்லாத செலவு போன்ற சில காரணங்கள் உண்டு. அப்போது, சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், மேலவை கலைப்பு தொடர்பான தீர்மானத்தின்போது அதை எதிர்க்கவில்லை. அதெல்லாம் நேரம் கிடைக்கும்போது அலசுவோம்.
திரு.ஜெய்சங்கர் சார் அவர்கள் கூறியதுபோல, நெட்டில் இருந்து எடுத்து பதிவிடும்போது சில தவறான தகவல்கள், கருத்துக்கள் வெளியாகிவிடுகின்றன. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalaiventhan sir thanks for clarification
நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,
தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கும், நண்பர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் அவர்களது சிறப்பான பணிகளையும் குறிப்பிட்டு பாராட்டியதற்கும் மிக்க நன்றி. இது உங்கள் பெருந்தன்மையையும் பரந்த மனப்பான்மையையும் மட்டுமின்றி, தன்னம்பிக்கையையும் காட்டுகிறது.
உங்களின் சமீபத்திய பதிவு ஒன்றில் இருந்து உங்களின் வயது 43 என்று கணிக்கிறேன். இளைஞர்தான். என்றாலும், இன்னொரு சமீபத்திய பதிவில், தங்களுக்கு வேலைச் சுமையுடன் தொடர் பயணங்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். பயண களைப்போடு, ஹோட்டலில் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். உடல் நலனை கவனித்துக் கொள்ளவும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i1170.photobucket.com/albums/...pseb6062e8.jpg
The cast and Crew of the move Anbe Vaa in 1966.The movie is popular even today for its music composed by M.S. Viswanathan and penned by Vaali.
#AVMproductions