நடிகர்திலத்தின் பிறந்தநாள் விழா இணைப்புடன் வசந்தமாளிகை http://i1065.photobucket.com/albums/...psnrmrt9g2.jpg
Printable View
நடிகர்திலத்தின் பிறந்தநாள் விழா இணைப்புடன் வசந்தமாளிகை http://i1065.photobucket.com/albums/...psnrmrt9g2.jpg
தங்கப்பதக்கம் நாடக விளம்பரம்
முழுப்பக்கம்
தினத்தந்தி http://i1065.photobucket.com/albums/...psaajtyodu.jpg
Vikram Prabhu on his own has till today given 5000 to 7000 needed people food packets & 2000 people with packets of milk ... http://i1065.photobucket.com/albums/...psksznqrl9.jpg
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழாவிற்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் விஜயம் செய்கிறார் என்ற செய்தி வந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
மறு நாள் அக்டோபர் 29 நடிகர் திலகம் வரப் போகிறார் என்று தெரிந்ததும் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க ஆராம்பித்தது அதற்கு முன்பு அவரை நேரில் பார்த்த அனுபவங்கள் மனதில் நிழலாட தொடங்கின.
நினைவு தெரிந்த பிறகு 1966-ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது மதுரையின் நான்கு மாசி வீதிகளில் ஊரவலமாக அழைத்து வரப்பட்டார் அப்போதுதான் அவரை முதன் முறையாக பார்த்தேன்.
1970- நவம்பரில் ராமன் எத்தனை ராமனடி 100-வது நாள் விழாவிற்கு நியூசினிமா வந்தபோது அந்த காட்சிக்கு போய் அவரைப் பார்த்தது இரண்டாம் முறை
1971- பொது தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது பார்த்தது மூன்றாம் முறை.
அதன் பிறகு அவர் பலமுறை மதுரை வந்திருந்தாலும் இப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு அமைகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் பல முறை அவர் வந்தபோதும் அவர் தங்கியிருந்த இடமோ அல்லது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வோ நடைபெற்றது நகரின் வேறு இடத்தில. ஆனால் இப்போது எங்கள் வீட்டிற்கு வெகு அருகே அமைந்திருக்கக் கூடிய சென்ட்ரல் சினிமாவிற்கு வருகிறார். ஆகவே வாய்ப்பு கூடுதல்
ஆனால் மனதில் ஒரு சந்தேகம். அவர் மதியக் காட்சிக்கு மட்டும் வருகிறாரா அல்லது மூன்று காட்சிகளுக்கும் வருகிறாரா என்பது குழப்பமாக இருந்தது பலரிடம் கேட்டும் யாருக்கும் சரியாக தெரியவில்லை. மாட்னி ஷோவிற்கு உறுதியாக வருகிறார் என்பது மட்டுமே சொன்னார்கள்.
எப்படி போவது? எப்படி டிக்கெட் வாங்குவது போன்ற கேள்விகள் மனதில் வட்டமிட ஆரம்பித்தன. கஸினிடம் கேட்டதற்கு பார்ப்போம் என்று சொன்னான். அதைப் பற்றியே நினைத்து நினைத்து பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டருகே குடியிருந்த சக வயது நண்பன் ஒருவனும் [வசந்த மாளிகை 100-வது காட்சி பார்க்க என்னுடன் வந்தவன்] தானும் வருவதாக சொன்னான்.
மறுநாள் விடிந்தது. காலை தினத்தந்தி விளம்பரத்தில் மதியக் காட்சிக்கு சென்ட்ரல் திரையரங்கிற்கு விஜயம் செய்கிறார் நடிகர் திலகம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள். நடிகர் திலகத்தோடு மற்ற நட்சத்திரங்களும் மேடையில் தோன்றும் அந்த வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வசந்த மாளிகையின் மதுரை விநியோகஸ்தரும் விளம்பரம் கொடுத்திருந்தார். மட்டுமல்ல, முதல் நாள் இரவு வரை நடைபெற்ற 103 காட்சிகளும் அரங்கு நிறைந்ததையும் குறிப்பிட்டு வெள்ளிவிழாவை நோக்கி வெற்றி நடை போடுகிறது என்ற வாக்கியத்தையும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான 31-வது நாளன்றே வெள்ளி விழா என்று கொடுக்கபப்ட்டது என்று சொன்னால் படத்தின் வெற்றி பற்றி எந்தளவிற்கு நம்பிக்கையாக இருந்தார்கள் என்பது புரியும்.
அன்றைய நாட்களில் நகரில் ஓடும் அனைத்துப் படங்களின் விளம்பரமும் தினசரி தினத்தந்தியில் வெளியாகும். மதுரை பதிப்பில் வெளியாகும் விளம்பரம் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் படங்கள் ஓடும் பட்டியலை கொண்டிருக்கும். இந்த விளம்பர செலவு அந்தந்த ஏரியா விநியோகஸ்தரை சார்ந்தது.
இரண்டு மூன்று முறை தியேட்டர் பக்கம் போய் வந்தாகி விட்டது. தியேட்டர் வாசலில் பரபரப்பான சூழலும் ரசிகர்கள் கூடி நிற்பதையும் பார்க்க முடிந்தது. டிக்கெட் பற்றி கஸினிடம் கேட்டால் சொல்லியிருக்கேன். இன்னும் கிடைக்கலை என்றான். காலை முடிந்து பகல் வந்தது. ஆனாலும் ஒன்றும் தெரியவில்லை. தியேட்டர் பக்கம் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி சென்ற கஸினையும் காணவில்லை.
பகல் காட்சி ஆரம்பிக்கும் நேரம் கடந்து சென்றவுடன் புரிந்து விட்டது டிக்கெட் கிடைக்கவில்லை என்று. மூன்று மூன்றரை மணி சுமார் நானும் பக்கத்து வீட்டு நண்பனும் அப்படியே சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போகிறோம். ஹவுஸ் புல் போர்டு மாட்டப்பட்டிருக்கிறது. தியேட்டர் வாசலில் பெருங்கூட்டம். இன்னமும் நடிகர் திலகமும் ஏனைய நட்சத்திரங்களும் வரவில்லை என்பது புரிந்தது. ரேஸ் கோர்ஸ் அருகே அமைந்திருக்க கூடிய பாண்டியன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் திலகமும் மற்றவர்களும் தியேட்டரின் முன்புற வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்பதால் அப்போது பார்த்து விடலாம் என்று பெரும்பாலானோர் அங்கே நிற்பது தெரிந்தது.
10,15 நிமிடம் அங்கேயே உலாத்தினோம். திடீரென்று பயங்கரமான கைதட்டலும் வாழ்க கோஷங்களும் கேட்க மேல மாசி வீதியிலிருந்து தியேட்டர் அமைந்திருக்கூடிய டவுன் ஹால் ரோடில் இடது பக்கமாக திரும்பி கார்கள் வருவது தெரிந்தது. ஆனால் அந்த கார்களை பார்த்தவுடன் கூட்டம் முன்னோக்கி பாய்ந்ததில் சிறுவர்களான நாங்கள் நிலைகுலைந்து போனோம். எங்களுக்கு முன்னால் எங்களை விட உயரம் கூடிய மனிதர்கள் நிற்க எத்தனை எம்பி எம்பி குதித்தும் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமாய் போனது.
அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர் தன் அருகில் இருந்தவரிடம் நாம் மேல மாசி வீதி போய் விடலாம். காரணம் இந்த விழா முடிந்து திரும்ப நடிகர் திலகம் பாண்டியன் ஹோட்டல் போகும்போது மேல மாசி வீதி வழியாகத்தானே போக வேண்டும். அப்போது பார்த்து விடலாம் என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட நாங்கள் இருவரும் தியேட்டர் எதிரே அமைந்திருக்க கூடிய கோபால கொத்தன் தெரு தட்டார சந்து வழியாக மேல மாசி வீதி சென்றடைந்தோம்.
(தொடரும்)
அன்புடன்
Dear Muthayyan Sir
Request enbadhan porul kattalai endru ungalukku yaaro thavaraaga koori irukkiraargal endru ninaikiren.
Request endraal vaendugol endru artham.
Neenga arumayaana padangal padhivituleergal. Adharkku nandrigal. Adharkaaga thiriyai savaalukku azhaikaadheergal sir.
Ungalukku ulla gowravam engalidamum ulladhu. Edharkku ippadi oru Ego ?
Ungalaipola alladhu adhaivida kaarasaaramaaga padhivu padhilaaga kodukka enakku 2 vinaadi kooda thevaipadaadhu.
Enadhu noakkam adhu alla . naavadakkam nanmai payakkum.
Rks
https://www.youtube.com/watch?v=Mj6NA7xerm8
"செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை - அது மாறாமல்
தர்மம் - அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள்
ஞானம் பெறலாம்"
- சத்திய வாக்கு.. தீர்க்க தரிசனமான வரிகள்... தலைவரின் பாடல்கள் என்றும் எப்பொழுதும் பொருந்தக் கூடியவை, நல்வழி காட்டக்கூடியவை என்பதற்கு மற்றுமோர் சான்று.. கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் இன்று என்னமாய்ப் பொருந்துகின்றன...
முத்தையன் சார்
தங்களுடைய பதிவுகளை மிகவும் விரும்பும் பலரில் அடியேனும் ஒருவன். தங்கள் விருப்பம் போல தங்கள் பதிவுகளை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். அதை இங்கு ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். ஒரு கோர்வையாக இருக்கட்டுமே என்கிற எண்ணத்தில் தான் ரவி கிரண் சூர்யா கூறியிருக்கிறார். ஒருவரின் தொகுப்பு முடிந்த பிறகு இன்னொருவரின் தொகுப்பு இருந்தால் சேமித்துக் கொள்ளவும் பார்த்து ரசிக்கவும் அதில் முழுமையாக ஈடுபட்டு லயிக்கவும் ஏதுவாக இருக்கும்.
தங்களுடைய நல்ல மனதில் கோபத்திற்கு இடம் தர வேண்டாம்.
அன்புடன்
நண்பர்களே,
நமது அருமை நண்பர்கள், வாசு சாராகட்டும், செந்தில்வேலாகட்டும், முத்தையன் ஆகட்டும், மிகவும் சிரமப்பட்டு, தங்களுடைய முழு அர்ப்பணி்ப்பினையும் கொடுத்து அபூர்வமான நிழற்படங்களையும் ஆவணங்களையும் நமக்களித்து வருகிறார்கள். அதற்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
இதற்கு பிரதியுபகாரமாக குறைந்த பட்சம் நாம் நன்றியை வெளிக்காட்டும் விதமாக நன்றிக்கான பட்டனை சொடுக்கி தெரிவிக்கலாமே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிவிற்கும் வெறும் லைக் பட்டனோடு நிற்காமல் நன்றியை வெளிக்காட்டும் Thanks பட்டனைச் சொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இதை ஒரு விதமான கட்டளையாகக் கூட கொள்க. இனி வரும் இது போன்ற ஆவண மற்றும் நிழற்படப்பதிவுகளுக்கு, அதுவும் நமக்காக தரவேற்றித் தரும் பதிவுகளுக்கு, நமது நன்றியை பட்டன் மூலமாக சொடுக்க வேண்டும் என்பதை நாம் கட்டாயமாகக்கிக் கொள்வோம்.
குலமா குணமா
100வது நாள்
தினமலர் http://i1065.photobucket.com/albums/...psmjoygbrt.jpg
100th day advt. BABU http://i1065.photobucket.com/albums/...psb0uowqwc.jpg
முதலில் பதிவுகளை மேற்கொண்டது நான்தான்..இடையில் வேறொரு நண்பர் பதிவுகளை மேற்கொண்டார்..எனக்காக அவர் பொறுத்து கொண்டிருக்கலாம்..நடுவில் ரவிகிரன் தேவை இல்லாமல் என்னக்கு அறிவுரை வழங்கினார்..இந்த நிகழ்வு ஏற்கனவே நிகழ்ந்துள்ளது..தேவையில்லாமல் ரவிகிரன் என் பதிவுகளில் தலையிடுகிறார்..இது இரண்டாவது நிகழ்வு என்பதை நடிகர் திலகத்தின் பக்தர்களுக்கு தெரிவித்து விளக்கம் சொல்வது என் கடமை ஆகும்..மக்கள் திலகத்தின் பக்தனான நான் நடிகர் திலத்தின் பதிவுகளை மேற்கொள்வது ..நம்மை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தில்தான்..ரவிகிரன் அவர்களுக்கு இது பிடிக்கவில்லை என்று நினைக்கிறன்..இந்த திரிகளில் என் உடல் நிலை சரியில்ல என்றாலும் இரு பெரும் திலங்களின் வருங்கால சமுதாயதிற்கு தெரிய படுத்த வேண்டும்..என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற ஆவலில் தான்..எனக்கு முகநூலே போதும்..இருந்தாலும் இந்த திரிகளில் பதிவு செய்வதை என் பாக்கியமாக கருதுகிறன்..ரவிகிரன் சார்..என்னை புரிந்துகொள்ளுங்கள்..நானும் சராசரி மனிதன்தான்..தெய்வம் கிடையாது;.என்ன நினைகேரோனோ அதை உடனே சொல்லிவேடுவேன்.. மிகுந்த வருத்தத்தில் உள்ளேன்..வாழ்க எம்ஜியார்..வளர்க அவரின் பக்தர்கள்..
இனிய நண்பர் முதய்யன் சார்
தங்கள் என்னைப்பற்றி தவறான ஒரு கருத்து மனதில் பதிய வைத்து உள்ளீர்கள் !
நான் அதற்க்கு பொறுப்பு அல்ல !
உங்களிடம் நான் விண்ணப்பம் தான் வைத்தேன் ! காரணம் ராஜ ராஜ சோழன் திரைப்பட விளம்பரங்கள் நாங்கள் யாரும் இதுவரை இந்தளவிற்கு பார்த்ததில்லை...அதனை திரு செந்தில்வேல் பதிவிட்டபோது அதனை ரசிக்க தான் இரண்டு நாட்கள் அனைவர் சார்பாகவும் கேடேனே தவிர உங்களுக்கு நான் கட்டளை இடவில்லை. உங்களுக்கு மனிதனுக்கு மனிதன் விண்ணப்பம் தான் வைக்க முடியும்...கட்டளை அல்ல !
முன்பு ஒருமுறை நடந்ததும் இதே போல ஒரு சந்தர்ப்பத்தில்தான் ! அப்போதும் விண்ணப்பம் தான் வைத்தேன் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு அப்போதும் இது போல பதிவு செய்தீர்கள் !
உடம்பு சரியில்லாத நிலையில் அப்போது நீங்கள் இருந்ததால் உங்களிடம் இரண்டு மூன்று நாள் ஓய்வு செய்து பதிவு செய்ய வின்னபித்தேனே அல்லாமல் நீங்கள் பதிவு செய்யகூடாது என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை. இது சுதந்திர இந்தியா சார் !
நீங்கள் மட்டுமல்லா...அதனை யார் செய்தாலும் எனது விண்ணப்பம் அதுவாக தான் இருக்கும் ! தனி மனித குரோதம்...தனி மனித தாக்குதல் இது ஒரு நல்ல உறவிற்கு அடையாளம் அல்ல !
நடிகர் திலகம் திரி முன்னேறியது உங்களாலும் தான் முக்கிய காரணம் இனி அப்படி இருக்காது என்பதுபோல கூறினீர்கள் ....திரியின் பாகம் சீக்கிரம் அதிகரிக்கவேண்டும் நகரவேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் பதிவுகளை பதிய வைத்திருந்தால் இந்த நேரம் நடிகர் திலகம் - பாகம் 125 ஐ தாண்டி இருக்கும் !
திரு நெய்வேலி வாசுதேவன் அவர்கள் ஒருவரே அதை விரல் சொடுக்கும் நேரத்தில் செய்து என்றோ முடித்திருப்பார் !
அந்த நிலையில் எண்ணத்தில் நோக்கத்தில் இங்கு எவருமே இல்லை.
எங்கள் நோக்கமே வேறு...தரமான பக்கங்கள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம்...
படிக்கும் பொதுமக்கள் அனைவரும் நல்ல ஒரு விஷயங்களை, பார்க்க முடியாத அந்தகால ORIGINAL பதிவுகளை பதிக்கவேண்டும் என்று நினைக்கிறோம் அல்லாது பக்கங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என்பது எங்கள் குறிக்கோள் அல்ல ! நீங்கள் அதனையும் புரிந்துகொள்ளவேண்டும் ! திரிகளும் ஒருவரை மட்டுமே நம்பி உள்ளது அல்ல !
திரு செந்தில்வேல் அவர்கள் உங்களுக்கு முன்பாகவே பதிவு செய்துகொண்டிருந்தார் நேற்றைய விஷயத்தை பொருத்தவரை ..! குறவஞ்சி பிறகு கூட ரசிக்கலாமே என்று தான் உங்களிடம் விண்ணப்பித்தேன்...காரணம் ...உங்கள் படங்களை நல்ல நேரம் எடுத்துக்கொண்டு ரசனையுடன் பார்த்து மகிழ்ச்சி அடையவேண்டிய படங்கள்....ஆகவே தான் உங்களிடம் விண்ணப்பித்தேன்...!
நான் கூட உங்களை போல வேண்டுமானால்....கூறலாம்...எப்போதெல்லாம் நடிகர் திலகம் பற்றி விளக்கவுரை வருகிறதோ...எப்போதெல்லாம் நல்ல பார்காத விளம்பரங்கள் வருகிறதோ...அப்போதெல்லாம்..தொடர்ந்து முத்தையன் அவர்கள் 30 முதல் 40 படங்களை தொடர்ந்து போட்டு மற்ற பதிவுகளை பார்க்க முடியாத வண்ணம் வேண்டும் என்றே செய்கிறார் என்று நான் கூட உங்கள் மீது குற்றசாடினை வைக்கலாம்...அனால் நான் அப்படி சொல்லவில்லையே...நிகழ்வுகள் அப்படி இருந்தாலுமே !
ஆகவே ...தனி மனித ego அதை களைவது அனைவருக்கும் நலம் அம்மு அவர்களே....!
Rks
Coimbatore. District record
http://i1065.photobucket.com/albums/...psmdtpvebe.jpg
இனிய நண்பர் திரு செந்தில்வேல் அவர்களே...
தங்களுடைய original ஆவணங்கள் அனைத்தும் முத்துக்கள்.
அனைவருக்கு இது பகிர்ந்துகொண்டு உண்மையான தகவல் அனைவருக்கும் தெரியவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நீங்கள் பதிவு செய்த இந்த விளம்பரங்கள்..வசூல் விளம்பரங்கள் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது !
தங்களது முயற்ச்சியில் ராஜ ராஜ சோழன் படத்தின் வசூல் விபரங்கள் எங்காவது இருப்பின் அதனையும் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் !
பின் குறிப்பு :
நீதி திரைப்படத்தின் 28 நாட்கள் வசூல் ராஜா திரைப்படத்தின் வசூலை முறியடித்த விபரம் முதல் முறையாக இனைய தளத்தில் வந்துள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது ! காரணம் நான் சொல்லவேண்டியதில்லை ! அதுவரை வெளிவந்த படங்களில் வசூலில் நீதி அந்த நாட்களில் முதலில் நிற்கிறது என்பதை இது எடுத்து காட்டுகிறது !
மேலும் அவன் தான் மனிதன் திரைப்படம்கோவையில் அதுவரை வெளியான அனைத்து பட வசூலையும் முறியடித்து முன்னணியில் இருந்த விஷயமும் உங்களுடைய முயற்சியால் பரந்த மனப்பான்மையால் இந்த விளம்பரம் மூலம் இன்று வெட்டவெளிச்சமாகி உள்ளது
உங்களது சேவைக்கும் நடிகர் திலகம் புகழ் ஞாயமாக நேர்மையாக பரப்பும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
தங்கள் அனைத்து ஆதார ஆவன பதிவுகளும் சிறந்ததாக உள்ளது..
தொடர்ந்து பகிருங்கள் ..மிக்க நன்றி !
Rks
திரு செந்தில்வேல் அவர்களே
ராஜ ராஜ சோழன் திரைப்படம் பற்றி பேசினாலே ...அது தோல்வி படம் என்றும் ...முக்கியமாக எதிர்பார்த்த வசூல் செய்யவில்லை என்றும் ஒரு குற்றசாட்டு ஒரு சாரர் எப்போதுமே கூறிக்கொண்டு இருப்பார்கள் .அது முழு சோற்றில் மறைத்த பூசணிக்காய் ...மிக மிக பொய்யான ஒரு புளுகு என்பதற்கு அறிகுறியாக அமைகிறது நீங்கள் பதிவு செய்த விளம்பரம் ...
http://i501.photobucket.com/albums/e...ps3qa11p9y.jpg
ஒரு திரைப்படம் ரெண்டாவது வாரத்திலயே Rs. 25,00,000 ( TWENTY FIVE LAKH RUPEES )வசூல் செய்துள்ளது என்றால் வசூல் ரீதியாக எவ்வளவு பெரிய ஒரு இமாலய வெற்றி என்பது தெள்ளம் தெளிவாக தெளிந்த நீரோடை போல தெரிகிறது.
மேலும் தமிழ் பட உலகிலயே இந்த அசுர வசூலின் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது.
செய்தித்தாளில் பதிவிடும் அளவிற்கு மின்சார வெட்டு இருந்திருக்கிறது என்றால் அது எந்தளவிற்கு இருந்திருக்கும் என்று புரிந்துகொள்ளலாம். அப்படி ஒரு பயங்கர மின்சார வெட்டிலும் இப்படி ஒரு அசுர வசூல் நமது நடிகர் திலகம் நடித்த ராஜ ராஜ சோழன் திரைப்படம் செய்துள்ளது என்றால் மின்சார வெட்டு இல்லாமல் இருந்திருந்தால் அதனை விட பல மடங்கு வசூல் செய்திருக்கும் என்பதை தான் இந்த விளம்பரம் புரியவைக்கிறது !
இந்த ஒரு காரனத்திர்க்காகதான் ராஜ ராஜ சோழன் திரைப்படம் எதிர்பார்த்த வசூல் தரவில்லை என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளனர் என்பது இதில் இருந்து உளன்கை நெல்லிகநிபோல தெரிகிறது !
ராஜ ராஜ சோழன் திரைப்படம் மிக பெரிய வெற்றிப்படம் மட்டுமல்ல...
ஒரு அசுர வசூல் செய்த சரித்திர காவியம் என்பது
இதன் மூலம் டிசம்பர் 9 ஆம் தேதி 2015 ஆம் வருடம் நிரூபிக்கப்பட்டு, பொய் தகவல் பரப்பியவர்களுக்கு அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது !
மிக்க நன்றி திரு செந்தில்வேல் சார் !
RKS
திரு விக்ரம் பிரபு மற்றும் திரு பிரபு அவர்களுடைய பிரஸ் மீட் - நன்றி YOUTUBE
https://www.youtube.com/watch?v=FnRFf76Rt-E
முத்தையன் சார்,
இங்கே நடிகர் திலகம் திரியில் அனைவரும் சமம். அது போலவே அனைவரும் இங்கே வரவேற்கப்படுவார்கள். நண்பர் ஆர்கேஎஸ் அவர்கள் ஒரு வேண்டுகோள் வைத்தார்.அதில் உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் நாகரீகமாக வெளிப்படுதியிருக்கலாம். அதை விடுத்து தரம் தாழ்ந்த சொற்களை பயன்படுத்தியிருப்பது மிகவும் தவறானது இனிமேலாவது இது போன்ற எழுத்துக்களை தவிர்க்கவும்.
அன்புடன்
ஆர்கேஎஸ்,
திரு முத்தையன் அம்மு அவர்களின் சர்ச்சைக்குரிய பதிவுகள் நீக்கப்பட்டு விட்டதால் அதை குறித்து நீங்கள் எழுதிய பதிவையும் நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
மதுரை டவுன் ஹால் ரோட்டில் குறிப்பாக சென்ட்ரல் திரையரங்கில் ஏதேனும் சிவாஜி மன்ற மாநாடு நடைபெறுகிறதா அல்லது நடைபெறப் போகிறதா என்று அந்த தெரு வழியாக செல்பவர்கள் நின்று பார்த்து மலைத்து கேட்டுப் போகிறார்களாம். அரங்க வாசலின் இரு புறத்திலிருந்து ஆரம்பித்து உள்ளே திரையரங்க வளாகம் முழுக்க நடிகர் திலகத்தின் கட் அவுட்களும் பானர்களும் கிட்டத்தட்ட 40,50 வருமாம். நாளைதான் படம் ரிலீஸ். இன்றே இப்படி. வரும் நாட்கள் திருவிழா நாட்கள்தான்.
ராஜா என்றென்றும் ராஜாதானே!
தகவலுக்கு நன்றி vcs
அன்புடன்
மய்யம் இணைய தளத்தில் 9000 பதிவுகளோடு பங்களிப்பினைத் தரும் முத்தையன் அம்மு அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
http://i1028.photobucket.com/albums/...psbjlfu06t.jpg
கவிதை,
கவிதையால்
யோசிக்கப்படுகிறது.
The great poet Bharathi's Birth Anniversary
https://youtu.be/EDAIILa8VPw