-
இயல்பாக மட்டுமே காட்சி அமைந்தால் அது கலைப்படம் !
வெகு ஜனங்கள் ரசிக்க மாட்டார்கள் !
இயல்பாகவும் வெகு ஜனங்கள் ரசிக்கும்படியான நடிப்பு இருந்தால் அது புரட்சிகரமான நடிப்பு இதைத்தான் நம் மக்கள் திலகம் தன் படங்களில் கையாள்வார் இப்பாடல் காட்சியை பாருங்கள் மென்மையான காதல் காட்சி இருவரின் முகபாவங்களையும் குரும்புகளையும் ரசித்து கொண்டே இருக்கலாம் இதிலும் தன் வீரத்தையும் தமிழையும் விடவில்லை பாடலின் ஆரம்ப காட்சியில் வழக்கும் தண்ணீரையும் பொருட்படுத்தாமல் இரண்டு பெரிய பைப்பை பிடித்து ஒரே ஜம்பில் ஏறுவார் டபுள் பார் அடிப்பவருக்கே இது சாத்தியம் !
குளிர் காற்று கிள்ளாத மலர் அல்லவோ !
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ !
நிழல் மேகம் தழவாத நிலவல்லவோ !
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ !
மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ !
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ !... Thanks whatsapp friends...
-
👌🏼வாழ்த்துக்கள்.....சிறிய வேண்டுகோள்! முடிந்தவரை 'லோக்கல்' நடிகர்களையும்,அரசியல்வாதிகளையும் அழைக்காமல் இருப்பதே நமக்கு நலம்....நாங்கள் சொல்லவரும் 'ஒரு சில நடிகர்களால்' பல,பல பிரச்சனைகள்தான் உண்டாகுமேயொழிய, நண்மை பயப்பது, யாதொன்றுமில்லை! உதாரணத்திற்கு ஒரே ஒரு சம்பவம்....சமீபத்தில் 'நாடோடிமன்னன்' Digital Releaseல்....படத்தின் ஆரம்பத்தில் ஒரு நடிகரை(நாகரீகம் கருதி பெயரை தவிர்த்திருக்கிறோம்) காட்டியதற்கு ஏற்பட்ட எதிர்ப்பும்,அதனால் 2 நாட்களில் அதை நீக்கியதும்,அனைவரும் அறிந்த ஒன்றே! அம்மாதிரி ஏதும் ஏற்படாவண்ணம்,மக்கள் திலகத்தின் உயிராய் இருக்கும் மக்களை நம்பினாலே, இம்மாபெரும் விழா உலகளவில் பேரும்,புகழும் பெறும் என்பது மக்கள் திலகத்தின் உண்மை ரசிகர்கள்,வழிவந்தவர்கள்,மற்றும் அனைத்து பொது மக்களின் அன்பு வேண்டுகோளாய் விடுக்கிறோம்.....நன்றி.....அன்பன் , ரசிகன்...
-
எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,காலை சிற்றுண்டி அருந்திவிட்டு ,வெளியே கிளம்ப தயாராகிறார் . அப்பொழுது அவரை அடிக்கடி சந்திக்கும் செல்வாக்கு உள்ள ஒருவர் தன் நண்பர் முருகேசன்(பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவருடன் தலைவரை பார்க்க வந்துள்ளார் . அவரை பார்த்த மக்கள் திலகம் , முதலில் சாப்பிட சொல்கிறார் . பின் உதவி ஏதாவது செய்யனுமா என்று தலைவரே கேட்டுள்ளார் .
வந்தவர் சொன்னார் ,"அண்ணே இவர் பெயர் முருகேசன் ; தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை நடத்திவருகிறார் . அதில் ஒரு சிக்கல் ,கடை சற்று ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது ,இதை காரணமாக வைத்துக்கொண்டு , இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது . வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன் . " என்றார் .
தலைவர் சில நொடி யோசித்துவிட்டு ,புன்னகையுடன் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் .
அதன் பின் மூன்று நாட்கள் ,கோட்டையிலிருந்து வீட்டிற்கு தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார் .போகும்பொழுது பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார் .ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம் , முதல்வராக இருந்துகொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தே வைத்திருந்தார் .
அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார் . பீடா கடை அருகே வந்ததும் , பத்துமீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார். அதிகாரிகளுக்கோ குழப்பம் , திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு , பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .
தலைவர் நம்ம கடையை நோக்கி வர்றாரே என்று முருகேசனுக்கும் குழப்பம் .செய்வதறியாது நிற்கிறார். பீடா கடையை அடைந்த தலைவர் , "என்ன முருகேசா , இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணம் . தொழில் லாம் எப்படி போகுது ? என்று ரொம்ப நாள் பழகிய நண்பன் போல் முருகேசனுடன் உரையாடுகிறார் . முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் உளறுகிறார் .
"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா "என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி , கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா ? அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா ? சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம் என்று ஆளாளுக்கு தாங்கள் கேள்விப்பட்டதை பரப்பிவிடுகிறார்கள் .தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது . வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன் ,பின்னாளில் அவர் கிட்டேயே ரெக்கமன்ட் க்கு வந்தது வேறு விஷயம்
#தலைவர் நினைத்திருந்தால் , தொல்லை கொடுத்தவர்களை போனில் மிரட்டியிருக்கலாம் , அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ , தலைவருக்கோ தகுதியான குணமல்ல .வேறு யாராக இருந்திருந்தால் , இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள் ,இல்லையெனில் ,போனில் மிரட்டியிருப்பார்கள் . அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை நம் கலியுகக் கர்ணனுக்கு மட்டுமே உண்டு . இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்... நன்றி...
-
#திருமதி.#சீதாலட்சுமி எழுதிய "வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்கள்" கட்டுரையிலிருந்து...
எல்லாத் திட்டங்களையும் விட இந்தியாவே ஏன் உலகமே புகழும் ஓர் திட்டம் என்று ஒன்று என்றால் அது திரு. எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட சத்துணவுத் திட்டமாகும். குழந்தைகளின் பசி தீர்க்க வந்த திட்டம். எல்லா கிராமங்களிலும் மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனைப் பார்த்து மற்ற மாநிலங்களிலும் குழந்தைகள் நலத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சத்துணவுத் திட்டத்தைப் பிரித்து தனித் துறையாக ஆக்கும் முயற்சி நடந்தது. ஆனால் நான் முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து அது பற்றிக் கூறியவுடன்... “#தாயையும் #சேயையும் #பிரிக்க #மாட்டேன்” என்று கூறி தடுத்துவிட்டார்.
எம்ஜிஆர் சினிமா உலகில் ஓர் நிர்வாகியாய் வலம் வந்தவர். அவருடைய ரசிகர்கள் தான் அவரது கட்சித் தொண்டர்கள். முதல்வரான பிறகு மற்றவர் மனம் புண்பட குத்தலாக அவர் என்றுமே பேசிய தில்லை. யாருடைய நம்பிக்கைகளையும் விமர்சிக்கவில்லை. அண்ணா அவர்கள் அறிஞர். படித்தவர். ஓர் இயக்கத்தில் இருந்து போராடி வந்தவர். அவர் சீக்கிரம் மறைந்தது ஒரு குறை.
ஆனாலும் "எம்ஜிஆர் அவர்கள் இது கட்சி கொள்கை என்று சாதீய உணர்வுகளை எழுப்பவில்லை..." எல்லோரும் அவரை விரும்பினார்கள்.
அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் விரும்பினாகள். அவர் உடல் நலம் பாதிக்கப்படவும் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் வழிபாடுகள் நடத்தினார்கள் என்பது உலகறிந்த உண்மை.
சில கொள்கைகளுக்காக இயக்கங்கள், கட்சிகள் ஆரம்பிக்கலாம். ஆனால் ஓர் பொறுப்பில் வந்தவுடன் அங்கே துலாக்கோலைப் போல எல்லோருக்கும் நன்மை செய்ய நினைக்க வேண்டும். பிரிவினைகளை வளர்க்கக் கூடாது. காழ்ப்பு உணர்ச்சியைத் தூண்டக் கூடாது. இந்த விஷயத்தில் அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு திரு எம் ஜி ஆர் அவர்கள் எல்லோரையும் அரவணைத்தார்...
எம்,ஜி. ஆர் அவர்கள் ஓர் சினிமாக்காரர்தான். அவர் மிக நல்ல மனிதர். மிகச்சிறந்த மனிதநேயர். அரசியல் உலகில் காலில் வீழும் கலாச்சாரத்தைக் கிண்டல் செய்கின்றவள் நான். #ஆனால் #நானே #என்னை #மறந்து #ஒருவரை #வணங்கினேன் #என்றால் #அது #எம்ஜிஆர் #அவர்களைத் #தான்.
பன்னாட்டுத் தொழிற்சங்கத்தில் மகளிர் நலக் குழுவிற்கு என்னை நியமித்திருந்தார்கள். இது ஓர் தொழில் சங்கம். அரசின் பரிந்துரையல்ல. ஒருவரின் சாதனைகளை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். ஆசியாக் கண்டத்திற்கும் பசிபிக் பகுதிக்கும் என்னைப் பொறுப்பாளராக்கி இருந்தார்கள்.
இந்த செய்தியைக் கூறப் போயிருந்த பொழுது அவர் என்னை வாழ்த்தினார். #அந்த #தெய்வீகமுகமும் #குரலும் #என்னை #அவரை #வணங்கவைத்தது. #தாய்க்குலத்தை #மதிக்கும் #அவர் #குரலில் #அன்று #தாய்மைப்பரிவை #உணர்ந்தேன். யாரையும் புகழ்ந்து எனக்கு இப்பொழுது எந்தக் காரியத்தையும் சாதிக்க வேண்டியதில்லை. என் உணர்வுகளை எழுதுகின்றேன்.
#மனிதநேயம் #உள்ளவர்கள்தான் #மனிதம் #காப்பாற்றுகின்றார்கள்..... Thanks...
-
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு அமுத சுரபி
உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைந்தாலும் அவர்களில் மக்கள் திலகம் ஒருவரின்
புகழ் மட்டுமே அமுத சுரபி போல வந்து கொண்டே இருக்கிறது . அவரை பற்றிய செய்திகள் பலரால் தினமும் நினைவு கூறப்படுகிறது .மக்கள் திலகத்தின் அழியாப்புகழ் ஒரு வரலாற்று சாதனையாகும் .
ஒரு தனி மனிதரின் இயக்கம் 41 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி நடை போடுவதும் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து 50 ஆண்டுகளாக திரை அரங்கில் ஓடிக்கொண்டிருப்பது ,
சின்ன திரையில் அவருடைய படங்கள் , பாடல்கள் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருவது
மூலம் எம்ஜிஆரின் புகழ் அறியப்படுகிறது .
எம்ஜிஆரின் மனித நேயம்- அவரால் பயன் அடைந்தவர்கள் - பலரும் இன்று நினைவு கூர்கிறார்கள் .
மக்கள் திலகத்தின் பெயரை சொல்லிக்கொண்டு வெற்றி பெற்ற எல்லா தரப்பு கட்சி உறுப்பினர்கள்
பாராளுமன்ற - சட்ட மன்ற - மாநகராட்சி மன்ற - உறுப்பினர்கள் முதல் கொண்டு கட்சி நிர்வாகிகள்
தலைமை கழகம் வரை நன்றி மறந்தவர்கள் கூடாரமாக , முதுகெலும்பு இல்லாத மனிதர்களாக
இருட்டடிப்பு செய்யும் இவர்களை நாடு நன்கறியும் .
பதவியில் உள்ளவர்கள் மறந்தாலும் உலகில் உள்ள உண்மையான மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
என்றென்றும் அவரின் நினைவால் வாழ்வார்கள் .
புரட்சித் தலைவர் ரசிகர்கள்...
-
என்னுடைய 21000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் தெரிவித்த பின்வரும் அனைத்து நல் இதயங்களுக்கு இதயங்கனிந்த நன்றி.
திரு.வினோத்,
திரு.சி.எஸ். குமார், ,பெங்களூரு
திரு.கலியபெருமாள், புதுவை ,
திரு.எஸ். குமார், மதுரை,
திரு.தமிழ் நேசன், மதுரை,
திரு.ராஜா, நெல்லை .
திரு.சேகர், கோவை.
திரு.கமலக்கண்ணன், கோவை.
திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
திரு.குமரவேல், திண்டுக்கல் .
திரு.மலரவன், திண்டுக்கல் .
திரு.ஏ.பி.பாபு, பெங்களூரு .
திரு.ராஜு, உரிமைக்குரல் ஆசிரியர் ,
திரு. சேர்மக்கனி , விநியோகஸ்தர் ,
திரு.சொக்கலிங்கம்,திவ்யா பிலிம்ஸ்
திரு.மேஜர் தாசன் , குமுதம் ஆசிரியர் ,
திரு.கலைவேந்தன், தமிழ், இந்து
திரு.ஜேம்ஸ், (பிரேசில் நாடு )
திரு.சுந்தரதாஸ், சிட்னி,ஆஸ்திரேலியா
திரு.வெங்கடேச பெருமாள் ,
திரு.முருகன்
திரு.எஸ். விஜயன், இதயக்கனி ஆசிரியர் ,
திரு.பாஸ்கரன், கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்
திரு.இளவேனில் , எம்.ஜி.ஆர். 100 ஜெயா டிவி
திரு.ராமு, தங்கசாலை, எம்.ஜி.ஆர். பக்தர்
திரு. சுந்தர், மடிப்பாக்கம்
திரு.ஜெகன், ஆரணி .
திரு.ரவி, ஆரணி .
திரு.ஒம்பொடி பிரசாத்
திரு.சுகாராம் .
திரு.மாரிமுத்து
திரு.ஈ.பாண்டியராஜ்
திரு.இளங்கோ .
http://i65.tinypic.com/33p8xoo.jpg
-
கடந்த 3/7/18 முதல் சென்னை பாட்சாவில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நீதிக்கு தலை வணங்கு " தினசரி 3 காட்சிகள் (3 நாட்கள் மட்டும் _ திரையிடப்பட்டது .
http://i63.tinypic.com/2qkihj7.jpg
-
இன்று முதல் (6/7/18) கோவை ராயலில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "சக்கரவர்த்தி திருமகள் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i67.tinypic.com/i529eh.jpg
-
வியாழன் முதல் (5/7/18) மணப்பாறை இந்திராவில்(புதிய அரங்கில் ), மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரமாண்ட வெற்றிப்படமான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகியுள்ளது .
http://i64.tinypic.com/2hn9m9y.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா.
-
இன்று முதல் (6/7/18) நெல்லை கணேஷில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " 4 மாத இடைவெளியில் மீண்டும் திரைக்கு வந்துள்ளது .
http://i64.tinypic.com/ve7mro.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .
-
-
-
-
தமிழ் முரசு -நெல்லை =25/6/18
சமீபத்தில் கார் விபத்தில் எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஆத்தூர் மணி அகால மரணம் அடைந்தார். ஆனால் அது தற்செயலாக நடந்த விபத்து அல்ல என்றும் கார்
டிரைவர் ஏற்கனவே பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு , மீண்டும் பணியில் சேர்ந்தபின் பழி வாங்கும் நோக்கத்தில் காரை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கி
திரு.ஆத்தூர் மணி மரணம் அடைய காரணமாக இருந்தார் என்று விவரம் அறிந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர் தமிழ் முரசு தினசரியில் காரின் முன்பகுதியில் இடது பக்கம் (திரு.ஆத்தூர் மணி அமர்ந்திருந்த பகுதி ) மட்டுமே நசுங்கியுள்ளது பிரசுரம் ஆகியுள்ளது . டிரைவருக்கு காயம் ஏதுமில்லை என்கிற செய்தி . விபத்தில் உயிருக்கு போராடிய திரு.ஆத்தூர் மணியை உடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் நேரம் கடத்தியது போன்ற காரணங்கள்
சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போலுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன .
http://i68.tinypic.com/2ywfz3b.jpg
தகவல்கள் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .
-
-
-
-
-
21000 பதிவுகளைக்கடந்து
நமது திரியில்
பயணிக்கும்
அன்பு நண்பர்
திரு லோகநாதன்
அவர்களுக்கு
எனது
பாராட்டுக்கள்.
-
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
நண்பர்களே
இந்த பதிவு
மிக மிக நீளமான ஆழமான பதிவு
முழுவதும் படித்து பாருங்கள்
தலைவரின்
சரித்திர சாதனைகளை
படித்தபின் உங்கள்
கருத்துக்கள் பகிருங்கள்
எம்.ஜி.ஆர் -அடிமைப்பெண் வெற்றியடைந்தது எப்படி?
அத்தியாயம் - 2
- முனைவர் இராஜேஸ்வரி செல்லையா
புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.
திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்த உளவியல் நிபுணர் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; UNEASY-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். சிலர் அவர் திரையில் நடித்த காலத்தில் விமர்சித்துவிட்டு, பிற்காலத்தில் அவரைப் பாராட்டியதும் உண்டு. தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தும் கேள்விப்பட்டும் விமர்சித்தவர்கள் அவரை அருகில் நெருங்கிப் பார்த்துப் பழகியபோது, அவரது நற்குணங்களைக் கண்டு தம் தவறை உணர்ந்திருக்கின்றனர்.
ஒருமுறை சினிமாவில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் அலைந்தபோது சிலர் அவரை “எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்'' என்றனர். அவரும் வேறு வழியின்றி போய்க் கேட்டார். எம்.ஜி.ஆர் ``உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு போங்கள்'' என்றார். இரவு ஆகிவிட்டது. பணம் கிடைக்கவில்லை. `இனி மானம் போய்விடும்' என்று நினைத்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சட்டைப் பையில் இருந்த முகவரிச் சீட்டைப் பார்த்தார். திடீரென ஞாபகம் வந்தவராக தன் உதவியாளரை அழைத்து உடனே பணம் கொடுத்து அனுப்பினார். நல்ல வேளை அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குள் எம்.ஜி.ஆரின் உதவியாளர் போய்விட்டார். எதிர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் உதவவில்லை என நினைத்திருந்த அந்தக் குடும்பத்தினர், தம் நன்றியைச் சொல்ல இயலாமல் திண்டாடினர். தங்கள் குடும்ப மானமும் தங்கள் மகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டதால், அவர்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கருதினர். இவ்வாறு நண்பர்-பகைவர் எனப் பாரபட்சம் பார்க்காமல், எம்.ஜி.ஆர் பலருக்கும் உதவியுள்ளார். அதனால்தான் இன்னும் அவரைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.
எம்.ஜி.ஆர்., சினிமாவைவிட்டு விலகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன; இந்தப் பூவுலகைவிட்டு மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர் இருப்பது போன்ற ஓர் எண்ணமும் பேச்சும் நிலவிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. காலத்தால் அழியாத காவிய நாயகனாக இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணங்களை இப்போது வெளிவந்திருக்கும் `அடிமைப்பெண்' படத்தை மட்டும் வைத்து ஆராய்வோம்.
எம்.ஜி.ஆரிடம் “உங்களை எவ்வளவு நாள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்?” என்று கேட்டபோது “என் படங்களின் நெகட்டிவ் இருக்கும் வரை'' என்றார். ஆம், அது சத்தியவாக்கு. அவர் படங்களின் நெகட்டிவ் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரை அரங்குகளில் வெற்றி நடைபோடுவதைக் காண்கிறோம். இனி இந்தப் படங்களைப் பாதுகாப்பதும் எளிது. அவர் படங்களை திரை அரங்குக்குப் போய்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, நம்முடைய மொபைல்போனில்கூட நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளைப் பார்க்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. `பாகுபலி'யின் இமாலய வெற்றியும் கதைப் பொருத்தமும் இப்போது சேர்ந்துகொண்டு `அடிமைப்பெண்'ணுக்கு வெண் சாமரம் வீசுகின்றன.
அன்று அடிமைப்பெண்
`அடிமைப்பெண்' படம், 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளிவந்தது. அது ஒரு சாதனைப் படம். எம்.ஜி.ஆரின் முந்தைய சாதனைகளை அவரது படங்களே முறியடிப்பது வழக்கம். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது `அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகின் உச்சத்தை எட்டியபோது இந்தப் படம் வெளிவந்தது. `அடிமைப்பெண்' படம் எடுத்தபோது ஜெயலலிதாவும் அதிக செல்வாக்குடன் இருந்தார். இவரது ஆளுமையையும் செல்வாக்கையும் படம் முழுக்கக் காணலாம். இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்தது, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இயக்கினார். கலைஞரின் மைத்துனர் சொர்ணம் வசனம் எழுதினார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது விளம்பரங்களில் அவரது வில்லி தோற்றத்தை அதிகமாக வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தாலும், அப்பா வேடம் மிகவும் சிறியது. ஒரு சண்டைக் காட்சியும் சில வசனங்களும் மட்டுமே அவருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு இரண்டும் பெரிய கதாபாத்திரங்கள். அத்துடன் ஒரு பாடலும். இதற்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எம்.ஜி.ஆரிடம் 90 மெட்டுக்கள் போட்டுக்காட்டினார். `அம்மா என்றால் அன்பு...' என்ற அந்தப் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவதற்காக டி. எம்.எஸ்-ஸைக் கொண்டு மீண்டும் குழுப்பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெறவில்லை.
`அடிமைப்பெண்'ணின் சாதனை
தமிழில் 1969-ல் வெளிவந்த படங்களில் `அடிமைப்பெண்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படம். சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படம். திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் மூன்று திரை அரங்குகள், கோவையில் இரண்டு திரையரங்குகள், பெங்களூரில் மூன்று திரை அரங்குகள், இலங்கையில் ஏழு திரையரங்குகளில் மட்டுமல்லாது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியது `அடிமைப்பெண்'. மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பண்டரிபாய், அசோகன் போன்றோர் ரசிகர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்தனர்.
இன்றைக்கு `அடிமைப்பெண்' (2017) வெளியாவதற்கு டிஜிட்டல் மாற்றம் காரணமாக பெரியளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள மெலடி, அபிராமி, பிருந்தா போன்ற ஏசி திரையரங்குகளில் வெளியாகி, தன் வெற்றியை மீண்டும் பறைசாற்றியது `அடிமைப்பெண்'. இதேபோன்று மற்ற ஊர்களிலும் நல்ல லாபத்தைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கிடைக்கும் வசூல் காரணமாக, அரசுக்கு நல்ல வரித்தொகையும் கிடைத்தது. இன்றைக்கு படங்களுக்கு வரிவிலக்கு கேட்கின்றனரே தவிர, வரி செலுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் பட விளம்பரங்களில் அரசுக்குச் செலுத்திய வரித்தொகையைக் குறிப்பிட்டு ஒருவரும் விளம்பரம் செய்வது கிடையாது. அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கவே திட்டமிடுகின்றனர்.
அரசியலுக்கு அழைத்த ‘அடிமைப்பெண்’
‘அடிமைப்பெண்'ணின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கு அரசியலில் நேரடியாக அடி எடுத்துவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. அரசியலுக்கு வந்தால் தன்னை ஆதரிப்பார்களா என்பதை அறிய விரும்பிய எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இதுகுறித்து பேசி, தன்னை வைத்து ஒரு படம் எடுக்கும்படி கூறினார். இந்தியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த `அப்னா தேஷ்' என்ற படத்தை `நம் நாடு' என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். அந்தப் படம் `அடிமைப்பெண்' ரிலீஸாகி ஆறு மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவரை அவர் தன் படம் எதையும் வெளியிடவில்லை. 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண்ணான 7- நாள் அன்று தமிழகம் எங்கும் வெளியாயிற்று. சென்னையில் முதல் நாள் திரையரங்குக்கு வந்து நாகி ரெட்டியுடன் `நம் நாடு' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அவரைக் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினார். ``மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். வெற்றி... வெற்றி!'' என்று கூறி மகிழ்ந்தார்.
பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'
`அடிமைப்பெண்' பற்றி பத்திரிகைகள் பல ஆண்டுக்கு முன்பிருந்தே செய்திகளை வெளியிட்டுவந்தது. முதலில் பானுமதி, அஞ்சலிதேவிஎம்.ஜி.ஆர் நடித்து வெளிவருவதாக இருந்தது. பிறகு, சரோஜாதேவி கே.ஆர்.விஜயா மற்றும் ஜெயலலிதா நடித்து படப்பிடிப்பும் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தினால் படம் நின்றுபோயிற்று. இந்தப் படத்தில் இளவரசியான ஜெயலலிதா அடிமைப்பெண்ணாக இருப்பதாகவும், அவரை எம்.ஜி.ஆர் காப்பற்றிக் கொண்டுவந்து அரசியாக்குவதாகவும் கதை அமைந்திருந்தது. இந்தக் கதை கிட்டத்தட்ட `நாடோடி மன்னன்' கதைபோல் இருப்பதால், புதிய கதை உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதா நடிப்பது முடிவானதும், தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'ணின் படப்பிடிப்பு குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பாலைவனத்தில் ஜெயலலிதா ஆடும் நடனத்துக்கு தைக்கப்பட்ட உடைக்கு பல மீட்டர் நீளமான துணி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் ஆடும் மற்றொரு நடனத்தில் அவர் சிறிய முரசுகளைக் கட்டிக்கொண்டு ஆடுகிறார். இதில் அவர் நடனங்கள் வெளிநாட்டுப் பாணியில் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவரது நடனப் பசிக்கு இந்தப் படம் நல்ல தீனியாக அமைந்ததை மறுக்க இயலாது. எகிப்தில் ஆடும் `பெல்லி டான்ஸில்’ உள்ள நடன அசைவுகளை `ஏமாற்றாதே ஏமாறாதே...' பாடலில் தமிழ்ப் படத்துக்கு ஏற்ற வகையில் நடன அசைவுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. `காவல்காரன்' படத்தில் `நினைத்தேன் வந்தாய் நூறு வயது...' பாடல் காட்சியிலும் இதே பெல்லி டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பார்க்கலாம்.
புஷ் குல்லா
`அடிமைப்பெண்' படத்துக்காக படப்பிடிப்புக்குப் போயிருந்த வேளையில்தான் எம்.ஜி.ஆருக்கு புஷ் குல்லா பரிசாகக் கிடைத்தது. அது அவருக்கு அழகாக இருப்பதாக அவர் மனைவி ஜானகி சொன்னதால், அன்று முதல் அவர் அந்த புஷ் குல்லாவைத் தொடர்ந்து அணிந்துவந்தார். அப்போது ஒரு நிருபர், ``நீங்கள் வழுக்கையை மறைக்கத்தான் புஷ் குல்லா அணிகிறீர்களா?'' என்று கேட்டபோது, ``எனக்கு வழுக்கை இருந்தால், மக்கள் என்னை எம்.ஜி.ஆர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?'' என்று பதில் கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கான பதிலை, அந்த நிருபர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் 1985-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றுவந்தபோது வெளியான புகைப்படங்களைப் பார்த்து மக்கள் அவருக்கு அமோகமாக ஓட்டளித்து வெற்றி பெறச்செய்தபோது புரிந்துகொண்டார். அவரது கதை கதாபத்திரம் மற்றும் கொடை உள்ளம் இவையே மக்களை மிகவும் கவர்ந்தன.
1936-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் `சதிலீலாவதி' என்ற படத்தில் நடித்தது முதல் 1969-ம் ஆண்டில் `அடிமைப்பெண்' வெளிவரும் வரை அவரைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, அவர் வயது என்ன என்பதைக் கணக்கிடத் தெரியாதா? அவருக்கும் அந்தந்த வயதுக்குரிய உடலியல் மாற்றங்கள் வரும் என்பது புரியாதா? இருந்தாலும் அவரை மக்கள் ரசித்து மகிழ்ந்ததற்குக் காரணம், அவரது கதையமைப்பும் அதற்கேற்ற கதாபாத்திரப் பொருத்தமும் இளமைத் தோற்றமும் அவரது சுறுசுறுப்பும்தான்.
பாடல் காட்சிகளில் அவர் சும்மா நின்றுகொண்டு பாட மாட்டார். அவரிடம் ஒரு துள்ளலும் உற்சாகமும் ததும்பிக்கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம். அதனால்தான் `வேட்டைக்காரன்' பட விமர்சனத்தில் `கால்களில் சக்கரம் கட்டியிருக்கிறாரோ!' எனக் கேட்டிருந்தது. ஆக, `அடிமைப்பெண்' படப்பிடிப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடல் மெரினாவுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் வரை அவர் புஷ் குல்லா அணிந்திருந்தார்.
எம்.ஜி.ஆரின் கையில் ஒரு வாட்ச்
``நூறு முறையாவது `அடிமைப்பெண்' படத்தைப் பார்த்திருப்பேன்'' என்று கூறும் ஒரு ரசிகர், ஒருநாள் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் கைகுலுக்கி இருக்கிறார். அவர் எம்.ஜி.ஆர் ப்ரியர் அல்லர் வெறியர். எம்.ஜி.ஆர் கார் அங்கு இருந்து நகர்ந்த பிறகும் எம்.ஜி.ஆரைத் தொட்ட இன்பத்திலேயே திளைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் கார் சற்று தொலைவில் நின்றுவிட்டது. மீண்டும் எல்லோரும் கார் அருகில் ஓடினர். அவர் ஒரு வாட்சை நீட்டியபடி வெளியே எட்டிப்பார்த்தார். பிறகுதான் தெரிந்தது, இந்த ரசிகர் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்தபடி காருடன் சிறிது தூரம் ஓடியபோது, அவரது வாட்ச் கழன்று எம்.ஜி.ஆர் மடியில் விழுந்திருப்பது. ரசிகருக்கு இரட்டிப்பு சந்தோஷம். எம்.ஜி.ஆர் தொட்டுத் தந்த வாட்ச், இன்றும் அவருக்குப் பொக்கிஷமாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு அதுதான் பேச்சு.
கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே!
எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், பாலைவனத்து ஒட்டகவாலாக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏராளமான ஒட்டகங்கள் இடம்பெறும் காட்சி ஒன்றில் நடிக்க பாலைவனத்துக்கு வந்த அவர்களுக்கு, தாகம் தீர்க்க எம்.ஜி.ஆர் கிரேடு கிரேடாக கோகோகோலா வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் மனமுவந்து `பெரியமனுஷன்யா அவரு' என்ற அர்த்தத்தில் `படா ஆத்மி’ எனப் புகழ்ந்தனர். படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் வந்த எம்.ஜி.ஆர்., அங்கு நடந்த விபத்துக்கான நிவாரண உதவியாக பெருந்தொகை ஒன்றை முதலமைச்சரிடம் கொடுத்து உதவியிருக்கிறார். மறுநாள் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. எங்கு இருந்தாலும் மலர் மணக்கும் என்பதில் ஆச்சர்யமில்லையே! இந்தப் பாலைவனப் படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவால் மண்ணில் கால் புதைந்து நடக்க இயலவில்லை என்பதால், எம்.ஜி.ஆர் அவரை குழந்தைபோல தூக்கிக்கொண்டு சென்றாராம். உதவி என்பது, பணத்தால் மட்டுமல்ல... நல்ல மனத்தாலும் நடக்கும்.
நிலைத்து நிற்கும் பாத்திரப் படைப்பு
சமீபத்தில் வட மாநிலத்தில் ஒரு விவசாயி, தன்னிடம் உழவு மாடு இல்லாத காரணத்தால் தன் மகள்களை ஏரில் பூட்டி, தன் நிலத்தை உழும் செய்தியைப் படித்தோம். பலர் வருத்தப்பட்டனர். இதே நிலைதான் `அடிமைப்பெண்' படத்தில் வரும் பெண்களுக்கும். அவர்கள் வண்டி இழுக்க வேண்டும், ஏர் உழ வேண்டும், செக்கு இழுக்க வேண்டும். இவர்களை சூரக்காட்டு மன்னனிடமிருந்து வேங்கையன் (எம்.ஜி.ஆர்) காப்பாற்ற வேண்டும். `இது ஏதோ ராஜா காலத்துக் கதை. இதெல்லாம் இன்றைக்கு சரிவராது' என நினைத்து ஒதுக்க முடியாது. எம்.ஜி.ஆரின் படங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் கதையையும் கதாபாத்திரங்களையும் கொண்டிருப்பதால்தான், அவை இன்றும் இளைய சமுதாயத்தினராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன; வரவேற்பு பெறுகின்றன.
ஹீரோ-வை உருவாக்கும் ஜீவா
கிராமங்களில் கட்டுக்கடங்காத காளிபோல திரியும் ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால், `ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் சரியாகிவிடும்' என்பார்கள். அதாவது ஒரு பெண் அவன் வாழ்க்கையில் வந்து அவள் அவனைத் திருத்தி குடும்பப் பொறுப்புள்ளவனாக்கிவிடுவாள் என்பது நம்பிக்கை. இதுதான் ஜீவாவின் பாத்திரப்படைப்பு. மனித சஞ்சாரமற்ற தனிச்சிறையில் அடைந்து கிடந்த ஒருவனை, ஜீவாவின் கையில் ஒப்படைத்துவிட்டு அவளது தாத்தா இறந்துவிடுகிறார். அவள் அவனுக்கு நாகரிகம், பண்பாடு, பாதுகாப்புக் கலைகள், தன் வரலாறு என அனைத்தும் சொல்லிக்கொடுத்து மாவீரனாக உருவாக்குகிறாள். அவனும் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்றுகிறான். இது அன்றைக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதுதான் என்பதால், இந்தக் கதாபாத்திரத்தை பெண்களும் ஆண்களும் ஏற்றுக்கொள்கின்றனர். திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர்., ஜீவாவிடம் முத்தம் கேட்கும் காட்சியில் வைத்தியர் (சந்திரபாபு) ஜீவாவிடம் `இவன், உன்னிடம் தவறாக நடந்துகொள்ளப்போகிறான்' என்று எச்சரிக்கிறார். அப்போது திடீரென எங்கள் பின் சீட்டில் இருந்த ஒருவர் ``அதெல்லாம் சிவாஜி படத்தில்தான் நடக்கும்'' என்றார். ஒரு விநாடி பயங்கர அமைதி. அவர் அதுவரை வசனங்களை எல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வந்தவர், இப்படி ஒரு கமென்ட் அடித்தார்.
தாயின் வைராக்கியம்
வயதான மரத்தை வைரம் பாய்ந்த மரம் என்பர். அதுபோல வயதானவர்களும் வைராக்கியம் படைத்தவர்களாக இருப்பது வழக்கம். `அடிமைப்பெண்' படத்தில் வரும் ராஜமாதா (பண்டரிபாய்) தன் குடிமக்களை அடிமைப் பிடியிலிருந்து காப்பதுதான் தன் முதல் கடமை என்று நம்பியதால், அவர் தன் மகன் விடுதலை அடையாத நிலையிலும் ஓர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். எனவே, தன்னைக் காண வந்த மகனிடம் `என் முகத்தில் விழிக்காதே! நம் குலப்பெண்கள் அனைவரது காலிலும் உள்ள விலங்குகளை அகற்றிவிட்டு, பிறகு என்னிடம் வா'' என்று இரக்கமே இல்லாமல் அனுப்பிவிடுகிறார். இந்த வைராக்கியம் வேங்கையனுக்கு பெரும் ஊக்கமாக அமைகிறது. அப்போது அவர் பாடும் பாடல் மனிதத் தாயைப் பாடுவதாக இல்லாமல் அன்னை பராசக்தியையே எண்ணிப் பாடுவதுபோல அமைந்திருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அ.தி.மு.க-காரர்கள் பலரது போனிலும் இந்தப் பாடலே (தாயில்லாமல் நானில்லை) காலர் ட்யூனாக இருந்ததை நாடறியும்.
சூரக்காடு ஏன்?
எம்.ஜி.ஆரின் சினிமா ரசிகர்கள் தம் எதிரியாகக் கருதிய சிவாஜி, சூரக்கோட்டையின் சொந்தக்காரர். ஆக, சூரக்கோட்டை இந்தப் படத்தில் `சூரக்காடு' என்றாயிற்று. கோட்டை என்றால், அவனை மன்னனாகக் காட்ட வேண்டும். இவன் மன்னன் அல்ல, மனிதப்பண்பு சிறிதும் இல்லாத காட்டான். அதனால்தான் அந்த நாட்டுக்கு பெயர் `சூரக்காடு'. இப்போது ரசிகர்களும் திருப்தி அடைவார்கள். படங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் பெயர் சூட்டுவதில் எம்.ஜி.ஆர் காட்டும் அளவுக்கு வேறு யாராவது அக்கறையும் கவனமும் காட்டியிருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.
ஜீவா – காதலின் கௌரவம்
எம்.ஜி.ஆர்., படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகி வந்த நேரம் அவருடன் சில படங்களில் நடித்து வந்த (கதாநாயகியாக அல்ல) ஒரு நடிகைக்கு, இவர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர்., காதலில் ஈடுபட்டு திரை வாய்ப்புகளைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த நடிகை, எம்.ஜி.ஆருக்கு வெண்மை நிறம் பிடிக்கும் என்பதால் இரவில் வெள்ளை உடையில் இவர் இருந்த அறையின் கதவை வந்து தட்டினார். நல்ல பாடகியான அவர், நடத்தும் கச்சேரிகளுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர் முதல் வரிசையில் போய் அமர்ந்து ரசிப்பாராம். ஆனால், காதல் என்றவுடன் காத தூரம் ஓட ஆரம்பித்தார். பாவம் அவர் சூழ்நிலை அப்படி. அவர் அம்மாவிடம் காதல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போய் நிற்க இயலாது. அவரால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அவர் வெற்று ஆசையை வளர்த்துக்கொள்ளவில்லை. பிறகு திரையுலகில் எம்.ஜி.ஆர் நல்ல நிலைக்கு வந்து சொந்தமாகப் படம் எடுத்தபோது, அந்தப் பாடகி நடிகையின் செல்லப்பெயர்களை, தான் திருமணம் செய்யும் கதாநாயகிகளுக்கு வைத்து அந்தக் காதலை கௌரவித்தார். `நாடோடி மன்னன்' படத்தில் சரோஜாதேவி, `அடிமைப்பெண்'ணில் ஜெயலலிதா, `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலா ஆகியோருக்கு அந்தப் பெண்ணின் பெயர்தான் சூட்டப்பட்டது.
குழந்தைகள், ரசிகரான கதை
எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும் சிறுவர்களுக்கு, அவை நல்ல போதனைகளாக இருந்தது மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர வேண்டும் என்ற தீவிர எண்ணத்தையும் அந்தப் படங்கள் ஏற்படுத்தின. மற்ற தமிழ் திரைப்படங்களில்கூட சிறுவர்களைக் காட்டும்போது, அவர்கள் எம்.ஜி.ஆர் படப் பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும். இதுவும் ஒரு தொழில் உத்தி. அடுத்த தலைமுறையை தனக்கு ரசிகராகத் தயார்படுத்தும் சிறப்பான உத்தி. நடிகரும் பத்திரிகையாளருமான சோ, தன் துக்ளக் பத்திரிகையில் எம்.ஜி.ஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார். அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார். அவனை அழைத்து `என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `எம்.ஜி.ஆரை கும்பிட்டால் நல்லா படிப்பு வரும். அதனால கும்பிட்டுட்டுப் போறேன்' என்றானாம். இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதைத்தான் சொல்வான். அவர்களும் `என் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆர் மீதான அன்பு பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் என்ற மனிதர் மாமனிதராகி இப்போது தெய்வமாகிவிட்டார்.
`அடிமைப்பெண்' படத்தில் குழந்தைகள் முதலில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து படிப்பார்கள். பிறகு `காலத்தை வென்றவன் நீ...' பாடலில் அவரிடம் கொஞ்சிக் குலவுவார்கள். அவரோடு பேபி ராணிவும் இன்னொரு சிறுவனும் இருக்கும் கட் அவுட்டில் இவர்களுக்கு பதில் அஜித்தின் பிள்ளைகளை இணைத்திருந்தார்கள். மினிப்பிரியா தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட அந்தக் கட் அவுட்டைப் பார்த்து பலரும் அஜித் ரசிகர்களின் விவேகத்தைப் பாராட்டினர். `அடிமைப்பெண்' படத்தின் பிற்பகுதியில் பெரியவர்கள் எல்லோரும் தவறான கருத்துடன் எம்.ஜி.ஆரிடம் விரோதப் போக்கைக் காண்பிக்கும்போது, சிறுவர்கள் மட்டும் அவரிடம் ஓடிவந்து `மாமா... மாமா' என்று அழைத்து அன்பு மழை பொழிவார்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பதை நிரூபிக்கும் காட்சி இது.
இந்தப் படத்தில் பேபி ராணி முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் புத்திசாலிப் பிள்ளையாகக் காட்டப்பட்டிப்பார். ஜீவாவுக்குப் பதில் பவளவல்லி வந்திருப்பதை அவள் காலில் இருக்கும் ஆறாவது விரலை வைத்து இந்தப் பாப்பா கண்டுபிடித்துவிடும் . அதை வைத்தியரிடம் வந்து கேட்கும்போது, அவர் தூக்கக்கலக்கத்தில் பதில் சொல்லும்போது `பட் பட்' என்று அவர் கன்னத்தில் அடிக்கும். படம் பார்க்கும் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் சிரித்து ரசித்துப் பார்க்கும் காட்சி இது. கடைசிப் பாடல் காட்சியில் பிள்ளைகளும் தங்களை அந்த விடுதலைப் போரில் இணைத்துக்கொள்வர். `உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...' என்ற பாடல் காட்சியில் சிறுவர்களும் பங்கேற்றிருப்பது இந்த நாட்டின் நன்மையில் அவர்களுக்கும் நேரடி பங்கு இருப்பதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டியிருப்பதாகவே தெரிகிறது.
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யார்?
எம்.ஜி.ஆருக்கு வயதானவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிகர்கள்தான். அவரது படம், இவர்கள் அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது.
கட்சிக் கொள்கை
எம்.ஜி.ஆர்., பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்தவர். அவர் தன் படத்தில் தன் கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகள் இடம்பெறுவதை கட்டாயம் ஆக்கியிருந்தார். அதனால்தான் முக்கியமான தத்துவப் பாடலை தனிப்பாடலை அவர் பாடும்போது தன் கறுப்புச் சட்டை கட்சியைச் சேர்ந்தவன் என்பதை நேரடியாக உணர்த்துவதற்காக அவர் கறுப்புச் சட்டை அணிந்து நடிப்பார். கலர் படமாக இருந்தாலும் அவர் கறுப்புச் சட்டை அணிந்திருப்பார். `எங்க வீட்டுப் பிள்ளை'யில் `நான் ஆணையிட்டால்...' பாடல், `சந்திரோதயம்' படத்தில் `புத்தன், இயேசு, காந்தி பிறந்தது...' போன்ற பாடல் காட்சிகளில் அவர் கறுப்புச் சட்டை போட்டிருப்பதைச் சான்றாகக் கூறலாம்.
`அடிமைப்பெண்' படத்தில். பேய், பிசாசு, மாந்திரீகம் என்பவையெல்லாம் வெறும் பொய் பித்தலாட்டம் எனக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றன. இந்த விஷயத்தை வேடிக்கையாக நகைச்சுவையாகக் காட்டியிருப்பார். அம்முக்குட்டி புஷ்பமாலா வைத்தியராக இருந்து இப்போது மந்திரவாதியாக மாறி வந்திருக்கும் சந்திரபாபுவை மிரட்டுவதற்காக மண்டையோட்டை பறக்கவிடுவார். பிறகு தானே எலும்புக்கூடு உடையைப் போத்திக்கொண்டு எலும்புக்கூடு நடந்து வருவதுபோல் காட்டி அவரை பயமுறுத்துவார். பிறகு ``இதெல்லாம் பொய். இங்கே பார் மண்டையோட்டுக்குள் புறாவை அழுத்தி வைத்திருக்கிறேன். அதனால் அது அசைகிறது’’ என்பார். படம் பார்க்கும் பிள்ளைகள் சிரித்து மகிழ்வார்கள். சிரிப்புடன் சிந்தனையையும் ஊட்டும் காட்சிகள் இவை.
புரட்சித் தலைவர் ரசிகபக்தன்
எங்க வீட்டு பிள்ளை ரசிகர்
முழுவதும் படித்து பார்த்தமைக்கு
நன்றி நன்றி நன்றி... Thanks...
-
மதுரை- சென்ட்ரல் dts "விவசாயி" 1 லட்சம் ரூபாய் வசூலை கடந்து புது அத்தியாத்தை உருவாக்கி அற்புதம் கண்டிருக்கிறார் நம் திரையுலக தந்தை மக்கள் திலகம், நன்றி செய்தி தந்த நண்பர்கள்...
-
பெங்களுரில் இன்று தலைவரின் 101வது பிறந்த நாள் விழா. டவுண்ஹாலில் நடைப்பெறுக்கிறது. விழாவிற்கு அண்ணன் சைதை திரு. துரைசாமி அவர்கள். திரு. எம். ஏ. முத்து அண்ணன் மதுரை முன்னாள் மேயர் திரு. நவநீதக்கிருஷ்ணன் திரு. துரைகருணா அண்ணன் உடன்....
கர்நாடகா மாநிலம் பெங்களூர் டவுன் ஹால் 8-7-2018 ஞாயிறு நடந்த எம்ஜிஆர் 101 வது பிறந்த நாள் விழாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சவுகார்ஜானகி ஐசரிகணேஷ் சைதை துரைசாமி துரைகருணா ஆகியோர் கர்நாடக அதிமுக அமைப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடந்த்து.தேவகவுடா பேசும் போது எம்ஜிஆர் அவர்களை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.எம்ஜிஆர் ரசிகர்களை பார்ப்பது மகிழ்ச்சி என்றார்.
ஒரு காலத்தில் குல்லா கண்ணாடி பற்றி கிண்டல் செய்தவர்கள் இன்று 101 குழந்தைகளுடன் மீண்டும் பிறந்துள்ளார்.
101 குழந்தை களுக்கும் எம்ஜிஆர் மாதிரி குல்லா கண்ணாடி ஜிப்பா வேஷ்டி அறிந்து வந்தனர்.திரைப்படத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கு உடைகள் தைப்பவர் பாக்தாத் திருடன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை பணியாற்றிய எம்.ஏ. முத்து வந்திருந்தார்.
எம்ஜிஆர் - ஜெயலலிதா பற்றி கன்னடத்தில் புத்தகத்தை வெளியிட்டார் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவர்கள்.
[ சவுகார் ஜானகி பேசும் போது என்னை பண்பட்ட நடிகை என்று எம்ஜிஆர் பாராட்டினார். ஒளிவிளக்கு படத்தில் இறைவா உன் மாளிகை பாட்டு எனக்கு பெயர் தந்த்து. எம்ஜிஆர் இல்லாத போதும் இவ்வளவு ரசிகர்கள் வந்த்து எனக்கு அதிசயமாக உள்ளது என்றார்.
சவுகார்ஜானகி - எம்.ஏ.முத்து அவர்கள்.
[: எம்ஜிஆர் அவர்கள் மறைந்து 30 வருடம் திரைப்படத்தில் நடித்து 40 வருடம் ஆன பிறகும் ரசிகர்கள் மக்கள் வருகிறார்கள் என்றால். அது எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டும் தான். இதைத்தான் இன்று தேவகவுடா அவர்களும் சவுகார்ஜானகி அவர்களும் வியப்பதாக பாராட்டி பேசினார்கள்... Thanks Friends...
-
8.7.2018
பெங்களூரில்* மக்கள் திலகத்தின் 101வது* பிறந்த நாள் விழா சிறப்பு செய்தி*
பெங்களுர் நகரின் மையப்பகுதியான* டவுன் ஹால்* அரங்கில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்* குரல் ஒலித்தது* மிகப்பெரிய சாதனை*
காலை 11 மணி முதல்* இரவு 9 மணி வரை* விழா நிகழ்ச்சிகள்* சிறப்பாக நடந்தேறியது .
காலையில் திரு* *சைதை துரைசாமி* சிறப்பு விருந்தினராக* கலந்து கொண்டார் .
திரு ஐசரி கணேஷ்*
திரு* நவநீத கிருஷ்ணன்*
திரு* *முத்து
மற்றும்* பலர்* கலந்து கொண்டார்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் போல் வேடமிட்டு 101 ஆண் - பெண்* *குழந்தைகள்* அழகாக* மேடையில் தோன்றி* கண்களுக்கு* விருந்து தந்தார்கள் .
*கர்நாடக மாநில* * நடிகர்* திலகம் சிவாஜி மன்ற தலைவர் திரு ம..நடராசன் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் . அவரை விழா குழுவினர் கவுரவித்தார்கள்**
மாலையில்* அரங்கம்* நிறைந்து விட்டது . பலர் நின்று கொண்டே விழாவை* ரசித்து பார்த்தார்கள்*
திரு தேவ கவுடா* *முன்னாள் பாரத பிரதமர்*
திருமதி* சவுகார் ஜானகி*
திரு* ஐசரி கணேஷ்*
திரு முத்து*
திரு சம்பத் ராஜ்* பெங்களுர் மேயர்*
திரு ஆர்.வி .தேவராஜ்* சட்ட மன்ற உறுப்பினர்*
திரு சரவணன்* சட்ட மன்ற* மேலவை* உறுப்பினர்*
மற்றும் பல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்* பிரமுகர்கள் தமிழக எம்ஜிஆர்* மன்ற பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்*
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற தனி* மனிதருக்கு கர்நாடக மாநிலத்தில் தமிழகத்தை* போலவே* மக்கள் செல்வாக்கும்* ரசிகர்களின் செல்வாக்கும்* நிறைந்திருப்பது* மனமகிழ்வை தருகிறது ..... Thanks...
-
எம்.ஜி.ஆரின் வாடகை!!
--------------------------------------
நெப்டியூன் ஸ்டூடியோ!!
எம்.ஜி.ஆர்--தம் குடும்ப வறுமைக்காக நடிக்க வேண்டி மோகத்துக்காகவும் நா வறண்ட தாகத்துக்காகவும் நடையாய் நடந்து ஏகத்துக்கும் அவமானப் பட்ட ஸ்டூடியோ!!
ஒரு வாய் சோற்றுக்குத் தானே இந்த அவமானம்?? தருவாய் நீயே,,பல நூறு பேருக்கு அன்னம்!! என்று--பெறுவாய் இந்த ஸ்டூடியோவை என்று காலம்,,தன் பெரு-வாய் கொண்டு,,எம்.ஜி.ஆரை அழைத்து அவரையே அந்த ஸ்டூடியோவின் அதிபர் ஆக்கியது!!
அது தான் சத்யா ஸ்டூடியோ!!
நகல் ஒருவரை அசல் என்று எண்ணி ஏமாந்ததும்???
அகல்!! இந்தக் கட்சியிலிருந்து,,அவராலேயே வெளியேற்றப்பட்டு--
அகல் என்ற வெளிச்சமாம் தம் கட்சியை ஆரம்பித்ததும் எம்.ஜி.ஆர் இந்த ஸ்டூடியோவில் தானே??
அது 1978--79--காலம்!!
முதல் அமைச்சரான பிறகு நாட்டு நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதால்--இந்த ஸ்டூடியோவை மூட மனம் இல்லாத மக்கள் திலகம்--
பத்மனாபன்--சந்திரன்--ஹரி உட்பட சிலரை அழைத்து--நீங்களே இதை பொறுப்பு ஏற்று நடத்துங்கள்? மாத வாடகையையும் நீங்களே முடிவு செய்து அதை எனக்குக் கொடுங்கள் என்று கூறுகிறார்??
அதாவது--குடியிருப்பவன் கொடுப்பதே வாடகை??
அவர்களும்--ஒரு குறிப்பிட்டத் தொகையை முடிவு செய்து,,எம்.ஜி.ஆரிடம் சொல்ல--வள்ளலும் ஏற்றுக் கொள்கிறார்!!
நான்கைந்து மாதங்கள் கடந்த நிலையில்--
ஒரு நாள் அந்த ஸ்டூடியோ பக்கமாக வந்த எம்.ஜி.ஆர்,,பத்மனாபனிடம் அப்பாவியாகக் கேட்கிறார்??
ஒரு மாச வாடகை கூட எனக்கு இதுவரை வரவில்லையே??
பத்மனாபனின் வருத்தம் கலந்த விளக்கம்??
இல்லேங்க!1 கடந்த சில மாதங்களாக சரியான அளவு வேலையே வருவதில்லை!! சொற்பமாக வரும் வருமானம்--மின் செலவு--இதர உபகரண செலவு--தொழிலாளர்கள் சம்பளம் என்று சரியாகப் போய் விடுகிறது!! சொல்லப் போனால் போன மாத சம்பளமே தொழிலாளர்களுக்கு இன்னமும் கொடுக்கவில்லை???
சற்று நேரம் தீவிர சிந்தையில் மௌனம் காத்த எம்.ஜி.ஆர்--பத்மனாபனிடம் இப்படிச் சொல்கிறார்??? சரி!! தொழிலாளர்களின் சம்பள பாக்கி கணக்கு விபரங்களோடு நாளை தோட்டத்துக்கு வந்து அந்தத் தொகையை வாங்கிச் செல்லுங்கள்????
வாடகை வசூலிக்க வந்தவர்--கையை விட்டு கொடுத்த கதையை இது வரை நாம் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா????
பின் நாட்களில் அதைத் தொழிலாளர்களுக்கே உரிமை ஆக்கியது வேறு விஷயம்???
எங்கவீட்டுப் பிள்ளையில்--
குமரிப் பெண்ணின் உள்ளத்தில் குடியிருக்க வாடகை தருவததாகக் கூறியவர்--
சத்யா ஸ்டூடியோவில்--வாடகையை வாங்கிக் கொள்ளவில்லை???... Thanks friends...
-
வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளல் திலகமாக விளங்கிய, விளங்கும் மக்கள் திலகம் சாதாரண நிலையில் இருந்தபோதும், மிக பெரியளவில் வளர்ந்தபோதும் அவர் செய்த தான தர்மங்கள் விபரங்கள் சில செய்திகள் தான் நாம் அறிந்தது, பற்பல விஷயங்கள் நமக்கு ஒவ்வொரு பல தரப்பட்ட நபர்களிடமிருந்து தகவல்கள் இறைவன் விடும் கட்டளையாக வந்து கொண்டேயிருக்கும் என்பது திண்ணம்...
-
எனது 21000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள் நேரிலும், தொலைபேசி /அலைபேசி மூலம் வழங்கிய கீழ்காணும் நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி .
திருவாளர்கள் : ரவிச்சந்திரன் , நெறியாளர், திருப்பூர்.
எம்.பாபு, பெங்களூரு .
கா.நா. பழனி, பெங்களூரு
சிரஞ்சீவி அனீஸ் (பத்திரிகை ஆசிரியர் ).
திருமதி சுதா விஜயன் ,
நாகராஜன்,(விநியோகஸ்தர் ), திண்டுக்கல் .
சிவாஜி பாபு,
ரவிசங்கர்
சி.வி. ராமலிங்கம் ,(பரோடா வங்கி )
ஆர்.முருகேசன், (பரோடா வங்கி )
வி.என்.சுந்தர் , (பரோடா வங்கி )
வி.முரளிதரன் (பரோடா வங்கி )
எச்.நாகேஷ் பந்தார்கர் (பரோடா வங்கி )
எஸ். செல்வம் , (பரோடா வங்கி )
என். ராஜேந்திரன் , (கிளை மேலாளர் , எல்.ஐ.சி.)
தம்பாச்சாரி என்கிற தாமோதரன்
மோகன் (மின்சார வாரியம் )
எம்.எஸ். மணியன் , (.ஐ.ஓ பி )
தாமஸ் (மாநகர போக்குவரத்து கழகம் )
கிருஷ்ணசாமி
பாஸ்கரன் , குன்றத்தூர் ,
எஸ்.எம்.மோகன்குமார் , வழக்கறிஞர் .
சிட் கோ சீனு (தலைமை கழக பேச்சாளர் )அ.தி.மு.க. -
சி. ரவீந்திரன்
- http://i63.tinypic.com/23utzbm.jpg
-
-
-
-
பெங்களுருவில் கடந்த ஞாயிறு அன்று (8/7/18) நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 101 வது பிறந்த நாள் நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i68.tinypic.com/166ann9.jpg
-
-
-
-
-
-
மேடையில் சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்திருக்க, முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி பேசும்போது
http://i65.tinypic.com/vzcxhs.jpg
-
மேடையில் திருவாளர்கள் சைதை துரைசாமி, எம்.ஏ.முத்து (உடையலங்கார நிபுணர் )
துரை கருணா (புதிய தலைமுறை ஆசிரியர் ), பி.எஸ். ராஜு (உரிமைக்குரல் மாத இதழ் ), கலீல் பாட்சா, திருவண்ணாமலை .
http://i66.tinypic.com/2wd67hv.jpg
-
மேடையில் திரு.பி.எஸ். ராஜு, திரு.துரை கருணா, திரு.எம்.ஏ. முத்து மற்றும் பலர்
http://i65.tinypic.com/156qxc8.jpg
-
மேடையில் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குகிறார்
திரு.கிருஷ்ணராஜ் (முன்னாள் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் )
அருகில் திருவாளர்கள் நவநீத கிருஷ்ணன் (முன்னாள் மதுரை துணை மேயர் ) எம்.ஏ. முத்து , துரை கருணா, பி.எஸ். ராஜு .
http://i65.tinypic.com/bfg7zs.jpg
-
நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து
101 சிறுவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 101 வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வேடமிட்டு போட்டிக்கு வந்த காட்சி
http://i66.tinypic.com/s60j12.jpg