http://oi68.tinypic.com/21aw8r5.jpg
நன்றி abdul kadar
Printable View
http://oi68.tinypic.com/21aw8r5.jpg
நன்றி abdul kadar
கடந்த 09 -02 -2019 அன்று திருச்சியில் நடைபெற்ற நடிகர்திலகம் சிலையை திறக்கவேண்டும் என்பதற்காக நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பத்திரிக்கை செய்திகள்:
http://oi65.tinypic.com/66b315.jpghttp://oi68.tinypic.com/2ih9ngm.jpghttp://oi66.tinypic.com/160u90.jpghttp://oi65.tinypic.com/ok21iw.jpg
நன்றி சிவாஜி பேரவை
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, நடுநிலையாளர்களே, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே,
சிவாஜி அவர்களை போல் ஒரு அரசியல்வாதியை பார்த்ததுண்டா இவ்வுலகம்,
இன்று பதவிக்காக... தான் திட்டிய ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையில்,,,...
தான் விலகி வந்த கட்சியில் எந்த காரணத்தை முன்னிட்டும் மறுபடியும் போய் பதவிக்காக பல்லக்கு துாக்கியவரில்லை சிவாஜி,
காங்கிரசை எதிர்த்த கருணாநிதி அவர்கள் பின் காஙு்கிரசுடனே கூட்டணி வைத்தார்.
காங்கிரசை எதிர்த்த எம்ஜிஆரும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தார்,.
அதிமுக, திமுக் இரண்டையும் எதிர்த்த வைகோ அவர்கள் பின், அவர்களுடனே கூட்டணி வைத்தார்,
காங்கிரசிலிருந்து விலகி ஆரம்பிக்கப்பட்ட தமாகா பின்பு காங்கிரசுடன் இணைந்தது,
அதிமுகவை பகிரங்கமாக எதிர்த்த விஜயகாந்த் பின் அதிமுகவுடனே கூட்டணி வைத்தார்,
காங்கிரசிலிருந்து விலகி ஜனநாயக பேரவை ஆரம்பித்த சிதம்பரம் பின் காங்கிரசுடன் ஐக்கியமாகி விட்டார்,
திமுக அதிமுக இரண்டு கட்சிகளுடனும் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று சொன்ன பாமக மறுபடியும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது,
ஆரம்பத்தில் தன்னை ஒதுக்கிய திமுகவானாலும் சரி.....
நாற்பதாண்டு காலம் உழைத்து விலகிய காங்கிரசானாலும் சரி....
மறுபடியும் அந்த கட்சியில் சேராமல் இறுதி வரை உறுதியாக இருந்தவர் சிவாஜி.
சுயலாபத்திற்காகவும், பதவிக்காகவும் அரசியல் செய்யாமல்... நேர்மையான அரசியல் நடத்திய சிவாஜி எப்படி ஜெயிப்பார்.
சிவாஜி தோற்கவில்லை....
நேர்மை தோற்றது,
உண்மை தோற்றது,
சத்தியம் தோற்றது,
http://oi64.tinypic.com/aotm6h.jpg
நன்றி சுந்தர்ராஜன்
சிவாஜி!!!
சிவாஜி பற்றிய விகடன் கட்டுரை........!!!
அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்த விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்டது. அந்த படவிழாவில் பங்கேற்க சிவாஜி, பத்மினி எல்லோரும் போயிருந்தார்கள்.
அந்தப் படவிழாவில் சிவாஜி ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்கள் என எடுத்துக்கொள்ளும்பொழுது உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள் தொகை இந்த இரு கண்டங்களிலேயே அடங்கும்!
இந்தியாவும், சீனாவும் மட்டுமே பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள், ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங்... போன்ற ஏராளமான நாடுகளுடன் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளும் இந்தப் படவிழாவில் பங்கு பெற்றவையாகும்.
இவ்வளவு பெரிய படவிழாவில் சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தப் பின்னும் இந்திய அரசு வழங்கும் சிறந்த நடிகர் விருதை சிவாஜிக்கு தராமலேயே இருந்துவிட்டார்கள். காரணம் இந்திய அரசு சார்பான இந்த விருதில் அவ்வப்போது செல்வாக்கான மனிதர்களின் குறுக்கீடு இருந்து வந்ததேயாகும். ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற ஒருவருக்கு இதற்கு மேலும் நாம் விருது கொடுக்காமல் தாமதித்தால் அதனால் இந்திய விருதின் மரியாதை குறையும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேயில்லை.
ஆனால், சிவாஜியைப் பொருத்தவரையில் அவர் நடிப்புத் துறையில் நிறைகுடமாக இருந்ததால் விருதுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அத்துடன் தனக்கு விருது தரப்படவில்லை என்பதை மனதில் குறையாக வைத்து பேசுவதுமில்லை. யாராவது வலிய அவரிடம் இது சம்பந்தமாக பேசி ‘‘உங்களுக்கு ஏன் இந்திய அரசின் விருது தராமலே இருந்துவிட்டார்கள்?’’ என கேட்கும்பொழுது அதற்கு சிவாஜி மிகப்பெருந்தன்மையாக பதில் கூறுயிருக்கிறார்.
‘‘விருது தருபவர்கள் அந்த விருதுக்கென்று எதிர்ப்பார்க்கும் தகுதிகள் நம்மிடம் இல்லாது இருக்கலாம்’’ என்றே சிவாஜி பதில் அளித்திருக்கிறார்.
ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிக்கு கிடைத்தபின் அமெரிக்க அரசு சிவாஜியை தங்கள் நாட்டிற்கு அழைத்து கவுரவிக்க விரும்பியது. எனவே ‘சிவாஜி தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்’ என அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதுபோன்ற ஒரு அழைப்பு அதுவரை இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை.
சிவாஜியும் அந்த அழைப்பை கவுரவித்து அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும். அங்கே முக்கியமானவர்கள் யார் யாரைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையெல்லாம் முன்கூட்டி அவர் தெரிந்து கொண்டதால் அதற்கேற்ப தயாராக அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்காவில் சந்திக்கும் முக்கிய மனிதர்களுக்கு நமது நாட்டு சார்பாக கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதுடன் அங்கே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டுவதற்காக தான் நடித்த பல படங்களில் இருந்து முக்கியக் காட்சிகளின் தொகுப்பையும் கையில் கொண்டு சென்றார்.
ஆனால் இதற்குக் கூட யாரும் குறுக்கீடாக இருந்தார்களோ என்னவோ? சிவாஜி அமெரிக்கா போய் இறங்கியதும் அங்கே திரையிட கையில் தன்னுடன் எடுத்துவந்த அந்தப் படப்பெட்டி மட்டும் காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் வீடியோ கேசட்டில் பதிவு செய்து எடுத்துச் செல்லும் வசதி வரவில்லை. அல்லது மூன்று நான்கு கேசட்டுகளை தன் கைப்பெட்டியிலேயே எடுத்துச் சென்றிருப்பார்.
சிவாஜி திட்டமிட்டபடி அமெரிக்காவில் முக்கிய பிரமுகர்களுக்கு தான் நடித்தப் படத்திலுள்ள அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை திரையிட்டுக் காட்டியிருந்திருப்பாரேயானால் அவருக்கு மேலும் வரவேற்பு கிடைத்திருந்திருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாட்டினர் ஒருவருடைய திறமையை கண்டறியும்பொழுது, அதை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என எண்ணமாட்டார்கள். திறமையை மனதார பாராட்டுவதை தங்களுக்கு பெருமை என எண்ணுவார்கள்.
ஆனாலும் சிவாஜியின் நடிப்புத் திறமையை அங்கே உள்ளவர்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து சிவாஜியின் மிகப்பெரிய ஆற்றலை நன்றாகவே புரிந்திருந்தார்கள். அதனால் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை தந்தார்கள். சிவாஜி அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் அங்கே புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய மார்லன் பிராண்டோ, யூல் பிரின்னர், சார்லஸ் ஹாஸ்டன்... போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜியை வரவேற்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கவுரவித்தார்கள்.
அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள். சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.
இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.
ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.
சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.
சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.
சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்.
அமெரிக்காவில் சிவாஜிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது என்ற செய்தி தமிழகத்திற்கு எட்டிய நிலையில் தமிழக கலைஞர்கள் எல்லாம் சிவாஜியை சிறப்பாக வரவேற்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலே முடிவு செய்தார்கள். அவ்விதம் சிவாஜிக்கு அவர் சென்னையில் வந்து இறங்கியபொழுது கலைஞர்கள் எம்.ஜி.ஆர். தலைமையில் சிறந்த வரவேற்பை அளித்து கவுரவித்தார்கள்.
சிவாஜி அமெரிக்காவில் இருந்த சமயம் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் சிவாஜிக்கு வாழ்த்துக் கூறி ஒரு கடிதத்துக்கு சிவாஜி உடனே பதில் எழுதி தனது நன்றியை அவ்வை டி.கே.சண்முகத்திற்கு தெரிவித்தார்.
அவ்வை டி.கே.சண்முகம் இந்தப் பதில் கடிதத்தை எதிர்ப்பார்க்காததால் மிக மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டார்.
அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்ஹ விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
கிளிண்ட் ஈஸ்ட் வுட், டஸ்ட் டின் ஹாப்மேன் ஆகிய ஹாலிவுட் நடிகர்களுடன் இன்னொருவருக்கும் பிரான்ஸ் அந்த விருதை வழங்கியிருந்தது. அதற்குமேல் இப்போது சிவாஜிக்கு அந்த விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை.
ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.
புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.
சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை?ÔÔ என்ற சந்தேகத்தை கேட்டார்.
அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார்.
இந்த ‘நவராத்திரி’ படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் பார்த்த தனது அனுபவத்தை நடிகரும், இயக்குனருமான விசு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார்.
விசு வெளிநாட்டினர் சிலருடன் நவராத்திரி படம் பார்க்கச் சென்றிருந்தாராம். இடைவேளை வரை படத்தை அந்த வெளிநாட்டினர் மிக அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது விசு அவர்களைப் பார்த்து, ‘‘இப்போது நான் உங்களுக்கு ஒரு செய்தியை கூறப்போகிறேன். இது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அந்தச் செய்தியை கூறியிருக்கிறார்.
‘‘அதாவது இப்போது நாம் பார்த்தப் படத்தில் கிணற்றில் விழப்போகிற கதாநாயகியை காப்பாற்றுகிற பணக்காரரும், அடுத்து வருகிற குடிகார வாலிபனும், மூன்றாவதாக வருகிற டாக்டரும், நான்காவதாக வருகிற பயங்கரவாதியும் நான்கு வெவ்வேறு நடிகர்கள் அல்ல; ஒரே நடிகர்தான் அந்த நான்கு வேடங்களிலும் வருகிறார்’’ என விசு குறிப்பிட்டிருக்கிறார்.
இதைக் கேட்டு அந்த வெளிநாட்டினர் பெரிதும் வியந்து போனார்களாம், ‘‘ஒரே மனிதரா இவ்வளவு வித்தியாசமாக தோன்றி நடிக்கிறார்? இதை முதலிலேயே சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே கூர்ந்து கவனித்திருப்போமே’’ என குறைபட்டுக் கொண்டார்களாம்.
பின்னர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் ஐந்து வேடங்களில் வரும் சிவாஜியைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினார்கள் என விசு அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டார்.
http://oi64.tinypic.com/2up33bk.jpg
நன்றி வாசுதேவன்
நிச்சயதாம்பூலம் (1962)
நடிகர் திலகத்தின் திரை வாழ்க்கையில் மற்றொரு மறக்க முடியாத படம் இது. நடிகர் திலகத்தின் மிகச் சிறப்பான நடிப்பைக் கொண்ட வெற்றிப்படம். பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா படங்களுக்கு நடுவே வந்ததால் 100 நாட்கள் என்ற எல்லைக் கோட்டைத் தொடாவிட்டாலும், 100 நாட்களின் வசூலை பத்து வாரங்களிலேயே அள்ளிக் கொடுத்த படம். ஜமுனா, நம்பியார், ரங்காராவ், நாகையா , ராஜஸ்ரீ ஆகியோரும் திறம்பட நடித்த படம். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் பாடல்களனைத்தும் இனிமை. இம்மாதம் 9-ம் தேதி முதல் 57-ம் ஆண்டில் பயணிக்கிறது நிச்சயதாம்பூலம் .
http://oi64.tinypic.com/152kcyd.jpghttp://oi67.tinypic.com/33wuopd.jpghttp://oi66.tinypic.com/2zivw48.jpghttp://oi67.tinypic.com/2vxhycz.jpghttp://oi66.tinypic.com/23vkf7p.jpghttp://oi63.tinypic.com/15querb.jpg
நன்றி m. Thameem
100 நாட்களுக்குமேல் ஓடிய வெற்றிச்சித்திரம்
[COLOR=21.2.2019 வியாழன் இரவு 07.30 மணிக்கு வசந்த் டிவியில் ஐயனின் " ஊட்டி வரை உறவு" திரைக் காவியம். அனைவரும் மறவாமல் https://img.movieo.me/onazjW8xVAhO2w...aWNINg4fm3.jpghttps://media-images.mio.to/various_...29/Art-350.jpgகண்டு மகிழுங்கள்..[/COLOR]
இன்று (21/02/19) இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்,
To Night 10 pm jeya movie,
http://oi65.tinypic.com/177o6f.jpg
கட்சி அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தெற்கு போக் ரோடு வழியாக காரில் சென்று கொண்டிருந்த மேற்கு வங்க முதல்வரிடம் காரில் அருகில் அமர்ந்திருந்தவர் இதுதான் நடிகர் சிவாஜிகணேசனின் வீடு என்று சொல்ல, உடனே வண்டியை நிறுத்துமாறு உத்திரவிடுகிறார். முன்னாலும் பின்னாலும் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி இறங்கி ஓடி வருகிறார்கள். அவர்களிடம் நான் சிவாஜியை சந்திக்க வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூற , நிகழ்ச்சி நிரலில் இல்லாத இடத்துக்கு எப்படி போக முடியும் என்று ச...ொல்ல அதெல்லாம் எனக்குத் தெரியாது இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர் அவர் தான் பிறந்த நாட்டிற்க்கும், மாநிலத்திற்கும் உலக அளவில் புகழ் தேடித் தந்த அவரை காண இப்போது விட்டால் எனக்கு இனியொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்று கூற, அன்னை இல்லம் நோக்கி அதிகாரிகள் பறந்தனர். அய்யனும் அன்று இல்லத்தில் இருந்தார்.விஷயத்தை சொன்னதும் அன்னை இல்லம் பரபரப்பானது. ஜோதிபாசுவை வரவேற்க அய்யன் இல்லத்தின் வாசலுக்கு விரைந்தார். வாசலிலே காரை நிறுத்தி, இறங்கி நடந்தே வந்தார் மேற்கு வங்க முதல்வர். அவரை அன்னை இல்லத்து உறவுகள் சகல மரியாதைகளோடு உள்ளே அழைத்துச் சென்றனர்.அய்யனோடு சுமார் இருபது நிமிடங்களுக்கு மேல் அளவளாவிக் கொண்டிருந்தார் முதல்வர்.கட்சிக்கார்கள் அய்யன் கட்சி அலுவலகம் கட்ட செய்த பண உதவியை சொல்ல முதல்வரும் அய்யனும் நெகிழ்ந்து போனார்கள். விடை பெறும் நேரத்தில் முதல்வர் ஜோதிபாசு அய்யனை தன்னோடு அலுவலக திறப்பு விழாவிற்கு வரும்படி வேண்டினார். அய்யனும் அவரோடு சென்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது கூடுதல் தகவல். எல்லோருக்கும் நல்லவர் நம்மவர். அவர் போல் ஓர் உயர்ந்த மனிதனை காண்போமா பாரினிலே. வாழ்க அய்யன் புகழ். நடிகர் திலகத்தின் பண்பும் பெருமையையும் அறிந்த பல தலைவர்கள் அன்னை இல்லம் வந்து சந்தித்தது உண்டு....அது போல் அவரை வரவழைத்து பார்த்து மகிழ்ந்த ஞானிகளும் அமெரிக்க அதிபர் கென்னடி போல் உலகத் தலைவர்களும் உண்டு.இவர் காலத்தில் வாழ்ந்த இந்தியத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் பெரும்பாலோரை சந்தித்த மாபெரும் கலைஞர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்....
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e8&oe=5D22DE91
நன்றி லக்ஸ்மணன்
.தந்தையாக பாசம் புலர்த்திய அற்புத மாணிக்கம் என் அய்யன்
------------------------------------------------------------------------------------------------------------------
1988, ஜனவரி 15ம் நாள் காலையும் நீயே,மலையும்நீயே என்ற திரைப்படம் திரு.சுந்தரராஜன் (இயக்குனர்)அவர்களால் இயக்கப்பட்டு வெளி இடப்பட்டது. அந்த திரைப்படத்தில் திரு.விஜயகாந்த் ,திரு.பிரபு அவர்கள் சேர்ந்தது நடித்திருந்தார்கள்.படமும் சுமாராக இருந்தது.
இந்த திரை பட படப்பிடிபில் சண்டை காட்சியின் போது திரு. விஜயகாந்த் அவர்களுக்கு தவறுதலாக கழுத்தில் கொண்டடி பட்டு,தமிழகம் முழுவதும் அன்று பரபரப்பாக இருந்தது. விஜகாந்த் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க படுகின்றார்கள்.
மருத்துவமனையில் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. இந்த செய்தி அய்யனின் காதுகளில் சொல்லப்படுகின்றது. இந்த வேளையில் அய்யன் அமெரிக்கா செல்வதற்க்காக தயாராகி கொண்டிருக்கின்றார்கள்.பதறிய அய்யன் அமெரிக்க பயணத்தை தள்ளி வைத்து விட்டு மருத்துவ மனைக்கு விரைந்து வருகின்றார்கள்.
விஜய் அவர்களுக்கு சுய நினைவு இல்லை.சிகிச்சை முடிந்து விஜய் அவர்கள் தனது சுய நினைவு திரும்பும் வரை ஐயன் மருத்துவமனையில் அமர்ந்து இருந்தார்கள். இந்த வேளையில் நடந்த சம்பவத்தை அய்யன் கேட்டு தெரிந்து கொள்கின்றார்கள் பதறிக்கொண்டிருந்த அய்யனிடம் விஜய் அவர்கள் சுய நினைவுக்கு வந்த விவரம் சொல்ல படுகின்றது.பதட்டத்துடன் இருந்த அய்யன் விரைந்து விஜயின் பக்கத்தில் சென்று தலைதனை தடவி கொடுத்து ஒரு தந்தையைப்போல் ஐயா விஜி எப்படி இருக்கின்றாய்? வலி எப்படி உள்ளது? என்று கண்ணீர் மல்க கேட்க்கின்றார்கள்.
பிறகு மருத்துவரிடம் சென்று விஜயின் உடலம் நலம் என்ன என்று கேட்டு தெரிந்து கொண்டு அய்யன் நிம்மதி அடைகின்றார்கள். திரும்பி வந்த அய்யன் விஜய் அவர்களின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஒரு பாசமுள்ள தந்தையாக, தம்பி விஜி, நம் போன்ற நடிகர்கள் மலர் போன்றவர்கள். மலர் மீது காற்று சிறிது அதிகமாக வீசி விட்டால் மலரின் இதழ் உதிர்ந்து விடும். மலரின் அழகும் போய் விடும். நடிகர்களும் அதுபோலவே.
சண்டை காட்சிகளில் எப்போதும் நாம் டூப்பைத்தான் அனுமதிக்க வேண்டும். நாம் ஒருபோதும் இதுபோன்ற சண்டை காட்சிகளில் சிரத்தை எடுக்கவே கூடாது. அதை செய்வதற்கு சண்டையில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அதை செய்து கொள்வார்கள். இப்பொது இறைவன் அருளால் உனக்கு பயப்படும் படியாக ஏதும் ஏற்படவில்லை. ஏதாவது நடந்திருந்தால் நினைக்கவே சங்கடமாக உள்ளது.
இந்த வேளையில் உன் உயிர் போயிருந்தால் அது வேறு. உன் உடலுக்கு வேறு எதாவது அவயங்கள் நஷ்டமாகி இருந்தால் என்ன ஆயிருக்கும்? உன்னால் நடிக்கவே முடியாமல் போய் இருக்குமே. உன்னால் நடிக்காமல் வீட்டில் இருக்கத்தான் முடியுமா? ஆக , நாம் நம்மை மலர் என்று எண்ணி காற்றும் கொள்ளாமல், அழகும் குலையாமல் நமது உடம்பை நாம் தான் கவனமாக பாதுகாக்க வேண்டும்.
நான் அமெரிக்கா செல்ல இருக்கின்றேன். உனக்கு என்ன தேவை என்றாலும் தம்பி பிரபுவை கேள். அவன் அனைத்து உதவிகளையும் செய்து தருவான் என்று கைகளை பிடித்து கணீர் மல்க தான் பெற்ற பிள்ளையிடம் சொல்வதையே தான் பெறாத விஜய்யிடம் அய்யன் கூறி விட்டு பிரபுவிடம் வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும்படி உத்தரவு பிறப்பித்து செல்கின்றார்கள் அய்யன் அவரகள்.
அன்றய காலங்களில் அமெரிக்கா செல்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. பலமணி நேர பயணம் அன்றய காலங்களில் .இவ்வாறு இருந்தும் கூட என் சாதியில் பிறந்த ( திரைப்பட துறை சாதியில் ) என் மகனுக்கு விபத்து நடந்து விட்டது. என் பயணம் பெரிதல்ல, என் பிள்ளையின் நலமே பெரிது என்று எண்ணி தனது பயணத்தை ரத்து செய்து தந்தைபோல் பாசம் கொண்டு ஓடி சென்று அறிவுரை கூறும் பண்பு, திரை உலகத்தில் என்றும் எவருக்கும் இருந்ததில்லை.
இங்கு ஒன்றை சொல்லிட விரும்புகின்றேன். இப்போதைய சில நடிகர்கள் அன்றய நடிகர்களின் ரசிகர்கள் என்று மார்தட்டி கூவி நடக்கின்றர்கள். அவர்களிடம் போய் தங்களின் நடிகரின் விழா எடுக்கின்றோம் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்போமேயானால் அவர்களின் பதில், உடல் நெளிந்து , இந்த நேரத்தில் ஒரு படத்தில் நடித்தால் பணம் கிடைக்கும் என்று சொல்லி நழுவி விடுவார்கள்.இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டதுண்டு. இதுபோன்ற அனுபவம் வேறு பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
நடிகர்கள் என்றாலே வருவாய் இருக்கின்றதா? என்று பார்ப்பவர்கள்தான் 100க்கு 99.99 சதவீதத்தினர்கள். எனவேதான் நடிகர்கள், கொள்கை இன்றி பணத்திற்காக அழைக்கின்ற அரசியல் கட்சிக்கு வாக்குகள் கேட்க்கின்றனர்.பணத்திற்காக கொள்கை இன்றி வாழும் திரையுலகத்தில், ஏழையாக பிறந்து,நடிகனாக வளர்ந்து, உயர்ந்து ,புகழ் பல பெற்ற போதும் தான் ஒரு மனிதன் என்ற உயர் எண்ணம் மாறாதவர் அய்யன் அவர்கள்.
என்னை வாழ வைக்கும் திரை உலகத்தில் என் பிள்ளைக்கு ஒரு ஆபத்து என்று கேட்ட உடன் உடல் பதறி ஓடோடி வந்து தந்தைபோல் வேஷமில்லா பாசம் காட்டும் ஒரே உத்தம புத்திரன் அய்யன் மட்டுமே. மருத்துவ மனையில் இருப்பவர்களை பார்க்க செல்லும்போது ஒரு பூ கொத்தை கொடுத்து விட்டு நலம் விசாரிக்கும் திரை உலகில், என் திரை உலக சாதியில் பிறந்த விஜியை தன் மகன் என்ற உயர்ந்த உள்ளதோடு பார்க்க சென்ற அய்யனின் வரிசையில் எவரும் இல்லை என்பதே உலக உண்மை.
தானும் வாழ்ந்து, மற்றவர்களும் வாழ வேண்டும். தானும் மகிந்து அடுத்தவர்களுக்கு மகிழ வேண்டும், தானும் உயர்ந்து ஏனையோரும் உயர வேண்டும் என்ற மாசற்ற எண்ணம் என் ஐயனுக்கே சொந்தம். எனவேதான் எங்களின் மனதில் உயர்ந்த உத்தமனாக, ராஜராஜ ராஜாவாக, தங்கையின் தங்கப்பதக்கமாக,ஞானஒளியாக வீற்றிருக்கின்றாயோ எண்களின் பாசமலரே.
இதுபோல் தான் மலையாள நடிகர் ஜெயன் அவர்கள் படப்பிடிப்பில் விபத்தில் இறந்த போது, அவரது சொந்தங்கள் கேட்டு கொண்டபடி காவல்துறையினரிடம் பேசி ஜெயன் அவர்களின் உடலை வெட்டி கூறு போடாமல் (postmortem) அனுப்பி வைக்க உதவிய நாயகன் நமது அய்யன்.
இதுபோற்று கோடிகள் சொல்வேன். வாழ்நாள் என்றும் உன் புகழ்பாடும் பக்தன்
.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ef&oe=5D1EE74E
நன்றி செல்வராஜ் பெர்னாண்டஸ்
இன்று முதல் ஆலங்குடி (திருச்சி மாவட்டம் ) V.C.சினிமாஸ் குதூகல ஆரம்பம். இதன் தொடக்கமாக நடிகர் திலகத்தின் "கர்ணனை" த்தான் திரையிட வேண்டும் என எண்ணி
திரையிடுகின...்றார். இந்த நல்ல உள்ளம் கொண்ட திரையரங்கு உரிமையாளர் பெயர் "V. C. கணேசன்". நமது நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர். இந்த இனியவரை, இவர் செய்யலை நாமும் போற்றி வாழ்த்துவோம்.இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் உள்ளவரை நடிகர் திலகத்தின் புகழ் என்றும் ஓங்கும் ... .வாழ்த்துக்கள்.....
http://oi65.tinypic.com/5bvdq0.jpg
நன்றி திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ((21-2-2019)
அய்யனின் மணிமண்டபத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு வழங்கிவரும் தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள பத்து பக்க மடிப்பேடு ரசிகர்கள் பார்வைக்காக ...
http://oi68.tinypic.com/141qtjo.jpghttp://oi68.tinypic.com/vpdkwh.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
சிவாஜி மன்ற செயல்பாடு குறித்து இன்றைய தந்தியில் வெளியான கட்டுரையில் ஒரு பகுதி.
http://oi64.tinypic.com/ngulv5.jpghttp://oi63.tinypic.com/11jtzxh.jpg
நன்றி செந்தில்வேல்