https://i.postimg.cc/XNDdJVJg/IMG-3870.jpg
Printable View
புரட்சித் தலைவரைப் பற்றி அதிமுக செண்டிமெண்ட் என்று படத்துடன் மோசமாக போட்டு குடும்பம் பற்றி விமரிசனங்கள் செய்து பேஸ்புக்கில் கண்ட முட்டாள்கள் எழுதினதை எல்லாம் எடுத்து மையம் திரியில் போட வேண்டியது.
திருச்சியைச் சேர்ந்த தலைவர் பெயர் கொண்ட ஒரு நபர் புரட்சித் தலைவரை மிகவும் தரக்குறைவாக கேவலாமா எழுதுகின்றான்.
இவைகளுக்கு எல்லாம் நாம்ப அதே முறையில் பதில் கொடுத்தால் மொட்டதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று தெரியாத மாதிரி பதில் சொல்ல வேண்டியது.
இவர்கள் எல்லாம் எப்பத்தான் உண்மை நிலைய புரிஞ்சு திருந்துவார்களோ தெரியலை. இந்த ஜென்மம் என்ன. ஏழு ஜென்மத்தில் கூட இவர்கள் திருந்த வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
கணேசனின் (சி)ரசிகர்கள் சிவா மற்றும் ராமச்சந்திரன் (இந்த திருப்பெயர் மட்டும் திருஷ்டி பரிகாரம்) ! இருவரின் தரம் தாழ்ந்த பதிவுகளை மய்யம் திரியில் காண நேர்ந்தது .
கணேசனின் மறு வெளியீடு படங்களான திருவிளையாடல் , பாசமலர் , வீரபாண்டிய கட்ட பொம்மன் , ராஜா , ராஜபார்ட் ரங்கதுரை , சிவகாமியின் செல்வன் ,போன்ற படங்கள் மண்ணை கவ்வியது அனைவருக்கும் தெரிந்த விஷயம் .வசந்த மாளிகை (பேபி)ஆல்பட் திரை அரங்கில் ஓட்டப்பட்ட பரிதாபம் நாடறிந்தது . இந்த லட்சணத்தில் படு கேவலமாக தரக்குறைவாக பதிவுகளை வெளியிட்டு அவர்கள் தராதரத்தை காட்டியுள்ளார்கள் .
எம்.ஜி.ஆர்., சினிமாவில் இருந்த 1936-1977 காலகட்டத்தில் எம்ஜிஆர் படங்கள் செய்த சாதனைகளை யாராலும் நெருங்க முடியவில்லை .
1. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் எம்ஜிஆர் .
2. தென்னிந்தியாவில் 36 திரை அரங்கில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் - எம்ஜிஆரின் " மதுரை வீரன் ".
3. தென்னிந்தியாவில் அதிக வசூல் பெற்ற படம் "உலகம் சுற்றும் வாலிபன்" & " உரிமைக்குரல்"
4. தென்னிந்தியாவில் 7 திரை அரங்கில் வெள்ளிவிழா ஓடிய ஒரே படம் " எங்க வீட்டுப்பிள்ளை"
5. உலகமெங்கும் அதிகளவில்.......... லட்சக்கணக்கான...........கோடான கோடி கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரே நடிகர் எம்ஜிஆர்...
6. உலகமெங்கும் அதிகமான ரசிகர்மன்றங்கள் பெற்ற ஒரே நடிகர் எம்ஜிஆர் .
7. உலக திரைப்பட வரலாற்றில் மிக கட்டுக்கோப்பான உடலுடன் எழிலான அழகான தோற்றம் கொண்ட ஒரே நடிகர் எம்ஜிஆர் .
8. கடைசி வரை காதநாயகன் எம்ஜிஆர் .
9. 1936-1977 வரை எம்ஜிஆர் கலை உலகில் மன்னாதி மன்னன் .
10 1977- 2019 மறு வெளியீடுகளில் வசூலை வாரிக்குவித்த எம்ஜிஆர் படங்கள் .
புகழுக்கு முடிவே இல்லாத எம்ஜிஆரை எந்த காலத்திலும் இந்த கணேசனின் தொல்லைகள் என்ற பிள்ளைகள் மரணிக்கும் வரை எம்ஜிஆரின் புகழை நொந்து வேதனையடன் மடிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தமான செய்தி . நாம் என்ன செய்ய முடியும்?
பரிதாபம் கொள்வோம் . நம்மால் முடிந்தது .......... Thanks.........
சரி நம்ப வேலையை பார்ப்போம். புரட்சித் தலைவர் புகழ் பாடுவோம்.
நிலைமைகள் பற்றி எனக்கு தகவல் தெரிவித்த தம்பி சுந்தர பாண்டியனுக்கு நன்றி.
சுந்தர பாண்டியன். உனக்கு ஒரு வேண்டுதல். இனிமேல் அந்தப் பக்கம் போகாதே. இங்கேயே பதிவு போடவும்.
புரட்சித் தலைவரின் அருமையான படங்களுக்கு ரவிச்சந்திரனுக்கு நன்றி. கோயம்புத்துரில் 13 வாரமாக தொடர்ந்து புரட்சித் தலைவர் படங்கள் வெளியாகி சாதனை செய்கிறது. அதுபற்றி செய்திகள், படங்கள் போடுங்கள் ரவிச்சந்திரன். நன்றி.
1973ம் ஆண்டில் இல்லஸ்ட்டேட் வீக்லி (Illustrated Weekly) என்ற ஆங்கில பத்திரிகையில் ஒருவர் அன்றைய இந்தி சூப்பர்ஸ்டார் ராஜேஸ் கண்ணா அரசியலுக்கு வந்தால் எப்படி வெற்றி பெறுவாரா,என்று கேள்வி கேட்டிருந்நார் அதற்கு ஆசிரியர் ராஜேஸ் கண்ணா இஸ் நாட் எம்.ஜி.ஆர் என பதில் சொல்லி இருந்தார். இந்தியாவே தலைவரின் தனித்தன்மை எவருக்கும் இல்லை என உணர்ந்திருந்தது........... Thanks..........
https://www.facebook.com/10002983483...8295964508230/........ Thanks...
திண்டுக்கல் இடைத்தேர்தல் அ.தி.மு.க. வெற்றி
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வை அமைத்ததும், சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். தொடக்கத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்து வந்த ஜேப்பியாரும், முசிறிபுத்தனும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
(ஜேப்பியார் இப்போது சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்) இந்தக் கூட்டத்தில் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம். துரைராஜ், எட்மண்ட் ஆகியோர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.
அ.தி.மு.க.வின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. திண்டுக்கல் தொகுதி "எம்.பி."யாக இருந்த ராஜாங்கம் (தி.மு.க.) மரணம் அடைந்ததால், 1973 மே மாதம் 20_ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், வக்கீல் மாயத்தேவரை அ.தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். நிறுத்தினார்.
திண்டுக்கல் தேர்தலுக்கு 9 நாட்களுக்கு முன்னால், "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தை எம்.ஜி.ஆர். ரிலீஸ் செய்தார். அந்தப்படம் வெளியாவதற்கு முன், சினிமா சுவரொட்டி மீதான வரியை சென்னை மாநகராட்சி திடீரென்று உயர்த்தியது. அதனால், சென்னை நகரில் ஒரு சுவரொட்டி கூட ஒட்டாமல் படத்தை எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.
`தேவி' தியேட்டருக்கு எம்.ஜி.ஆர். சென்று ரசிகர்களுடன் படத்தைப் பார்த்தார். பின்னர் நடந்த கூட்டத்தில், திண்டுக்கல் தேர்தல் நிதியாக தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.20 ஆயிரத்தை எம்.ஜி.ஆரிடம் ஜேப்பியார் வழங்கினார்.
திண்டுக்கல் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது. எப்படியும் அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்று அமைச்சர்கள் திண்டுக்கல்லில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்_அமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாகச் சென்று ஓட்டு கேட்டார். எம்.ஜி.ஆர். இரவு பகலாக தொகுதி முழுவதும் பிரசாரம் செய்தார்.
"திண்டுக்கல் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும்" என்று பெரியார் அறிக்கை விடுத்தார். திண்டுக்கல்லில் நாகல்நகர் என்ற இடத்தில் மே 13_ந்தேதி தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே பெரும் மோதல் நடந்தது. இருதரப்பினரும், பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். அப்போது சிலர் கத்தியால் குத்தப்பட்டார்கள்.
கலவரத்தை அடக்க, போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை வீசினார்கள். இதையொட்டி, மறுநாள் 101 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் பதற்ற நிலை நிலவியதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கவனிக்க, தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள் திண்டுக்கல் சென்றார்.
20_5_1973 அன்று ஓட்டுப்பதிவு நடந்தது. மறுநாள் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார்.
ஓட்டு விவரம்:_
மொத்த ஓட்டுக்கள் 6,43,704
பதிவான ஓட்டுக்கள் 5,05,253
மாயத்தேவர் (அ.தி.மு.க.) 2,60,930
சித்தன் (ப.காங்.) 1,19,032
பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) 93,496
சீமைச்சாமி (இ.காங்.) 11,423
சூரியமுத்து (சுயே) 9,342
சேதுராமதேவர் (சுயே) 695
கோவிந்தசாமி (சுயே) 687
வரததேசிகன் (சுயே) 502
அங்கண்ண செட்டியார் (சுயே) 448
செல்லாதவை 8,698
அ.தி.மு.க.வுக்கு அடுத்த இடத்தை காமராஜரின் பழைய காங்கிரஸ் பெற்றது. இ.காங்கிரஸ் வேட்பாளரும், சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். திண்டுக்கல் தேர்தல் முடிவு பற்றி எம்.ஜி.ஆர். ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:_
"திண்டுக்கல் தேர்தலின்போது, `உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அல்லது அன்னியனுக்கா" என்ற கேள்வியை கருணாநிதி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு தமிழ்ப்பண்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபு, அண்ணாவின் அறவழி, வள்ளுவன் நெறிமுறை இவைகளை இதய சுத்தியோடு பின்பற்றுபவன்தான் தமிழன் என்று, ஒளிவு _ மறைவு இல்லாமல், அ.தி.மு.க.வுக்கு லட்சோப லட்சம் வாக்குகளை வழங்கியதன் மூலம் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்."
மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
முதல்_அமைச்சர் கருணாநிதி விடுத்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:_
"கழக தோழர்களே! தோல்வி கண்டு துவண்டுவிடாதீர்கள். நமது அண்ணனுக்கு 1962_ல் காஞ்சியில் ஏற்பட்ட சோதனையை நினைவில் வைத்து ஆறுதல் அடையுங்கள். ஊக்கம் பெறுங்கள். நான் ஏற்கனவே, பலமுறை குறிப்பிட்டு இருப்பதுபோல், தமிழ்நாடு முழுமைக்கும் திண்டுக்கல் முடிவு உதாரணமாகாது. ஒரு தொகுதியின் வெற்றி _ தோல்வி தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயிப்பதல்ல.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி இதற்குப் பொருந்தாது......... Thanks...
இன்று 11-10-2019 முதல் சென்னை மூலக்கடை- ஐயப்பா dts தினசரி 4 காட்சிகள்... என்றும் கலையுலக வெற்றி வசூல் சக்கரவர்த்தி... மக்கள் திலகம் " எங்க வீட்டுப்பிள்ளை " தரிசனம்...
நண்பர்களுக்கு வணக்கம்.*
பூடான் நாடு சுற்றுலா சென்றிருந்ததால் பதிவுகள் செய்ய முடியவில்லை .*இனி நண்பர்களை தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி.*
திருச்சி முருகனில் இன்று முதல் (11/10/19) இரண்டு வார இடைவெளியில் மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டலில்**தினசரி 4 காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது . கடந்த 28/09/19 முதல் பேலஸில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது .
கடந்த வாரம் (04/10/19) ரெட்ஹில்ஸ் நடராஜாவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது .
தகவல் உதவி : மணலி திரு.சங்கர்.
போதை,நடிகர்,ஒப்பாரி நடிகர்.துணை நடிகரின் பிள்ளைகள் எங்கள் தங்க தலைவரை பற்றி தரக்குறைவாகவும், கேவலமாகவும் விமர்சனம் இணையதளத்தில் செய்வதாக செய்திகள்* அறிந்தேன். ஒரு கவுன்சிலர் கூட ஆகதுப்பில்லாத டெபாசிட் இழந்த , கட்சியை கலைத்து , பதவிக்காக அலைந்த, விளம்பரம் தேடாத வள்ளல் என்று விளம்பரம் தேடி கொள்ளும் பிள்ளைகள் எந்த ஜென்மத்திலும் திருந்த மாட்டார்கள் . ஆகவே அந்த விமர்சனங்களுக்கு பதில்*தருவதைவிட புரட்சி தலைவர் புகழ் பாடி மேலும் பெருமை சேர்க்க வேண்டும்*என்பதே எனது வேண்டுகோள் - மதுரை மாரியப்பன்* ...........வாட்ஸ் அப்* செய்தி,நன்றி.
புரட்சி தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் பொருட்டு தூற்றும் மாற்று*முகாம் நண்பர்களுக்கு தகுந்த பதிலடி அளித்த திரு.சுந்தர பாண்டியன், திரு.மஸ்தான் மாரியப்பன், வாட்ஸ் அப் செய்தி அளித்த திரு.மதுரை மாரியப்பன் மற்றும் இதர நண்பர்களுக்கு நன்றி.*
கடந்த வாரம் சென்னை அகஸ்தியாவில் வெளியான "நாடோடி மன்னன் " ஒரு வார வசூலாக ரூ.1,85,000/- மேல் வசூல் செய்து ,2019ம் ஆண்டில் வெளியான அனைத்து*பழைய படங்களின் வசூலை முறியடித்து புதிய, அரிய , அபார , தகர்க்க முடியாத சாதனை .என்று அரங்க ஊழியர்கள் தகவல் அளித்துள்ளனர் .
Quote:
எங்கள் தலைவரைப் பத்தி அபாண்டமாக தனிப்பட்ட முறையில் எழுதும்போது கைகூசவில்லை. நாக்கு கூசவில்லை. ஆனால், உங்கள் நடிகரைப் பத்தி உண்மையச் சொன்னால் மட்டும் எங்களுக்கு நாக்கு கூசுமா. கைகூசுமா.
சிவா
எங்கள் தலைவரைப் பத்தி மோசமான பதிவு தனிப்பட்ட முறையில் உங்கள் திரியில் போட்டிருக்கிறீர்களே. எங்கள் தலைவருக்கு 3 பெண்டாட்டி என்றாலும் முறைப்படி பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
உங்கள் நடிகரைப் போல ரத்னமாலா என்ற நடிககையை திருமணம் செய்து கொண்ட நட்டாற்றில் விட்டவர் அல்ல. அந்த நடிககை்கு ஒரு பெண் குழுந்தை அதயும் அனாதயாக விட்ட உலக மகா உத்தமன் உங்கள் நடிகன்.
அதப்புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் இது எல்லாம் பழய கதை தெரியும்.
உங்கள் திரியில் மக்கள் திலகத்தைப் பற்றி மோசமாக பதிவு எடுத்து நீங்கள் போட்டதால் நான் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.
தங்கள் நடிகரின் படங்கள்தான் சாதனை செய்தன ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யவில்லை
ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யாது செய்யக்கூடாது என்ற மூளைச்சலவை செய்யப்பட்டு
வளர்க்கப்பட்டவர்கள்தான் மாற்றுமுகாம் நண்பர்கள். ஒரு சிலர் விதிவிலக்கு.
அதன்காரணமாகத்தான் டுப்பிளிகேற் பத்திரிகை விளம்பர செயல்பாடு .உதாரணத்திற்கு
நாடோடி மன்னன் 100 வது நாள் டுப்பிளிகேற் செயல்பாடு.
அவர்களிடத்தில்இதுபோல பல செயல்பாடுகள் உண்டு. இது ஒரு உதாரணம் மட்டுமே .
இதில் மா கோ ராமசந்தர் என்ற நடிகர் 3 திருமணம் செய்தார் என்றோ அல்லது அவர் திருமணம் செய்த விதம்பற்றியோ எதுவுமே இல்லை . ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லைQuote:
எம் தலைவரின் செண்டிமென்டை பற்றி பேசும் நாதாரிகளே,ஊடகங்களே!இதை கேட்டுக்கோங்க!
எம் தலைவர் சிவாஜியின் செண்டிமென்ட்:
நல்லதொரு குடும்பம்! பல்கலை கழகம்!
1952... நாங்கள் அறிந்த குடும்பம் இன்று வரை கோவில்! அன்றும்-இன்றும் -என்றும் ரசிகர்களை குடும்பமாய் வாழவைக்கின்றர்.வாரி வழங்கும் குடும்பம் எம் தலைவரின் குடும்பம்,ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு எங்கள் அன்னை இல்லம்.வளர்ந்து வரும் எங்கள் அன்னை இல்லத்து வாரிசுகள் அவர்களும் சாதனை கொடியை நாட்டுவார்கள்,வருவோர்க்கு அன்னமிட்டு வாழ்பவர்கள் எங்கள் அன்னை இல்லம்.இன்று பல கட்சிகள் அங்கீகாரம் பெற்றிருப்பது எம்தலைவர் சிவாஜியால்! இன்று பல எம்.எல்.ஏ க்கள்,எம்.பி.க்கள் உருவானது எம் தலைவர் சிவாஜியால் தான்! அவரால் வாழ்ந்தவர்களுக்கு அவரை பற்றி பேச பாவம் நேரமில்லை!மூடர்களே அதனால் தலைவரை பற்றி பார்த்து பேசுங்க!பேசுறப்ப வாய் வலிக்குமேதான் நாங்க வருத்தப்படுறோம்.
அ.தி.மு.க செண்டிமென்ட்:
இதுல உள்ள யாருக்குமே குடும்பமோ வாரிசோ இருக்காதுங்க!1987 ல் இருந்து செம ராசிங்க பாவம் பல குரூப்பா பிரிஞ்சு தொங்குறாங்க !இவங்க நடிகர்திலகத்தை பற்றி பேசுறாங்க! இவ்வளவு பேசுறாங்களே அவங்க தலைவருக்கு நூற்றாண்டு விழா அறிவிப்பு! வரிசையாய் பார்ப்போம்! 1)ஜெயலலிதா மரணம்2)சசிகலா சிறைவாசம் 3)ஓ.பி.எஸ் பதவி இழப்பு 4)தினகரன் சிறைவாசம் 5)ஈ.பி.எஸ் பதவியோ அந்தரத்தில் நூல் இழையில் இருக்கிறது இப்பவோ அப்பவோ!....அதுமட்டுமா எம்.ஜி.ஆர் இறப்புக்கு பிறகு இரு அணியாம்!இப்ப ஜெயலலிதா இறப்புக்கு பின்னாடி நாலு அணியாம் ...இப்படி பட்ட நீங்க சிவாஜிய பற்றி பேசவே கூடாது...இந்த ஊர்வம்பு ,செண்டிமென்ட் போடுற ஊடங்களே! இதையும் கொஞ்சம் போடுங்களேன்.. ...நம்ம தலைவர் சிவாஜியின் ரசிகர்களே! உங்க கண்டனத்தையும் பதிவிடுங்க! தலைவரை பத்தி இப்படி பேசுறத வேடிக்கை பார்க்காதீங்க!பழக்கடை ராஜா,திருச்சி மாவட்ட
சிவாஜி மன்றம்.
என்று குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்திருக்கிறது.
ரத்தினமாலா விவகாரம் அந்த நடிகையே அவரைவிட்டு விலகியதை அதில் குறிப்பிட்டுள்ளார் . ஆனால் இவை ஒன்றும் அவர்கள் கண்களுக்கு
புலப்படுவதில்லை .எங்கே குற்றம் குறை கண்டுபிடிக்கலாம் என்ற நோக்கம் மட்டுமே.இதற்கு மா கோ ராவைப்பற்றிய மோசமான பதிவை போட முடியும்
அவர்பற்றிய அந்த கேவலமான பதிவை போடாமல் தவிர்க்கிறேன்.முன்னரும் ரத்னமாலா விவகாரம் இதே நபரால் பதிவிடப்பட்டபோதுகூட
அவர்பற்றிய அந்த கேவலமான பதிவை போடாமல் தவிர்த்திருந்தேன் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.
அவர்களால்மட்டுமே கேவலமான வார்த்தைபிரயோகம் பாவிக்கமுடியும்
உண்மை வள்ளல் சிவாஜி கணேசனின் சிலையை தூக்கிவிட்டால் சிவாஜி புகழ்குறைந்து மா கோ ரா புகழ் கூடிவிடாது.
11-04 -1970 வியட்நாம் வீடு
7-10-1970 எங்கள் தங்கம்
29-10-1970 சொர்க்கம்
29-10-1970 எங்கிருந்தோ வந்தாள்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...86&oe=5E263B1C
நடிகர் திலகத்தின் படங்களை ஒப்பீடு செய்ததால் இந்தப்பதிவு.
எங்களது படங்களின் நிலவரங்களை குறைத்துச்சொல்லி
உங்கள் படங்கள் வென்றுவிட்டதாக சொல்லி உங்கள் ரசிகர்களை
பிழையாக வழிநடத்துவதே இவர்களது செயல்பாடு.
சொர்க்கம் எ வந்தாள் இரண்டும் ஒரே நாளில் வெளிவந்த படம்
சாதனையை பார்த்தீர்களா? இதுதான் சாதனை.
உங்கள் படம் தனித்து வந்தும் சென்னையில் 10 லட்சம் இல்லை
ஆனால் எங்கள் படம் இரண்டு ஒரே நாளில் வெளிவந்து 10 லட்சத்தை தாண்டி சாதனை
இதுதான் எங்கள் வசூல் சக்கரவர்த்தியின் சாதனை.
சென்னை கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை பொருளாளர் , அன்பு சகோதரர் திரு. சாந்தகுமார் அவர்கள் தந்தையார் மறைவு குறித்த செய்தியினை அறிந்து மிகுந்த துயரம் கொள்கிறேன்.40 வருடங்களாக தலைவரின் மேல் விசுவாசமாக இயங்கி கொண்டிருக்கும் சங்கம் விழாக்களில் இளமை துள்ள இன்றும் தங்களை ஈடுபடுத்தி கொள்வார்கள் உண்மையும் நேர்மையும் ஒற்றுமையும் கொண்ட பலம் வாய்ந்த உறுப்பினர்களை கொண்டு இயங்கும் சங்கம் சாந்தகுமார் அவர்களின் தந்தை மறைவு பேரிழப்பு கண்ணீரை காணிக்கை ஆக்குகிறோம் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பிலும் என் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நான் வணங்கும் எங்கள் புரட்சித் தலைவர் அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.
அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம்.......... Thanks.........
மக்கள் திலகம் அவர்களின் வெற்றிப் படைப்பான "நாடோடி மன்னன் " திரைப்படப் பாடல். பாட்டுப் புத்தகம் தேவைப்படுகிறது அல்லது அனைத்துப் பாட்டுகளையும் யாரேனும் தொகுத்து அனுப்பினால் மிக உபயோகமாக இருக்கும் மதுரையில்" தீபாவளி "பரிசாக "நாடோடி மன்னன்" திரையிடப்படுகிறது திரைப்படத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொடுப்பதற்கு தேவைப்படுகிறது நல்ல உள்ளம் கொண்ட நமது பக்தர்கள் கொடுத்து உதவினால் நன்மையாக இருக்கும் ஃ மதுரை ராமகிருஷ்ணன்........... Thanks.........
வருகின்ற 18-10-2019 வெள்ளிக்கிழமை முதல் சென்னை- அகஸ்தியா 70 mm மில் தினசரி 2 காட்சிகள் ... மறு வெளியீட்டு காவியங்களின் ஏக போக சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் " நாளை நமதே" காவியம் காட்சி தரவிருக்கிறார்... நண்பர்கள் தகவல்.........
அகஸ்தியா 70MM திரையரங்கில் ...நிழலை உண்மையில் நிஜமாக்கிய ஒரே திரையுலக மேதைகளின் மேன்மையான மேதை மக்கள் திலகம் நடித்து, தயாரித்து, இயக்குனர் ஆக இயக்கிய "நாடோடி மன்னன்" மிக பெரிய வசூல் புரட்சி... பிரளயம்... செய்து பலருக்கு மிரட்சியை உண்டாக்கியுள்ளது... என தகவல்கள் வந்திருக்கிறது... அப்புறம் இன்னொரு சிறப்பான இனிய தகவல் திரையரங்க உரிமையாளர்/ மேலாளர்... ஊழியர்கள் உட்பட என்றும் வற்றாத ஜீவ நதி... மக்கள் திலகம் காவியங்களையே திரையிட முன்னுரிமை அளிக்கப்படும் என கேள்வி... நம் ரசிகர்கள் உண்மையான பக்தி... வழிபாடுக்கு பொருத்தமான அங்கீகாரம்......... Thanks.........
கடந்த சில நாட்களுக்கு முன் திரையிடப்பட்ட பழைய பட வசூலுக்கு இலக்கணம், இலக்கியம் வகுத்த பொன்மனச்செம்மல் காவிய படைப்பு..." குடியிருந்த கோயில்"... Net Profit... Rs., 28000.00.......இதுவன்றோ வசூல் சாதனை......... Thanks.........
https://i.postimg.cc/43bxMxVz/IMG-3898.jpg
எட்டாவது வள்ளல்
மீண்டும் அங்கலாய்ப்பு, புலம்பலா?... சென்னையில் 10லட்சம் வசூல்.. குறிப்பிட்ட 3 படங்களில் 2 படம் அரங்கு எந்த அரங்கு?! இவ்வளவு, இவ்வாறு சொல்லியும் சொந்த தியேட்டர் லிஸ்ட்டையே கொண்டு வருக்கிறீர்.. "உரிமைக்குரல்" ஆசிரியர் பதிவிட்டது சென்னை விபரம் மட்டுமல்ல... எல்லா ஊர்களிலும் சேர்த்து என்று பொருள் கொள்ளவும்... மற்றபடி சிலை விஷயம் என்னவென்றால் உங்களுக்கு தெரியாதோ?! காங்கிரஸ் கட்சி தொண்டர் போட்ட வழக்கு விசாரணை, விவகாரம் தான். முதலில் அந்த சிலையை , பிரச்சினையை சரி செய்ய பாருங்கள்.. வீணாக புரட்சி நடிகர் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து அவதி, அவஸ்தை படாதீர்... அப்புறம் மற்ற நடிகர்கள் படங்கள் எந்த சாதனையும் படைக்கவில்லை என நாங்கள் சொல்லவில்லை. அந்தளவுக்கு இங்கு யாரும் கருத்து குருடர்கள் இல்லை... மக்கள் திலகம் காவியங்கள் அளவிற்கு சாதனை படைக்கவில்லை... எனதானே சொல்லி வருகிறோம்...சரி... கட்சியின் ஆட்சியில் இருப்பவர்கள் நான்கு அணிகளாக பிரிந்து நடக்கும் போது உங்கள் நடிகர், ரசிகர்களை குறை சொல்ல வந்துடிங்களா னு கேட்கிறார் இன்னொருவர்.. பிறகு அவுங்க ஆட்சியினர் கையை... பிடித்து சிலை மணி மண்டபமெல்லாம் நடந்திருக்கு! ஆதலால் எழுதும்போது யோசித்து கொண்டே எழுதவும்...
"குடியிருந்த கோயில்" வசூல் விபரம் அகஸ்தியா 70 mm அரங்கு...
"படகோட்டி", "ஒளி விளக்கு" மக்கள் திலகம் காவியங்கள் திரைப்பட விநியோக உரிமைகள்... யாரும் நினைத்து பார்க்க இயலாத விலைகள் என்று...மீரான் சாஹிப் தெருவில் நிறைய பேச்சு குரல்கள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது...
நேற்று முதல் (11/10/2019) மதுரை ஷா அரங்கில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
கடந்த மாதம் 20/9/19 முதல் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெளியாகி ஒரு வார வசூலாக ரூ.1,31,000/- ஈட்டி சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி ;மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.*
மதுரை - ஷா DTS Screen 1 தினசரி 3 காட்சிகள்... எத்தனை முறைகள் திரையிட்டாலும் அத்தனை முறைகளும் பார்க்க தூண்டும் பொன்னான ஓவியம், காவியம் இந்திய திரைப்பட வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் " நினைத்ததை முடிப்பவன்" தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நன்றி........... Thanks.............