-
நித்தம் வணங்கும் புரட்சி தலைவரின் மாறுபட்ட கதையும் தலைவரின் அழகை மேலும் மேலும் ரசிக்க வைக்கும் அமைப்பு கொண்ட வெற்றி திரைப்படம் அன்பேவா தமிழகமெங்கும் தரமற்ற டிஜிட்டலில் வெளியிட்டு தலைவரின் திரைபுகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இருந்தது.இதை கண்டித்து நேற்று 20.12.2020 ஆல்பர்ட் தியேட்டர் ஞாயிறு மாலை காட்சியில் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக கண்டண முழக்க தர்னா போராட்டமும் தமிழகமெங்கும் உள்ள பக்தர்கள் கண்டனகுரல் எழுப்பிய பலனாக அன்பே வா திரைப்பட தமிழக வினியோகஸ்தர் திரு.முருகன் அவர்கள் டிஜிட்டல் தொழில் புரிந்த திரு.மகேந்திரன் என்பவரிடம் படத்தை மறுபடியும் நல்ல தரத்தில் செய்து தரும்படி கூறியிருக்கும் அதேவேளையில் வட ஆற்காடு முழுவதும் வெளியிட்ட தியேட்டரில் இருந்து எடுக்க சொல்லிவிட்டு மற்ற மாவட்டங்களில் 3 காட்சிகளை ஒரு காட்சியாகவும் அதுவும் சிறிய தியேட்டரில் மாற்றும் படி கூறி தலைவரின் புகழுக்கு மாற்று ரசிகர்களின் களங்கம் ஏற்படாவண்ணம் தமிழகமெங்கும் உள்ள பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிபளித்தமைக்கு அன்பே வா உரிமையாளர் திரு.முருகன் அவர்களுக்கு கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..........vss...
-
தொடர் பதிவு உ....த்தமன். 4
----------------------------------------------
ஜோஸப் தியேட்டரை பற்றி தெளிவாக பார்த்து விட்டோம். இனி மீண்டும் காரனேஷன் தியேட்டருக்கு வருவோம். ஒரு காலத்தில் சிறப்பாக ஓடிய தியேட்டர் அந்திமக் காலத்தில் 2 வாரம் 3 வார திரைப்படங்களை திரையிடுவதிலே ஆர்வம் காட்டினார்கள். சில சமயங்களில் அவர்களையும் அறியாமல் ஒரு சில படங்கள் ஹிட் அடித்து 50 நாட்கள் ஓடியதுமுண்டு.
அப்படி ஓடிய படம்தான் "நான்". 1967 தீபாவளிக்கு வெளியான படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுதான். 53 நாட்கள் ஓடியது. அடுத்து "ஊட்டி வரை உறவு" 52 நாட்கள் பாலகிருஷ்ணாவிலும், "விவசாயி" சார்லஸில் 30 நாட்களும் "இரு மலர்கள்" ஜோஸப்பில் 21 நாட்களும் ஓடியது. வசூலை பொறுத்தவரை விவசாயி முதன்மையாக விளங்கியது.
காரனேஷன் தியேட்டரிலேயே அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் எதுவென்றால் ஜெமினியின் "வாழ்க்கைப் படகு"தான். 63 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. காட்சி துவங்கும் நேரத்தில் ராட்சத பலூனை பறக்க விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்."காதலிக்க நேரமில்லை" முதல் வெளியீட்டில் 28 நாட்கள்தான் ஓடியது. மூன்று மாத இடைவெளியில் வெளியாகி இரண்டாவது வெளியீட்டில் சுமார் 35 நாட்கள் ஓடியது.
மற்றபடி அந்த தியேட்டரில் பொதுவாக ஜெய்சங்கர்,
ரவிச்சந்திரன் படங்கள் தான் அதிகம் திரையிடுவார்கள்.13 நாட்கள்
இல்லையென்றால் 17 நாட்கள் தான் அதிக பட்சமாக ஓடும்.
அநேக அய்யனின் படங்களும் அங்கேதான் திரைக்கு வந்தன. தலைவருக்கு 1968 ல் வெளியான 8 படங்களில் 2 படங்கள் காரனேஷனில்தான் வெளிவந்தது.
"புதியபூமி" 1968 ஜீன் 27 லும் "கணவன்" ஆக 15 லும் வெளியாகி வசூலில் அய்யனின் 50 நாட்கள் ஓட்டிய படங்களை காட்டிலும் அதிகம் வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களுமே ரூ30000 வசூலை எளிதில் கடந்தது.
இந்த மூவரின் படங்களோடு மக்கள் திலகத்தின் பழைய படங்களும் மாறி மாறி வருவது வழக்கம். உதாரணமாக சொல்லப்போனால் "பணக்கார பிள்ளை" "மாடிவீட்டு மாப்பிள்ளை" "அன்று கண்ட முகம்" "அவசர கல்யாணம்" "மனிதனும் தெய்வமாகலாம்" "குரு தட்சணை" இது போன்ற படங்கள்தான் திரையிடப்படும். அவர்களுக்குள்ளே போட்டி அருமையாக இருக்கும்.
சில சமயங்களில் ரவியும் ஜெய்யும் அய்யனை தண்ணி காட்டுவதை ரசிக்கலாம். திடீரென்று தலைவரின் பழைய படமான "அலிபாபா" போன்ற படங்கள் திரையிட்டதும் தியேட்டர் திருவிழா கோலம்தான். எந்த புது படத்தையும் தலைவரின் பழைய படத்தின் முதல் மூன்று நாள் வசூல் தூக்கி வீசி விடும். டிக்கெட் எடுக்க பிரத்யேக பயிற்சி எடுத்தவர்களால்தான் முடியும். அந்த கூட்டத்தை வேடிக்கை பார்க்க திரளான பேர்கள் கூடுவார்கள்.
அந்த திரையரங்கில் கடைசியாக 50 நாட்கள் ஓடியது "நினைத்ததை முடிப்பவன்" தான். ஆனால் கடைசியாக 50 நாட்கள் ஓட்டப்பட்ட படம்தான் அய்யனின் "உ...த்தமன்". படத்தின் பெயர்தான் "உ...த்தமன்". ஆனால் ஒரிஜினல் அயோக்கியன். அனைத்து அயோக்கியத்தனம் செய்துதான் படத்தை 50 நாட்கள் ஓட்டினார்கள். தலைவரின் கடைசி படமான "மதுரயை மீட்ட சுந்தர பாண்டியன்" வெளியானதும் இதே காரனேஷனில்தான். விசிஅய்யனின் இழுவை படத்தை தலைவர் படங்களுடன் ஒப்பிடும் கைஸ்களுக்கு ஒரு விண்ணப்பம். ஒரு நல்ல குடும்ப பெண்ணுடன் ஒரு பரத்தையை ஒப்பிடுவது போல அருவருப்பாக இருக்கிறது.
தயவுசெய்து ஒப்பிடுவதை கைவிட்டு விடுங்கள். "உ..த்தமன்" படத்தில் அய்யனின் ஸ்கேட்டிங் நடனம்தான்
ஹை லைட். ஒரிஜினல் ஸ்கேட்டிங் ஆடுபவர்களெல்லாம் அய்யனின் படகு ஆட்டத்துக்கு முன்னால் என்ன ஆவார்களோ தெரியவில்லை.
அருமையான இந்திப்படத்தை தனது மிகை நடிப்பின் மூலம் அய்யன் அலங்கோலமாக்கி சின்னா பின்னமாக்கி விட்டார்..
மீண்டும் அடுத்த பதிவில்............ksr.........
-
தனியார் தொலைக்காட்சிகளில் கலை வேந்தன்*எம்.ஜி.ஆர் திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான*விவரம் (10/12/20 முதல் 20/12/20* வரை )
----------------------------------------------------------------------------------------------------------------------------
10/12/20 -முரசு -மதியம் 12 மணி /இரவு 7மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * * புது யுகம் -- இரவு 7 மணி - காதல் வாகனம்*
* * * * * * * * * பாலிமர் டிவி- இரவு 11 மணி - புதிய பூமி*
11/12/20 -சன் லைஃப் - மாலை 4 மணி - புதிய பூமி*
12/12/20-சன்* லைஃப் - மாலை 4 மணி - மன்னாதி மன்னன்*
* * * * * * * புதுயுகம் டிவி- இரவு 7 மணி - முகராசி*
13/12/20 -தமிழ் மீடியா - காலை 10 மணி - மகாதேவி*
14/12/20-மெகா டிவி -அதிகாலை 1 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * சன் லைஃப்- காலை 11 மணி - எங்க வீட்டு பிள்ளை*
* * * * * * * முரசு* - மதியம் 12 மணி /இரவு 7 மணி --நீதிக்கு பின் பாசம்*
15/12/20-சன் லைஃப் - மாலை 4 மணி - கண்ணன் என் காதலன்*
16/12/20- சன் லைஃப் - காலை 11 மணி - எங்கள் தங்கம்*
* * * * * * * *வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*
* * * * * * * * புது யுகம் டிவி - இரவு 7 மணி - குடும்ப தலைவன்*
* * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி- நீதிக்கு பின் பாசம்*
17/12/20- சன் லைஃப் - காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*
* * * * * * * சன் லைஃப் -மாலை 4 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * *புதுயுகம்* - இரவு 7 மணி - சங்கே முழங்கு*
18/12/20-சன் லைஃப் - காலை 11 மணி - நாளை நமதே*
* * * * * * * * *வேந்தர் டிவி -பிற்பகல் .30 மணி - அவசர போலீஸ் 100
* * * * * * *பாலிமர் டிவி- இரவு 11 மணி* ராமன் தேடிய சீதை*
19/12/20- சன் லைஃப்- காலை 11 மணி - தெய்வத்தாய்*
* * * * * * * * *விஷ்ணு டிவி -மதியம் 12 மணி - மாட்டுக்கார வேலன்*
* * * * * * * *தமிழ் மீடியா* - பிற்பகல் 1 மணி - எங்க வீட்டு பிள்ளை*
20/12/20-சன் லைஃப் - காலை* 11 மணி - விவசாயி*
* * * * * * * *மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - நல்ல நேரம்*
* * * * * * * *முரசு - மதியம் 12 மணி /இரவு 7மணி -நீதிக்கு தலை வணங்கு*
* * * * * * * * * * * * * * **
-
நேற்று 20.12.2020 அன்று மாலை காட்சியில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் புரட்சித்தலைவர் நடித்த அன்பே வா திரைப்படத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தோம்.
புரட்சித் தலைவரின் அனைத்து படங்களுமே எத்தனை முறை பார்த்தாலும் ஆசை அடங்காமல் பார்க்க தூண்டிக்கொண்டே இருக்கும்.
புரட்சித் தலைவரை நேசிக்கின்ற மிகத்தீவிரமான நமக்கு நம் வாழ்விலே எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்தாலும் புரட்சித்தலைவரின் திரைப்படத்தை கண்டு ரசிக்கின்ற மகிழ்ச்சிக்கு இவ்வுலகில் ஈடு இணை எதுவுமே இல்லை.
புரட்சித்தலைவரின் திரைப்படங்கள் வெறும் சினிமா படங்கள் அல்ல பாடங்கள் என்று எங்கள் பெற்றோர்களும் புரட்சித் தலைவரின் மூத்த பக்தர்களும் எங்களைப் போன்ற இளம் புரட்சித்தலைவரின் ரசிகர்களுக்கு சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் சொன்னது ஆயிரம் மடங்கு உண்மை ... திரையில் மட்டும் கதாநாயகனாக இருந்துவிடவில்லை நம் புரட்சித்தலைவர். நிஜ வாழ்விலும் சரித்திரம் போற்றுகின்ற கதாநாயகர் ... அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் புரட்சித்தலைவரின் புகழ் உச்சியை எவராலும் நெருங்க கூட முடியாது ..
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க. Ssn...
-
#எம்ஜிஆர் 360 #டிகிரி
மக்கள்திலகம் எம்ஜிஆரை விட , காதல்மன்னன் ஜெமினி, சிவாஜி ஆகியோர் காதல் காட்சிகளில் நடித்து பெரியளவில் ரசிகர்களையும், பெண்ரசிகைகளையும் பெற்றிருந்தனர்...
ஆனால்,
எம்ஜிஆரை பெண்கள் ரசித்தத்தற்கும் மதித்ததற்கும் #அடிப்படை #காரணம் அவர் ஒரு சிறந்த மனிதனுக்கு உரிய அனைத்து பண்புகளையும் பெற்றிருந்தார் என்பதை தீர்மானமாக நம்பியிருந்தது தான்...
ஒரு சிறு உதாரணத்திற்கு...
நடிகை பத்மினியுடன் எம்ஜிஆர், #ராணி #சம்யுக்தாவில் நடித்தபோது பத்மினியை குதிரையில் வைத்து கடத்திச் செல்லவேண்டும். அப்போது பத்மினி நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தார். அவரை முதலில் குதிரையில் அமர்த்தினார்கள். அப்போது எம்ஜிஆர் பார்த்துப்பா பத்திரமாக செய்யுங்க என்று கூடவேயிருந்து எச்சரித்துக்கொண்டேயிருந்தார். இதை ஒரு பேட்டியில் பத்மனி அவர்களே... "#எம்ஜிஆர் #மிகச்சிறந்த #மனிதர்" என்று கூறியிருக்கிறார்.
மற்ற நடிகர்களுக்கு தாங்கள் நடிக்கும் காட்சி சிறப்பாக அமையவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கும்...அதை 90 டிகிரி என வைத்துக்கொள்ளலாம். அதாவது லகான் போட்ட குதிரை போல ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே. அந்த சுயநலத்தில் தவறில்லை.
ஏனெனில்... "நடிப்பு அவர்களுக்கு ஒரு தொழில்" அவ்வளவே...
ஆனால் #வாத்தியார் 360 #டிகிரி...
அவரின் கவனமும் அக்கறையும் படப்பிடிப்பிலுள்ள அடிமட்டத்தொழிலாளலரிடமிருந்து அனைவரிடமும் இருக்கும்...
வாத்தியாரைப் பொறுத்தவரையில் சினிமாத் துறையை வெறும் தொழிலாக மட்டும் நினைக்கவில்லை. அப்படி ஒரு காலத்தில் தொழிலாக இருந்த சினிமாத் துறையை அன்பு, பண்பு, கலாச்சாரம், நற்பண்புகள், சகோதரத்துவம், விதைக்கும் இடமாக மாற்றிய பெருமை வாத்தியாரை மட்டுமே சேரும்.
தன் அன்பாலும் கருணையாலும் எம்ஜிஆர் பெண்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்ததால் அவரைத் தம் மகனாகப் பலரும் கருதினர்.
எனவேதான், இதயதெய்வம் விண்ணுலகை அடைந்த நேரத்தில் "நீயும் மொட்டை அடிச்சுடுப்பா" என்று தன் மகனிடம் கூறியபோது அந்த மகன்கள் தாயின் சொல்லை தட்டாமல் எம்ஜிஆருக்காக மொட்டையடித்து திதி செய்தனர்.
ஆனால், எம்ஜிஆரின் தாயன்புக்கும், எம்ஜிஆரின் மீதான தாய்க்குலத்தின் ஒட்டுமொத்தமான பேரன்பிற்கும் இதைவிட ஒரு சான்று என்னவாக இருக்கமுடியும்...???.........bsm.........
-
Breaking News
Tamil News online
Home / tami nadu / அன்று என்னதான் செய்தார் எம்.ஜி.ஆர்..? – இன்று கட்சிகள் 'பங்கு' போட துடிப்பதன் பின்புலம்!
அன்று என்னதான் செய்தார் எம்.ஜி.ஆர்..? – இன்று கட்சிகள் 'பங்கு' போட துடிப்பதன் பின்புலம்!
TAMI NADU December 16, 2020, 88
‘மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியை கொண்டு வருவோம்’ – தமிழகத்தில் யார் புதிதாக அரசியலுக்கு வந்தாலும் முதலில் அவர்கள் எடுக்கும் தாரக மந்திரம் இதுவாகவே சமீப காலமாக இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் தற்போது கட்சி ஆரம்பிக்க உள்ள ரஜினிகாந்த் வரையில் எம்.ஜி.ஆரை மையப்படுத்தியே அரசியலை நகர்த்துகின்றனர். இதில், அதிகம் மைய்யப்படுத்துவது கமல்.
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம், ஆண்டுகள் கடந்தாலும் அரசியலில் அனைவரையும் பேச வைத்துள்ளது. சின்னம் என்றால் இரட்டை இலை; தலைவன் என்றால் எம்ஜிஆர் என கடைகோடி கிராமத்து மக்களையும் தனது செயல்பாட்டால் ஈர்த்தவர்தான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1977 – 1987 வரை தமிழகத்தை தன்னுள் வைத்து ஆட்டிபடைத்த அந்த மூன்று எழுத்துதான் ‘எம்.ஜி.ஆர்’.
image
இவர்தான் எம்.ஜி.ஆர்:
தன்னுடைய உதவும் குணத்தாலும் நலத்திட்ட உதவிகளாலும் மக்களை திணற வைத்த எம்.ஜி.ஆர், ‘புரட்சித்தலைவர்’, ‘மக்கள் திலகம்’, ‘பொன்மனச் செம்மல்’ என மக்கள் கொடுத்த பல்வேறு பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆவார். சினிமாவில் தொடங்கி அரசியல் வரை அனைத்து காலகட்டங்களும் மக்களுக்கு நல்லதை சொல்வதும் செய்வதுமாகவே திகழ்ந்து வந்தார் என்றால் அது மிகையல்ல. ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து கோலோச்ச முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் எம்ஜிஆர். திரைப்படங்கள் மூலம் பெரியார் அண்ணாவின் சமூக கருத்துகளை மக்களிடம் விதைத்து, அதை கடைசி வரை கடைப்பிடித்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் எம்ஜிஆர்.
image
விதவை, ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள், தாய் சேய் நல இல்லங்கள், குழந்தைகளுக்கு இலவச சீருடை, இலவச காலணி, இலவச பாடநூல் வழங்குதல், ஊனமுற்றோர்களுக்கு உதவி, முதியவர்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை, மதிய சத்துணவு, ஆண்டுக்கு இருமுறை சீருடை வழங்குதல், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தனது ஆட்சியில் நிகழ்த்தி காட்டினார் எம்.ஜி.ஆர்.
image
ஆரம்ப காலகட்டத்தில் காங்கிரஸ் கொள்கையால் அரசியலில் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர் பிற்காலத்தில் அண்ணாவை தலைராகவும் காமராஜரை வழிகாட்டியாகவும் ஏற்றார். இதை திமுகவில் இருந்துகொண்டே எம்.ஜி.ஆர் வெளிப்படையாக கூறியுள்ளார். அத்தோடு தான் ஆட்சியில் இருந்தபோது காமராசரின் மதிய உணவு திட்டத்தினை திறம்பட சத்துணவு திட்டமாக செயல்படுத்தினார்.
image
தி.மு.க.வின் தலைவரான அண்ணா, எம்.ஜி.ஆரை மிகவும் நேசித்தார். தேர்தல் பிரசாரத்தில் அதிக பங்கு வகித்தமையால் அண்ணா எம்.ஜி.ஆருக்கு இதயக்கனி எனும் பட்டம் கொடுத்தார்.
திமுகவில் என்னதான் பிரச்னை… அதிமுக உதயமானது எப்படி?
அண்ணா மறைவையடுத்து தன்னை முதல்வர் அரியணையில் அமர வைக்க பாடுபட்ட எம்.ஜி.ஆரையே ‘அண்ணா கொடுத்துவிட்டு சென்ற கனியில் வண்டு துளைத்துவிட்டது. கனியை தூக்கி எறிய வெண்டியதாயிற்று’ ஓரங்கட்டினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்கு காரணம் திமுகவிலேயே பொருளாளராக இருந்துகொண்டு “அந்த கட்சியினர் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும். தங்கள் கை சுத்தமானது என்பதை நிரூபிக்க வேண்டும்” என்று பொதுக்கூட்டங்களில் பேசினார் எம்.ஜி.ஆர்.
image
திமுகவில் இருந்து தூக்கியெறியப்பட்ட எம்.ஜி.ஆர் 1972-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார். அந்தப் பெயரே அண்ணாவை எத்தனை தூரம் எம்.ஜி.ஆர் நேசித்தார் என்று காட்டியது. 1977, 1980, 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சர் பதவியில் இருந்தார்.
image
ஏழைப் பங்காளன் எம்.ஜி.ஆர்:
எம்.ஜி.ஆர் உயிரிழந்துவிட்டார் என்று சொன்னால் கூட அதை நம்பாத வெறித்தனமான பக்தர்கள் அவருக்கு இருந்தனர். அதற்கு காரணம் முதல்வராக இருந்துகொண்டு ஒரு சாமானியனின் தோல்மீது கைப்போட்டு பேசுவார் எம்.ஜி.ஆர். காரில் செல்லும்போது விவசாயிகளை கண்டால் கீழே இறங்கி பணத்தை கொடுத்துவிட்டு நலம் விசாரித்துவிட்டு செல்வார். ஏழைகளோடு தரையில் அமர்ந்து உணவு சாப்பிடுவார். வயதானவரகளை கட்டியணைத்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வார்.
image
இவையனைத்தும் எம்.ஜி.ஆரின் முகங்களே. இதனால்தான் தமிழக அரசியலில் இருந்து எம்.ஜி.ஆரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் புறந்தள்ளிவிட முடியவில்லை என்று நினைவுகூரும் மூத்த அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள், ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து ஆட்சியமைத்து கோலோச்ச முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அழுத்தமாகக் கூறுவர்.
image
தன்னுடைய ஆட்சி காலத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி காலகட்டம் வரை எம்.ஜி.ஆரை முன்வைத்தே தனது அரசியலை நகர்த்தி சென்றார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் உதிர்த்த அதிகபட்சமான வார்த்தை ‘எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க’ என்பதாகவே இருந்தது. இது ஒருபுறமிருக்க தமிழக அரசியல் மேடைகளில் அதிமுக அல்லாத கட்சிகளும் எம்ஜிஆரை முன்வைத்தும், அவரது ஆட்சியையும் பாராட்டியும் பேசி வருகின்றன.
image
தமிழக அரசியலில் புதிதாக கால் ஊன்றும் எந்த கட்சி மற்றும் தலைவராக இருந்தாலும், எம்ஜிஆரை தவிர்த்து, அரசியல் இல்லை என்பதை தான் சமீபத்திய பல கட்சிகளின் தலைவர்களது கருத்துகள் நமக்கு உணர்த்தியுள்ளது.
‘கருப்பு எம்.ஜி.ஆர்’ – விஜயகாந்த்
தமிழகத்தின் இரண்டு ஆளுமைகளாக இருந்த மறைந்த கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் எதிர்த்து அரசியலில் களம் கண்ட விஜயகாந்த், ‘மக்கள் இன்னொரு எம்.ஜி.ஆரை எதிர்பார்க்கிறார்கள். எனவேதான் என்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்கிறார்கள்’ என கர்ஜித்தார். மேலும், அவரைப்போல நம்பகமான தலைவனாக வருவேன் எனவும் தெரிவித்தார்.
image
‘எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவேன்’ – ரஜினி
இதையடுத்து பல யோசனைகளுக்கு பிறகு இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி என சூளுரைத்த ரஜினிகாந்தும் எம்.ஜி.ஆர் என்ற மந்திரத்தையே பயன்படுத்தினார். “அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்.ஜி.ஆராக முடியாது. அவர் ஒரு தெய்வ பிறவி. அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை தன்னால் கொடுக்க முடியும்” என்றார்.
image
‘எம்.ஜி.ஆர் போல் மோடி – பாஜக’
இதுபோதாது என்று எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்து மந்திரம் பாஜகவையும் விட்டுவைக்கவில்லை. கடந்த மாதம் பாஜக நடத்திய வேல்யாத்திரையின் போது வெளியிட்ட வீடியோவில், எம்ஜிஆர் ஆட்சியை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும் என பிரசாரம் செய்தது. மேலும், தமிழகத்தில் முதல்வராக எம்ஜிஆர் இருந்த போது நலத்திட்டங்களை செயல்படுத்தியது போல பிரதமர் மோடியும் செயல்படுகிறார் என பாஜகவினர் பெருமிதம் பேசி வருகின்றனர்.
‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ – கமல்
அந்த வழியில் தற்போது மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனும் இணைந்துள்ளார். ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ என தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார் கமல். பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசன், எம்.ஜி.ஆர் எங்கள் சொத்து என குறிப்பிட்டார். அதிமுக இன்றும் ஆட்சியில் உள்ள நிலையில், அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை, ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாஜகவினர் சொந்தம் கொண்டாடுவதற்கு அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
image
இதற்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன் “அதிமுகவுக்கு நீட்சி என்று நான் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு நீட்சி என்றுதான் கூறினேன். எம்.ஜி.ஆருக்கு நீட்சியாக எந்த நடிகரும் இருக்கலாம். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபோது அவரை திமுகவின் திலகம் என்று கூறவில்லை. அதிமுகவை தொடங்கிய போதும் அவரை அதிமுகவின் திலகம் என்று கூறவில்லை. அவர் எப்போது மக்கள் திலகமாகவே இருந்தார். அதன்படி நான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இன்று இருக்கும் அமைச்சர்கள் எம்.ஜி.ஆரின் மதிமுகத்தைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நான் அவர் மடியில் அமர்ந்திருக்கிறேன். நான் சின்ன வெற்றி பெற்றால் கூட என் நெற்றிப்பொட்டில் முத்தமிட்டு பாராட்டுவார் எம்.ஜி.ஆர்.” என்றார்.
image
இந்நிலையில், மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி தமிழகத்தில் வருமா? அல்லது எம்.ஜி.ஆரின் வாக்குகளை சேகரிப்பதற்கான திட்டமா? அடுத்தடுத்து எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி எடுக்கும் அரசியல் நிலைப்பாடு தமிழகத்தில் எடுபடுமா என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.
திமுக எதிர்ப்பே எம்.ஜி.ஆர் அரசியல்:
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர்கள் மாலன் கூறுகையில், “எம்.ஜி.ஆரை இரண்டாக பிரித்து பார்க்க வேண்டும். ஒன்று அவரது கட்சி. மற்றொன்று அவரது ஆட்சி. அடித்தளமக்கள் பயன்படக்கூடியதாக அவருடைய ஆட்சி இருந்தது. எம்.ஜி.ஆர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது. கட்சியை பொருத்தவரை திமுகதான் எதிரி என தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் தற்போது வருபவர்கள் கருத்தியல் ரீதியாக முன்வைத்து பேசுகிறார்கள். நேர்மை, ஊழல் என்று பேசுகிறார்கள். அது மக்களுக்கு புரியாது. அதை உருவகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் யாரும் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துவது வீண்.” என்றார்.
image
எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை:
இதுகுறித்து பத்திரிகையாளர் கணபதி கூறுகையில் “எம்.ஜி.ஆர் மிகப்பெரிய தலைவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த பெயரை உபயோகப்படுத்துவது தவறு இல்லை. ஆனால் எந்த இடத்தில் உபயோகப்படுத்தக்கூடாது என்பதில் தான் பிரச்னை. ஜெயலலிதா இருந்தபோது கூட எம்.ஜி.ஆர் பெயரில் மற்றவர்கள் கட்சி ஆரம்பிப்பதாலேயோ, பெயரை உபயோகப்படுத்துவதனாலேயோ கோபப்படவில்லை. ஆனால் எம்.ஜி.ஆரை பற்றி தவறாக சித்தரிக்கும்போது ஜெயலலிதா கோபப்பட்டார்.
image
இப்போது ஏன் எம்.ஜி.ஆர் பெயரை உபயோகப்படுத்துகிறார்கள் என்றால், எம்.ஜிஆரின் விசுவாசிகள் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது. திமுகவுக்கு பலம் உள்ளது. ஆனால் அதிமுகவில் பலம் குன்றியுள்ளது. அந்த வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என முனைப்பு காட்டுகின்றனர். அதிமுகவில் இருப்பவர்கள் வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை புதிதாக வருபவர்களுக்கு உண்டு. அதனால்தான் அமைச்சர்கள் பயப்படுகிறார்கள்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM...
-
கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவிற் கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று கட்சி தொண்டர்கள் நன்கொடை வசூல் செய்ய வேண்டும் என்றார் கள். தா. பாண்டியன் தலைமையில் நன்கொடை வசூல் செய்ய கிளம்பினார்கள்.
முதலில் எம் ஜி ஆரை பார்க்கலாம் என்று எம் ஜி ஆரை பார்த்தார்கள்.
எம் ஜி ஆர். ஜீவா மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தார். தா. பாண்டியன் இப்போது தான் எம் ஜி ஆரை நேரில் பார்க்கிறார். எம். ஜி ஆர் சிலை வைக்க நான் முழு பணத்தையும் கொடுக்கிறேன் என்று சொல்லிரூபாய். 50000.ஐ உடனே கொடுத்தார்.. அவர் நடிக்கும் பாத்திரத்தின் பெயரையும் ஜீவா என்று பறக்கும் பாவை.
அடிமை பெண்ணில் ஜெயலலிதா வின் பெயரும் ஜீவா தான்... Chellam ithu.........
-
தனக்குத்தானே பாதுகாப்பு கொடுக்க தெரிந்த தலைவர் !
22.10.1979 இல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடிகர் குண்டு கருப்பையாவின் மகள் ஜெயபாரதி - சோலைமணி திருமணம் நடைபெற்றது.
முதல்வர் எம்ஜிஆர் தலைமை தாங்கி நடத்தி வைத்த இந்த நிகழ்வுக்கு ஒரு போலீஸ் கூட பாதுகாப்பு இல்லை. எம்ஜிஆருடன் எப்போதும் துணைக்கு வரும் ஸ்டண்ட் திரைப்பட குழுவினர்தான் அப்போது பாதுகாப்பிற்கு இருந்தனர். என்ன காரணம்?
அப்போது எம்ஜிஆர் ஆட்சிக்கு எதிராக பல போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்த கருணாநிதி, என்.ஜி.ஓ. சங்கத் தலைவர்
சிவ. இளங்கோ மூலம், காவல்துறையினரை தூண்டிவிட்டு போலீஸ் சங்கம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் எங்கும் போலீசார் வேலை நிறுத்தம் செய்தனர்.
தமிழக வரலாற்றில் அதற்கு முன்னும் பின்னும் இல்லாத, நடந்திராத விஷயம் அது. கருணாநிதியின் எத்தனையோ அட்டூழியங்களில் இதுவும் ஒன்று.
மதுரையில் திருமணத்தை நடத்தி முடித்து விட்டு சென்னை திரும்பிய முதல்வர் எம்ஜிஆர், காவல்துறையினரின் கோரிக்கைகள் நியாயமானதை ஏற்றுக் கொண்டு ‘போலீஸ் சங்கம்’ அமைப்பதை நிராகரித்தார்.
பின்னர் சிவ. இளங்கோவை நேரில் வரவழைத்து அவர் மீதான புகார் பட்டியல் ஒன்றை எம்ஜிஆர் ஒவ்வொன்றாக வாசிக்க தொடங்கினார். எம்ஜிஆர் முழுவதும் படித்து முடிக்கக் கூட இல்லை. நடுநடுங்கி போன இளங்கோ "வேண்டாம் நிறுத்தி விடுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன்" என்றார்.
"கேட்டுத்தான் ஆக வேண்டும். நீங்கள் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் முறைகேடாக நடந்து கொண்டீர்கள். யாரிடம் எல்லாம் பணம் வாங்கினீர்கள் என்பதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது. அதனால் இனியாவது ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்"" என்று எச்சரித்து அனுப்பினார்.
கருணாநிதி செய்த இன்னும் ஒரு நம்பிக்கை துரோகம் இருக்கிறது. சிறுசேமிப்பு துணைத் தலைவராக இருந்த எம்ஜிஆருக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டு இருந்தது.
அந்த போலீசார் எம்.ஜி.ஆரின் நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதிக்கு உளவு சொல்லும் வேலை செய்து கொண்டிருந்தனர். அதை அறிந்ததும் எம்ஜிஆர் அந்தப் பாதுகாப்பை வேண்டாம் என்று விலக்கிக் கொண்டார்.
அதிமுக தொடங்கிய பின்பு எம்ஜிஆருக்கு, அவர் கூட்டங்களில், ஊர்வலங்களில் பங்கேற்கும் போது சரியான போலீஸ் பாதுகாப்பு தரப்படவில்லை. கட்சித் தொண்டர்களை கொண்டே எல்லாவற்றையும் சமாளித்தார். அவர் தனக்குத்தானே பாதுகாப்பு கொடுத்துக் கொண்ட தலைவர்.
('இதயக்கனி' டிசம்பர் 2020 இதழில்
நான் எழுதி இடம்பெற்றது).
இதில் எதுவும் திருத்தம் செய்யாமல்
பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதயக்கனி எஸ். விஜயன்.........
-
நம் இதயதெய்வம் அவர்களின் நெருங்கி வரும் அந்த கருப்பு நாள் நினைவு பதிவின் தொடர்ச்சி....
அமரர் அண்ணா அவர்களை தலைவர் நேசித்த விதம் இந்த உலகம் அறியும்.
இந்த உலகத்திலே தான் நேசித்த ஒரு தலைவர் பெயரில் அவர் உருவம் பதித்து மரியாதை செய்து அந்த இயக்கத்தை வெற்றி நடை போட செய்த உண்மை உலகநாயகன் நம் தலைவர் மட்டுமே.
அமரர் அண்ணா அவர்கள் மறைவுக்கு பிறகும் அவர் குடும்பம் வறுமையில் வாடியது.
அண்ணா அவர்களின் துணைவியார் ராணி அம்மா அவர்களுடன் அடிக்கடி பேசி நேரில் சென்று நலம் விசாரித்து அவர்கள் தேவையை நிறைவு செய்தவர் நம் தலைவர்.
அண்ணா அவர்களின் வளர்ப்பு மகன்கள் கௌதமன் பரிமளம் ஆகியோர் தலைவரை மட்டுமே வந்து அடிக்கடி சந்திப்பார்கள்.
தலைவர் முதல்வர் ஆனவுடன் தன்னால் அமரர் அண்ணா அவர்களின் குடும்பத்தை சரிவர பராமரிக்க முடியாமல் போய் விடுமோ என்ற கவலையில் அதிக பணிச்சுமை காரணம் ஆக இருந்து விட கூடாது என்று..
சத்தியா ஸ்டுடியோ அரங்கில் வேலை பார்த்து கொண்டு இருந்த மறைந்த செந்தமிழ் சேகர் என்பவரை அண்ணா அவர்களின் வீட்டிலே தங்க வைத்து அவர்களுக்கு என்ன தேவை என்பதை தனக்கு தெரிவிக்க அப்படி ஒரு ஏற்பாடு செய்தார்.
அண்ணா திமுக என்ற இயக்கத்தை ஆரம்பித்த உடன் அமரர் அண்ணா அவர்களின் துணைவியார் அவர்களை தனது இல்லத்துக்கு வரவழைத்து கொடி கட்சி பெயர் காட்டி அவர்களிடம் ஆசி பெற்றார்....
தன்னிலை மறந்து தங்களை ஆளாக்கி அழகு பார்க்க காரணம் ஆன தலைவரை மறந்து போன தலைவர்கள் மத்தியில் எந்நிலை வந்தாலும் மாறாத குணம் கொண்ட பொன்மன செம்மல் புகழ் காப்போம்...
உங்களில் ஒருவன் ஆக
நன்றி...தொடரும்..
பதிவில் படத்தில் செய்தி 2..
இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகரை மையம் ஆக கொண்டு குழந்தைகள் அன்று விரும்பி படிக்கும் முத்து காமிக்ஸ்...
எந்திரகை மாயாவி. போன்று வந்த புத்தகங்களில் காமிக்ஸ் வடிவில் வந்த தலைவரின் புகழைஅறிய அரிய படங்கள் உங்கள் பார்வைக்கு..
வாழ்க தலைவர் புகழ் நன்றி....நன்றி...
-
#எம்ஜிஆர் தனக்களிக்கப்பட்ட சிசிக்சைக்கான செலவினை தனது இயக்கம், கட்சிக்காரர்கள் மற்றும் அன்புள்ளம் கொண்ட பொதுமக்களிடம் இருந்து பெற்று தமிழக அரசிடம், அரசு செலவு செய்த தொகையான ரூ.96 இலட்சத்து 90 ஆயிரத்து 376ஐ 30-06-1985 ஆம் தேதியன்று அரசுக்கு திருப்பிச் செலுத்தினார்.
_____________________________
#13.03.1985ஆம் தேதி எம்ஜிஆர் கீழ்கண்டவாறு அறிவிப்பினைச் செய்து தன்னுடைய சிசிக்சைக்கான தொகையை திரட்டினார்.
#எனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை ஒட்டி சென்னையிலும், அமெரிக்காவிலும் செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கும், மருத்துவர்கள், உதவியாளர்கள் ஆகியோரின் பயணங்களுக்கும், பிற வகைகளுக்கும் ஆன செலவுகளை அரசே ஏற்று செய்துள்ளது.
#முதலமைச்சருக்குரிய செலவுகளை அரசே ஏற்பது முறையானதுதான் என்றாலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தமக்களிக்கப்பட்ட சிசிக்சைக்கான செலவுகளை, மக்களிடம் இருந்து பெற்று, கழகத்தின் வாயிலாக அரசுக்குச் செலுத்துமாறு ஏற்பாடு செய்தார்கள்.
#பேரறிஞர் அண்ணா அவர்களின் அந்த சீரிய முன்னுதாரணத்தைப் பின்பற்றும் வகையிலும், எனக்கு மருத்துவ சிசிக்சை மற்றும் அதன் தொடர்பாக ஏற்பட்ட செலவுகளை அரசின் மீது சுமத்த நான் விரும்பாத காரணத்தாலும், இவ்வகையில் ஏற்பட்ட செலவுகளைக் கணக்கிட்டு அத்தொகையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செலுத்திவிட வேண்டும் என நான் முடிவு செய்துள்ளேன்.
#மக்கள் என் மீது கொண்டுள்ள அன்பு, செயல் வடிவத்தில் நிரூபிக்கப்படவும் இது ஒரு வாய்ப்பு என்கிற வகையில், எனக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவை ஈடுகட்ட மக்களை அணுகுவது என்கிற தலைமைக் கழகத்தின் முயற்சிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பும் தருமாறு தமிழக மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்பன்.
எம்.ஜி.ஆர்,
சென்னை,
நாள்: 13.03.1985.......rjr...
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 33 வது நினைவு தினத்தை முன்னிட்டு* திரைக்காவியங்கள் மறுவெளியீடு*தொடர்ச்சி .....
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஞாயிறு (20/12/20)* முதல் திருச்செங்கோடு ஜோதியில் -எங்க வீட்டு பிள்ளை*தினசரி* 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி* : திரு.ராமு,,மின்ட் , சென்னை.
நாளை (23/12/20) முதல் திருப்பரங்குன்றம் லட்சுமியில்* குடியிருந்த கோயில்*தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது* .
வெள்ளி முதல் (25/12/20)* மதுரை சென்ட்ரல் சினிமாவில் நினைத்ததை முடிப்பவன் தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .
தகவல் உதவி ; திரு.எஸ். குமார், மதுரை .
-
#காதலிலும் #கண்ணியம்...
#எம்ஜிஆர் அவர்கள் படத்தில் காதல் காட்சிகள் ‘ஸ்வீட்டாக’ இருக்கும்...
நடிகை ஸ்ரீதேவியிடம் எடுத்த பேட்டி ஒன்றில் எம்.ஜி.ஆர் பற்றிக் கேட்டபோது இப்படிக் குறிப்பிட்டார். இதற்கு மேல் துல்லியமாக எம்ஜிஆர் படக் காதல்காட்சிகளை வருணிக்க இயலாது...
அவர் ஒரு நடிகை என்பதாலும் சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் போன்ற மூத்த நடிகர்களோடு காதல் காட்சிகளில் நடித்தவர் என்பதாலும் எம்.ஜி.ஆர் படக் காதல்காட்சிகளை ‘ஸ்வீட்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய படங்களில் வரும் காதல் காட்சிகளைக் குடும்பத்தோடு பார்க்கவே முடியாது. காதலை விட விரசம் தான் அதிகமாக இருக்கும்...காதல் என்னும் போர்வையில் "காதலைக் கேவலமாக்கி" வைத்திருப்பர்...
ஆனால் புரட்சித்தலைவர் படங்களில் காதல் பாடல்களில் முத்தக்காட்சிகள் இலைமறைக் காயாக, பூடகமாக இடம் பெற்றன. அவற்றில் ஒரே ஒரு திரைக்காவியத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
பணக்காரக் குடும்பம்' படத்தில் ஒரு பாடல் முத்தத்தில் தொடங்கி அதன் உணர்வுகளை விளக்குவதாகத் தொடரும். ஆனால், முத்தமிடும் காட்சிப் பூடகமாகக் கூடக் காட்டப்பட்டிருக்காது...
வெளியே ஒரே மழை. ஒரு மாட்டுவண்டியின் அடியே எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் மழைக்கு ஒதுங்கி உட்கார்ந்திருப்பார்கள். எம்ஜிஆர் சரோஜாதேவியை முத்தமிட நெருங்கி வருவார். அடுத்த காட்சியில் சரோஜாதேவி பாடத்தொடங்குவார்.
“இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா? இப்படியென்று தெரிந்திருந்தால் தனியே வருவேனா? என்று கேட்கும்போது ‘இதற்காக’ என்பது ‘முத்தத்திற்காக’ என்பது பார்வையாளருக்குத் தெரிந்துவிடும்.
“அதுவரை வந்தால் போதும் போதும்
அடுத்தது என்னம்மா?
ஆரத்தி மேளம் மணவறை கோலம்
வருமா சொல்லம்மா?
என்று கேள்வியாகவே பதில் அளிப்பார் ‘அதுவரை’ என்று குறிப்பிட்டது ‘முத்தம் மட்டும்’ பெற்றால் போதும் என்று சொல்வதாகப் பார்வையாளர் உணர்ந்துகொள்ளலாம்.
சரோஜாதேவி இந்தப் பாட்டில் தான் பெற்ற முத்தத்தின் மகிழ்ச்சியை
“அம்மம்மா இது புதுமை – நான்
அறியாதிருந்த …… (சிரிப்பார்)
பேச முடியாத பெருமை – இந்த
இனிமை இனிமை இனிமை
என்று இனிமையான முத்தத்தை ரசித்துப் பாடியிருப்பார்.
இந்தப்பாட்டில் முத்தம் இடம் பெற்றதைத் சரோஜாதேவியின் முகபாவத்திலும் மகிழ்ச்சியிலும் ஊகித்து அறியலாம்.
சண்டைக்காட்சியிலும் மனிதாபிமானம், காதலிலும் கண்ணியம்
#அதான் #வாத்தியார்...bsm...
-
# ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய் "
இது தெய்வப் புலவர்
திருவள்ளுவரின் திரு வாக்குகளில் ஒன்று ( திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் கூட பொய்யாமொழிப் புலவரை அய்யன் என்று அழைத்தது கிடையாது, ஆனால் இப்போது சில தறுதலைகள் போயும்போயும் கணேசனைப் போய் "அய்யன் " என்று அழைத்து திருவள்ளுவருக்கே தீராத களங்கத்தை உண்டு பண்ணி விட்டார்கள் )
மேலே கண்ட குறள் வேறு யாருக்கும் பொருந்துகிறதோ இல்லையோ நம் தலைவருக்கு சிறப்பாகப் பொருந்தும்,
இன்றைக்கு உலகெங்கும் உள்ள தமிழ்ப் பெருங்குடி மக்கள் பார்க்கும் படியாக தலைவரின் புகழ் பட்டொளி வீசிப் பறக்கிறது,
தலைவரின் நாமத்தை உச்சரிக்காமல் தமிழ் நாட்டு அரசியலும் சரி, சினிமாவும் சரி ஒரு அடி கூட நகர முடியாது என்பதை ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்ச்சிகளின் மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
சொர்க்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் "தெய்வத் தாய் " சத்யா அம்மையார் இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை பெற்றதற்காக தினம் தினம் பெருமையிலும், சந்தோஷத்திலும் திளைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்கள் என்பது உறுதி,
இது ஒரு புறம் இருக்க தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி என்ற பெயரில் அசிங்கத்தையும், ஆபாசத்தையும் புகுத்தி தமிழ் நாட்டின் பாரம்பரிய பெருமைகளுக்கே உலை வைக்கும் ஆபாச குப்பைகள் தொலைக்காட்சிகளில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது,
ஒரே அறையில் இளம் பெண்களையும், இளைஞர்களையும் சேர்த்து அடைத்து வைத்துக் கொண்டு அவர்கள் அடிக்கும் ஆபாச கூத்துகளை " பிக் பாஸ் " என்ற பெயரில் களியாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்,
இந்த மாதிரி நிகழ்ச்சி களின் விளைவுதான் பாசத்துக்கும், பண்புக்கும் பெயர் போன நம் தமிழ் மண்ணில் எதுவுமே தவறில்லை என்னும் ரீதியில் முறை தவறிய உறவுகளும்,
"பிறன் மனை கவரல்" போன்றவைகளும் சர்வ சாதாரணமாக நடந்தேறுவதை ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களின் மூலம் அறியும் போது
என் இனிய தமிழ் மண்ணே நீ எங்கே சென்று கொண்டிருக்கிறாய் என்று கதறத் தோன்றுகிறது ( இந்த மாதிரி அசிங்கங்களை பார்க்கவா முண்டாசுக் கவிஞன்
பாரதியும், தந்தை பெரியாரும், முத்துலட்சுமியும் அரும்பாடு பட்டு பெண் விடுதலையை பெற்றுத் தந்தார்கள் என்பதை நினைக்கும் போது ஒரு மானமிகு தமிழனாக வெட்கித் தலை குனிகிறேன் )
இந்த " பிக் பாஸ் " நிகழ்ச்சியில் காமெடி என்ற பெயரில் தலைவரை குண்டடி பட்டதற்குப் பிறகு உள்ள குரலில் பேசி அசிங்கப்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்
மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் கொஞ்ச நாளைக்கு முன் இதே தொலைக்காட்சியில் நடிகர் கணேசனை இப்படி கிண்டல் செய்ததும் வரிந்து கட்டிக் கொண்டு " சிவாஜி சமூக நலப் பேரவை " என்னும் ஒரு அல்லக்கை அமைப்பும், நடிகர் பிரபுவும் கண்டனம் தெரிவிக்கவும் உடனே தொலைக்காட்சி நிர்வாகம் இனி இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடக்காது என்று உறுதி கூறி வருத்தமும் தெரிவித்தார்கள்,
ஆனால் நம் உயிருக்கும் மேலான தலைவனை இப்படி கேலி செய்வதை அதிகார வர்க்கம் உட்பட அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது மனசெல்லாம் கன்றிப் போய் விடுகிறது,
ஒரே ஒரு ஆறுதலாக " அனைத்துலக எம்ஜிஆர் பொதுநல சங்கத்தின் " பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் இந்த பிரச்சினையை தனி ஒரு மனிதனாக கையில் எடுத்து விஜய் டிவி க்கு இனிமேலும் இது தொடரக்கூடாது என்னும் வேண்டுகோளையும் வைத்து விட்டு மீறினால் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்,
அவருக்கு என் மனமார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்,
என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் தலைவர் குண்டடி படுவதற்கு முன்பாக கோயிலின் வெண்கல மணி போல முழங்கும் "நாடோடி மன்னன்,
மதுரை வீரன், மன்னாதி மன்னன் " போன்ற படங்களில் பேசும் வசனங்களைப் போல இவர்களால் மிமிக்ரி செய்ய முடியுமா?
அல்லது " விக்கிர மாதித்தன் " படத்தில் சித்தன் வேடத்தில் வந்து மன்னராக இருக்கும் திருப்பதி சாமி அவர்களிடம் வட நாட்டுப் பெருமைகள் முதல் தென்னாட்டு பெருமைகள் வரை பேசி இறுதியில் நம் தமிழ் நாட்டுப் பெருமையையும் ஒரே மூச்சில் பேசி அசத்துவாரே அதே போல் பேச முடியுமா?
குண்டடி பட்ட குரலை கேலி செய்யும் முறை கெட்ட நாய்களா ஒன்றே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்,
இதே மாதிரி ஒரு நிலைமை சிவாஜிக்கு
ஏற்பட்டிருந்தால் என்ன கதி ஏற்பட்டிருக்கும் என்பதை கற்பனையில் கூட உங்களால் எண்ணிப் பார்க்க முடிகிறதா?
கணேசனின் திரையுலக வாழ்வே அஸ்தமனம் ஆகியிருக்கும்,
ஆனால் என் தலைவன் அப்படி எதையும் நினைக்காமல் தன்னையும், தமிழ் நாட்டு மக்களையும் மட்டும் நம்பி, அழுது புலம்பாமல் என்ன சொன்னார் தெரியுமா?
"இந்த சிதைந்து போன என் குரலுடனே மக்களை சந்திக்கிறேன், அவர்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன், இல்லையென்றால் இந்த சினிமா உலகத்துக்கே முழுக்கு போட்டு விடுகிறேன் "
ஆனால் நடந்தது என்ன?
தமிழ் நாட்டு ஒட்டு மொத்த தாய்க்குலமும், பொது மக்களும் சொன்ன ஒரே வார்த்தை இதுதான்
" எங்கள் செல்வமே நீ பேசாவிட்டாலும் பரவாயில்லை, உன் தங்க முக தரிசனம் ஒன்றே எங்களுக்கு போதும் என்று சொல்லாமல் சொல்லி " அரச கட்டளை " க்கு முதல் வெளியீட்டில் மிதமான வெற்றியைக் கொடுத்து விட்டு அடுத்து வந்த " காவல் காரன் " படத்துக்கு அது வரை தமிழ் திரையுலக வரலாறு காணாத வசூலையும், திக்கு முக்காடிப் போகும் வரவேற்பையும் கொடுத்ததைப் பார்த்து நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு காத்திருந்த நாய்கள் எல்லாம் பழையபடி குப்பை பொறுக்க வேண்டியதானது,
முதன் முதலில் பெண்களுக்கு என்று தனிக் காட்சி போடப்பட்ட பெருமையையும் பெற்றார் தமிழர்களின் "காவல் காரன் "
அந்த சமயத்தில் நடந்த ஒரு திரையுலக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு. மெய்யப்ப செட்டியார் அவர்களிடம் திரு. ஆர். எம். வீரப்பன் அவர்கள் மிகவும் பணிவுடன் நான் ஒரு சிறிய தயாரிப்பாளர் என்ற போது செட்டியார் அவர்கள் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?
நீங்களா சிறிய தயாரிப்பாளர்?
இன்றைக்கு எங்கு பார்த்தாலும் " காவல் காரன் " ஓடும் ஓட்டத்தைப் பார்த்தால் எங்களை எல்லாம் விட நீங்களல்லவா பெரிய தயாரிப்பாளர் "
இதே மாதிரிதான் 1959 இல் "இன்பக் கனவு " நாடகத்தில் நடித்த போது ஏற்பட்ட கால் முறிவின் போதும் இத்தோடு இவன் திரையுலக வாழ்க்கை முடிந்தது என்று மனப்பால் குடித்த நாதாரி கழுதைகள் எல்லாம் கரியை வாரி முகத்தில் பூசிக் கொண்டது, ( கண்ணதாசன் கூட ரொம்ப இழிவாகவெல்லாம் பேசினார், கடைசியில் தலைவர் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல இடி முழக்கமென வந்ததும் அனைவரும் சரணாகதி ஆன கதை அனைவரும் அறிந்ததே,
பிரான்ஸ் நாட்டில் பிறந்த லூயிஸ் பிரெய்லி என்னும் சிறுவன் தன் மூன்றாவது வயதில் ஒரு ஊசியை வைத்து விளையாடிய போது எதிர்பாராத விதமாக ஒரு கண்ணில் ஊசி குத்தியதால் ஒரு கண்ணின் பார்வை பறி போனது, சரியான மருத்துவம் செய்யாததால் தொற்று ஏற்பட்டு அடுத்த கண்ணும் பறி போனது,
தன் இரண்டு கண்களை பறிகொடுத்த நிலையிலும் வளர வளர அந்த குழந்தை சும்மா இருக்கவில்லை மாறாக " ROYAL INSTITUTE OF BLIND YOUTH " என்னும் பார்வையற்ற குழந்தைகள் பள்ளியில் தன் பத்தாவது வயதில் சேர்க்கப்பட்ட போது அந்த பள்ளியின் நிறுவனர் VALANTINE HAUY என்பவர் புத்தகங்களை மேடாக்கி பார்வையற்ற மாணவர்கள் தொட்டு படிக்கும் படியாக புத்தகங்களை உருவாக்கினார்,
ஆனால் அது மிகவும் கடினமாக இருந்ததால் அந்த நேரத்தில் ராணுவத்தினர் ரகசிய தகவல்களை இருட்டில் பரிமாற வசதியாக சார்லஸ் பார்பியர் என்னும் ராணுவ தளபதி night writing என்னும் முறையை தயாரித்து அறிமுகப் படுத்தியிரு ந்தார்,
அதை விளக்குவதற்காக பார்வையற்ற மாணவர்கள் பள்ளிக்கு வந்து அந்த முறையை அறிமுகப்படுத்தி விட்டுப் போனார்,
ஆனால் 12 செவ்வக புள்ளிகள் கொண்ட அந்த முறையும் அவ்வளவு சுலபமாக இல்லை,
ஆனால் நம் பிரெய்லி சும்மா இருந்து விட வில்லை, மாறாக இதை விட சுலபமாக புத்தகங்கள் உருவாக்க முடியுமா என்று யோசித்து தன் பதினைந்தாவது வயதில் இப்போது உலகெங்கிலும் பார்வையற்ற மாணவர்கள் படிக்கும்
6 செவ்வக புள்ளிகள் கொண்ட " பிரெய்லி "
முறையை உருவாக்கி னார் ( இதில் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த method அவர் உயிரோடு இருந்த வரை அங்கீகரிக்கப் பட வில்லை, அவர் இறந்த இரண்டு வருடங்கள் கழித்துதான் ஏற்றுக்கொள்ளப்பட்டது )
எந்த சோதனை வந்தாலும் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுவதை விட அதை எதிர்த்துப் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை சிறுவன் லூயிஸ் பிரெய்லியும் நிரூபித்துக் காட்டினான்,
அதே போல் நம் தலைவரும் எந்த சோதனை வந்த போதும் துவண்டு போனவர் அல்ல, மாறாக எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடி நமக்கெல்லாம் தன்னம்பிக்கை, தைரியம் இவைகளை ஊட்டிய ஒப்பற்ற மாபெரும் தலைவன்,
இப்படிப்பட்ட ஒரு தலைவனுக்கு ஒரு பக்தனாய் இருப்பதில் பெருமிதம் அடையும்
தலைவரின் பக்தன்,
ஜே.ஜேம்ஸ் வாட்....(J.JamesWatt)
தலைவரின் நினைவு நாள் வருவதால் திரை சம்பந்தமான பதிவை தவிர்த்திருக்கிறேன் !
-
நம் பொன்மனம் தனி இயக்கம் கண்ட நேரம் 1972...இல்...
தலைவர் நடிப்பில் நடிகர் அசோகன் அவர்கள் தயாரிப்பில் நேற்று இன்று நாளை தயார் ஆகி கொண்டு இருந்த நேரம்.
அரசியல் பரபரப்புக்கு இடையே பெங்களூர் அருகில் ஒரு மலை பகுதியில் படத்தின் பாடும் போது நான் தென்றல் காற்று பாட்டின் ஒரு பகுதி எடுத்து முடிந்து மறுநாள் பாடலின் தொடர்ச்சி எடுத்து முடிக்கப்பட வேண்டிய கட்டாயம்...
காலை 11 மணிக்கு மேலே இயக்குனர் நீலகண்டன் தயார் ஆகி தலைவர் வந்து பாட்டில் உடன் நடிக்க வேண்டிய ராஜஸ்ரீ யும் தயார்.
வெயில் கொளுத்த ஆரம்பிக்க பாறைகள் நடுவே பட குழு காத்திருக்க நம் மன்னவர் எதுவும் சொல்லாமல் ஒரு இடத்தில் அமர்ந்து இருக்க என்ன ஷாட்க்கு போலாமா என்று இயக்குனர் கேட்க.
ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது....அனைவரும் வெயில் தாங்காமல் தவிக்க படத்தை பற்றிய வதந்திகள் வர துவங்கி இருந்த நேரம்...
தலைவர் வந்த உடன் சூடாக ஆரம்பிக்கும் படப்பிடிப்பு இவ்வளவு தாமதம் என்றால் இனிமேல் இன்று காட்சிகள் எடுக்க அவருக்கு மனம் இல்லை போல என்று சிலர் எண்ண..
திடீர் என்று வாங்க வாங்க காட்சி எடுக்க போலாம் என்று தலைவர் துள்ளி கிளம்ப ராஜஸ்ரீ இயக்குனர் தயாரிப்பாளர் அசோகன் வியக்க.
தலைவர் நீலகண்டன் அவர்கள் இடம் நேற்று இந்த இடத்தில் தானே விட்டோம்...இப்போ இங்கே ஆரம்பிப்போம் நேற்று காட்சி எடுத்து முடிக்கும் போது சூரியன் அங்கே உச்சயில் இருந்தது.
என் நிழல் காலுக்கு கீழே பட்டது...இன்று சூரியனின் நிழல் என் காலுக்கு கீழே இருந்து தொடர்ந்து காட்சியை தொடரவே காத்து இருந்தேன்...இதை நீங்கள் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
அதுவரை காத்து இருந்தேன்....தொடர்ந்து பாடல் காட்சிகள் அருமையாய் எடுத்து முடிக்க பட உடன் நடித்த ராஜஸ்ரீ என்ன சார் நிழலில் கூடவா தொடர்காட்சி அமைப்பு வேண்டும் என்று கேட்க.
அப்படியில்லை....எனது ரசிகர்கள் என் நிழலை கூட பின் பற்றி வருவார்கள்...காட்சி தொடர்பு அறுந்து விட்டால் என்ன இப்படி பண்ணி விட்டார் என்று சொல்லி விட கூடாது அவர்கள்...
அவர்கள் கொடுக்கும் படம் பார்க்கும் பணத்தை வைத்து தான் நாம் இன்று இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறோம்..
அவர்களை ஒரு போதும் ஏமாற்ற விரும்ப மாட்டேன் என்கிறார் தலைவர்.
என்ன ஒரு அர்ப்பணிப்பு துறை சார்ந்த தொழில் நுட்பத்தில்..
அதனால் தான் நாம் அவரை தலை ஆக இன்று இந்த வினாடி வரை கருதி கொண்டு இருக்க... அவர் நம்மை உடலாக உயிர் ஆக கருதி விண்ணில் இருந்து நம்மை பார்த்து கொண்டு இருக்கிறார்.
என்று நம்பும் உங்களின் ஒருவன் ஆக உங்களில் உணர்வாக....தொடரும்..
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி.நன்றி நன்றி...
தன்னை சுட்டு எரித்த சூரியனை தொடர்ந்து அஸ்தமனம் ஆக்கிய வள்ளல் புகழ் காப்போம்.....
-
#எம்ஜிஆர் தனக்களிக்கப்பட்ட சிசிக்சைக்கான செலவினை தனது இயக்கம், கட்சிக்காரர்கள் மற்றும் அன்புள்ளம் கொண்ட பொதுமக்களிடம் இருந்து பெற்று தமிழக அரசிடம், அரசு செலவு செய்த தொகையான ரூ.96 இலட்சத்து 90 ஆயிரத்து 376ஐ 30-06-1985 ஆம் தேதியன்று அரசுக்கு திருப்பிச் செலுத்தினார்.
_____________________________
#13.03.1985ஆம் தேதி எம்ஜிஆர் கீழ்கண்டவாறு அறிவிப்பினைச் செய்து தன்னுடைய சிசிக்சைக்கான தொகையை திரட்டினார்.
#எனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை ஒட்டி சென்னையிலும், அமெரிக்காவிலும் செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கும், மருத்துவர்கள், உதவியாளர்கள் ஆகியோரின் பயணங்களுக்கும், பிற வகைகளுக்கும் ஆன செலவுகளை அரசே ஏற்று செய்துள்ளது.
#முதலமைச்சருக்குரிய செலவுகளை அரசே ஏற்பது முறையானதுதான் என்றாலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தமக்களிக்கப்பட்ட சிசிக்சைக்கான செலவுகளை, மக்களிடம் இருந்து பெற்று, கழகத்தின் வாயிலாக அரசுக்குச் செலுத்துமாறு ஏற்பாடு செய்தார்கள்.
#பேரறிஞர் அண்ணா அவர்களின் அந்த சீரிய முன்னுதாரணத்தைப் பின்பற்றும் வகையிலும், எனக்கு மருத்துவ சிசிக்சை மற்றும் அதன் தொடர்பாக ஏற்பட்ட செலவுகளை அரசின் மீது சுமத்த நான் விரும்பாத காரணத்தாலும், இவ்வகையில் ஏற்பட்ட செலவுகளைக் கணக்கிட்டு அத்தொகையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செலுத்திவிட வேண்டும் என நான் முடிவு செய்துள்ளேன்.
#மக்கள் என் மீது கொண்டுள்ள அன்பு, செயல் வடிவத்தில் நிரூபிக்கப்படவும் இது ஒரு வாய்ப்பு என்கிற வகையில், எனக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவை ஈடுகட்ட மக்களை அணுகுவது என்கிற தலைமைக் கழகத்தின் முயற்சிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பும் தருமாறு தமிழக மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்பன்.
எம்.ஜி.ஆர்,
சென்னை,
நாள்: 13.03.1985.......rjr...
-
மக்கள் திலகத்தின் " திரையுலக சாதனைகள் " புரட்சித்தலைவரின் அரசியல் பிரவேசத்தால் நடிக்க முடியாமல் நின்று போன பல படங்களின் பெயர்கள் மட்டும்.
60 வயதில் ஒரு நடிகர் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த படங்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டுகிறது என்றால், இதுவும் ஒரு புரட்சி ! ஒரு உலக, கின்னஸ் சாதனையே !*
இந்த படங்கள் அனைத்தும் புரட்சித்தலைவரின், 1972க்கு பிறகு தீவிர அரசியல் பிரவேசத்தால், கைவிடப்பட்ட படங்கள் என்பதை திர்யின் பார்வையாளர்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் !*
துரதிருஷ்டம் செய்த நம் கண்கள், திரையில் காண முடியாத, சாதனைகளின் சிகரம் பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் :
1. நம்மை பிரிக்க முடியாது :
நாஞ்சில் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படவிருந்த படம். ஒரு சர்க்கஸ் காரியின் சாகஸமிக்க வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு அமைந்த இந்த படத்தில் தலைவருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. உரையாடல் சொர்ணம் எழுத இயக்க்விருந்தது ப. நீலகண்டன்.*
2. மரகத சிலை :
ஆடலழகி ஒருத்தியின் வாழ்க்கையை மையமாக கொண்டு, குமரி பிலிம்ஸ் தயாரிப்பில், மக்கள் திலகத்துடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் மஞ்சுளா மற்றும் லதா. வெளி நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற திட்டமிட்டிருந்தனர்.
3. வாழு வாழ விடு :
எம். ஜி. ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த இப்படத்திலும் லதா மற்றும் மஞ்சுளா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். விளம்பரத்துடன் .நின்று போன படம்.
4. ஆண்டவன் கட்டிய ஆலயம்*
எம். ஜி. ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த மற்றொரு படம் இது. தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கிய இப்படத்தில் நாயகியர் முடிவாகாத நிலையில், படம் தயாரிப்பது கைவிடப்பட்டது.
5. “ கொடை வள்ளல்"*
திருமகள் என்ற படத்தை தயாரித்தளித்த கோவை கோவிந்தராஜன், தனது நந்தகுமார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படவிருந்த அடுத்த படம் : “ கொடை வள்ளல்" இப்படத்தில் ஒன்பது மாறுபட்ட கதா பாத்திரங்களில் பொன்மனச்செம்மல் நடிப்பதாக இருந்தது. புரட்சித் தலைவருடன், லதா, மஞ்சுளா உட்பட 9 நாயகியர் நடிக்கவிருந்தனர். உரையாடல் ஏ.கே. வில்வம் எழுத ப நீலகண்டன் இயக்க விருந்தார்.
6. தந்தையும் மகனும்
தேவர் பிலிம்ஸ் சார்பில், எம். ஏ. திருமுகம் இயக்கத்தில், எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பத்மினியும், கே. ஆர். விஜயாவும் நடிக்க விருந்தனர். " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது
7. மக்கள் என் பக்கம் :
தயாரிப்பாளர் - இயக்குனர் என். எஸ். மணியம் மற்றும் முசிறிப்புத்தன் இனைந்து எம். எம். மூவிஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த இப்படத்தில் ஜோடியாக நடிக்க நடிகைகள் முடிவாக இருந்த நிலையில் புரட்சித் தலைவரின் அரசியல் பிரவேசத்தால் கைவிடப்பட்டது. இயக்கம் என். எஸ். மணியம்.
8. நானும் ஒரு தொழிலாளி :*
சித்ரயுகா கண்ணையன் தயாரிப்பில், புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில், மக்கள் திலகமும், நடிகை லதாவும் நடித்த ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டது. .
9. சமூகமே நான் உனக்கே சொந்தம் :
லட்சுமி பிலிம்ஸ் சார்பில், இயக்குனர் கே. ராகவன் இயக்கத்தில், லதா ஜோடியாக மக்கள் திலகம் சில காட்சிகளில் நடித்தார். வழக்கம் போல் இந்த படமும் புரட்சித் தலைவரின் அரசியல் பிரவேசத்தால் கைவிடப்பட்டது.
10. தங்கத்திலே வைரம் :*
இயக்குனர் கே. எஸ். ஜி. என்றழைக்கப்படும் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், சித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த திரைப்படம். மக்கள் திலகத்துடன் முதன் முறையாக கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இணைந்து தரவிருந்த படம் இது. திரு. கே. எஸ். கோபாலகிருஷ்ணன், நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து "குலமா குணமா", நடிகர் ஜெமினி கணேசனை வைத்து "பணமா பாசமா", நடிகர் ஜெய்ஷங்கரை வைத்து "உயிரா மானமா" போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது.*
11. புரட்சிப்பித்தன் :
ரங்கநாயகி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் டி. ஆர். ராமண்ணா அவர்கள் தயாரிக்க விருந்த இப்படத்தில் பொன்மனச்செம்மல் புதுமையான கதா பாத்திரத்தில் தோன்றும் காட்சி சில படம் பிடிக்கப்பட்டது. ஜோடியாக நடிகை லதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது.*
12. மண்ணில் தெரியுது வானம் :
உதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இதயம் பேசுகிறது மணியனும், வித்வான் வே. லட்சுமணனும் இணைந்து தயாரிக்க விருந்த இப்படத்தில் நடிகை லதா அல்லது புதுமுக நடிகை ஜோடியாக நடிக்கலாம் என்று பேசப்பட்டது.
13. தியாகத்தின் வெற்றி (முன்னர் வைக்கப்படிருந்த பெயர் " அமைதி ")*
மக்கள் திலகம் பங்கு பெறும் சில காட்சிகள், ஜோடியாக நடிக்கும் லதாவுடன் சேர்ந்து எடுக்கப்பட்டன. கே. சங்கர் இப்படத்தினை இயக்குவதாக இருந்தது.*
14, உங்களுக்காக நான் :*
செந்தில் மூவிஸ் சார்பில் ஜெமினி கணேசன் - பத்மினி நடித்த "தேரோட்டம்" படத்தினை தயாரித்த வி. டி. அரசு தனது அடுத்த தயாரிப்பாக புரட்சித் தலைவர் ராணுவ கேப்டனாக நடிக்கும் "உங்களுக்காக நான்" படத்தை தயாரிக்க விருந்தார்.*
15. எல்லைக்காவலன் :*
விளம்பர அறிவிப்புடன் நின்று போன மற்றொரு படம் இது. இந்த படத்தினையும் எம். ஜி. ஆர். பிச்சர்ஸ் சார்பில் தயாரிக்க திட்டமிருந்தனர்.*
16. கேப்டன் ராஜு :
" இன்று போல் என்றும் வாழ்க " காவியத்தை தயாரித்த சுப்பு புரொடக்ஷன்ஸ் தங்களது அடுத்த தயாரிப்பாக " கேப்டன் ராஜு" படத்தை தயாரிக்கவிருந்தனர். இதற்கான ஆதாரபூர்வமான அறிவிப்பும் வெளியாயிற்று. தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டையில், விளம்பரமும் செய்திருந்தனர் சுப்பு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர்கள் திரு. கருப்பையா மற்றும் வி. டி எஸ். லஷ்மண் ஆகியோர்.*
17. எங்கள் வாத்தியார் :*
" என் அண்ணன் " வெற்றிக்காவியத்தை தொடர்ந்து வீனஸ் பிச்சர்ஸ் சார்பில் திரு. கோவிந்தராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கவிருந்த அடுத்த படம் " எங்கள் வாத்தியார் ". இதில், மக்கள் திலகத்துடன் நடிகை ஜெயலலிதா தோன்றும் சில வெளிப்புறப்படப்பிடிப்பு காட்சிகள் (வைகை அணை என்று கருதுகிறேன்) படமாக்கப்பட்டன.*
18. கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு :*
" உலகம் சுற்றும் வாலிபன் " வெற்றிக் காவியத்தை தொடர்ந்து, எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் சார்பில் அடுத்த தயாரிப்பாக " கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு" என்ற படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டது. இந்த படத்தில், முதன் முறையாக, மக்கள் திலகத்துடன் நடிக்க நடிகை ஜெயசுதா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்பது பலரும் அறியாத செய்தி.*
19. கங்கை முதல் கிரெம்ளின் வரை :
இந்திய - ஆஸ்திரேலிய கூட்டு தயாரிப்பில் உருவாக விருந்த படம் இது. இது குறித்து மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்ய ஆஸ்திரேலிய பிரபல இயக்குனர் ஜான் மெக்காலம் சென்னை வந்து நம் ஒப்பற்ற இதய தெய்வம் புரட்சித்தலைவரையும் சந்தித்து பேசினார். செய்தித்தாள்களில் இது பற்றிய செய்தி பிரசுரமானதில் இருந்து தமிழ் திரை உலகினர் மத்தியில் ஒரு புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.*
20. நினைத்ததை முடிப்பவன் காவியத்தை தொடர்ந்து, ஓரியண்டல் பிக்சர்ஸ் நிறுவனத்தாரின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நம் மக்கள் திலகமே ! விளம்பர அறிவிப்புக்களுடன் நின்று போன படங்களில் இதுவும் ஒன்று.*
21. அண்ணா பிறந்த நாடு :*
ஜெயப்பிரதா கம்பைன்ஸ் சார்பில், ஒப்பனையாளர் பீதாம்பரம் (இயக்குனர் பி. வாசு அவர்களின் தந்தை) தயாரிப்பில் உருவாகவிருந்த இப்படத்தின் விளம்பரத்துக்காக புரட்சித் தலைவர் அவர்கள், வழக்கறிஞர் வேடத்தில் அருமையான ஸ்டைலான போஸ் அளித்து அசத்தியிருநத்தார். அப்போதைய நாளிதழ்களில் இந்த புகைப்படம் வெளிவந்து, பரபரப்பை ஏற்படுத்தியது.*
22. நல்லதை நாடு கேட்கும் :*
பிரபல மேக்கப்-மேன் நாராயணசாமி அவர்கள் தயாரிப்பில், இயக்குனர் கர்ணன் இயக்கத்தில், நடிகை பத்மபிரியா ஜோடியாக நடிக்க சில காட்சிகள் டமாக்கப்பட்டன. பின்னர், இந்த படம் திரு. ஜேப்பியார் அவர்களால் தொடரப்பட்டு, வெள்ளித்திரைக்கு வந்தது.*
23. ஆளப் பிறந்தவன் :
விளம்பரத்துடன் கை விடப்பட்டது. எம். ஜி. சக்கரபாணி அவர்களுடன் வேறு ஒரு நிறுவனம் இணைந்து தயாரிப்பதாக விருந்தது. மக்கள் தலைவரின் அரசியல் பிரவேசத்தால், இந்த படமும் தயாரிப்பிலிருந்து கைவிடப்பட்டது.*
24. இதுதான் பதில் :
எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய இரண்டு பாடல்களுடன் பதிவு செய்யப்பட்ட இப்படம், புரட்சித் தலைவரின் அரசியல் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி, அன்றைய ஆளுங்கட்சினருக்கு பதிலடியாக, சவாலாக திகழவிருந்தது. பொன்மனசெம்மலின் தீவிர அரசியல் ஈடுபாடு காரணமாக தயாரிப்பு பின்னர் கைவிடப்பட்டது.*
25. உன்னை விட மாட்டேன் :
சிவாஜி கணேசன் நடித்த இளைய தலைமுறை படத்தை தயாரித்த ஜி. கே. தர்மராஜன் தனது அடுத்த படத்தை ஜி. கே. பிலிம்ஸ் சார்பில் புரட்சி தலைவரை வைத்து தயாரிக்க திட்டமிருந்தார். இப்படத்துக்காக, இசை ஞானி இளைய ராஜா இசையமைப்பில் ஒரு பாடல் பதிவானது. இதில் மக்கள் திலகத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை சத்யகலா.
26. வேலுத்தேவன் :*
மோகன் புரொடக்ஷன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் மோகன் ராம் அவர்கள் தயாரிப்பதாக இருந்த படம் "வேலுத்தேவன்". இப்படத்துக்காக, " தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் " என்று மக்கள் திலகம் பாடும் பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. இந்த காட்சி, பின்னர், தனது தயாரிப்பில் உருவான " காலத்தை வென்றவன் " காவியத்தில் இடம் பெறச் செய்தார்.*
27. இமயத்தின் உச்சியிலே :
விளம்பர அறிவிப்புடன் நின்று போன படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.*
28. " பைலட் ராஜா "*
தயாரிப்பாளர் - இயக்குனர் ஏ. பி. நாகராஜன் அவர்களின் சி. என். வி. மூவிஸ் சார்பில் " நவரத்தினம் " காவியத்தை தொடர்ந்து, " பைலட் ராஜா " என்ற பெயரில் மக்கள் திலகத்தை வைத்து தயாரிக்கவிருந்தார். விளம்பர அறிவிப்புடன் நின்று போனது.
29. அண்ணா நீ என் தெய்வம் : நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த "எங்கா மாமா" படத்தினை அடுத்து, ஜே. ஆர். மூவிஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அண்ணா நீ என் தெய்வம், மக்கள் திலகத்தின் நடிப்பில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர், நடிகர் திரு.பாக்கியராஜ் அவர்கள் தொடர்ந்து "அவசர போலிஸ் 100" என்ற புதிய தலைப்பிட்டு நடித்து வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தார்.*
குறிப்பு : மேற்கண்ட படங்களை தவிர,*
1. அப்போதைய பிரபல விநியோகஸ்தர் சுந்தர்லால் நஹாதா அவர்கள் தனது நஹாதா புரொடக்ஷன்ஸ் சார்பில் மக்கள் திலகத்தை வைத்து படம் ஒன்றை தயாரிக்க அவரை அணுகி, ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், அன்றைய ஆட்சியாளர் கலைஞர் திரு. கருணாநிதி அவர்களின் மிரட்டலால் (நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ என்பது தெரியவில்லை) இத்திட்டம் கைவிடப்பட்டது.*
2. அதே போன்று, இந்தி மொழியில் வெற்றி பெற்ற, நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் உருவான "பேவார்ச்சி" என்ற திரைப்படத்தினை தழுவி தமிழில் மக்கள் திலகத்தை வைத்து "சமையல் காரன்" என்ற தலைப்பில், ஏ. ஏல். சீனிவாசன் அவர்கள் படம் தயாரிக்கவிருந்தார். ஆட்சியாளரின் மிரட்டலால் கைவிடப்பட்ட படங்களில் இதுவும் அடக்கம்.*
3, நம் இதய தெய்வம் 1972ல் தனிக்கட்சி தொடங்கும் முன்பு, ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ. வி. எம். மெய்யப்ப செட்டியார் அவர்கள், அன்பே வா வெற்றிக்காவியத்தை தொடர்ந்து, மக்கள் திலகத்தை கதாநாயகனாக கொண்டு புதிய படம் ஒன்றை தயாரிக்க முற்பட்டார். இப்படத்தில் அவருக்கு இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை ஜெயலலிதா. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களுடன் கொண்ட நல்லுறவு காரணமாகவும், தொடர்ந்து தயாரிப்பில் ஈடு பட்டால் ஒரு வேளை கலைஞர் கருணாநிதி அவர்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாகவும், செட்டியார் அவர்கள் இந்த பட திட்டத்தை கை விட்டார்.*
4. மேற்கூறிய படங்களில் சில பாடல் காட்சிகளுடனும், சில நடிப்புக் காட்சிகளுடனும், சில விளம்பர அறிவிப்புக்களுடனும், தொடர முடியாமல், நின்று போயின.*.........gdr...
-
#dedicated #to #my #beloved #god...
இறப்பு என்பது சாதாரண மனிதர்களுக்குத்தான்...
மகான்களுக்கு அல்ல...
புத்தர், ஏசு, நபிகள் நாயகம், ஷீரடி பாபா, ஸ்ரீ ராகவேந்திரர் இவர்களெல்லாம் மரணத்தை வென்ற மகான்கள்...
இவர்களின் வரிசையில் நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மலுமுண்டு...
பொன்மனச்செம்மலின் ஆன்மாவானது, அவரது பூத உடலைத் துறந்ததுமே ஸ்தூல வடிவில், தம்மை பக்தியோடு நினைப்பவர்களை இன்றளவில் அருளிக் கொண்டு தான் இருக்கிறது...
அத்தகு புண்ணியநாளில் அன்னாரின் பெருமைகளைப் போற்றுவோம்...
--------------------------------------------------------------------
பழனி ஜி.பெரியசாமி எழுதிய,
இதய ஒலி - என் வாழ்க்கை அனுபவங்கள், என்ற நுாலிலிருந்து: எம்ஜிஆரின் கண்ணியத்துக்கு ஓர் உதாரணம்:
நான், அப்போது அமெரிக்காவில் வசித்து வந்தாலும், தமிழ் மீது கொண்ட காதலால், 'வாழும் தமிழ் உலகம்' எனும் பத்திரிகையை நடத்தி வந்தேன்.
வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களிடையே பிரபலமாகி இருந்தது, அப்பத்திரிகை. ஆனால், நான் நடத்தி வந்த பத்திரிகையில், எம்.ஜி.ஆர்., மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோரின் வெற்றி செய்தியை வெளியிட வேண்டும் என நினைத்து, அதற்காக, ஒரு அட்டை படத்தை தயாரித்தேன்.
அதில், பரந்த இந்திய வரைப்படத்தில், எங்கும் மக்கள் இருப்பதை போன்று வரைந்து, அதன் மையப் பகுதியில், எம்.ஜி.ஆரின் படத்தை பெரிதாகவும், ராஜிவ் படத்தை, சிறியதாகவும் சித்தரித்திருந்தேன்.
அட்டை படத்துடன் தயாரித்திருந்த சிறப்பிதழை, அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, எம்ஜிஆரிடம் காட்டினேன். பார்த்ததும், சந்தோஷப்படுவார் என்ற நினைப்போடு அவர் அருகில் நின்றேன்.
அட்டை படத்தை பார்த்த, எம்ஜிஆரின் முகம், உடனே சுருங்கியது. அருகில் நின்றிருந்த என்னை, ஏற இறங்க பார்த்தார். பின், புத்தகத்தை என்னிடம் கொடுத்து, அமைதியானார்.
புத்தகத்தை பார்த்து மகிழ்ச்சியடைவார் என்று எதிர்பார்த்த எனக்கு, எம்ஜிஆரின் இந்த செயல், புரியாத புதிராக இருந்தது.
எம்ஜிஆரை மிக அழகாக சித்தரித்து, அட்டை படம் போட்டுள்ளோம். ஆனால், அவரோ, அதை பார்த்து ஒன்றும் கூறவில்லையே என்று நினைத்து, 'ஐயா... அட்டை படம் எப்படி இருக்கிறது...' என்று, கேட்டேன்.
சிறிது நேரம் பேசாமல் இருந்த, எம்.ஜி.ஆர்., பின், என்னை பார்த்து, 'டாக்டர்... இந்த அட்டை படத்தில், எனக்கு கொஞ்சம் கூட ஒப்புதல் இல்லை. நான், ஒரு மாநிலத்தின் முதல்வர்... ராஜிவ்வோ, ஒட்டுமொத்த இந்திய நாட்டின் பிரதமராக உள்ளார்.
இந்நிலையில், #ராஜிவ்வின் #படத்தை #பெரிதாகவும், முதல்வரான #என் #படத்தை #சிறியதாகவும் #அமைத்திருக்கவேண்டும். ஆனால், நீங்கள் அப்படி செய்யவில்லை. என் படத்தை பெரிதாக சித்தரித்துள்ளீர்.
இது தவறல்லவா...' என, மென்மையாக கேட்டார், என்னிடம்.
அப்போது தான், என் தவறை உணர்ந்தேன்.
அப்படிப்பட்ட #ஒரு #மாமனிதர் சிறிதும் கர்வம் இன்றி, தான் என்ற பெருமை கொள்ளாமல், ராஜிவ்வின் படத்தை தான் பெரிதாக போட வேண்டும் என கூறுகிறாரே... எவ்வளவு பெரிய மனதிருந்தால், அவர் இவ்வாறு கூறியிருப்பார் என்று நினைத்து, வியந்தேன்.
இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த, எம்ஜிஆர்., அவராக எதையும் செய்வதில்லை என்றும், புரியாமல், அடுத்தவர் சொல்வதை கேட்டு அவர் செயல்படுகிறார் என்றும் ஒரு வதந்தி, அப்போது நிலவி வந்தது. ஆனால், நான் காட்டிய அட்டை படத்தை பார்த்து, அதிலிருந்த குறையை அவர் சுட்டிக் காட்டிய விதம், என்னை வியக்க வைத்தது.
உடல் நலமின்றி இருந்த நிலையிலும், அவர் மனநிலை, சிந்தனை ஆகியவை சிறப்பாக இருந்தன என்பதற்கு, இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம்...
#இறப்பில்லா #இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் புகழ் நிலைத்தோங்குக...bsm...
-
தொடர் பதிவு. உ...த்தமன். 5
----------------------------------------------
1964 பொங்கலுக்கு வெளியான கர்ணன் 2 திரையரங்குகளில் (ஜோஸப் காரனேஷன்) வெளிவந்தது.
இரண்டுக்குமே ஒரே பிரிண்ட்தான்.
ஜோஸப்பில் திரையிட்டு 1/2 மணி நேரம் கழித்துதான் காரனேஷனில்
திரையிடுவார்கள். அதாவது 3 ரீல் ஓடி முடித்தவுடன்(ஒரு ரீல் சராசரி நேரம் 10 நிமிடம்) படத்தின் ரீலை தூக்கிக் கொண்டு முதலாளியின் காரில் காரனேஷனுக்கு ஓடுவார்கள்.
இரண்டு திரையரங்குகளுக்கும் இடையே ரயில்வே கேட் இரண்டு உள்ளது. 1ம் கேட் மற்றும் 2ம் கேட் என்றழைப்பார்கள். அந்தக் காலத்தில் பாஸஞ்சர் டிரையின் குறித்த நேரத்தில் வராது. மேலும் சரக்கு ரயிலும் நினைத்த நேரத்தில் கிளம்புவதால் அநேக நேரங்களில் இரண்டு கேட்டும் அடைத்தே காணப்படும். காரனேஷனில் படத்தை போட்டு விட்டு தொடர் ரீல்கள் வராமல் டூரிங் சினிமா மாதிரி லைட் போட்டு நிறுத்தி வைத்திருப்பார்கள்.
பார்க்க பரிதாபமாக இருக்கும். பணம் கட்டி ஒரு எக்ஸ்டிரா பிரிண்ட் போட்டிருந்தால் இந்த பிரச்னை இருந்திருக்காது. கஞ்சத்தனத்தில் "மாந்தோப்பு கிளியே" சுருளியை மிஞ்சினார்கள் என்றே சொல்ல வேண்டும். "கர்ணனை" வதைத்தது யார் என்ற குழப்பம் நீடித்ததை விட இரண்டு கேட்டுக்கு இடையே கர்ணன் வதை பட்டதை எண்ணி தூத்துக்குடி மக்கள் இன்றும் சிரித்து மகிழ்கிறார்கள்.
அடுத்த வதை அதனோடு வெளியான "வேட்டைக்காரன்" என்றே சொல்ல வேண்டும். தென்னகத்தின் தாஜ்மகால் என்று அழைக்கப்பட்ட
சார்லஸ் திரையரங்கத்தில் வெளியாகி புழுதியை கிளப்பி கர்ணனின் கணைகளை கண்ணுக்கு தெரியாமல் மறைய வைத்தது மற்றுமொரு அதிசயம். ஜோஸப், காரனேஷன் இரண்டையும் சார்லஸுக்குள் அடக்கினாலும் அதனினும் பெரியது சார்லஸ்.
சுமார் 1ஏக்கர் 30 சென்ட் ஏரியா கொண்டது சார்லஸ். காரனேஷன் சுமார் 35 சென்ட்டும் ஜோஸப் சுமார் 50 சென்ட்டும் கொண்டது. இரண்டையும் விட பெரியது சார்லஸ் திரையரங்கம்.1964 பொங்கலன்று "வேட்டைக்காரன்" வெளியாகி வந்த அனைத்து ரசிக பெரு மக்களையும் வென்று ரிட்டர்ன் டிக்கெட்டே இல்லாத வகையில் ஒரு காட்சிக்கு சுமார் 4000 லிருந்து 5000 பேர்கள் வரை டிக்கெட் கொடுத்து பார்க்க வைத்ததால் பாவம் "கர்ணனின்" சொல் வித்தை அஸ்திரம் எடுபடாமல் படம் படுத்து விட்டது..
நாங்கள் குடும்பத்தோடு கரிநாளன்று (பொங்கல் மறுநாள்)
சார்லஸில் படம் பார்க்க சென்றிருந்தோம்.
உள்ளே சென்று பார்த்தால் ஒரு பெரிய மகாநாடு நடப்பதை போன்ற கூட்டம். மற்றவர்கள் உள்ளே நுழைய முடியாமல் நின்றிருக்க நான் உள்ளே நுழைந்து வெள்ளித்திரை மேடையில் ஏறி நின்று கொண்டே பார்த்தேன். எம்ஜிஆரின் முகமெல்லாம் நீளவாக்கில் தெரிந்தது. படம் பார்த்த திருப்தியே வரவில்லை. என் குடும்பத்தார் படம் பார்க்காமலே திரும்பி சென்று விட்டார்கள்.
எம்ஜிஆர் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் வேறு படங்களுக்கு செல்வோரையும் தடுத்து நிறுத்தி தன்னகத்தே சார்லஸ் திரையரங்கம் வைத்துக் கொண்டதால் மற்ற திரையரங்கங்கள் எல்லாம் வெறிச்சோடியது. ஒரே வாரத்தில் இரண்டு தியேட்டர்களிலும் மிகுந்த காற்று வாங்கிய "கர்ணனை" காரனேஷனில் திரையரங்கத்தில் இருந்து தூக்கி ஜோஸப்பில் மட்டும் திரையிட்டார்கள். மூன்று வாரத்துக்கு அப்புறம் மினிமம் கலெக்ஷன் இல்லாமல் போராட கைஸ்கள் ஒன்று கூடி 50 நாட்கள் ஐலேசா போட்டு "கர்ணனை" கரையேற்றினார்கள். 50 நாட்கள் மொத்த வசூல் ரூ25000 தொட்டிருக்குமா? என்பது கேள்விக்குறியே. நெல்லை சென்ட்ரலில் "வேட்டைக்காரனி"ன் முதல் வார வசூலை "தில்லானா போட்டாலும் முறியடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
ஆனானப்பட்ட, 40 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட "கர்ணனை"யே 15 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட "வேட்டைக்காரன்" வதம் செய்தார். அவரது சகோதரர் "வேலன்" "உங்க மாமாவை"யா விட்டு வைப்பார். இதில் ஒரு சில முட்டாள் கைஸ்கள் கை ரிக்ஷா "பாபு" "நீரும் நெருப்பை" முந்தி விட்டதாம். கைஸ்களின் காமெடிக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
வசூல் சக்கரவர்த்தி முன்னால் வறுமை "பாபு"வால் என்ன செய்ய முடியும். "காதல் வாகனம்" வசூலைக்கூட அய்யனின் படங்கள் நெருங்க முடியாத போது "நீரும் நெருப்பி"லே கை வைத்தால் சுட்டு விடும். கைஸ்களே, அரை வேக்காட்டு பருப்புகளே, ஜாக்கிரதை. இப்படி நடைபெற்ற ஒவ்வொரு போரிலும் புறமுதுகு காட்டி ஓடியவர்கள், இன்னும் திருந்தாமல், தாங்கள் புறமுதுகு காட்டி ஓடிய கதையை திரித்து மறுத்து புலம்புவதை பார்த்தால் காயம் சற்று ஆழமாகத்தான் இருக்கும் போல தெரிகிறது..........ksr.........
-
மனிதருள் இறைவன் 33வது நினைவு நாள் ... .
அவர் மறையவில்லை.அவர் நம்மோடு வாழ்கிறார் !
செத்தும் கொடுத்தார் சீதக்காதி வள்ளல் என்பார்கள் ;ஆம் நமது வாழும் வள்ளல் நம்மவர் எதிர் அணியில் இருந்தாலும் அவர்களுக்கு வாரிக்கோடுத்தார்.
கதையை கேளுங்கள்.நான் சொல்வது வரலாற்று உண்மை.இதுவரை தெரியாத செய்தி.நான் வெளியிடுவது இதுதான் முதல்முறை.!!!
நமது தலைவர் முதன்முதலில் திண்டுக்கல் இடைத்தேர்தலை 1973ல் சந்தித்தார்.18.10.72ல் கழகம் ஆரம்பித்து முதல் வருடம்.இரட்டை இலை சின்னம் முதன்முதலாக பெற்றார்.20.5.73ல் திண்டுக்கல் தேர்தலில் மாயத்தேவர் இரட்டை இலையில் வெற்றி பெற்று நாயகனானார்.இந்த மாயத்தேவர் பின்னாளில் தி.மு.கவிற்கு சென்றுவிட்டார்.தலைவர் வருந்தி அவரை தாய் கழகத்துக்கு அழைத்தார்.ஆனால் அவர் வரவில்லை.அந்நாள் அவர் பொருளாதார த்தில் மிகவும் நலிவுற்றுருந்தார்.அவர் மாற்று அணியில் இருந்தாலும் நலிவுற்ற அவர் குடும்பத்துக்கு மாயத்தேவர் கேட்காமலே நிறைய பொருள் தந்து அவர் நிலையை செம்மையுறச்செய்தார். இன்று மாயத்தேவர் 82 வயதை தாண்டி உடல் நலிவுற்று இருக்கிறார்.அவர் குடும்பம் சொல்கிறது .எம்.ஜி.ஆர் கொடுத்த உதவியினால் மட்டும் ஒரு புது வீடு கட்டி அதில் தற்பொழுது வாழ்ந்து வருவதாக பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.மாற்று அணியில் இருந்தாலும் அவர் வாழ்விற்கு உறு துணை செய்து வாழும் வள்ளலாக நமது இறைவன் திகழுகிறார் .இந்த நினைவு நாளில் தலைவன் மாட்சிமையை நினைத்து புகழுரை செய்வோம்.
நெல்லை எஸ்.எஸ்.மணி.........
-
#என்றென்றும் #பொன்மனச்செம்மல் #நினைவுகளுடன்
கருவறை முதல்...
எம்ஜிஆர் பக்தர்கள் உருவாக்கப்படுவதில்லை... பிறக்கும்போதே எம்ஜிஆர் பக்தர்களாத் தான் பிறக்கிறார்கள்...என்பது தான் உண்மை...
தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தைக்குக் கூட ஒருவர் மீது பக்தி வருமென்றால் அது எம்ஜிஆரைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும் ???
பிறக்கும் போதே எம்ஜிஆர் பக்தர்கள் என்ற புண்ணியத்தை எங்களுக்கு ஈந்த வள்ளல்...
.........bsm...
-
நாங்கள் வணங்கும் ஒரே தெய்வம், தீர்க்கதரிசி, மனோ தத்துவ மேதை, கலையுலக அரசாளும் கலை வித்தகர், திரையுலகில் சுடரொளி, அரசியல் வானில் முடிசூடா மன்னர், ஏழைகளின் ஒளிவிளக்கு, உழைப்பாளிகளின் விடிவெள்ளி, சேவையின் பிறப்பிடம், தர்மத்தின் சொரூபம், அன்னமிட்ட கை, பழுதுபடாத வீரத்திற்கு சொந்தக்காரனான ஒரே புரட்சி நடிகர், உலகின் முதல் தலைசிறந்த ஆணழகன், எங்கள் இதய வீணையை மீட்டும் இதய தெய்வம், தங்க மனம் கொண்ட பொன்மனச் செம்மல், கோடிக்கணக்கான மக்கள் விரும்பும் மக்கள் திலகம், மக்களின் உள்ளத்தில் புரட்சிக் கனலை விதைத்த புரட்சித் தலைவன், எங்கள் தீரா காதலர், மக்கள் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட உள்ளங்கவர் கள்வன் ஆன மலைக்கள்ளன், எங்கள் இதயக் கோயிலில் கொலுவீற்றிருக்கும் குடியிருந்த கோயில் எம்ஜிஆரின் முப்பத்தி மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் தூய்மையான பக்தியுடன் ஆண்டவர் எம்ஜிஆரை வணங்கி இதய அஞ்சலி செலுத்துகிறோம்............
-
கருணாநிதியை வீழ்த்திய *குணநிதியே* ....!!!
வரும்பகையழிக்கும் வல்லவரே...!!!
எங்கள் உயிரினும் இனியவரே...!!!
எங்கள் புன்னகைகளின்
புகலிடமே...!!!
எங்கள் சந்தோசங்களின்
சந்நிதானமே...!!!
எங்கள் சுவாசத்தின் மூச்சுக்காற்றே...!!!
எங்கள் இதயத்தின் இருப்பிடமே...!!!
நாங்கள் நற்பண்புகளுடன் வாழ வரம் தந்தவரே...!!!
இரண்டு வரி வடித்து உம்மை
வாழ்த்திட என் இதயம்
இடமளிக்கவில்லை தலைவா...
வார்த்தைகள் தேடி தோற்றுப்போய்
விட்டேன் உன் மீதான அன்புக்கு முன்னே,
உன்னை வாழ்த்திட
வரிகள் மறந்த நிலையில்,
எவரும் தொடாத உயரங்கள் நீ தொட்டதிற்கு,
மறைந்தும் மக்கள் மனதில் மறையாமல் வாழும் தலைவா,
உன் புன்னகை முகம் என்றுமே
எங்கள் நினைவில் நிலைத்திருக்கும்.
நாங்கள் வாழும் வரை
எங்களுக்குள் வாழ்ந்து
கொண்டிருப்பாய் தலைவா!!! வரலாறு படைக்கவும்
வருங்காலத்தை பிடிக்கவும்
வன்முறை தேவையில்லை
வளம் இன்றி நிற்கும் மக்களின்
வளர்ச்சிக்கு வித்திட்டாலே
வருங்காலம் மட்டும் அல்ல
வரலாறே உன் பெயர் படிக்கும்
சோர்ந்து போகும் போதெல்லாம்
சோதனை தாங்கும் போதெல்லாம்
ஒற்றை விரல் அசைவில்
உலகை கட்டிப்போடும்
உன்னதத்தை கற்றுத்தந்த தலைவா..! தலைமுறை தாண்டிய தலைவர்...
மனித நேயம் இவரிடம் இருந்துதான் தோன்றியது...
இவருக்கு சாதி தெரியாது..
இவருக்கு இனம் தெரியாது..
எதிரிகளிடமும் அன்பு பாராட்டுவார்..
இவரைப் பற்றி எழுத பக்கங்கள் பத்தாது...
# *mgr* என்ற ஒரு வார்த்தையில் அனைத்தும் அடங்கிவிட்டது.. அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்,
யாராலும் நிராகரிக்கப் படாதவர்,
#என்றும்_நிரந்தரமானவர்,
கரைபடாதவர்
மக்கள் மேல் அக்கரைபடுபவர்
என்றும் எங்களுக்கு முகவரியாய் இருப்பவர் *முன்றெழுத்து* *அரசியல்* *அரிச்சுவடியை* படிப்போம் .. *புரட்சிதலைவரின்* சாதனை என்றென்றும் நினைப்போம்...
-
கருணாநிதியும் நீங்களும் சமகாலத்தவர்கள்..
உங்களுக்கு முன்னரே முதல்வரானவர் கருணாநிதி...
நீங்கள் மறைந்து 33 ஆண்டுகள் ஆயிற்று
ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் மறைந்தார் உங்கள் சமகாலத்து கருணாநிதி...
கருணாநிதி மகன் உட்பட கருணாநிதி ஆட்சியமைப்பேன் என யாரும் சொல்வதில்லை...
நேற்று முளைத்த காளான்கள் கூட புரட்சிதலைவர் ஆட்சி அமைப்போம் என கூற வைத்திருக்கும் மாயாஜால வித்தைக்காரன்* நீங்கள் ..
மக்கள் மனமறிந்து மக்களுக்காகவே செயல்பட்ட மக்கள் தலைவன் எங்கள் தலைவர் #mgr...
எம் தலைவனுக்கு புகழஞ்சலி* ✌️✌️✌️*.........arh....... ..
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*33 வது* நினைவு நாளை முன்னிட்டு*
வெள்ளித்திரையில் வெளியாகின்ற படங்கள்*விவரம் -மறுவெளியீடு தொடர்ச்சி .....
------------------------------------------------------------------------------------------------------------------------------
23/12/20- திருப்பரங்குன்றம் லட்சுமியில் - குடியிருந்த கோயில் -தினசரி 2காட்சிகள்*
24//12/20 - திருச்சி -அருணா - தர்மம் தலை காக்கும் - தினசரி 4 காட்சிகள்*
* * * * * * * * *திருச்சி - முருகன் -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.கிருஷ்ணன் , திருச்சி.*
25/12/20 - மதுரை சென்ட்ரல் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 3 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை .
25/12/20- மதுரை பழனி ஆறுமுகம் - நாடோடி மன்னன் -தினசரி 3 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை .
25/12/20* -கோவை*- டிலைட்*- தாயை*காத்த*தனயன் -தினசரி 2 காட்சிகள்*
* * * * * * * *கோவை*- சண்முகா - நேற்று இன்று நாளை -தினசரி 3 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை .
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*33 வது*பிறந்த நாளை முன்னிட்டு*தனியார் தொலைக்காட்சிகளில் (24/12/20) வியாழன் அன்று ஒளிபரப்பான*தலைவரின்*திரைக்காவியங்கள் விவரம்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
மெகா டிவி -காலை 9 மணி - படகோட்டி*
ஜெயா டிவி - காலை 10 மணி - இதய வீணை*
முரசு டிவி -மதியம் 12 மணி- இரவு 7மணி-நான் ஏன் பிறந்தேன்*
மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - நல்ல நேரம்*
ஜெயா டிவி - பிற்பகல் 1.30 மணி - குமரி கோட்டம்*
வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி* - நல்ல நேரம்*
மெகா* 24 - பிற்பகல் 2.30 மணி - தாயின் மடியில்*
சன் லைஃப் - மாலை 4 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
ஜெயா மூவிஸ் - இரவு 7 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
புதுயுகம் டிவி- இரவு* 7 மணி - நீரும் நெருப்பும்*
மெகா 24- இரவு 9 மணி - நல்ல நேரம்*
மீனாட்சி டிவி -இரவு 9 மணி - விவசாயி*
-
#கிறிஸ்துமஸ் #வாழ்த்துக்கள்.........
#merry #christmas
#தெரிந்தவிஷயம் #தான்
தெரிந்த விஷயமாயிருப்பினும் பொன்மனச்செம்மலின் வரலாறைப் திரும்பத் திரும்ப பதிவிடுவதிலும், அதைப் படித்து ஆனந்தக்கண்ணீர் விடுவதும் தானே #பக்தி...
செம்மலின் ஒவ்வொரு நிகழ்வும் திகட்டாக்கனி ஆயிற்றே...
ஒருமுறை தாமஸ் என்பவர் புரட்சித்தலைவரை
கருணையின் திரு உருவாம் இயேசுநாதர் வேடத்தில் நடிக்கவைக்க விருப்பப்பட்டார்.
தன்னடக்கத்தின் சிகரமான எம்ஜிஆர், "இயேசுநாதர் வேடத்தில் நான் போய் நடிப்பதா ? எனக்கு அந்தத் தகுதி சிறிது கூட இல்லை..." என்றார்.
அப்போது தாமஸ் சொன்ன மனதை ஊடுருவும் வார்த்தைகள் தான் இவை...
"கருணையும், கொடைத்தன்மையும் தேவனின் பெருங்குணங்கள். மனிதநேயத்தின் உச்சம் நீங்கள்.உங்களுடைய கனிவான #பார்வையில் #இறைத்தன்மை குடிகொண்டுள்ளது...
இத்தகைய மாபெரும் அணிகலன்களைச் சூடிக்கொண்டுள்ள தங்களைத் தவிர வேறு ஒருவரை நினைத்துக்கூடப் பார்க்க இயலாது என்னால்..." என்றார்.
#சரிதானே............bsm ...
-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கால வெள்ளத்தால் கரைக்க முடியாத திருப்பெயர் இது மறைந்தும் மறையாமல் வாழும் மனித மாணிக்கங்களின் இவரும் ஒருவர் என்பதால் இந்தத் திருப்பெயர் நிலைத்து வாழ்கிறது.
மக்கள் திலகம், புரட்சித்தலைவர்
என்றெல்லாம் பாமர மக்கள் உளமார அழைத்ததின் பொருட்டே அவரது புகழ் நமது நினைவுகளில் இரண்டறக் கலந்து வாழ்கின்றது.
அவருக்கு வாரிசு இல்லை என்பார்கள் சிலர் அப்படிச் சொல்பவர்கள் ஆறறிவில் ஒரறிவு போனவர்களாகத்தான் இருக்க முடியும்.
1) பெற்ற தாய் தந்தையரை பேணிக்காப்பது.
2) குருமார் சொல் கேட்டு நடப்பது.
3) விருந்தினர்களை வரவேற்று
உபசரிப்பது
4) வறியோர்களுக்கு உதவுவது.
தலைசிறந்த நற்குணங்களான இவை நான்கையும் எவர் ஒருவர் வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்கின்றனரோ அவர்களெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் தான் என்பதைத் திண்ணமாய்க் கூறலாம்
மங்காப் புகழ் உடைய அந்த மாமனிதன் தனது வாழ்வில் இவை அனைத்தயும் கடைப்பிடித்து வாழ்ந்தார் (இன்றும் நம் இதயங்களில் வாழ்கிறார் )
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..........vrh...
-
#Dedicated #to #True #MGR #devotees.........
#எம்ஜிஆர் #எங்குதான் #வாழ்கிறார்???
23.12.2018 அன்று நடந்த சம்பவம்...
புகைப்படத்திலுள்ள பேருந்து ஒட்டுநர்
யார் என்று உங்களுக்கு தெரியுமா!
எனக்கும் தெரியாது!
இவர் பெயரும் தெரியாது...!!!
ஆனால் இவர் ஒரு தலைசிறந்த எம்ஜிஆர் பக்தராக இருப்பார் என்பது மட்டும் தெரியும்...
சொல்கிறேன்...
இரு தினங்களுக்கு முன் சென்னை மாநகரப்பேருத்தில் சென்றுகொண்டிருந்தேன்... கிட்டத்தட்ட 45 நிமிடப்பயணம்... பேருந்து நிலையத்திலேயே ஏறிவிட்டேன்...டிரைவர் தமது சீட்டில் ஏறி அமர்ந்தார். பேருந்தை ஸ்டார்ட் செய்த அடுத்த விநாடியே, 'செட்' ஐ ஆன் செய்தார்....'வாத்தியார் பாட்டு' ஒலிக்க ஆரம்பித்தது. தொடர்ச்சியாக எல்லாமே வாத்தியார் பாட்டு தான்..அதுவும் 'ஸோலோ' வாகப் பாடிய கொள்கைப்பாடல்கள் மட்டுமே...காதல் பாடல் ஒன்று கூட கிடையாது.
ஒவ்வொரு வரிக்கும் அந்த ஓட்டுநர் தனது தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக்கொண்டே இருந்தது அவர் நிச்சயமாக தூய்மையான எம்ஜிஆர் பக்தராகத்தான் இருப்பார் என்பதைப் பறைசாற்றியது...
அதேநேரம் பேருந்தையும் லாவகமாகவும் நேர்த்தியாகவும், துல்லியமாகவும் ஓட்டிவந்தார்.
சிறிது கூட்டமாக இருந்ததால் என்னால் அந்த பேருந்து ஓட்டுநருடன் பேசமுடியவில்லை...அவர் பெயரும் தெரியவில்லை...
இறங்குமுன் சற்றுத் தள்ளியிருந்தபடி அவரை போட்டோ எடுத்தேன். அவ்வளவே...!
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத...
ஆடம்பரமோ, சுயவிளம்பரமோ தேடிக்கொள்ளாத...
வாத்தியார் பெயரைச்சொல்லி ஏமாற்றி சம்பாதிக்காத...
இதுபோன்ற எளியோரின் நெஞ்சத்தில் தான் எம்ஜிஆர் வாழ்கிறார் என்பதை சத்தியமாக என்னால் சொல்லமுடியும்...!!!...BSM...
-
முன்னாள் முதலமைச்சர்
MG. ராமச்சந்திரன் அவர்கள் சினிமாவிலும், அரசியலிலும் சாதித்தது கொஞ்சநஞ்சமல்ல. இந்த பூவுலகை அவர் விட்டு பிரிந்து இன்றோடு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த பொன்மனச்செம்மலின் நீங்க நினைவை சற்று நினைவு கூறுவோம்.எம்.ஜி.ஆர் அவர்கள் கையசைத்தாலே போதும் மக்களின் ஓசை வானை முட்டும், இறந்த பின்னும் மக்கள் மனதில் இன்னும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்,
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் !!
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம் !! உயர்ந்தாலும்
தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் !!
என்ற பாடலின் வரிகளுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் தான் மாபெரும் சகாப்தமான MGR அவர்கள்.
MG. இராமச்சந்திரன் அவர்கள் இலங்கையில் கண்டிக்கு அருகே உள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன்மேனன் - சத்தியபாமா என்ற தம்பதிக்கு 5வது மகனாக பிறந்தார்.
அவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். பின்னர் திடீர்னு ஒருநாள் தந்தை இறந்துவிடவே குடும்பத்தை எப்படி நடத்துவது என கேள்வி குறியானது.
அதனால் அவர்கள் கும்பகோணத்தில் குடிபெயர்ந்தனர். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியாததால் ராமச்சந்திரன் அவர்கள் தனது சகோததருடன் நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்து நாடகம் நடிக்க தொடங்கினார்.
அதில் பெற்ற அனுபவத்தால், தனது கடின உழைப்பு காரணமாக திரைப்பட துறைக்கு வரும் வாய்ப்பை பெற்றார். பின்னர் 1936ல் சதிலீலாவதி எனும் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார் .
ஆனால் 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படத்திற்கு பின்னரே அவர் பெரும்நடிகராக உயர்ந்தார். குண்டடிபட்டாலும் அவரது நடிப்பின் வீரியம் சற்றும் குறையவில்லை. அவர் நடிப்பை மக்கள் ரசிக்க தொடங்கினர்.
அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் மக்கள் கொண்டாடினார்கள். 1971ம் ஆண்டில் அகில இந்திய சிறந்த நடிகராக விளங்கிய MGRக்கு மத்திய அரசு "பாரத ரத்தனா " விருதை வழங்கி பெருமை படுத்தியது.
திரைப்படங்களிலும் மக்களுக்கு கருத்துக்கூற கூடிய படங்களிலேயே நடித்தார். பெரும் மக்களின் ஆதரவை பெற்று
1977ல் நாட்டின் முதலமைச்சரானார். இவர் ஆட்சிக்காலத்தில், அண்ணாவால் கொண்டுவரப்பட்ட மதியவுணவு திட்டத்தை, சத்துணவாக விரிவு படுத்தினார்.
இலவச சீருடை, இலவச காலனி, இலவச பாடநூல் என பள்ளி குழைந்தைகளுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்தார்.
மகளிருக்கும், தாலிக்கு தங்கம், விதவை பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதி என பல திட்டங்களை தீட்டி புரட்சி தலைவனாக தோன்றினார்.
தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக இருந்த இவர், தனது 70 வயதில் கடும் நோய்வக்குள்ளாகி சுமார் 4 மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்,1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி மூச்சுப்பிரச்சனை காரணமாக மண்ணை விட்டு பிரிந்தார்.
முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே மறைந்ததால் இவரின் பூவுடலை தமிழக அரசு சென்னையில் உள்ள மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்தது.
அவருக்காக அங்கு தாமரை மலர் விரிந்த நிலையில் உள்ள கட்டமைப்புக்கு நடுவே அவருக்கு சமாதி ஒன்று எழுப்பப்பட்டுள்ளது....Valliammai...
-
அது ஒரு மாலை நேரம். வானம் மப்பும் மந்தாரமுமாக இருட்டிக்கொண்டு வருகிறது.எந்த நேரத்திலும் அடை மழைக்கான அறிவிப்பு வரலாம்.வழக்கம்போல தனது கை ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு அந்த வயதானவர் வீடு நோக்கி விரையும் அவசரத்தில் இருக்கிறார்.சரியாக கோடம்பாக்கம் ரயில்வே கிராஸில் அவர் சிக்கிக்கொள்கிறார்.பிடித்தது அடை மழை.ரிக்ஷாவின் கூரையை இழுத்துப்போட்டும் அவர் தொப்பலாக நனைந்தார்.குளிரில் உடம்பு நடுங்க கூனிக் குறுகி ரிக்ஷாவில் தஞ்சமான முதியவரின் அவஸ்தையை ஏற்றப்பட்ட கார் கண்ணாடி வழியாக இரு கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தது.ரயில் வரும் சத்தம்.வரிசையாக வண்டிகள் நகர்ந்தபோதும் அந்த இரு விழிகள் மட்டும் அந்த ரிக்ஷாவையே திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தது. விழிகளுக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம்.தனது படகு போன்ற ப்ளைமூத்தில் துளி கூட நனையாமல் பயணம் செய்தபோதும் மனது மட்டும் அந்த ரிக்ஷாக்காரரையே நினைத்துக்கொண்டிருந்தது.கதிரேசா மூ.னா.கானா வீட்டுக்குப் போ. டிரைவரிடம் சொல்ல அந்த 2248 ப்ளைமூத் வழி மாறிப்போனது..அறிஞர் அண்ணா முதல்வராக கலைஞர் அமைச்சராக இருந்த நேரமது.
நேராக கலைஞரிடம் வந்து நாம ரிக்ஷாக்காரர்களுக்கு ஏதாவது செய்தாகணும்.என்ன செய்யணும்?. மெட்ராஸ் மழையில இனிமேல் எந்த ரிக்ஷாக்காரரும் நனையக் கூடாது.அண்ணாகிட்ட சொல்லி ஒரு டேட்ஸ் வாங்குங்க. சிட்டில இருக்கிற எல்லோருக்கும் மழை கோட்டு குடுக்கிறோம்.மடமடவென காரியங்கள் ஆக நூறு மெஷின்கள் ராப்பகலா இயங்க 3500 மழைக் கோட்டு ரெடி.அப்போது தான் அறிமுகமான ப்ளாஸ்டிக் கோட்.தார்பாய் துணியெல்லாம் ஒத்து வராததால் முழு உடலையும் மறைக்கும்படி வெட்டி ஒட்டி தயாரிக்கப்பட்ட கோட்டுக்களை கை ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழைக் கோட்டு வழங்கும் விழாவாக நுங்கம்பாக்கம் லேக் ஏரியா கிரவுண்டில் அண்ணா தலைமையில் அனைவருக்கும் வழங்கிய பிறகு தான் மக்கள் திலகம் நிம்மதியானார்.எவ்வளவோ பட்டங்கள் அவரை அலங்கரிக்க இந்தப் பட்டம் மட்டும் அவரை விடாமல் ஏன் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதற்கான விடை தேடிப் புறப்பட்டபோது சட்டென மனதில் தோன்றிய நினைவு இது தான்.மக்கள் திலகம் என்ற அடை மொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவரது நினைவு தினம் இன்று.
ஒரு சினிமா நடிகர் அன்றாடம் எவ்வளவோ மனிதர்களை பொது வெளியில் கடந்துபோகிறார்.ஆனால் யாருக்குமே வராத பரிதாபம் ஒருவருக்கு மட்டும் வருகிறது என்றால் அவரை நாம் வெறும் நடிகராக எப்படிப் பார்ப்பது?. எம்.ஜி.ஆர்.என்ற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் உதடுகள் முதலில் கவனத்தில் கொள்வது அவரது மனித நேயத்தைத் தான்.அரை நூற்றாண்டு காலமாக திரைத்துறை அரசியல் என இரு வேறு தளங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக ஒருவர் விளங்கினார் என்றால் அவர் கடந்து வந்த பாதை எவ்வளவு சுவாரசியமான பாதையாக இருந்திருக்கும்.திரைப்பட நடிகர்களிலேயே அதிகமதிகம் பேசப்பட்ட பெயர் எம்.ஜி.ஆர்.அதிகமதிகம் எழுதப்பட்டவரும் அவர் தான்.காரணம் தான் பங்கேற்ற இரு துறைகளிலும் அவர் வெற்றிக்கொடி நாட்டியது மட்டுமல்ல பல வியக்க வைக்கும் சம்பவங்களுக்கும் அவர் சொந்தக்காரர்.
ஒரு திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாக டைட்டில் கார்டு போடுவார்கள்.மற்ற நடிகர்கள் படங்களுக்கு போடும் டைட்டிலுக்கும் மக்கள் திலகம் படங்களின் டைட்டிலுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.படத்தின் தலைப்பு தொடங்கி இயக்குநர் பெயர் வரும் வரை எத்தனை பெயர் வருகிறதோ அத்தனை பெயர்களிலும் எம்.ஜி.ஆர். இருப்பார்.எங்கோ ஒரு மூலையில் வரும் துணை நடிகரிடம் கேட்டால் அவராலதாங்க நான் இங்கே வந்தேன் என்பார்.டெக்னீஷியன்களிடம் கேட்டால் அவரைப் பற்றி வண்டி வண்டியாகச் சொல்வார்கள்.தனக்குத் தந்த வேலை நடிப்பு மட்டுமே என்று அவர் இருந்திருந்தால் அநேக வீடுகளில் அடுப்பெரிந்திருக்காது.தனக்கு கிடைத்த சம்பளத்தோடு அவர் ஒதுங்கியிருந்தால் பல குடும்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும்.சினிமா என்ற தொழிற்சாலையில் பல்லாயிரம் தொழிலாளர்களின் பிரதிநிதியாக இருந்தவர் மக்கள் திலகம் என்பதில் தான் அவரது மனித நேயம் மிளிர்கிறது.
விக்கிரமாதித்தன் படம் முடிந்து விட்ட நேரத்தில் தான் மனைவி சதானந்தவதி இறந்தார்.துக்கத்தில் துவண்டிருந்த நேரத்தில் அவரைக் காண ஸ்டண்ட் கலைஞர்கள் வந்தார்கள்.அந்த நேரத்திலும் வந்தவர்களிடம் உங்களுக்கு பணத்தை செட்டில் பண்ணினார்களா என்று தான் கேட்டார்.தயங்கிய அவர்கள் இல்லையென்றது தான் தாமதம் அந்த கம்பெனிக்கு போனைப் போடு என்றார்.தயாரிப்பாளரைப் பிடித்து காய்ச்சியெடுத்தார்.கட்சி ஆட்கள் கலையுலக பிரமுகர்கள் என நிறைந்திருந்ததைப் பற்றி அவர் கவலையேபடவில்லை.சக தொழிலாளர்கள் மீது எந்த நேரத்திலும் அக்கறை கொண்டவர் என்பதற்கு இம் மாதிரி ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்.
மக்கள் திலகம் வாழ்க்கை வரலாறு ஒரு திறந்த புத்தகம்.அவரைப் பற்றி அவரே எழுதியது போக லைட் பாய் முதல் இயக்குநர் வரை அவரோடு பணியாற்றியதைப் பற்றி சொன்னது தான் அதிகம்.படிப்பவர்களுக்கு சில நேரம் மிகையாகத் தெரியலாம்.ஆனால் அது உண்மை என்பதை கூட இருந்தவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.பலருக்கு அவர் உதவியதை யாருக்கும் சொல்லாதே என உறுதிமொழி வாங்கிவிட்டுத் தான் உதவுவார்.ஆனால் உதவி பெற்றவர்கள் பிற்காலத்தில் அதை மீறிய வரலாறு அவருடையது மட்டும் தான்.கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவரான ஜீவானந்தம் வீடு தாம்பரத்தில் இருந்தது.ஒரு முறை ஷூட்டிங் முடிந்து எதேச்சையாக அவரை சந்திக்க அவர் வாழ்ந்த வீட்டைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்.பேசிவிட்டு விடைபெறும்போது கூட இருந்த ஜீவாவின் அண்ணன் மகன் மோகன் காந்திராமனிடம் நாளைக்கு தோட்டத்திற்கு வா என்றார்.என்ன செய்வியோ தெரியாது சித்தப்பாவை கொஞ்ச நாளைக்கு வேறு வீட்டில் கொண்டு போய் வை.இப்போ இருக்கிற வீட்டை நாம கட்டுறோம். விஷயம் வெளியே தெரிஞ்சா தொலைச்சிடுவேன்.செங்கல் செங்கல்லாக வளர்வதை அக்கறையுடன் விசாரித்தார்.ஜீவா இறக்கும் வரை அவருக்கே தெரியாது அது எம்.ஜி.ஆர்.கட்டித்தந்த வீடு என்று.உலகத்திற்கே தெரியாது மோகன் காந்தி ராமன் சொல்லும் வரை.
சினிமா நடிகர் என்ற பிம்பத்தைத் தாண்டி எம்.ஜி.ஆரைத் தேடினால் மனிதருள் மாணிக்கமாக அவரைப் பார்க்கலாம்.இதற்காக எங்குமே அவர் தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டதில்லை.கூட இருந்தவர் சொல்லக் கேட்டது தான்.அம்மே வெஷப்பு.தனது தாயிடம் பசிக்கும்போது குரல் கொடுப்பார்.அந்த அம்மா உள்ளேயிருந்து இருடே கணேஷூ வரட்டும் என்பார்.வால்டாக்ஸ் ஒற்றை வாடையில் நடிகர் திலகம் நடித்து முடித்து வரும் வரை பசியோடு காத்திருந்த எம்.ஜி.ஆரை இங்கே எத்தனை பேருக்குத் தெரியும்.?. இதில் விசேஷம் என்னவென்றால் ஒரு இடத்தில் கூட எம்.ஜி.ஆர் விளம்பரப்படுத்தியதில்லை.செய்தியைச் சொன்னது சாட்சாத் நடிகர் திலகம் தான்.அவர் சின்ன அண்ணாமலையிடம் சொல்லி அவர் மக்களுக்குச் சொன்னது.இரவு நேரங்களில் பல ஊர்களுக்கு நாடகம் நடிக்கப் போகும்போது பின் சீட்டில் மக்கள் திலகத்தின் தோளில் சாய்ந்து தான் நடிகர் திலகம் கண்ணயர்வார்.அப்படிப் போகும்போது உளுந்தூர் பேட்டை தாண்டி ஒரு விபத்தை சந்தித்தோம் என டிரைவர் கதிரேசன் சொல்லித் தான் நமக்கே விஷயம் தெரியும்.
திரையுலகில் அவருக்கென்று தனி பாணி அவரே ஏற்படுத்திக்கொண்டது.தமிழ்த் திரையுலகில் வெகுஜன சினிமாவை அறிமுகப்படுத்தியது அவர் தான்.சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர்.படங்கள் அலர்ஜி தான்.உண்மையான சினிமா இவரால் தான் திசை மாறிப் போனது என்பது அவர்களது குற்றச்சாட்டு.அது உண்மை தான்.மலையாள வங்காளப் படங்களை ஒப்பிடும்போது ஒரிஜினல் சினிமா இவரால் தான் காணாமல் போனது.ஆனால் உழைத்துக் களைத்துப்போய் வரும் ரசிகனின் ஆதர்ஷ நாயகன் அவர் தான்.அவரைப் போன்றதொரு என்டர்டைனர் இது வரை அமையவில்லை.அவரது அடியொற்றித் தான் பிற்கால நடிகர்கள் தங்களை வளர்த்துக்கொண்டார்கள்.திரையுலகில் மிகப் பெரிய மாஸ் ஹீரோ என்ற அடை மொழியை அவர் தான் ஆரம்பித்து வைத்தார்.இப்போதைய பன்ச் டயலாக்குகளின் முன்னோடி அவர் தான்.அவருக்கென்றே உழைத்தார்கள் வசனகர்த்தாக்கள் .பாத்திரங்களைத் தாண்டி காட்சிகளில் அவர் தான் தெரிவார்.ரசிகர்களின் பல்ஸ் தெரிந்த ஒரே நடிகர் அவர் தான்.அவரது கேரக்டர்கள் எளிமையானவர்கள்.தொழிலாளி ரிக்ஷாக்காரன் படகோட்டி மீனவ நண்பன் விவசாயி காவல்காரன் என எளிய மனிதர்கள்.
சாதாரணத்திலிருந்து அசாதாரணத்திற்கு நகரும் கதைக் களம் அவருடையது.படம் பார்க்கும் சாதாரண ரசிகன் அவரில் தன்னையே காண்பான்.எவ்வளவு தான் அதர்மம் ஆட்டம் போட்டாலும் கடைசியில் வெல்வது தர்மம் தான்.அதற்காக தனக்கு சமமான வில்லன்களையே அவர் படைப்பார்.சமூக அவலங்கள் அவர்கள் மூலமே வெளி வரும்.அவரது நடிப்பு எல்லாமே எதார்த்தமாக இருக்கும்.படகோட்டியில் ஒரு இரும்புக் கம்பியை வளைப்பார்.உண்மையில் அது ஈசியாக வளையக் கூடியது தான்.மிகவும் சிமப்பட்டு கை நரம்புகள் கழுத்து நரம்புகள் புடைக்க அவர் வளைக்கும்போது நாமே வளைப்பது போல் இருக்கும்.நாடோடியில் ஒரு காட்சி .சிறை வைக்கப்பட்ட இடத்திலுள்ள பூட்டை உடைக்க வேண்டும்.கைக்கு மட்டும் க்ளோஸப் கொடுங்கள் என்றார்.கை நரம்புகள் புடைக்க அந்த க்ளோஸப் அருமையாக வந்திருக்கும்.எத்தனையோ நடிகர்களிடம் நான் நடித்திருந்தும் எதார்த்தமான நடிப்பை நான் எம்.ஜி.ஆரிடம் தான் பார்த்தேன்.ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்த வைஜயந்தி மாலா சொன்னது.நடிப்பில் மைம்ஸ் என்றொரு பாணி உண்டு.இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டி நடிக்கும் மோனோ ஆக்டிங்.இதை எம்.ஜி.ஆர்.அட்டகாசமாக செய்வார்.மாட்டுக்கார வேலனில் வரலட்சிமியிடம் முரண்டு பிடிக்கும் மாட்டை எப்படி அடக்க வேண்டும் என்பதை ஒரு டெமோவாக செய்து காட்டுவார்.குடியிருந்த கோயிலில் தனக்கு கல்யாண வயசு ஆயிடுச்சு என்பதை பண்டரிபாயிடம் நாசூக்காக காட்டும் மைம்ஸ் அட்டகாசமாக இருக்கும்.பெண்கள் காட்டும் நளினத்தை அழகாக பல படங்களில் செய்துகாட்டுவார்.
அவரது சண்டைக் காட்சிகள் தனித்துவமானவை.எடுத்தவுடன் கை நீட்டமாட்டார்.அதே நேரத்தில் எதிரிக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே தருவார்.இங்கே ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருப்பார்கள்.இது ஒரு அருமையான சைக்காலஜி.எதிர்பார்ப்பை எகிற வைப்பது.மூன்றுக்கு மேல் சான்ஸே இல்லை என்பதை முன் கூட்டியே தீர்மானிக்கும் ரசிகர்கள் தான் அவரது முழு பலம்.உதட்டோரம் ரத்தத்தைப் பார்த்தால் அவரை விடக் கொதிப்பது அவரது ரசிகன் தான்.ஒளி விளக்கில் உழைத்துச் சம்பாதித்த காசுகளை மனோகரன் தட்டிவிடும்போது தான் அவர் உஷ்ணமாவார்.திருடனாக இருந்தபோது கரன்ஸி நோட்டுகளை கண்டவர் இந்த காசுகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தந்திருப்பார்.உழைப்பின் மகத்துவத்தை வெறும் சண்டைக் காட்சியில் கொண்டு போய் வைத்திருப்பது உழைக்கும் ரசிகனுக்கு உற்சாகத்தை தந்திருக்கும். சிரித்துக்கொண்டே சண்டையிடும் ஒரே நடிகர் அவர் தான்.மூர்க்கமாக சண்டை போடும்போது கூட அவருக்கு வேர்க்காது என்கிறார்கள் சக கலைஞர்கள்.நாங்கள் தொப்பலாக நனைந்தபோதும் உங்களுக்கு மட்டும் எப்படிண்ணே என கேட்டால் உங்க ஆக்ரோஷத்தை வெறும் நடிப்பா காட்டினால் உங்களுக்கும் வேர்க்காது என்பார்.எங்களுக்கு கடைசி வரை அது வரவில்லை என்பதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்.அவரது சண்டைக் காட்சிகளில் அதிகமாக லாக்கிங் என்ற பிடி அதிகமாக இருக்கும்.மல்யுத்தக் கலைஞர்களுக்கு மட்டுமே இது அமையும்.பல படங்களில் அட்டகாசமான லாக்கிங் முறைகளை பயன்படுத்திய ஒரே நடிகர் அவர் தான்.இதயக் கனியில் ஜஸ்டினை அவர் லாக் செய்தபோது அந்த ஆஜானுபாகு திணறுவதை தத்ரூபமாக பார்க்கலாம்.சராசரி உயரம் தான்.கச்சிதமான உடல் அமைப்பு தான்.ஆனால் எதிராளி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மண்டியிடும் வித்தை அவருக்குத் தெரியும்.
சண்டைக் காட்சிகளில் கேமிரா கோணங்களை அவர் தான் அமைப்பார்.இயக்குநர் ஒதுங்கிக்கொள்ள படச்சுருள்கள் எடிட்டிங் டேபிளுக்கு வந்த பிறகு விறுவிறுப்பு இன்னும் கூடியிருக்கும்.அறையெங்கும் கும்மிருட்டு.ஒரே ஒரு லைட்டிங்.அது டார்ச்சாக இருக்கலாம்.மேலே தொங்கும் விளக்காக இருக்கலாம்.அட்டகாசமாக காட்சிகளை அவரே அமைப்பார்.ரிக்ஷாக்காரனில் பெரிய டேபிளில் சுருள் வாள் சுற்றும் காட்சி.கேமிராவை நிறுத்தாதே என சொல்லிவிட்டு சுற்ற ஆரம்பிப்பார். சத்தியமாக ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கே சவாலான காட்சியது.வியக்க வைக்கும் கேமிரா கோணங்களில் எம்.ஜி.ஆரை வியப்போடு பார்க்கலாம்.ரிக்ஷாவில் அமர்ந்துகொண்டே சிலம்பம் ஆடிய ஒரே நடிகர் அவர் தான்.கடைசி கட்ட மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனில் ஒரு தர்பார் வாட் சண்டை.இளைஞர்களுக்கே சவால் விடும் காட்சியது.அறுபது வயதை நெருங்கும்போதும் அவர் காட்டிய சுறுசுறுப்பு அத்தனையும் தத்ரூபம்.அதே சுறுசுறுப்பை பாடல் காட்சிகளிலும் காணலாம்.
உள்ளமட்டும் அள்ளிச் செல்லும் மனம் வேண்டும் என பாடிவிட்டு அதை சொல்லும் வண்ணம் துள்ளிச் செல்லும் உடல் வேண்டும் என்ற வரிகள் அவருக்கு மட்டுமே பொருந்தும்.நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது ஓஹோ..ஓ..உற்சாக வெள்ளத்தில் ஒரிஜினாலிடி இருக்கும்.ஓராம் மாசம் உடலது தளரும் ஈராம் மாசம் இடையது மெலியும். படிப்படியாக பத்து மாசமும் பக்குவமாக வந்திருக்கும்.நீயும் நானும் பாடிய பாட்டை பாடிப் பாடி என குழறலோடு பாடும்போது பாடி லேங்குவேஜ் அருமையாக வந்திருக்கும்.உதட்டுச் சிவப்பெடுத்து படிக்க முகம் கொடுத்து உதவும் சமயமல்லவோ சிருங்கார ரசத்தை சிந்தாமல் தந்திருப்பார்.காதல் காட்சிகளில் கைகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதன் இலக்கணத்தை இவரிடம் தான் கற்க வேண்டும்.வேட்டைக்காரனில் மஞ்சள் முகமே வருக பாடலில் நடிகையர் திலகத்தோடு ஒரு காவியமே படைத்திருப்பார்.
இன்னொரு வானம் இன்னொரு நிலவு தான் லதாவின் முதல் ஷாட்.ரோமியோ என்றபடியே படியில் இறங்க வேண்டும்.கீழே என்னம்மா தேடுறே என்றார் நீலகண்டன்.அப்போது தான் புரிந்தது அவர் ரோமியோ பார்த்தபடியே வரவில்லை என்பது.முதல் நாள் காட்சி.சுற்றிலும் ஏகப்பட்ட கலைஞர்கள்.மெதுவாக தோளில் கை போட்டபடி அவரை தனியாக அழைத்து பயமா இருக்கா?. ஆமாங்க.ஹீரோவை மாத்திடலாமா?. நெர்வஸை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற லலிதா மஹாலில் லதா வெளுத்து வாங்கினார்.கொள்கைப் பாடல்கள் என தனிப் புத்தகம் போட்ட ஒரே நடிகர் எம்.ஜி.ஆர்.தான்.நாளை வருகின்ற வாழ்வு நமக்கென்று ஏழை முகம் பார்த்துக்கொள்வான்.வாழ்வில் நிறைவேறாத ஒரே எனக்கொரு மகன் பிறப்பான்.தனது ஆசைக் கனவுகளை அப்படியே தந்திருப்பார்.சுற்றி பகை வந்து சூழும் திருநாளில் வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்.அவருக்காகவே உழைத்த கவிஞர்கள் ஏராளம்.தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது.குதூகலமாவார்கள் கவிஞர்கள்.ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்.நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை.நாணயத்தோடு நல்லறம் காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை.மக்கள் திலகம் மறைந்து எத்தனை ஆண்டுகளானாலும் சரி இந்த நிமிடம் கூட தமிழக அரசியல் களம் அவரைச் சுற்றித் தான் சுழல்கிறது.எம்.ஜி.ஆர்.ஆட்சியை அமைப்போம் என இரு கரம் கூப்பி வரப்போகிறது.வருபவரெல்லாம் எம்.ஜி.ஆர்.ஆக முடியுமா?. அவர் வந்த பாதையைக் கொஞ்சம் கவனிக்க வேண்டாமா?. வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி.வரிகளுக்கு உயிர் கொடுத்த மகத்தான மனிதரை இந்த உலகம் தேடிக்கொண்டேயிருக்கிறது.அந்த இடம் வெற்றிடமாக அப்படியே தான் இருக்கிறது..........கருத்து... Abdul samad fayaz...
-
தமிழகம் பல திறமையான தலைவர்களைத் தந்துள்ளது. ஆனாலும், காமராஜரையும் எம்ஜிஆர் அவர்களையும் மறுபடி மறுபடி நினைத்துக் கொள்கிற அளவிற்கு வேறு யாரையும் நினைவு கொள்வதில்லை. அரசியல் காரணங்களுக்காக வேறு சிலர் வந்து போகலாம். ஆனால் இவ்விருவரையும் தரக்குறைவாக பேசுகிறார்கள் குறைவு. எம்ஜிஆர் பிரபலமான சினிமா நடிகர் என்பதற்காக மட்டுமே மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்பது தவறு.
இருவரும் ஒரு மகத்தான காரியம் செய்தார்கள். ஏழைக் குழந்தைகளுக்கு வயிறார உணவிட்டார்கள்.
இருவருமே படிக்காதவர்கள். வறுமை. ஆனால் இருவரும் தாங்கள் தான் படிக்கவில்லையே, மற்றவர்கள் ஏன் படிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. தாங்கள் பெரிதாக படிக்க முடியாததற்கு என்ன காரணம் என்று யோசித்து, அந்த நிலைமை இன்னொரு ஏழைக் குழந்தைகளுக்கு வரக்கூடாது என்று நினைத்தனர்.
எம்ஜிஆர் சத்துணவு திட்டம் கொண்டு வந்தபோது அறிவுஜீவிகள் எதிர்ப்பது மட்டுமல்லாமல் கிண்டல் செய்தனர். 120 கோடி ரூபாய் தண்டம் என்று பிரசாரம் செய்தனர்.இந்த நாற்பது வருடங்களில் உணவு செரித்து விட்டது. ஆனால் பள்ளிக்கூடத்தைக் கனவிலும் நினைக்க முடியாத லட்சக்கணக்கான ஏழைகளுக்கு கல்வியறிவு கிட்டி விட்டது.
மதிய/சத்துணவு திட்டங்களுக்கு முன்பும் கூடத்தான் அந்த 120 கோடி ரூபாய் கஜானாவில் இருந்திருக்க வேண்டும். அந்தப் பணம் எந்த வகையில் செலவிடப்பட்டது, என்ன வளர்ச்சி காணப்பட்டது என்று பிரச்சாரகர்கள் யாரேனும் இன்று கூற முடியுமா?
எம்ஜிஆர் அவர்கள் பள்ளிக்கல்வி சொற்பமாகக் கிடைக்கப் பெற்றவர். ஒரு உண்மை சம்பவம், தானே அனுபவிக்கப் பெற்ற என் வயதான நண்பர் கண் கலங்கிச் சொன்னது. இவர் பல வருடங்கள் முன்பு அரசுத் துறையில் தலைமை என்ஜினீயராக ஓய்வு பெற்றவர். 1978ம் வருடம், என் நண்பர் ஒரு ஜூனியர் என்ஜினீயர். நாகை அருகே வடிகால் வெட்டும் முயற்சியில் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அவர் வேலை செய்யும் இடத்தில் அருகாமையில் சாலை போடும் பணி மும்முரமாக நடந்து வந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. இரண்டு துறைகளிலும் வேலை நடக்க வில்லை. இவர் மட்டும் மேற்பார்வையிட வந்து கிளம்பும் தருவாயில் பெரும் பரபரப்பை பார்த்தார். விசிரித்தபோது முதல்வர் அந்த வழியாக இன்னும் அரை மணியில் வரப்போவதாகக் கூறினார்கள். விஷயம் காட்டுத்தீ போல் பரவி அருகாமையில் இருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் கூட்டம் கூடிவிட்டது. என் நண்பர் அவரது பரம விசிறி. அவரும் கூட்டத்தைப் பிளந்து தரிசனத்திற்காக நின்று கொண்டார். சாலையில் வேலையின் காரணமாக ஆங்காங்கே தார் டின்களும், உபகரணங்களும், ஏழெட்டு டின் நிறைய தண்ணீர் நிரம்பிக் கிடந்தன. எம்ஜிஆர் வந்து விட்டார். திரளான கூட்டத்தைக் கண்டதும், என்ன தோன்றியதோ வாகனத்தை நிறுத்தி, ஒரு சிறு கணம் பொதுவாக நலம் விசாரித்தார். அப்புறம் சட்டென்று திரும்பி உதவியாளரிடம், "ஆமாம்.. ரோடு போடறாங்களே.. ஏன் இன்னிக்கு யாரையும் காணோம்"
அவர் பணிவாக, " ஐயா.. இன்றைக்கு விடுமுறை"
"ஓ.. கவர்மெண்ட் விடுமுறையோ? நாமள்ளாம் கவர்மெண்ட் இல்லை போல" என்று கூறிக் கொண்டே யாராவது பணியாளர்கள் இருக்காங்களான்னு பாருங்க என்றார். Gr...
-
Hema மேடம் நன்றி. இந்த மழைக் கோட்டு செய்தியை நான் சட்டென கடந்து போனேன்.ஆனால் அதற்கு பின்னால் இருந்த கஷ்டங்களை எம்.ஜி.ஆரின் உடையலங்கார நிபுணர் எம்.ஜி.முத்து விளக்கியபோது அதன் கஷ்டம் புரிந்தது.எப்படி தயாரிப்பது என்பதற்கான மாடலே அவரிடம் இல்லை.திக்கான தார்ப்பாய் அதிக எடை.மடித்து வைக்க முடியவில்லை.அதன் பிறகு தான் புதிதாக வந்த ப்ளாஸ்டிக் ஷீட்டுகள் வாட்டர் ப்ரூஃப் என தெரிந்தது.மடக்கி வைக்க எளிதாக இருந்தது.நேரான ஓப்பனா சைடு ஓப்பனா?. சந்தேகம்.சைடு தான் பெட்டராகத் தெரிந்தது.நடக்கும்போது எளிதாக இருக்க மெனக்கெட வேண்டியிருந்தது.கடைசியில் அசத்தலான வடிவம் வரும்வரை எம்.ஜி.ஆர்.விடவேயில்லை.அதன் பிறகு தான் கம்பெனிகளுக்கே அந்த ஐடியா வந்தது.இந்த மொழியைச் சேர்ந்தவர் இந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற பாகுபாடெல்லாம் அவரிடம் இல்லை.இல்லாதோர் எல்லோரும் ஓரினம் என்பது தான் அவரது கருத்து.சினிமா நடிகராக அவரை நாம் பார்ப்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்பது அவரது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். .......ASFayaz...
-
Boopathy சார் எவ்வளவு தான் பேசினாலும் சிலரை திருப்திப்படுத்துவது கடினம்.அவர்களது ஆழ் மனதின் ஆழமான வடுவை அவர்களால் மட்டுமே நீக்க முடியும்.அரசியலில் அவரது வெற்றிடம் அப்படியே இருப்பது போலவே திரையுலகிலும் அந்த வெற்றிடம் அப்படியே தான் இருக்கிறது.நலிவுற்ற பல கலைஞர்கள் இப்போதும் எம்.ஜி.ஆர்.திரும்ப வரமாட்டாரா என ஏங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.இப்போதைய ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது அதே வெற்றிடம் இங்கும் தெரிகிறது....ASF...
-
Fayaz ஸார், மனமார்ந்த வாழ்த்துக்கள் காலையில் இருந்து காத்திருந்த எதிர்பார்ப்பு நிறைவேறியது மக்கள் திலகம் MGR தமிழ் திரைத்துறைக்கும் அரசியல் களத்திலும் ஒரு சகாப்தம் என்று உணரும்போது, உங்களால் அவருக்காக எழுதப்படும் பதிவுகளும் சரித்திர சகாப்தமே எவ்வளவு செய்திகள், சம்பவங்கள், அவர் குனநலன் கூறும் நினைவு கோர்வைகள் சைக்கிள் ரிக்ஷாவில் ஒரு கொள்கையாக நான் இதுவரை பயணம் செய்தது இல்லை, லக்னோ, ராய்ப்பூர் நகரங்களில் இருந்தபோதும், வசித்தபோதும் ஒரு நாளும் மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் அவலம், அதுவும் உயிரோடு இருக்கும்போது எனக்கு உடன்பாடு இல்லை. இறந்தபின் வேறு வழியில்லை, இப்போது அதற்கும் வண்டிகள் வந்து விட்டது. பொன்மனசெம்மல் பெயருக்கேற்ப பொன் மனம் கொண்டவரே ...Hema Viswanath...
-
அதற்குள் என் நண்பர் ஆர்வக்கோளாறினால் முன் வந்தார். மக்கள் திலகத்திடம் அளவளாவக் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிட அவர் விரும்பவில்லை.
மக்கள் திலகம் அவரை ஏன் இறங்கப் பார்த்து யாருப்பா தம்பி நீ என்றார். இவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, தான் என்ஜினீயர் என்றும் கூறிக் கொண்டார்.
ஓ.. அப்படியா.. என்று உதவியாளர் பக்கம் திரும்பி, "இந்தப் பையனை உடனடியாக சஸ்பெண்ட் பண்ணிடுங்க" என்று கூறிவிட்டு, கோபமாக இவரிடம் திரும்பி"இதுதான் ரோடு போடுற லட்சணமா" என்று கூறியவாறே காரில் ஏறி விட்டார். செம்பருத்தி போலிருந்த அந்த முகம் மேலும் சிவந்து விட்டிருந்தது.
என் நண்பருக்கு இதென்னடா வீண்வம்பு என்று தோன்றுகிறது. அழுகை நெஞ்சை முட்ட, மக்கள் திலகத்தை நெருங்க முயல, உதவியாளர் தடுத்து, "அதான் ஐயா சொல்லியாச்சு இல்லே... அதுக்கு மறு உத்தரவு கொடுக்க ஆண்டவனாலேயே முடியாது. ஆமா.. உன் பேரென்ன சொன்னே"
இவர் சொன்னவுடன், "என்ன பாய், நமாஸ்லாம் ஒழுங்கா பண்றவன்னு நெத்திலேயே தெரியுது.. நமாஸ் பண்ணா மட்டும் போறுமா.. நியாயமா நடந்துக்க வேண்டாமா" என்றார்.
என் நண்பர் அவரை மேக்கரித்து, காரில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த முதல்வரிடம் சென்றார். அழுகிற குரலில், "ஐயா.. இந்த ரோடு வேலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பக்கத்தில் வாய்க்கால் மராமத்து செய்வதில் ஈடுபட்டிருக்கிறவன்" என்றார்.
அவர் நம்பவில்லை. அப்படியா.. ஆனா என் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாயே?
ஐயா.. நான் என்ஜினீயர்.. ஆர்வக்கோளாறினால் நான் எல்லா வேலையையும் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன்.. அந்த மாதிரி தெரிஞ்ச விசயத்தை தான் கூறினேன். நான் தங்களின் தீவிர விசிறி. இதுவரை நேரில் பார்த்ததில்லை என்பதால் ஓடி வந்தேன். பேச சந்தர்ப்பம் என்றார் கிடைத்ததும் விட மனசில்லாததால் எனக்குத் தெரிந்ததைக் கூறினேன் என்றார்.
ஒருக்கணம் கூட தாமதிக்கவில்லை எம்ஜிஆர். கார் கதவைத் திறந்து சரேலென்று இறங்கி, என் நண்பரின் கையைப் பிடித்து மன்னிப்பு கோரினார்.*காருக்குள் தானே துழாவி, தனக்கு வேறெங்கோ யாரோ போட்ட சந்தனமாலை ஒன்றை தன் கையாலே அவருக்கு அணிவித்து, தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டார்.
"என்ன பலம் அவருக்கு? எலும்பெல்லாம் நொறுங்கிவிடும்போல ஆனால் மிகப்பிடித்ததாக இதமாக இருந்தது அந்த வலி என்று பின்னாட்களில் என் நண்பர் நினைவு கூறினார்....gr...
-
ஒரு முனைவர் பட்டத்துக்குறிய ஆய்வு கட்டுரை போல் அமைந்தது என்றால் மிகையாகாது. அவரை அழகாக தாங்கள் வர்ணித்த முறை அப்படியே என்னை அந்த பள்ளி,கல்லூரி நாளில் அவரை எப்படி ரசித்து மகிழ்ந்தோம் என்பதை நினைவு படுத்தியது. ஒரு உற்சாகம் உத்வேகம் அவரால் உண்டாகும். இங்கே பல நண்பர்கள் அவரை ரசித்து அவரின் பெருமைகளை உணர்ந்து கொண்ட நிகழ்வை இன்று கண்கூடாக பார்க்கின்றேன். அவரை விமர்சனம் செய்த சகோதரா சகோதரிகள் இன்று மனதார புகழ்ந்து கைதட்டும் போது அவரின் மதிப்பு வெறும் நடிப்பை தாண்டி நிற்பதை உணர முடிகிறது.
அருமையான கட்டுரை எழுத வைத்த அந்த மக்கள் திலகம் அவர்களின் நினைவு என்றும் நம்முடன் நிலைத்து நிற்கும்.
நன்றி வணக்கம் நண்பரே.
தொடரட்டும்... Prabhakaran Mdu.........
-
இன்றும் அணையாத ஒளி விளக்கு #எம்_ஜி_ஆர்! – நினைவுநாள்!
டிசம்பர் 24,
எம்.ஜி.ஆர் என்ற மனிதர்..
புரட்சி நடிகராக,
மக்கள் திலகமாக,
நடிக மன்னராக,
வசூல் சக்கரவர்த்தியாக,
மூன்றெழுத்து மந்திரமாக,
பொன்மனச் செம்மலாக,
மக்களின் இதயக்கனியாக,
ஏழைகளின் ஒளிவிளக்காக,
தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக,
மன்னாதி மன்னனாக…
வாழ்ந்து… மறைந்து… இன்றும் புவி போற்றிடும் புரட்சித் தலைவராக திகழ்கிறார். வாழ்க்கைச் சக்கரத்தில் படிப்படியாக தமது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்த ஒரே துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கடவுள் முருகன் புகழ் பாட பாட நா மணக்கும். அது போல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழ் எழுத எழுதவார்த்தை இனிக்கும். வாழும் காலத்தில் இவர் காணாத சவால்களும் இல்லை சறுக்கல்களும் இல்லை. மறைந்த காலத்தில் இவரைப் போல் சரித்திரம் படைத்தவர் யாருமில்லை என்று உலகமே இன்றும் வியந்து நிற்கிறது. வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் வாங்க வேண்டும் இவர போலயார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று அவர் பாடிய வரிகள் அவருக்கே மிக பொருத்தம்.
எம்.ஜி.ஆர். திரையுலக சாதனைகள்
சதிலீலாவதி திரைபடத்தின் மூலம் சினிமாவின் திரைவாசலை அடைந்த எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்கள் 136. எம்.ஜி.ஆர் நடித்து 100 நாட்களையும் மீறி வெற்றிக் கண்ட படங்கள் 86 படங்கள், வெள்ளிவிழா கண்டவை 12, இவர் இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படமும் என் அண்ணன் படமும் 300 நாட்கள் திரையரங்கம் கண்டன என்பது குறிபடதக்கவையாகும். கடைசி படம் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன். இவற்றில் 17 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அத்தனையும் வெற்றிப்படங்கள். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் மூலம் முதன் முதலில் வண்ணப் படத்தைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருதுபெற்ற முதல் தமிழ்படம் எம்.ஜி.ஆர். நடித்த மலைக்கள்ளன். இவர் நடித்த படங்களில் தெலுங்கு மொழிகளிக்கு மாற்றம் கண்ட படங்கள் 60, இந்தி மொழிக்கு மாற்றம் கண்டவை 9 படங்கள் ஆகும். எம்.ஜிஆர். நடித்த அதிக படங்களை இயக்கிய பெருமை ப.நீலகண்டன் , எம்.ஏ திருமுகத்தையும் சாரும். அதிக படங்களை தயாரித்த நிறுவனம் தேவர் பிலிம்ஸ். அதிக படங்களுக்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதமும் மகாதேவனும் ஆவர். எம்.ஜி.ஆர் இவர் இயக்கிய படங்கள் மூன்று. நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகியவையாகும்,
இவரது நடிப்பில் வந்த படங்கள் நாடோடி மன்னன், அரசிளங்குமாரி , மந்திரிகுமாரி, பணத்தோட்டம் , தாயிக்கு பின் தாரம், பாசம், திருடாதே, அடிமைப்பெண் ,ஆனந்தஜோதி, மன்னாதி மன்னன், நம்நாடு, ஒளிவிளகு தாயைக் காத்த தனயன், அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், இப்படி எல்லாமே முத்தான படங்களாகஅமைந்தன. அன்றையக் காலகட்டத்தில் பானுமதி, டி.ஆர்.ராஜகுமாரி, சாவித்திரி, பத்மினி, செளகார்ஜானகி,சரோஜாதேவி,ஜெயலலிதா, கே.ஆர். விஜய, காஞ்சனா, லதா, மஞ்சுளா, லெட்சுமி என்று பெரும்பாலும் எல்லா நடிகைகளுடன் நடித்துவிட்டார் இவர்களில் ஜெயலலிதா 28 படங்களில் நாயகியாகவும், சரோஜா தேவி 26 படங்களில் நாயகியாகவும் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளனர்.
எம்.ஜி.ஆரின் திரையுலக வில்லன்கள்
தமிழகத்தின் தியேட்டர்களில் அதிகம் திட்டு வாங்கியவர், சபிக்கப்பட்டவர் எம்.என். நம்பியாராகத்தான் இருக்கமுடியும். ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில் எம்.ஜி.ஆரை அவர் அடிக்கும்போது கதறியவர்கள், அந்த நேரத்தில் நம்பியார் கையில் கிடைத்தால் குதறியிருப்பார்கள். ‘நான் ஆணையிட்டால் என்று வாத்தியார் கிளம்பி நம்பியாரை அடிக்கும் போது ரசிகர்களுக்குள் உற்சாக ஊற்று. பழி உணர்வைத் தீர்த்துக் கொண்ட திருப்தி. திரையில் நம்பியாரின் அருமையான வில்லத்தனத்தாலே, நிஜத்தில் தனது ஹீரோயிஸத்தை வளர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். கருப்பு வெள்ளைக் காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. எப்போதுமே எம்.ஜி.ஆர். – நம்பியாரின் கூட்டணி என்றால் வசூல்மழைதான். பி.எஸ் வீரப்பா, எஸ் அசோகன் போன்றோரும் இந்த கூட்டணியில் சேர்ந்தவர்கள் தான்.
எம்.ஜி.ஆர் திரைபடப்பட வசனங்களும் & பாடல்களும்
சினிமாவில் லாபம் மட்டுமே நினைப்பவர்களுக்கு மத்தியில், தரமான சிந்தனைகளையும், ஒழுக்கம் தரும் பண்புகளையும் தமது படங்களின் கதாபாத்திரங்களின் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவ்ர் எம்.ஜி.ஆர். அநாகரீக வார்த்தைகளை பேசுதல். புகைபிடித்தல், குடிபழக்கம் போன்றவறை தமது படங்களில் முற்றார் தவிர்த்த இவர் நடிகர் என்பதையும் மீறி, சமுதாய பற்றாளராகவும் பரிணாமித்தார். எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கருத்துக்களை வசனமாக இடம் பெற செய்வார். அவை மக்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தன.
நாடோடி: படிக்கிறவங்க புத்திசாலியாகலாம் எல்லோரும் அறிவாளி ஆக முடியாது. அனுபவந்தான் அத தர முடியும்.
நம்நாடு: எனக்குள்ள மூலதனம் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும், என்னுடைய நாணயமுந்தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.
தாயைக் காத்த தனயன்:பிள்ளைகளின் ஆசையை தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருந்து விட்டால் நாட்டில் தற்கொலை என்ற சொல்லுக்கு இடம் இருக்காது.
ஆயிரத்தில் ஒருவன்: யாரோட தாகமாக இருந்தாலும் தாகத்தை தீர்ப்பதுதான் தண்ணீரின் கடமை.
விவசாயி: நாம் பிறர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.
கணவன்: சத்தியம் சில நேரம் தூங்கும். ஆனால் என்றுமே சாகாது.
சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு போர் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..
வேட்டைக்காரன் – உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
நாளை நமதே – நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி சென்றால் நாளை நமதே
நம்நாடு – அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.
உலகம் சுற்றும் வாலிபன் – சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.
திருடாதே – திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!
மன்னாதி மன்னன் : அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..
படகோட்டி : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.
இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்.. எல்லாமே சமுதாய பற்றோடு மக்களுக்காக கொடுக்கப்பட்ட பாடல்கள். அன்று எழுதப்பட்ட இந்த கருத்தாழமிக்க பாடல்கள் இன்றைய நவீன காலத்திலும் நம் இதயங்களில் இளையோடுகிறது. சமுதாய பாடல்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களை பற்றி சொன்னால் அது தித்திக்கும் தேன் போல் இருக்கும். அத்தனையும் முத்தான காதல் பாடல்கள். இந்த வெற்றிக்கெல்லாம் மிக முக்கியானவர்கள் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், வாலி, பாடகர்கள் டி.எம்.எஸ். செளந்தராஜன், பி.சுசீலா கூட்டணி. இந்த கூட்டணிக்காகவே எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்களை பார்க்க திரையரங்கம் சென்ற கூட்டம் உண்டு.
எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். கவிஞர் வாலி, பாபநாசம் சிவன், கலைஞர் கருணாநிதி, உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, அ.மருதகாசி, ஆலஙகுடி சோமு ஆகியோர் எம்.ஜி.ஆரின் பாடகளில் மூலம் மக்களைக் கவர்ந்தவர்களாவர்
அ முதல் அஃகு வரை....ns...
-
டேய் சைமா! உன் 10வ*து வ*ய*தில் அதிமுக*வை ஆட்சிக்க*ட்டிலில் அம*ர்த்திய* புர*ட்சித்த*லைவ*ர் நீ வ*ய*துக்கு வ*ரும்வ*ரை (21 வ*ய*துக்குள்) மூன்று முறை தொட*ர்ச்சியாக* த*மிழ*க*த்தை ஆண்ட* ஒரே முத*ல்வ*ர்..நீ அர*சிய*லில் அனா,ஆவ*ன்னா ப*டிப்ப*த*ற்கு முன்பே டாக்ட*ரேட் பெற்ற*வ*ர் புர*ட்சித்த*லைவ*ர்..
அவ*ர*து ஆட்சி #பொற்கால*மாக* இருந்த*தால்தான் ம*க்க*ள் நினைவுக*ளில் இன்றும் வாழ்கிறார்..என்றும் வாழ்வார்..
உன்கையில் நாட்டை கொடுத்தால் #க*ற்கால*த்திற்கு கொண்டுவிடுவாய் என்ப*தால் தான் சிங்கிள் டீக்கு கூட* வ*ழியில்லாம*ல் நிற்கிறாய்! நீ த*லைவ*னாக* கூறிக்கொண்டு திரியும் பிர*பாக*ர*னின் வ*ர*லாற்றைப்ப*டி..புர*ட்சித்த*லைவ*ரை எந்த* அள*வு உய*ர்வாக* ம*தித்தார் என்ப*து புரியும்..ஒரு தொகுதியிலாவ*து டெபாசிட் வாங்க* திராணி உண்டா? நாவை அட*க்கு..உன் வ*ண்ட*வாள*ங்க*ள் எல்லாம் த*ண்ட*வாள*ம் ஏறும்...Shnm...
-
என்ன செய்தார் எம்ஜியார்?!
-------------------------------------------------------
-ஜாதி என்பது கொடுமையானது...
அதைவிட கொடுமையானது...
ஜாதி சான்றிதழ் வாங்குவது ...
அந்த் ஜாதி சான்றிதழ் கொடுக்கும் அதிகாரம்
வட்டாட்சியருக்கு உள்ளது... அந்த வட்டாட்சியர்...
கிரம முன்சிப் கர்ணம் அதற்கு.. மேல் வருவாய்
ஆய்வாளர் ...இவர்களின் பரிந்துரையின்பேரில்...
சம்பந்தபட்ட.. நபருக்கு சாதி சான்றிதழ்
கொடுப்பார்..இதில் வட்டாட்சியர்....
வருவாய் ஆய்வாளர்... இவர்கள் பிரச்சினை இல்லை...
காரணம் அவர்கள் அரசு அதிகாரிகள்...
ஆனால் இந்த கர்ணம் முன்சிப் என்பவை
கவுரவ பதவிகள்...அந்த கவுரவ பதவிகளில்
இருந்தவர்கள் மேல் ஜாதிகாரர்கள் ஆண்டகைகள்
..இவனுங்க ஜாதி சான்றுக்கு வரும் குடிமக்களை
புழுவை விட கேவலமாக நடத்துவார்கள் ...
யாரையும் மரியாதையாக விளிக்க மாட்டர்கள் ஏன்டா...
என்னடா... என்று அவர் எவ்வளவு வயதில் பெரியவராக
இருந்தாலும் ஒருமையிலேயே "டா" போட்டு
..விளிப்பார்கள் ..இந்த "அல்லக்கை" முண்டங்களை
ஒரே உத்தரவில் வீட்டுக்கு அனுப்பி அந்த இடத்தில்
தமிழக தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு எழுதிய
இளைஞர்களை நியமனம் செய்தார்...
இன்று பல லட்சம் தமிழக இளைஞ்சர்கள்...
பல ஜாதிகாரர்கள்... அரசு அதிகாரிகள் ...
என்று மரியாதையுடன் வலம் வருவதற்கு....
"எம்ஜியார்"தான் காரணம் என்றும் இருப்பார்...
"எம்ஜியார்"
வாழ்க தமிழ்... Matheswaran...
-
“என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவு தேவை?’ன்னு கேட்டார்.
‘3 ஆயிரம் தேவைப்படுது’ன்னு சொன்னேன். கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்.
காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க. சாப்பிட்டு காத்திருந்தேன்.
அரசியல் காரணமா 1967ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார். குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார். வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார்.
‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்.
நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ன்னு கேட்டார். அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ன்னு கேட்டார்.
‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ன்னு சொன்னேன்.
‘முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?’ன்னு கேட்டார். ‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்.
‘ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?’ன்னு கேட்டார்.
‘பல கோடி ரூபா இருக்கும்’னு சொன்னேன்.
‘இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?’ன்னு கேட்டார்.
‘ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னேன்.
‘செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்குறேன். அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்.
அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன். இப்பவும்
எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது. "
Nallathambi (son of Kalaivanar N.S.Krishnan) அவர்கள் ஆல்பத்திலிருந்து.......