ஸ்ரீ மாதவ வாசுதேவா !
தேவாதிதேவ கேசவா !!
http://www.youtube.com/watch?v=wqM0agHlTnA
Printable View
ஸ்ரீ மாதவ வாசுதேவா !
தேவாதிதேவ கேசவா !!
http://www.youtube.com/watch?v=wqM0agHlTnA
எல்லோருக்கும் நல் வாழ்வை அருளும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி !!
https://pbs.twimg.com/media/BnlgpGSIYAA7NwM.jpg
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத்தமிழோ மதுரையிலே
பிள்ளைத்தமிழோ மழலையிலே - நீ
பேசும் தமிழோ விழிகளிலே !!
http://www.youtube.com/watch?v=uvcVh8mszrY
Vishwa Thulasi - A must watch beautiful movie. A nice poetic story with a horrible climax!.
https://www.youtube.com/watch?v=Fnsk...e_gdata_player
வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!
சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்!
கண்ணே கண்ணின் மணியே நற்கனியே கரும்பே கசிதேனே
விண்ணோர் போற்றும் வேலவனே விமலா மேலோர் மேலவனே
பண்ணே அனைய மொழிவள்ளி பங்கா தணிகைப் பதிவாழ் என்
அண்ணா உனையே வந்தடைந்தேன் அடியேன் உய்யுமாறு அருளே..
http://2.bp.blogspot.com/-KPbZEp6Ugr...0/DSC03539.JPG
பொதுவாக ராகங்களின் அடிப்படையில் அமைந்த பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும். சில நேரங்களில் பாடல்கள் அமைந்த ராகங்கள் தெரியாவிட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். திரைப்பாடல்களில் காட்சி அமைப்பு , இயக்குனரின் , பாட்டை எழுதுபவரின், நடிப்பவர்களின் ஏன், சில சமயம் நடனம் அமைப்பவர்களின் விருப்பத்துக்கு இணங்க பாடல்கள் ஒரு ராகத்தில் ஆரம்பித்து வேறு ராகத்தை கொண்டு வந்து இணைத்து நீட்டி, குறைத்து முடிவில் மனதை கவரும் வகையில் வெளி வரும்.
(உதா) என்னவளே அடி என்னவளே என்னும் பாடல் கேதாரம் ராகத்தில் ஆரம்பித்து நடுவில் "நாட்டை" கொஞ்சம் போல. இதை கேட்ட சுப்புடுவின் விமர்சனம் : கேதாரததிற்கு சேதாரம் , நாட்டை யிலும் கோட்டை " என்று எழுதினார்.
ஒரு சில இசை அமை அமைப்பாளர்களே ஒரு ராகத்தை எடுத்து ஆரம்பம் முதல் முடிவுவரை strictly follows the rule.
எனக்கு மிகவும் பிடித்த சில ராகங்கள் அதில் பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்த ( நிலவே என்னிடம் நெருங்காதே , ஒருவர் வாழும் ஆலயம்) ஆபோகி ராக ( தங்க ரதம் வந்தது, காலை நேர பூங்குயில் , the interesting thing is ராஜா இரண்டு பாடல்களைத்தான் ஆபோஹி ராகத்தில் இசை அமைத்து இருக்கார் , இரண்டும் விஜயகாந்துக்கு ....:))
பெஹாக் ராகம் ( எந்தன் உயிர் காதலன் கண்ணன், ஹே ஓராயிரம், உன் பார்வையில் ஓராயிரம்) ஸ்ரீ ரஞ்சனி ( நாதமெனும் கோவிலிலே, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்,)
சுத்த தன்யாசி ( வா பொன்மயிலே , தவிக்குது தயங்குது ) மோகன ராக ( ஒரு தங்க ரதத்தில், கண்மணியே காதல் என்பது ) இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்...........
இசை என்பது மிகவும் சிறந்த கலை வடிவம். இதை கேட்கும் பொழுது கலை மட்டும் அல்ல இறைவனும் இங்கேதான் இருக்கிறான் என்று மிகவும் தெளிவாக ...........
பண்டிட் ஷிவ் குமார் ஷர்மாவின் சந்தூர் பாகேஸ்ரீ ராகத்தில்......
http://www.youtube.com/watch?v=JKNjbvW08aU
இளையராஜா ஆபோகியில் விஜய்காந்துக்காக இசை அமைத்த அந்த இன்னொரு பாடல் எது ? " இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே" வா ?
அதேதான் :) ......உங்களுக்குதான் இசையும் ராகமும் நன்றாக தெரியுமே. :):)
ராஜா அவர் இசை அமைத்த காலங்களில் யார் எவர் என்று பார்க்கவே இல்லை. பொங்கி வரும் புது வெள்ளம் போல இசையருவி அவர் மனதில் இருந்து கொட்டியது. ராஜா ஒரு மழை. மழைக்கு காடென்ன கடல் என்ன, பாரபட்சம் இல்லாமல் பொழிந்தது. நிறைய பேருக்கு வாழ்வளித்த சாமி எல்லைச் சாமி !!!.
இன்று மோகன் , கார்த்திக், முரளி மற்றும் பல இயக்குனர்கள் கதாசிரியர்கள் இன்னும் பல பேரின் பெயர் இன்னும் நம் நினைவில் இருப்பதற்கு அவரின் இசையே காரணம்.
One of the BEST of A. R. Rahman and VairaMuthu In Raagam.......Karaharapiriya :):)
http://www.youtube.com/watch?v=0xA-oWnJAWA
What a beautiful song !!:):)
உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித் தனியே இரண்டும் ஒரு வழியில் ஓடும் !!!
http://www.youtube.com/watch?v=YGTG9...ature=youtu.be
Thank you for Rahman’s Karaharapriya and Ghibran’s Mukhari! :) Great selections!
படம்: டௌரி கல்யாணம் (1983)
இசை: எம்.எஸ். வி.
பாடகர்கள்: ஜெயச்சந்திரன் & எஸ்.பி. ஷைலஜா
பாக்கலாமா... பேசலாமா...
கொஞ்சலாமா... கெஞ்சலாமா...
http://www.youtube.com/watch?v=nv5om-_zsfM
கொத்தமல்லி பூ வாசம், அத்தை மகன் உன் நேசம்
சுத்துது என்னை வேகமா , மோகமா !!!
என்ன ஒரு அழகான உவமை. கொத்தமல்லியின் வாசம் அவ்வளவு சீக்கிரத்தில் தொட்ட விரல்களை விட்டு போய் விடாது. அது போல அத்தை மகனின் பாசமும் , காதலும். கங்கை அமரன் ஒரு மிக சிறந்த பாடல் ஆசிரியர். அவர் பாடல்கள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கும். பன் முக திறமை கொண்டவர். எதாவது ஒரு துறையில் concentrate பண்ணி இருந்தால் மிகவும் நன்றாக வந்திருப்பார்.
இந்த பாடலில் ஓவ்வரு சரணத்தின் தொடக்கமும் மிக அழகு !
இரண்டாவது சரணத்தின் தொடக்கம் !
பக்கத்தில் நீ வேணும் , கட்டிக் கொள்ளத்தான் வேணும்
தொட்டு தொட்டு எண்ணம் ஓடுது ...தேடுது!
மூன்றாவது சரணத்தின் தொடக்கம்!
வாசமுள்ள பூ முல்லை வாடை பட்டுதான் மெல்ல
வாடுறேன் ரெம்ப நேரமா ஓரமா !!
அருமையான இசை, இனிமையான ஜெயசந்திரன். ஜானகியின் குரல்கள் ....
http://www.youtube.com/watch?v=EQTY7tzNc5g
நான் என்னத்த சொல்ல...அ...அ...அ...அ..!
படம் : மல்லிகை மோகினி
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எப்போது கேட்டாலும் ஒரு EERIE FEELING கொடுக்கும் பாடல்களில் இதற்கு முக்கிய இடம் உண்டு..
What a rendition ? Kudos to SPB....!!
மேகங்களே... இங்கு வாருங்களே...
http://youtu.be/VrV52fUAf7M
From Nalla Thangai
Thuyil Neengi EzhundhiduvaaL....
http://www.youtube.com/watch?v=1eD9bNTPAPM
adhu andha kaalathu poNNu. indha kaalathu poNNai patththi ezhudhunga. idho mudhal vari:
"thuyi neekka ezhundhiduvaan kaNavan......." :lol:
Just for fun ! :)
Unusual, rare, whatever...
சின்னக் கண்ணன் அழைக்கிறான்...
திரைப்படம் : கவிக் குயில் (1977)
வரிகள்: கண்ணதாசன்
இசை : இளையராஜா
ராகம்: ரீதிகௌள
பாடியவர் : பாலமுரளி கிருஷ்ணா & எஸ்.ஜானகி
நடிப்பு: சிவகுமார் & ஸ்ரீதேவி
http://www.youtube.com/watch?v=dg3d0KQ2r5I
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்கு பெருமை
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
Disclaimer: This song has nothing to do with our chinnakkaNNan (CK)! :)
Hi RD..
I love that Disclaimer :P
இது ரொம்ப அன் நியாயம் ஆர் டி :)
ஹாய் மது, poem & சின்னக்கண்ணன்: :)
To quote Madhu from the Relay Songs page, "ஓல்டெல்லாம் கோல்டு".
Here is the proof! :)
Balamurlikrishna singing சின்னக் கண்ணன் அழைக்கிறான்...
at the என்றென்றும் ராஜா show, Chennai...
http://www.youtube.com/watch?v=LLpYjs0kkGg
Another kandhan song from Parthiban Kanavu.
MLV sings for Kumari Kamala:
http://www.youtube.com/watch?v=za4MxqK4ZI4
A song for Madurai origin hubbers ! :)
Madhuraapuri aaLum maharaaNiye.....
http://www.youtube.com/watch?v=6skgHLTbqDY
I love the way she plays the veena. No exaggerated finger movements. ( May be she knows how to play ). The same with Lakshmi in "Janaki devi" song of "samsaram athu minsaram". Ivangalukku ellam veenai vaasika theriyum enru thonrugiradhu.
Just for Fun !
மிக அழகான மனோரமா தன் குரலில் " போகாதே போகாதே என் கணவா "
எட்டு பேர் உன்னை வந்து பிடிக்க கண்டேன் -அதில்
ஏழு பேர் பெண்களாய் இருக்க கண்டேன் ...................:):)
https://www.youtube.com/watch?v=UeNc...ature=youtu.be
இதுவும் ஜஸ்ட் ஃபார் ஃபன்...
கோவில்பட்டி கொலையை உரைத்தாயோ - அதை
கோட்டூர் எனத் திருத்த மறந்தாயோ
வாசல் வழியில் ஒரு மீசை மனிதன் வந்து
வா என அழைத்ததைக் கேட்டாயோ...
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ?
படம் : அனுபவம் புதுமை
http://youtu.be/M_hhcnKQvlc
Very nice one, I simply love Manorama, a multitalented women.
உன் ராதையை பார் போதையிலே" நல்ல பாட்டு
Sri Valli was a hit movie of the 40s. The songs were popular too.
Sindhai Arindhu Vaadi Selva Kumaran Sendhur......
http://www.youtube.com/watch?v=hdapDql4EMM
A song for those who lived close to Thiruchendur ! :)
பாட அறியேன் உன் தாளைப்
பணியும் பக்தி நெறிதனிலே
கூட அறியேன் தீராத குறைகள்
யாவும் தீரும்வழி தேட அறியேன்
திகைக்கின்றேன் சித்தம் இரங்கி
அருளாயோ வேடர் மகளை மணம்
புரிந்த வேலா தணிகை மேலானே.
அந்தரப் பல்லியம் கறங்க, திண் காழ்
வயிர் எழுந்து இசைப்ப, வால் வளை ஞரல,
உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ,
விசும்பு ஆறு ஆக விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே! அதாஅன்று
பாடல்: திருமுருகாற்றுப்படை
திருச்சீர் அலைவாய்
= அலைகள், வந்து வந்து வாய் அலைக்கும் திருச்செந்தில் மணவாளா!
= பட்டேன் படாத துயரம்… என் மரணம் இங்கே அமையட்டும்!
= செந்தூர்க் காதலன் கருவறையில், பிரிவின்றிப், படியாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே!
= செந்தூர் முருகா சேர்த்துக்கொள்!
பாடல்: "நான் ஏரிக்கரை மேலிருந்து..."
திரைப்படம்: சின்னத்தாயி (1992)
இசை: இளையராஜா
Version #1 (Duet): கே.ஜே.யேசுதாஸ், ஸ்வர்ணலதா & குழு
http://www.youtube.com/watch?v=QTivrMBNtFQ
Version #2 (Solo): இளையராஜா
http://www.youtube.com/watch?v=PSKzIpUtHGM
மெய்க்கே அணியும் பணியே என்பே முடிமேல் கிடந்த
கொக்கே வெண்கூன் பிறையே அரை சேர்ந்த கொடும் புலியே
அக்கே உமக்குக் கிடைத்த உபாயங்களாம் எமக்கும்
சொக்கேசர் பாதத்தைக் கிட்டும் உபாயத்தைச் சொல்லுங்களே.
சிவபெருமான் உடலில் அணியும் பாம்பே , கழுத்தில் அணிந்துள்ள எலும்பு மாலையே , முடிமேல் இருக்கின்ற கொக்கின் இறகே , வெண்மையான வளைந்த பிறைச் சந்திரனே , சிவனின் இடையில் அணிந்திருக்கும் புலித்தோலே , ருத்திராட்ச மணிகளால் ஆன மாலையே ! உங்களுக்கு அவர் உடம்பில் இடம் கிடைத்த தந்திரங்கள் வியக்க வைக்கின்றன.. எங்களுக்கும் சொக்கநாதரின் அடியை அடையும் வித்தைகளை சொல்லிக் கொடுங்கள்..