ரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-சா
ரஜினி படத்தில் வாய்ப்புக் கிடைத்தால், எந்த நிமிடமும் நடிக்க ரெடி என்று அறிவித்துள்ளார் பிரபல பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவால்.
ஹரியானாவைச் சேர்ந்தவர் சாய்னா. இந்தியாவின் புகழ்பெற்ற பாட்மின்டன் வீராங்கனையாகத் திகழ்பவர். கேல்ரத்னா விருது பெற்றவர்.
இப்போது நிறைய விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
"உண்மையாகவே சினிமாவில் நடிக்க ஆர்வம்தான். ஆனால் சும்மா வந்தோம் போனோம் என்று இருக்கக் கூடாது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்குமா சொல்லுங்கள்... இப்போதே, ஒப்பந்தத்தில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்திட நான் ரெடி. அவர் படத்தில் நடிக்க எந்தப் பெண்தான் மாட்டேன் என்பாள்!
அவரைப் போன்ற சாதனையாளர் படத்தில் நடித்தால்தான் நமக்குப் பெருமை. இந்த வயதிலும் அவர் தோற்றம், சுறுசுறுப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. அவரது மாஸ் படங்களை பார்க்கும்போது, நமக்குள் புதிய உற்சாகம் வந்துவிடுகிறது," என்றார்.
http://thatstamil.oneindia.in/movies...i-aid0136.html
ராணாவுக்குப் பிறகு எந்திரன் -2...
ராணாவுக்குப் பிறகு சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாகத் தயாராகிறது. இந்தத் தகவலை படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்னவேலு தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பெரும் வசூலைக் குவித்த இந்தியப்படம் என்ற பெருமையைப் பெற்றது ரஜினியின் எந்திரன்.
இந்தப் படம் இந்தியாவில் மட்டும் ரூ 400 கோடிகளைக் குவித்தது. அடுத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராணாவில் நடிக்க தயாராகி வருகிறார் ரஜினி.
இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஹேமமாலினி, தீபிகா படுகோன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. ஏப்ரல் மாதல் தொடங்கி, தொடர்ந்து ஓராண்டுள் இந்தப் படப்பிடிப்பு நடக்கிறது.
இந்த நிலையில், ராணா முடிந்தபிறகு, ரஜினி - சன் பிக்ஸர்ஸ் மீண்டும் இணைவதாக ஒளிப்பதிவாளர் ரத்னவேலு கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆனந்த விகடன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "எந்திரன் -2 குறித்த பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. ஷங்கர் சார் '3 இடியட்ஸ் முடிச்சிட்டு வரணும். நாங்க 'ராணா முடிக்கணும். எல்லாம் முடிஞ்சதும் 'ரோபோ-2 தொடங்கும்னு நினைக்கிறேன். ரஜினி, ஷங்கர், சன் டி.வி, ரஹ்மான் அப்புறம் நான். அனேகமா, அதே டீமாக இருக்கலாம். ஷங்கர் ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கார்..." என்று கூறியுள்ளார் ரத்னவேலு.