டியர் ராகவேந்திரன் சார், தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த ஜஸ்டிஸ் கோபிநாத் விளம்பரங்கள் உண்மையிலேயே அதற்குத் தகுதியான பொக்கிஷம்தான் - நன்றி.
Printable View
டியர் ராகவேந்திரன் சார், தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த ஜஸ்டிஸ் கோபிநாத் விளம்பரங்கள் உண்மையிலேயே அதற்குத் தகுதியான பொக்கிஷம்தான் - நன்றி.
டியர் கார்த்திக் சார், தங்களின் ஜஸ்டிஸ் கோபிநாத் அனுபவங்கள் அருமை. விமர்சனமாக இருந்தாலும், அனுபவப் பதிவாக இருந்தாலும், ஏன் பாராட்டுவதாக இருந்தாலும்கூட அதனை ரசிக்கத்தக்க வகையில் பதிவிடும் தங்களை இதயப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். நன்றி.
டியர் mr_karthik,
எனது தொடர் தேடலில், நமது நடிகர் திலகத்தின் என்னென்ன ஆவணப்பொக்கிஷ விளம்பரங்கள், சாதனைச் செப்பேடுகள் கிடைக்கப்பெறுகின்றதோ அவை அனைத்துமே உடனுக்குடன் இங்கே நமது திரியில் இடுகை செய்யப்படும். ஜூலை 2011 முதல், நமது திரியில் நம் அனைவராலும் மிகமிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நமது நடிகர் திலகத்தின் ரிலீஸ் மேளாவில், இதுவரை என்னென்ன சாதனைப் பொன்னேடுகள், விளம்பரப் பொக்கிஷங்கள் அளிக்கப்பட்டுள்ளதோ அவை தவிர, அந்த சமயத்தில் இடுகை செய்யப்படாத (தற்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள இன்னும் சில) ஆவணப்பொக்கிஷங்கள், ஒவ்வொன்றாக இனி இங்கே வெளியிடப்படும்.
நமது நடிகர் திலகம் நடித்துள்ள 306 திரைக்காவியங்களில், அவருக்கு வெள்ளிவிழாக் கொண்டாடியவை 22 காவியங்கள். இதுகுறித்த விரிவான புள்ளிவிவரங்களை ஏற்கனவே நான், இத்திரியின் முந்தைய பாகங்களில் எழுதிய பதிவுகளில் வழங்கியுள்ளேன். இந்த 22 வெள்ளிவிழாக்காவியங்களில், 16 காவியங்களின் வெள்ளிவிழா விளம்பரங்கள் கைவசம் உள்ளன. இதுவரையில் இங்கே 7 காவியங்களின் [பாசமலர், திருவிளையாடல், வசந்த மாளிகை, பைலட் பிரேம்நாத், திரிசூலம், முதல் மரியாதை, தேவர் மகன்] வெள்ளிவிழா விளம்பரங்கள் அளிக்கப்பட்டுவிட்டன. மீதம் கைவசமுள்ள வெள்ளிவிழா விளம்பரங்களும், அதே சமயம் இனி கிடைக்கப் பெறுகின்ற வெள்ளிவிழா விளம்பரங்களும் அந்தந்த காவியங்களின் ரிலீஸ் மேளா மாதத்தில் அவசியம் வெளியிடப்படும். இதுதவிர, ஏனைய 100வது நாள் உள்ளிட்ட சாதனை விளம்பரங்களும் அந்தந்த சமயங்களில் பதிவிடப்படும்.
'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பதே நமது தாரகமந்திரம் !
[இன்னும் கிடைக்க வேண்டிய அந்த ஆறு வெள்ளிவிழாக் காவிய விளம்பரங்கள் : பராசக்தி, பாகப்பிரிவினை, தர்த்தி(ஹிந்தி), தீர்ப்பு, நீதிபதி, ஸ்கூல் மாஸ்டர்(கன்னடம்)].
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
"நீதி" பதிவைப் பாராட்டும்முகமாக, தாங்கள் "நீதி" காவியத்தின் புளியமரக்காட்சி பாணியிலேயே பதிவை அளித்து பாராட்டியிருந்தது அப்படியே என்னை மெய்சிலிர்க்கச் செய்துவிட்டது. இரவில், [மோகினிப்பிசாசு இருக்கும்] புளியமரத்தடியில், அம்மரத்தை வெட்டுவதற்காக கையில் கோடாரியுடன் காத்திருக்கும் நமது நடிகர் திலகத்துடன், கலைச்செல்வி செல்லமாக அளவளாவும் அந்தக் காட்சியையும் தங்கள் பாராட்டுப்பதிவின்மூலம் கண்முன் நிறுத்திவிட்டீர்கள் !
என்னைத் திக்குமுக்காட வைக்கும் இதுபோன்ற பாராட்டுதல்களுக்கு, நான் எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் அவை, தாங்கள் வழங்கிய பாராட்டுக்களை விட குறைவாகத்தான் இருக்குமே ! எனினும், தங்களுக்கு எனது எண்ணிலடங்கா நன்றிகள் !
அன்பு கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
உங்கள் பம்மலார்.
Demi-God's December Delicacies
மனிதரில் மாணிக்கம்
[7.12.1973 - 7.12.2011] : 39வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 7.12.1973
http://i1110.photobucket.com/albums/...GEDC5277-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
Demi-God's December Delicacies
வெற்றிக்கு ஒருவன்
[8.12.1979 - 8.12.2011] : 33வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 8.12.1979
http://i1110.photobucket.com/albums/...alaar/VO-1.jpg
அட்டைப்படம் : பேசும் படம் : டிசம்பர் 1979
http://i1110.photobucket.com/albums/...laar/VO1-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
Demi-God's December Delicacies
எதிர்பாராதது
[9.12.1954 - 9.12.2011] : 58வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 6.12.1954
http://i1110.photobucket.com/albums/...alaar/E1-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...alaar/E2-1.jpg
51வது நாள் விளம்பரம் : The Hindu : 28.1.1955
http://i1110.photobucket.com/albums/...laar/E51-1.jpg
மிக அரிய நிழற்படம் : தமிழ் சினிமா : 15.12.1954
['தமிழ் சினிமா', மாதமிருமுறை வெளிவந்த சினிமா செய்தித்தாள்]
http://i1110.photobucket.com/albums/...alaar/E3-1.jpg
குறிப்பு:
சிறப்பான வெற்றியைப் பெற்ற "எதிர்பாராதது", திருச்சி 'ஸ்டார்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது.
அன்புடன்,
பம்மலார்.
16.12.2011 வெள்ளி முதல், மதுரை 'ஸ்ரீமீனாக்ஷி' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளில், நமது சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்" வெற்றிநடைபோட்டு வருகிறது.
இனிய தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
எதிர்பாராதது [9.12.1954 - 9.12.2011] 58வது வருட ஆரம்ப நாள்
http://i1087.photobucket.com/albums/...n31355/7-6.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/1-13.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-14.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-11.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/4-7.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/5-9.jpg
"சிற்பி செதுக்காத பொற்சிலையே"... காலத்தால் அழிக்க முடியாத இனிய காவியத்தின் இன்ப கானம். (வீடியோ வடிவில்)
http://www.youtube.com/watch?feature...&v=Opv1Gdu4MZQ
'எதிர்பாராதது' காவியத்தில் ஏ.எம்.ராஜா, ஜிக்கி இருவரின் மனதை உருக்கும் குரல்வளத்தில் உருவான அற்புதமான பாடலான "காதல் வாழ்வில் நானே... கனியாத காயாகிப் போனேன்" பாடல் மற்றும் இதர பாடல்களுக்கு லிங்க் கீழே.
http://www.inbaminge.com/t/e/Edhirpaarthadhu/
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு பம்மலார் சார்,
கோடியில் ஒருவரின் 'வெற்றிக்கு ஒருவன்' மற்றும் 'எதிர்பாராதது' படங்களுக்காக தாங்கள் அளித்துள்ள ஆவணங்கள் நாங்கள் மேலும் உங்களிடமிருந்து இதுபோன்ற அற்புத ஆவணங்களை எதிர்பார்க்க வைக்கின்றன. நாங்கள் எதிர்பார்க்கும் அத்தனை ஆவணங்களையும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தாங்கள் அளித்து வருவது தங்களது தயாள குணத்தைக் காட்டுகிறது. அற்புத பதிவிற்கு அசுர நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் உயரிய பாராட்டிற்கு உள்ளம் கனிந்த நன்றிகள். தங்கள் சபரிமலைப் பயணம் இனிதே நடந்து முடிந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்,
வாசுதேவன்.
பிற மொழிகளில் 'எதிர்பாராதது'
http://i1087.photobucket.com/albums/...31355/1-12.jpg
அற்புதமான புதுமைப் படைப்பான ஸ்ரீதர் அவர்களின் 'எதிர்பாராதது' காவியம் மாபெரும் வெற்றி அடைந்ததோடல்லாமல் 'நித்யகன்யக' என்ற பெயரில் மலையாளத்தில் எடுக்கப்பட்டு 1963 இல் வெளியானது. நடிகர் திலகத்தின் பாத்திரத்தை சத்யனும், பத்மினியின் பாத்திரத்தை ராகினியும் (பத்மினியின் தங்கை), நாகையா அவர்களின் பாத்திரத்தை நடிகர் திலகத்தின் அருமை நண்பரான 'திக்குரிசி' சுகுமாரன் நாயர் அவர்களும் ஏற்று நடித்திருந்தனர்.
http://www.hindu.com/mp/2010/06/14/i...1451300401.jpg
தெலுங்கில் ‘Ilavelpu' என்ற பெயரில் வெளிவந்தது. பிரதான ரோல்களில் நாகேஸ்வரராவும், அஞ்சலி தேவியும் நடித்திருந்தார்கள். இயக்குனர் யோகானந்த் இயக்கியிருந்தார். 1956-இல் இப்படம் வெளிவந்தது.
'எதிர்பாராதது' இந்தியிலும் எடுக்கப்பட்டது. 'சாரதா' என்ற பெயரில் இயக்குனர் திரு.எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 1957-இல் வெளிவந்த இப்படத்தில் ராஜ்கபூரும், மீனாகுமாரியும் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்.
http://img694.imageshack.us/img694/3820/sharda1957.jpg
மேற்கண்ட மொழிகளில் 'எதிர்பாராதது' எடுக்கப்பட்டு அத்தனை மொழிகளிலும் வெற்றிகண்டது குறிப்பிடத்தக்கது.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள பம்மலார் சார்,
1954-ம் ஆண்டில் வெளியான 'எதிர்பாராதது' திரைப்பட பொக்கிஷப்பதிவுகள் அனைத்தும் அருமை. நீங்கள் பிறப்பதற்கு பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த ஆவணங்களை நீங்கள் சேகரித்து வழங்குவதைப்பார்க்கும்போது, பண்டைய இலக்கிய நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்தவற்றைத் தேடித்தொகுத்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் அவர்களின் தொண்டே நினைவுக்கு வருகின்றது.
அவர் செய்தது தமிழன்னைக்குச்செய்த திருத்தொண்டு. நீங்கள் செய்து வருவது ஈடில்லா தமிழ்க்கலைஞன் நடிகர்திலகத்துக்கு செய்து வரும் திருத்தொண்டு. இரண்டிலுமே உயர்ந்து நிற்பது தியாகமும், சேவையுமே. உலகெங்கிலும் வாழும் நடிகர்திலகத்தின் ரசிகக்கண்மணிகள் மனம் மகிழ வேண்டுமென்பதற்காக தங்களை வருத்திக்கொண்டு நீங்கள் செய்து வரும் சேவைக்கு ஈடு இணையே இல்லை. அந்த வரிசையில் ஒரு மைல்கல் கல்தான் இந்த 'எதிர்பாராதது' விளம்பரப்பொக்கிஷங்களும், அபூர்வ நிழற்படமும்.
இயக்குனர் ஸ்ரீதரின் எழுத்தோவியத்தில் உருவான இவ்வரிய காவியம், பின்னர் பல்வேறு மொழிகளிலும் தயாராகி பெருவெற்றி கண்ட விவரங்களை நமது வாசுதேவன் சார் அருமையாக எடுத்தியம்பியுள்ளார்.
அப்போதைய நிகழ்வுகளை அறிய இத்தகைய ஆவணங்கள் எவ்வளவு பேருதவியாக இருக்கின்ற என்பதற்கு ஒரு உதாரணம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள திரையரங்குகளின் வரிசை. சென்னையில் மட்டும் 5 திரையரங்குகளின் வெளியானது மட்டுமல்ல, ஒரே ஏரியாவிலுள்ள இரண்டிரண்டு தியேட்டர்களில் வெளியாகியிருப்பதுதான். சித்ராவும் காமதேனுவும் ஒரே ஏரியா அரங்குகள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ஏராளமான படங்கள் வெளியாகும்போது, அண்ணாசாலைப்பகுதியில் தியேட்டர் கிடைக்காதபோது மட்டுமே காமதேனுவில் புதிய படம் வெளியிடப்படும். அப்படி காமதேனுவில் வெளியாகும் படம், அண்ணாசாலை தியேட்டர்களில் வெளியிடப்படாது. ஆனால் 'எதிர்பாராதது' சித்ரா, காமதேனு இரண்டு அரங்குகளிலுமே புதிய வெளியீடாக வெளியாகியுள்ளது.
அதுபோல வடசென்னைப்பகுதியில் பிராட்வே அரங்கும், பாரத் அரங்கும் நடந்து செல்லும் தூரத்திலேயே உள்ளன. (1972-ல் ஒரு ரம்ஜான் தினத்தன்று பிராட்வேயில் 'தங்கதுரை' படத்துக்கு டிக்கட் கிடைக்காமல், நாங்கள் ஐந்தாறு பள்ளி மாணவர்கள் நடந்தே போய் 'பாரத்'தில் ஓடிக்கொண்டிருந்த படத்தைப் பார்த்தோம்). ஆனால் அவ்வளவு அருகருகே உள்ள இரண்டு தியேட்டர்களிலும் 'எதிர்பாராதது' வெளியாகி அசத்தியிருக்கிறது. இவையெல்லாம் தங்களின் ஆவணப்பொக்கிஷங்கள் மூலம் மட்டுமே அறிய சாத்தியமாகிறது.
அதற்காக எங்கள் அனைவரின் நன்றிகளையும் தெரிவிப்பதுடன், தன்னலமற்ற தங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம். ராமஜெயம் சார் சொன்னதுபோல, தங்களைப்போன்ற தூய ரசிகக்கண்மணிகள் எந்த ஒரு கலைஞருக்கும் கிடைக்கமாட்டார்கள் என்பது உண்மை.
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
தங்களது எதிர்பாராதது ஆவண பொக்கிஷங்கள் நாங்கள் எதிர்பாராதது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், கண்டிப்பாக அவைகள் தங்களால் பதிவிடப்படும் என்பது தெரிந்தது தான். மிக்க நன்றிகள். நீதி திரைப்பட ஆவண பொக்கிஷங்கள் மிகவும் அருமை. குறிப்பாக, குமுதம் விமர்சனம் நான் படிக்காத ஒன்று (குமுதத்தில் வேலை செய்தும் கூட!).
மறுபடியும் நன்றிகள்.
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
பம்மலார் எதிர்பாராதது படத்தைப் பதிந்தவுடன், அந்தப் படங்களின் பிரத்தியேக ஸ்டில்களையும் பாடல்களையும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. அந்தப் படத்தில் வரும், "சிற்பி செதுக்காத பொற்சிலையே" பாடல் காலத்தால் அழிக்க முடியாத அற்புதப் பாடல். ஏ.எம்.ராஜா அவர்களும் நடிகர் திலகத்திற்கு சிறந்த பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது இந்தத் தலைமுறையில் எத்தனை பேருக்குத் தெரியும். 1952-இல் துவங்கி, 60 வரை, சி.எஸ்.ஜெயராமனும் ஏ.எம்.ராஜாவும் நடிகர் திலகத்திற்கு பல ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அதாவது, எந்தப் பின்னணிப் பாடகருக்கும் ஏற்றவாறு, தன்னுடைய உடல் மொழியை மாற்றிக் கொண்டவர் நம் நடிகர் திலகம் என்பதற்கு இதை விடச் சிறந்த உதாரணம் தேவையில்லை. இன்னும் நிறைய சொல்லலாம். மேலும், எதிர்பாராதது படம் பிற மொழிகளில் வந்தது பற்றிய விவரங்களும் அருமை. அதன் தெலுங்குப் பதிப்பை நான் சிறு வயதில் பார்த்தது நினைவில் இருக்கிறது. ஹிந்தி பார்த்ததில்லை.
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
http://www.sadmuffin.net/cherrybam/g...lations013.gif http://www.sadmuffin.net/cherrybam/g...lations012.gif
நம் அன்பு மாடரேட்டர்கள், அன்பு முரளி சார், மற்றும் அன்பு ராகவேந்திரன் சார் ஆகியோரின் ஆசீர்வதங்களினாலும்,முயற்சிகளாலும் திரி நாயகர் பம்மலார் அவர்களுக்கு முரளி சார் பதிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களோடு இந்தத் திரியின் புதிய பாகம் (Current Discussions) தொடங்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தம். சதா சர்வகாலமும் நடிக தெய்வத்திற்கே தொண்டு செய்வதைக் கடமையாகக் கொண்ட நம் பம்மலாருக்கு நடிகர் திலகத்தின் ஆசிகள் பூரணமாக உண்டு என்பதை இந்நிகழ்வு ஆணித்தரமாக நிரூபணம் செய்கிறது. ஆவணத் திலகத்திற்கு கிடைத்துள்ள பெருமையை எண்ணி மனம் பூரிப்படைகிறது. நடிகர் திலகத்தின் பரிபூரண ஆசிகளோடு அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வாராக என்று நம் அனைவர் சார்பாகவும், நமது திரியின் சார்பாகவும் அவரை நெஞ்சார வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
வாசுதேவன்.
எப்போது படித்தது
எழுதியவர் பார்த்தா
"சிவாஜி .......
இது
மராத்திய மன்னனின் பெயர்
நீ வரும் வரை ---
சிவாஜி
இது
நடிப்பின் மறு பெயர்
நீ வந்த பின்பு ----
21 / 07 /2001 இல் ---
உலகமே ஒன்று திரண்டு வியந்தது !!!
மரணம் மனிதர்களக்கு தானே ;
நடிப்பின் கடவுளுக்குமா என்று ???
உன் தமிழ் பிரவாகத்தில் ;
தடம் புரண்டிருபர்களே
உன்னை படைத்தவர்கள் -
தண்ட வாளங்களுக்கு நடுவே வைத்து
தமிழ் பேசுபவர்களுக்கு மத்தியில் -
தமிழை தமிழாக பெசியவனே ;
எத்தனையோ வேடங்களில்
எங்கள் முன் வாழ்ந்தாய் -
உன்
மரணமும் ஒரு நடிப்பு தானே ?
உண்மை சொல் .............
அன்பு பார்த்த சாரதி சார்,
தங்கள் மனமுவந்த பாராட்டிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
சி.எஸ்.ஜெயராமனும் ஏ.எம்.ராஜாவும் நடிகர் திலகத்திற்கு பின்னணிப் பாடியுள்ளதை பாடல் ஆய்வுச் செம்மலான நீங்கள் நினைவு கூர்வது மிகப் பொருத்தமே!
'எதிர்பாராதது' தெலுங்குப் பதிப்பை நான் பார்த்ததில்லை. இந்திப் பதிப்பான சாரதாவை இன்றுதான் பார்த்தேன். சிற்சில இடங்களில் தமிழிலிருந்து இந்திக்கேற்றவாறு கதையில் மாறுபாடுகளுடன் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது.
அன்புடன்,
வாசுதேவன்
அன்புள்ள பம்மலார் சார்,
தாங்கள் அளித்துள்ள 'வெற்றிக்கு ஒருவன்' விளம்பர ஆவணத்தைப்பார்த்ததும், படம் வெளியான கால நினைவுகள் மனதில் அலைமோதுகின்றன. இப்படத்துக்கு முதலில் சூட்டப்பட்டிருந்த பெயர் 'கண்ணே கண்மனியே'. இப்படத்தின் தலைப்பு ஏற்கெனவே வெளியான நடிகர்திலகத்தின் 'அன்பே ஆருயிரே' படத்தை நினைவூட்டியதாக நமது திரியிலேயே முன்னர் தெரிவித்திருந்தனர். படம் ஓட்டத்திலும் அப்படியே ஆகும் என்பது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று.
நடிகர்திலகத்தின் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது, அன்றைக்கு காலைக்காட்சி ஸ்பெஷல் காட்சியாக, தலைமை ரசிகர்மன்ற நிதிக்காக நடத்தப்படுவது வழக்கம். அதற்கு கட்டணம் சற்று அதிகம். வெற்றிக்கு ஒருவனுக்கும் அதுபோன்ற சிறப்புக்காட்சி, சேத்துப்பட்டு ஈகா திரையரங்கில் டிசம்பர் 9 அன்று காலை நடத்தப்பட்டது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் வந்து கூடியிருந்தனர்.
நான் வாழவைப்பேன் சித்ராவில் 70 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, தீபாவளிக்கு சாந்தியில் பட்டாக்கத்தி பைரவன் வெளியானது. பட்டாக்கத்தி ஓடிக்கொண்டிருக்கும்போதே நான் வாழ வைப்பேன் 100 நாட்களைக்கடந்து ஓடி, நவம்பர் இறுதியில் சித்ராவிலிருந்து எடுக்கப்பட்ட பின், பட்டாக்கத்தி பைரவன் சாந்தியில் 51 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள ஸ்டார் தியேட்டரில் 'வெற்றிக்கு ஒருவன்' வெளியானது.
ஏற்கெனவே எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாச்சலம், இளையராஜா, பாபு கூட்டணி நடிகர்திலகத்தோடு இணைந்து தந்திருந்த 'கவரிமான்' தரமான படமாக இருந்தும் ஓட்டத்தில் சுமார் நிலையையே எட்டியது. அதற்கு திரிசூலம் சுனாமி காரணமாக இருந்திருக்கலாம். அந்த காம்பினேஷனில் வெளிவரும் இரண்டாவது படமென்பதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. (படம் பார்த்தபின் இக்கூட்டணியின் மீது இருந்த நம்பிக்கை தளர்ந்து போனது தனி). ஆனால் இதற்கு அடுத்த படமாக இதே காம்பினேஷனில் வெளிவந்த 'ரிஷிமூலம்' சென்னை மற்றும் மதுரையில் நான்கு அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து வெற்றியடைந்தது.
சிறப்புக்காட்சிக்காக ஈகாவில் கூடியிருந்த ரசிகர் கூட்டம் ஆரம்பத்தில் மிகுந்த ஆரவாரத்துடன் படம் பார்க்கத்துவங்கியது. ஆனால் படத்துவக்கத்தில் நடிகர்திலகம் ரொம்பவே கோழையாக, பயந்த சுபாவமுள்ளவராகக் காண்பிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் சிறிது அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் தந்தையின் மரணக்காட்சியில், தன் கண்முன்னேயே அவர் கொலை செய்யப்பட்டு அவரது ரத்தம் கார் கண்ணாடியின் மீது தெறிக்கும் காட்சியை திரும்பத்திரும்ப நினைத்துப்பார்க்கும் அவருக்குள் ஒரு வேகமும் தைரியமும், பழிவாங்கும் எண்ணமும் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுப்பதை நன்றாக சித்தரிந்தார் இயக்குனர் எஸ்.பி.எமுத்துராமன். நடிகர்திலகமும் அதை உணர்ந்து பெர்ஃபாமென்ஸில் கலக்கியிருந்தார்.
ஒளிப்பதிவாளர் பாபுவின் ஒளிப்பதிவு ஒரு இடத்தில் சிறப்பாக அமைந்தது. நடிகர்திலகத்தின் தந்தையைக்கொல்வதற்காக, மோகன்பாபு கையில் துப்பாக்கியுடன் எதிரேயிருக்கும் உயரமான அடுக்குமாடி கட்டிடத்தில் மாடிப்படியில் ஏறும்போது, கேமராவும் அவர் கால்களை மட்டும் காண்பித்தவாறு கூடவே மாடிப்படியில் போய்க்கொண்டேயிருக்கும். நீளமாக எடுக்கப்பட்ட இக்காட்சி எவ்வித வெட்டல், ஒட்டல் இன்றி ஒரே ஷாட்டாக எடுக்கப்பட்டிருக்கும்.
நம்பியார், ஸ்ரீபிரியா, ஒய்.ஜி.பார்த்தசாரதி போன்ற திறமையான நடிகர்கள் இருந்தும் திரைக்கதை சரியில்லாததால் படம் உற்சாகமளிக்கவில்லை. இப்படத்திலும் ஜஸ்டினுடன் ஒரு சண்டைக்காட்சி இருந்தது. படம் துவங்கும்போது ரசிகர்களுக்கிருந்த ஆர்வம் முடியும்போது இல்லை. இருப்பினும் மாலைக்காட்சியின்போது ஸ்டார் தியேட்டர் முன்பு கூடினோம். காலையில் ஏற்பட்ட ஏமாற்றத்தை ரசிகர்கள் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும் ஓப்பனிங் கொண்ட்டாட்டங்கள் வழக்கம்போல கிராண்ட்டாக இருந்தன. அதில் ஒன்றும் குறை வைக்கவில்லை.
But, even with this un-happy result, the movie has crossed 50 days.
'வெற்றிக்கு ஒருவன்' படம் தியேட்டர்களில் மறு வெளியீடுகளில் அவ்வளவாக வலம் வரவில்லையென்று நினைக்கிறேன். அதுபற்றி கூடுதல் விவரம் தெரிந்தவர்கள் தெரிவியுங்கள்.
டியர் வாசுதேவன் சார்,
"எதிர்பாராதது" பதிவு தங்களிடமிருந்து எதிர்பார்த்ததுதான் ! வழக்கம் போல் அசததல் !
'பிறமொழிகளில் எதிர்பாராதது' பதிவு அட்டகாசம் !
அதியற்புத மனம் படைத்த தங்களின் உயர்ந்த உள்ளத்திலிருந்து, வான்மழை போலக் கொட்டும் பாராட்டுமழைக்கும், தங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுக்கும் எனது இதயபூர்வமான எண்ணிலடங்கா நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள் !
"நீதி", 'குமுதம்' விமர்சனததை தாங்கள் படித்து களிப்புற்றது என் பாக்கியம் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
'தமிழ்த்தாத்தா' உ.வே.சா. போன்ற மாபெரும் தமிழ் மூதாதையர்களின், மூதறிஞர்களின் பெரும் திருத்தொண்டுடன் இந்த எளியேனின் சிறுதொண்டினை ஒப்பிடும் தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கு எனது உயர்வான நன்றிகள் ! அவர்கள் எங்கே, இந்த எளியவன் எங்கே ! எனினும், தூய்மையே உருவான தங்களின் பெருந்தன்மை நிறைந்த இதயத்திலிருந்து தாங்கள் வழங்கும் உச்சமான பாராட்டுக்களை ஏற்றுக்கொள்வதே பண்பு, மரபு என்பதன் அடிப்படையில் தங்களது இந்த இணையில்லாப் பாராட்டுதல்களை சிரமேற்கொள்கிறேன். தங்களுக்கு எனது இருகரம் கூப்பிய, சிரந்தாழ்த்திய பணிவான பலகோடி நன்றிகள் !
"எதிர்பாராதது" பதிவில் தாங்கள் அளித்த அரிய விவரங்களுக்கும் அற்புத நன்றிகள் !
அன்பு கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
என்றும் உங்கள் பம்மலார்.
டியர் mr_karthik,
"வெற்றிக்கு ஒருவன்" மினி ஆய்வுடன் கூடிய நினைவலைகள் மிக அருமை ! அதென்னமோ தெரியவில்லை, தாங்கள் மலரும் நினைவுகளில் மூழ்கும்போது எங்களையெல்லாம் அந்தக்காலகட்டத்திற்கே அழைத்து சென்றுவிடுகிறீர்கள் ! அது தங்களுக்கு கைவந்தகலை, இக்கலை எல்லோருக்கும் வாய்க்காது.
தாங்கள் "கண்ணே கண்மணியே", "வெற்றிக்கு ஒருவன்" ஆன தகவலைத் தெரிவித்ததும் என் நினைவில் சட்டென்று உதித்தவை:
- "வயது பதினாறு ஜாக்கிரதை", "காலமெல்லாம் காத்திருப்பேன்" என்று மாறி கடைசியில் "ஊட்டி வரை உறவு" என்ற உன்னதப் பெயரைப் பெற்றது.
- "தெய்வமகன்" திரைக்காவியத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் "உயிரோவியம்".
- "சாப்பாட்டு ராமன்", "ராமன் எத்தனை ராமனடி" ஆனார்.
- "ஹீரோ 72", "வைர நெஞ்சம்" என மாற்றப்பட்டது.
- "திசைகள் திரும்பும்", "ரிஷிமூலம்" என்று ஆனது.
இன்னும் இதுபோன்ற பெயர்மாற்றங்களை உள்ளடக்கி ஒரு பட்டியல் போடலாம்.['சிந்தனைச் சிற்பி'யான வாசு சார் இதுகுறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டது மனக்கண்ணில் தெரிகிறது.]
பெருவெற்றிக்காவியமான "ரிஷிமூலம்", சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று அரங்குகளில் மட்டும் 100 நாட்களைக் கடந்தது. மதுரையில் இக்காவியம் 'சினிப்ரியா' அரங்கில் 62 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
தங்களின் இந்த அதிரடி அசத்தல் பதிவுக்கு எனது பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் பாலா சார்,
கவிதைக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
அன்பு கார்த்திக் சார்,
தங்களின் 'வெற்றிக்கு ஒருவன்' பற்றிய பதிவு very interesting. நாங்கள் கடலூரில் ரசிகர் மன்ற ஷோ ரிலீசன்று காலைக்காட்சி பாடலி தியேட்டரில் ஏக ரகளையோடு இப்படத்தைப் பார்த்ததை நினைவு படுத்தி விட்டீர்கள். உங்களுக்கு இருந்த அதே மனநிலைதான் கொஞ்சமும் மாறாமல் அப்படியே எங்களுக்கு இருந்தது. 'கண்ணே கண்மணியே' என்ற பெயரில் பேசும்படம் பத்திரிக்கையில் முதன் முதல் தலைவர் ஸ்ரீப்ரியாவுடன் பயந்தாற்போல் நிற்கும் ஸ்டில் வெளிவந்தது நினைவிருக்கிறது.
தந்தை மேஜருடன் A certificate படம் பார்ப்பது, சாப்பாடு சாப்பிடும்போது 'முட்டையில் முள்ளு' என்று சொல்வது, நீங்கள் குறிப்பிட்டது போல இடைவேளை வரை அவரை மகா கோழையாக சித்தரித்திருந்தது...இவையெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இடைவேளைக்கு பிறகு படம் சூடு பிடித்து கொஞ்சம் தாக்குப் பிடித்ததால் நாங்களும் கொஞ்சம் தாக்குப் பிடித்தோம். எல்லாமே இருந்தும் எதுவும் இல்லாத படமாகப் போய்விட்டது. அதுமட்டுமில்லாமல் 'வெற்றிக்கு ஒருவன்' என்று சொன்னாலே நம் ரசிகர்கள் உட்பட அனைவரும் சற்று முகம் சுளிப்பது போன்ற ஒரு பெயரை இந்தப்படம் பெற்று விட்டது துரதிருஷ்டம் தான். அந்த அளவுக்கு மோசம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று. டைட்டிலில் தலைவர் குங்பூ,கராத்தே பாணியில் கை,கால்களை அசைத்து ஆக்ரோஷமாக ஓடி ஓடி வருவது போன்ற ஆரம்பக் காட்சியில் தியேட்டர் கூரை பித்துக்கொண்டு போனது நிஜம். 'வெற்றிக்கு ஒருவன்' ரிலீஸ் அன்று தமிழ்நாடு முழுவதும் அன்று நம் ரசிகர்களுக்கு இருந்த மனநிலையை உங்களத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக எழுதி உணர்த்த முடியாது. அதற்காக உங்களுக்கு என் சிறப்பான நன்றிகள்.
குறிப்பு: நடிகர்திலகம் திரி என்பதால் வெறும் நிறைகளை மட்டுமே தூக்கி வைத்துக் கொண்டு ஆடாமல் நம்மிடம் இருக்கும் குறைகளையும் நாம் அனைவரும் அலசுவது சிறந்த நடுநிலைக்கு எடுத்துக்காட்டாகும். இதற்காக நாம் அனைவரும் நிஜமாகவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட நடுநிலையான பதிவுகளை நம் திரியைத் தவிர நான் வேறு எங்கும் பார்த்ததாக நினைவில்லை.
நன்றியுடன்,
வாசுதேவன்.
அன்பு பம்மலார் சார்,
எங்கள் அனைவருடைய உளப்பூர்வமான பாராட்டுக்களை பணிவோடு ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறும் பாங்கு உண்மையாகவே தாங்கள் சிறந்த பண்பாளர்,பணிவாளர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. "நான் எதுவும் செய்யவில்லை" என்று நீங்கள் தன்னடக்கத்துடன் கூறினாலும் நீங்கள் இத்திரிக்காக எதுவும் செய்வீர்கள் என்பது நாங்கள் அனைவரும் அறிந்த ஒன்று. தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் பாலா சார்,
அசத்தல் கவிதை. சூப்பர். பாராட்டுக்கள். ஒரு சிறு வேண்டுகோள். அடிக்கடி காட்சி கொடுங்கள். அப்போதுதான் இப்படிப்பட்ட சிறந்த பதிவுகளை நாங்கள் படித்து இன்புற முடியும். நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
கடந்த செப்டம்பர் மாதம் நடிகர் திலகத்திற்கு கடலூரில் சிலை நிறுவ வேண்டும் என்று கடலூர் நகர சிவாஜி மன்றம் சார்பாக கடலூர் நகரசபை துணைத் தலைவர் திரு.தாமரைச்செல்வன் அவர்கள் மூலம் கடலூர் நகரசபை கூட்டத் தீர்மானத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதற்கான தினத்தந்தி செய்தி.
http://i1087.photobucket.com/albums/...IMG_0001-3.jpg http://i1087.photobucket.com/albums/...IMG_0002-2.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'எதிர்பாராதது' அரிய வரலாற்று ஆவணம்.
'எதிர்பாராதது' 58-ஆவது வருடத் துவக்கத்தை முன்னிட்டு 'தினத்தந்தி' நாளிதழில் (22-3-2005) 'வரலாற்றுச் சுவடுகள்' என்ற தொடரில் 'திரைப்பட வரலாறு' (106) என்ற தலைப்பில் நடிகர் திலகம் புகழ் பாடிய தொடரில் வெளியான 'எதிர்பாராதது' படத்தைப் பற்றி வந்த இந்தக் கட்டுரையைப் பதிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் படித்து இன்புற வேண்டுகிறேன்.
http://i1087.photobucket.com/albums/...an31355/01.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-16.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-12.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு வாசுதேவன் சார், பாராட்டுக்கு நன்றி.
'எதிர்பாராதது' படத்தின் படப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சியின் பத்திரிகை வடிவத்தை அப்படியே பெயர்த்துத் தந்தமைக்கு மிக்க நன்றி. 'அடி வாங்கியவனை விட்டுட்டு அடித்தவங்களுக்கு சிகிச்சை' என்று நடிகர்திலகம் சொல்வது, அவருக்குள்ளே இருக்கும் நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்துகிறது.
கடலூர் நகராட்சியின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றபின் நடிகர்திலகத்தின் சிலை அமைப்பு பற்றி பேசப்பட்டதா, சிலையமைப்புக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறதா?.
அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள். தங்கள் ஊர்களில் ஜாதிப்பெயர்களில் அமைந்த சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்றி தலைவர்களின் பெயர்களைச்சூட்டும்போது, தவறாமல் முக்கியமான சாலையொன்றுக்கு 'நடிகர்திலகம் சிவாஜி' அவர்களின் பெயரைச்சூட்டுங்கள். இது தமிழர்களின் விருப்பம், வேண்டுகோள்.
அன்புள்ள பம்மலார் சார், பாராட்டுக்கு நன்றி.
படங்களின் பெயர்கள் மாற்றம் பற்றி தாங்கள் குறிப்பிட்ட பட்டியலில் மேலும் சில...
'கந்தன் கருணை'யின் முந்தைய பெயர் 'கந்தலீலா'
'பைத்தியக்காரன்' என்று முதலில் பெயரிடப்பட்ட படம்தான் 'எங்கிருந்தோ வந்தாள்' ஆனது (நன்றி, முரளி சார்)
'எங்க வீட்டு தங்க லட்சுமி' பின்னர் 'அண்ணன் ஒரு கோயில்' என்று கொண்டாடினாள்.
ரிஷிமூலம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல். அது முதலில் 'ரிஷிமூலம்' என்ற பெயரில்தான் மேடை நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. பின்னர் படமாக்கத் துவங்கியபோது 'திசைகள் திரும்பும்' என்று பெயர் சூட்டி படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.
இதனிடையே, 'திரிசூலம்' மாபெரும் இமாலய வெற்றி பெற்றதால், தொட்டதற்கெல்லாம் செண்ட்டிமென்ட் பார்க்கும் சினிமா உலகில் ஒரு சபலம் யூனிட்டாருக்கு ஏற்பட்டது. ஓசை நயத்தில் 'திரிசூலம்' என்பது போலவே அமைந்த 'ரிஷிமூலம்' என்ற ஒரிஜினல் பெயரையே சூட்டி விடலாம் என்று விரும்பியதால், ரிஷிமூலம், திசைகள் திரும்புமாகி மீண்டும் ரிஷிமூலமாகவே மாறி வெளியானது.
பெயர் மாற்றங்களில் பல உண்டு. அதில் ஒன்று கொடுத்து வைத்த மகராஜா பின்னர் உத்தமனானது என்று நினைக்கிறேன்.