http://i.ytimg.com/vi/WfHvQGS_z6E/maxresdefault.jpg
Printable View
Shaken but not stirred ...water images!
ஆடா நீரில் ஆடும் பிம்பங்கள்!!
குளத்தங்கரையோரமாக சோகப்பதுமையாக காதலனுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் காதலியின் பிம்பத்தை திறமையான ஒளிப்பதிவாளர் அலைகளால் ஆடும் நீரிலும் ஆடாத பிம்பங்களாகப் படம் பிடிக்க எவ்வளவு பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது ..
கௌரவம் திரைப்படத்தில் ரசனைக்குரிய நீர் பிம்ம்பங்களாக நடிகர்திலகமும் உஷா நந்தினியும்
வாசுபாலா சுசீலா குரல் குழைவில்
https://www.youtube.com/watch?v=ppy75ti0WtA
ஒரு பாடல் காட்சி ஸ்லோ மோஷனில் எடுக்கப் படும்போது கவிதையாகிறது!அதுவே பாஸ்ட் மோஷனில் எடுக்கப்படும்போது காமெடியாகிறது!!
https://www.youtube.com/watch?v=ipjrLKWwJXM
https://www.youtube.com/watch?v=v7MjyWe5ztY
சிலசமயம் கவிதையும் காமெடியும் சேர்ந்து கலக்கினால் நமக்கு ......!
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் ஜெயசுதா ..நடிகர்திலகத்துடன் ரம்மியமான பாடல்...டைட்டிலில் பட்டாக்கத்தியெல்லாம் இருந்தாலும்!!
[url]https://www.youtube.com/watch?v=w-l5vYDIh8U
அப்புறம் செம கிளாமரா சிவக்குமார் நடிச்ச பட்டிக்காட்டு ராஜா //?! :)
மனங்கவர் ம(ன)ரங்கொத்திகள் / Wood Peckers!
https://www.youtube.com/watch?v=9YiNDzAL3P4Quote:
கோட்டு சூட்டு பெல்ட்டு ஷூ டை தொப்பி கறுப்புக் கண்ணாடியெல்லாம் நமது சீதோஷ்ண நிலைக்கு உகந்த உடைத்தானா என்ற கேள்வி எழுந்தாலும் நமது மனங்கவர் மரங்கொத்திகளை அந்த கெட்டப்பில் ஆட்ட பாட்டங்களுடன் பார்க்கும் போது சந்தோஷமே!
https://www.youtube.com/watch?v=hfMBIAuJmY0
சி.செ.. ஆறு மனமே ஆறு பாடலைச் சொல்லி ஆண்டவன் கட்டளை பட நினைவுகளைத்தூண்டி விட்டு விட்டீர்கள்..
எனில் இது பற்றி முன்பெழுதியிருந்த இரு பதிவுகள்..(துன்பம் னுல்லாம் சொல்லப்படாது :) )
மீள்பதிவு..1
*****
அவர் வெளி நாடுகளில் எல்லாம் சென்று மெத்தப் படித்தவர்..கல்லூரியில் டிபார்மெண்டல் ஹெட்.. சுயக்கட்டுப்பாடு, ஒழுக்கம் நேரம் தவறாமை தொழில் பக்தி கொண்ட பேராசிரியர்.. ஆண் பெண் இணைந்து படிப்பது அபூர்வமாக இருந்த அந்தக் கால கட்டத்தில் அப்படி இருந்த ஒரு் கல்லூரியில் வேலை பார்ப்பவர்..
சீரிய நீரோடை போல இருந்த அவர் வாழ்வில், கறந்த பாலைப் போலத் தூய்மையான உள்ளம் படைத்த அவர் மனதில் - கலக்கம் வருகிறது.காரணம்.. பெண்..
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள
ஐம்புலன்களும் ஒரு கொடிபோன்ற மெல்லியலாள் ஆன பெண்ணிடம் உள்ளது என்று திருவள்ளுவரும்
மாயத்தைச் செய்திடுவாள் மங்கையும் ஆடவரின்
காயத்தின் உள்ளேதான் காண்
என வேறு பெரியவர்களும் (ம்க்கும்) எழுதியதை அவர் அறிந்தவர் தான். இருந்தும் என்ன.
ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய்
என்ன தேடுகிறாய் எங்கே ஓடுகிறாய்
உன் தேவைகளை ஏன் மூடுகிறாயு
எனக் கேட்கிறாள் அவர் மனதைக் கலைத்த மாயக்காரி...
ப்ரொபசர் குழம்புகிறார்..கொந்தளிக்கிறார். ஏன் ஏன் ஏன் எனக்கு இப்படி ஆகிறது.கட்டுக் கோப்பு நிறைந்த
வாழ்க்கை அல்லவா நான் வாழ்வது.அவள் யார். என் மாணவி. நான் அவளை வேறு கண் கொண்டு பார்க்கலாகுமா
தவறல்லவா..
அதற்கும் அவளே பதில் தருகிறாள்.
ஒரு மொழியறியாத பறவைகளும் இந்த வழியறியும் இந்த உறவறியும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை..
அசடே.. நீ என்ன படித்தால் என்னா. இளமைப் பருவத்தில் தான் இணையுடன் இருக்க வேண்டும்.இன்ப வாழ்க்கை வாழ வேண்டும் அதில் ஒன்றும் தவறில்லை.தப்பொன்றுமில்லையடா
இருந்தும் ஏக மனப் போராட்டத்திற்கப்புறம் மனதில் மீண்டும் மீண்டும் அவளது உருவம் மனதில் எழுந்து காதல் உணர்வு ஆக்கிரமிக்க. அவளும் தேடி வருகிறாள்.அவளுக்கும் அதே அவரை மறக்க இயலாத நிலைமை.
காதல் பூத்து மணம்பரப்பி வீசுகின்ற பொழுதில்..உலகம் வேறு விதமாய்ப் பார்க்கிறது.
அவர் இது வரை கடைப்பிடித்த ஒழுக்கம் எல்லாம் ச்சும்மா டுபாக்கூர் போங்கு எனச் சொல்கையில்
காதலரிருவருக்கும் குழப்பம்.காதலைத் துறக்க வேண்டுமா
முகம் உதடு உடல் மனம் இருவருக்கும் துடிக்கிறது. ப்ரொபசர் காதலியின் செந்தாமரை முகத்தைத் தொட்டு பட்டுக் கன்னங்களைப் பிடித்துக் கேட்கிறார் - காதல்னா தானே திட்டறாங்க. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா.
கபகபவெனப் பசிக்கையில் எதுவும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு பலவித காய்கறிகள் கூட்டு சாம்பார் பொரியல் அவியல் என நள பாகத்தில் கல்யாண விருந்து கிடைத்தால் எப்படி இருக்குமோ அது போல ஆகிறது அவளுக்கு.
மனம் முகம் எல்லாம் பூரிக்க - தாங்க்ஸ்டா செல்லம் என்று சொல்ல- இப்ப என்ன செய்யலாம் பாடலாம் என
இருவரும் பாடுவது தான். அமைதியான நதியினிலே ஓடம்.(அப்பாடா விஷயத்துக்கு வந்துட்டேன் :) )
//காற்றினிலும் மழையினிலும் , கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் - ஹோய் ஹோய்//
அடி பெண்ணே நாம் காதல் என்னும் ஆற்றினிலேயே நீந்திக் கொண்டிருக்க முடியாது. கல்யாணம் என்று கட்டுக்குள் வந்து விட்டால் யாரும் எதுவும் சொல்ல இயலாது.
//நாணலிலே கால் எடுத்து நடந்து வந்த பெண்மை இது , நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அந்தியில் மயங்கி விடும் காலையில் தெளிந்து விடும் -அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும் /
ஏதோ நீங்க சொல்லிட்டீங்க மாமா. எனக்குப் புரியறது.ஒண்ணு தெரிஞ்சுக்கங்க.ஒங்க பேச்சு தான் என்னோட ஜீவன்.உங்க அன்பு தான் என்னோட உசுரு..ம்ம் எனக்கு இப்போ தெளிவாய்டுச்சு மாமா.
**
வெகு அழகிய நடிப்பில் நடிகர் திலகம் இணையாக தேவிகா..ம்ம் எவ்ளோ அழகிய ரொமாண்டிக் ஸாஃங்க். எத்தனை முறை கேட்டிருப்பேன்.எத்தனை முறை பார்த்திருப்பேன்.
**
https://youtu.be/c9H29YbSK7g
சோகப் பாட்டில் உணர்ச்சி மயமாக ந.தி..ஸிம்ப்பிள் அழகு ஜொலிப்பாய் தேவிகா..
https://youtu.be/Jngi00QQ6N0
மீள் பதிவு - 2
நடிகர் திலகத்தின் நடை
*
4. மிடுக்கும் துடுக்கும்
*
24.07.72
ஷேமம்…
*
அன்புள்ள நீலாவிற்கு.,
நலம் நலமறிய ஆவல்.. எப்படி இருக்கிறாய்.. நேத்துத் தான் ஒண்ணா சினிமா பாத்தோம்..இன்னிக்கு என்ன இன்லேண்ட் லெட்டர் என நீ திகைப்பது தெரிகிறது..உனக்கு ஃபோன் செய்ய வேண்டுமென்றால் பக்கத்து மளிகைக் கடைக்குப் பண்ண வேண்டியதாய் இருக்கிறது..அவன் ம்ம் இருங்கன்னு சொல்லிட்டு யாரிடமோ க.ப 2 கிலோ உ.ப ரெண்டு கிலோ என கடைக் கணக்கைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறான்..
*
அப்புறம் நீ ஆடி அசைந்து வந்து ஃபோன் எடுத்து குரலெழும்பாமல் வேறு பேசுகிறாய்..நாமென்ன லவ்வர்ஸா.. ஹஸ்பெண்ட் வைஃப் தானே..கொஞ்சம் சத்தமா ஃப்ரீயா பேசவேண்டியது தானே..ம்ம்.
*
ஒண்ணும் கேக்காம இருந்ததா.. அதான்.. ரொமான்ஸே மறந்து போகப் போகுதுன்னு வரச்சொன்னேன்..உங்கப்பாவை யாரு அண்ணா நகர்லாம் தாண்டி வீடு கட்டிவைக்கச் சொன்னார்.. நானிருக்கறது மதுரை டவுன்..உன்னை வந்து என்னோட பஜாஜ் சேட்டக்கில் கூட்டிச் செல்லலாம் என்றால் அதுக்கும் உன் கிட்ட ஆயிரத்தெட்டு வெக்கம். பஸ்ஸிலேயே வருகிறேன் என்று சொல்கிறாய்...அடி போடி இவளே..ம்ம் ஒரு மாசம் அதுவுமிந்த ஆடி மாசம் எப்படிப் போகப் போறதோ தெரியலை..
*
நேத்துப் பார்த்த படம் ஆண்டவன் கட்டளை எப்படி இருந்துச்சு..ஒருவார்த்தை சொல்லவே இல்லை..பழைய படம் கூட்டமே இருக்காதுன்னு பார்த்தா நல்ல கூட்டம்.. அப்பப்ப உன்னைப்பார்த்தாக் கூட சீரியஸா ஸ்க்ரீனையே பாத்துக்கிட்டு இருந்தாய்.. நல்ல படம் தான் இல்லையா..
*
அதுவும் சிவாஜி முதல் காட்சியில் வெகு மிடுக்காய் கோட் சூட் போட்டுக் கொண்டு விசுக் விசுக்கென நடக்கற நடை இருக்கே..அதுவும் ட்ராஃபிக் எல்லாம் ஸ்தம்பித்து குறுக்கே ஒரே விதமாய் நடந்து செல்வாரே வாவ்
*
இந்த தேவிகாப் பொண்ணு கூட கொஞ்சம் நல்லாருக்குல்ல.. ந\ன்னா ஜீரால ஊறின கொழு கொழு குலோப் ஜாமூன் மாதிரி ( நீ சாப்பிட்டிருக்கியோ..இல்லைன்னா ஆரியபவன் – இந்த மாசம் முடிஞ்சு வந்ததும் கூட்டிக்கிட்டுப் போறேன்)
*
அந்த தேவிகாப் பொண்ணு கிட்ட காதல் வலைல்ல விழுந்துட்டு ஆளே மாறிப்போக – முதல்ல காலேஜீக்கு வருவார் சிவாஜி..அந்த சீன் சூப்பர் இல்லை..ரொம்ப அழகிய யூத் நடை..
*
கலக்கலா டிரஸ் பண்ணிக்கிட்டு குட்மார்னிங்க் பாய்ஸ் குட்மார்னிங்க் கேர்ள்ஸ்னு வருவாரே வாவ் நன்னா இருக்குமில்லை..
*
அம்பிகாபதி மாண்டான் – என சந்திரபாபு சொல்ல சிவாஜி அது காதலின் தத்துவம்னு சொல்றச்சே உன்னோட கண்ணு கொஞ்சம் வெளிய வந்து அழகா இருந்துச்சு..கொஞ்ச வெளிச்சத்துல பார்த்தேன்..
*
குட்டியா டச்சிங் டச்சிங்க் கூட பண்ண விடமாட்டேங்கற..ம்ம் நேர்ல வா பார்த்துக்கறேன்
*
மொத்தத்துல படம் ஓகேதான்..ஆனா வீட்டுக்கு பஸ்ஸிலேயே போய்க்கிறேன்ன பாரு அதான் எனக்குப் பிடிக்கலை..பத்திரமாப் போய்ச் சேர்ந்தியா..முடிஞ்சா மளிகைக் கடைக் காரர் ஃபோன்ல எனக்கு பேங்க்குக்கு ஃபோன் பண்ணு..
*
சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு..ஓ.கே..ஐ மிஸ் யூ டா..
*
உன் அன்புள்ள
மாதவன்..
25.07.72
அன்புள்ள இவருக்கு.,
யோவ்.. என்ன ஒரு துணிச்சல் இருந்துச்சுன்னா தேவிகாவை குலோப் ஜாமூன்லாம் சொல்லுவ.. அதுவும் என் கிட்டயே....இன்னும் இருபது நாள் தான்..நேர்ல ஒங்களை வெச்சுக்கறேன்..அடுத்த வாரம் படத்துக்குக் கூப்பிட்டீங்கன்னா வரமாட்டேன்..
அன்புடன் – நற நற – I didn’t miss you..daa..
நீலா மாதவன்..
https://youtu.be/3lIpebdRTw0?list=RDJngi00QQ6N0// அழகே வா அருகே வா..
தாஸேட்டன் பாடல் போட்டு நாளாகி விட்டது. சிவக்குமார், ரதி நடித்த 'காதல் கிளிகள்' படத்தில் இருந்து ஒரு பாடல். எஸ்.பி.ஷைலஜா உடன் பாடியிருப்பார். அருமையான பாடல். ஆனால் படம் ரொம்ப சோகமாம்.
நதிக்கரையோரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்
https://youtu.be/SV6h-0m1CyY