சுசீலாம்மா கச்சேரி பற்றி எல்லோரும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் .1969 கால கட்டம் சார் . திருநெல்வேலியில் ஒரு கீற்று கொட்டகையில் நெல்லை சங்கீத சபா என்ற ஒரு இசை சம்பந்தபட்ட நிரந்தரம் இல்லாத (temporary ஷெட்) அரங்கு ஒன்று இருந்தது. அப்போது அங்கு பெஞ்ச் ,சேர எல்லாம் கிடையாது.ஆற்று மணல் குவித்து வைத்த தரை தான்.ஆனால் மாலை இரவு நேரங்களில் குளிர்ச்சியாக இருக்கும்.அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரே கலை அரங்கு இது தான் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
அங்கு பாடகர் திலகம் டி எம் சௌந்தர்ராஜன் ,பி சுசீலா அம்மா இருவரும் வந்து ஒரு மெல்லிசை கச்சேரி நிகழ்ச்சி நடத்தினார்கள். 50,60 காலதிய பாடல்கள் எல்லாம் இடம் பெற்று சபா நிரம்பி வழிந்த நிகழ்வு. நிகழ்ச்சியின் இடையே பாடகர் திலகம் சுசீலாம்மா பற்றி கூறிய ஒரு தகவல் நினைவிற்கு வந்தது .
'தேர் திருவிழா' என்று ஒரு திரை படம் மக்கள் திலகம்,கலைச்செல்வி நடித்து தேவர் பிலிம்ஸ் தயாரித்து வெளி வந்த படம். அந்த படத்தில் 'தஞ்சாவூர் சீமையிலே' என்ற பாடலில் நடுவே
ஹஹெயிங்,ஹஹெயிங்
என்று சில ஹம்மிங் வரும்.பொதுவாக சுசீலம்மா எந்த பாடலை பாடும் போதும் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் பாடலின் ஊடே சிரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த பாட்டுக்கு என்ன சிரிப்பு தேவையோ அதை மட்டும் கொடுத்து விட்டு பாடலின் அடுத்த சரணதிற்கோ அல்லது அனுபல்லிவிக்கோ சென்று விடுவார்கள். அதே போல் பாடலின் ஊடே அழ வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கூட மெலிதாக ஒரு சினுங்கல் அழுகை அல்லது ஹும்,ஹும் என்று லேசான அழுகை செய்து விட்டு பாட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இந்த தஞ்சாவூர் சீமையிலே என்ற பாடலின் நடுவே ஹஹெயிங்,ஹஹெயிங் என்று சொல்லும் போது எல்லாம் சுசீலாம்மா முகத்தில் ஒரு சிரிப்பு ஒரு இடத்தில வாய் விட்டே சிரித்து விட்டார்கள்.திரை இசை திலகம் மாமாவும் அவரது உதவியாளர் புகழேந்தி அவர்களும் சேர்ந்து சிரித்து இறுதியில் அந்த பாட்டின் ரெகார்டிங் முடிவதற்கு இரண்டு நாட்கள் ஆகின.
இப்போது அந்த நெல்லை சங்கீத சபா அரங்கம் மிக பெரிய அளவிலே கட்டப்பட்டு நெல்லையின் நாரத கான சபை என்று சொல்ல தக்க அளவிலே வளர்ந்து விட்டது .
http://www.thehindu.com/multimedia/d...2J_145092g.jpg
http://www.thehindu.com/multimedia/d...2J_145093g.jpg
80களில் மண்டலின் ஸ்ரீநிவாஸ் புகழ் அடையாத நிலையில் நெல்லையில் இந்த அரங்கில் நடாத்திய ஒரு கச்சேரி
மலரும் நினைவுகளை மீட்டிய அனைத்து பதிவாளர்களையும் அணைத்து நன்றி சொல்கிறேன்
http://www.youtube.com/watch?v=AUPiVztsAuc

