http://i57.tinypic.com/3345jkl.jpghttp://i58.tinypic.com/vo7510.jpg
Printable View
நான் நீதிபதியாக வேண்டும் என்று விரும்பியவர் எம்.ஜி.ஆர்.: நீதிபதி கற்பகவிநாயகம்
நீதிபதியாகும் தகுதி என்னிடமிருக்கிறது என்பதைக் கண்டறிந்ததோடு, நான் நீதிபதியாக வேண்டும் என, விரும்பியவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். என மத்திய மின்சார மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி கற்பகவிநாயகம் கூறினார்.
நீதிபதி கற்பகவிநாயகம் குறித்து ராணி மைந்தன் எழுதியுள்ள "ஒரு நீதியரசரின் நெடும்பயணம்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் புத்தகத்தை குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.எஸ்.அருணாச்சலம் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதி கற்பக விநாயகம் ஆற்றிய ஏற்புரை:
எனக்கு சினிமாவில் நடிகராக விருப்பம். வழக்குரைஞர் காந்தியிடம் இளம் வழக்குரைஞராகச் சேரும்போது, "எனக்கு சினிமாவில் நடிப்பதற்குத்தான் விருப்பம்; கிடைக்கும் நேரங்களில் வந்துவிட்டு போகிறேன்' என்றேன். அவரும் என்னை வேலைக்கு எடுத்துக்கொண்டார்.
என்னைக் கண்டறிந்தவர் எம்.ஜி.ஆர்.: மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எம்.ஜி.ஆர். எனக்குக் கொடுப்பதாக இருந்தார். ஆனால், முடிவை மாற்றிக்கொண்டு அவர் என்னை அரசு வழக்குரைஞராக நியமிக்க முடிவு செய்தார். அவரது முடிவால் நான் நிலைகுலைந்து விட்டேன். சினிமாவில் நடிக்கும் என் ஆசையை அவரிடம் கூறியபோதும், ராஜமாணிக்கத்திடம் அரசு உதவி வழக்குரைஞராகச் சேர்ந்துவிடு என்றார்.
"கற்பகம் நீங்கள் அரசு உதவி வழக்குரைஞராகச் சேருங்கள். நீதிபதி கோகுலகிருஷ்ணன் மாதிரி நீங்களும் நீதிபதியா வரணும். நீங்கள் ஒரு நல்ல பண்பாளர்' என்றார்.
அரசியல், சினிமாவைப் போல இல்லாமல் நிரந்தரமான வேலை வேண்டும் என்பதற்காக நான் வழக்குரைஞராக வேண்டும் என நினைத்தார். அவர் நினைத்தபடியே, நான் நீதிபதியாக வந்தேன். இறை நம்பிக்கை, குரு பக்தி, உழைப்பு, நேர்மை, மனிதாபிமானம் ஆகிய ஐந்தும்தான் எனது வெற்றிக்குக் காரணமாக இருந்தன, என்றார் அவர்.
நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன்: சட்டத்தை சட்ட வழியில் பார்ப்பது மட்டும் நியாயமாகாது. சட்டத்தை நியாய வழியில் பார்த்தால்தான் நியாயம் வழங்க முடியும். சட்டத்தை சட்ட அளவில் நிறுத்திக்கொண்டால் அவர் ஜூரிஸ்டாக இருக்க முடியுமே தவிர, நீதிபதியாக இருக்க முடியாது.
கற்பகவிநாயகம் ஜூரிஸ்ட் மட்டுமல்ல, சிறந்த நீதிபதியும் ஆவார். தவறு செய்த ஒருவரை நீங்கள் சென்று காந்தியடிகள் புத்தகத்தைப் படியுங்கள் என்று தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதி டி.எஸ்.அருணாச்சலம்: வழக்குரைஞராக இருப்பவர் தொழிலில் அதிகம் நாட்டம் செலுத்தி உழைத்தால் மேலே வர முடியும். அந்த உழைப்பை நான் வழக்குரைஞராக இருந்த கற்பகவிநாயகத்திடம் பார்த்தேன்.
நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன்: பலபேரின் வாழ்க்கை வேடிக்கை மனிதர்களைப் போல் முடிந்துபோய் விடுகிறது. தனது வாழ்க்கை அப்படி முடிந்துபோகாது என சவால் விட்ட பாரதியார்கூட, தன்னுடைய சுயசரிதையில் தாயுமானவரின் பாடலைப் போட்டு, "பொய்யாய், பழங்கதையாய், கனவாய் மெல்லப் போனதுவே' என்று எழுதினார்.
சோதனைகளைக் கடக்கக் கூடிய முயற்சியும், உழைப்பும் இருப்பவர்களின் வாழ்க்கைதான் சாதனைகளாக மாறுகிறது. அப்படிப்பட்ட வாழ்க்கைதான் நீதிபதி கற்பகவிநாயகத்தின் வாழ்க்கை. மற்றவர்களுக்கு யார் எடுத்துக்காட்டாக இருக்கிறார்களோ, அவர்களின் வாழ்க்கைதான் மற்றவர்களுக்குச் சொல்லப்பட வேண்டிய வாழ்க்கை, என்றார் அவர்.
புதுவை மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் நீதிபதி கே.வெங்கட்ராமன், மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன், நூலாசிரியர் ராணிமைந்தன், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் எஸ்.அக்ஷய்குமார், "வளரும் அறிவியல்' ஆசிரியர் இ.கே.டி. சிவகுமார் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
புதுச்சேரி ஆட்டோவில் புரட்சித்தலைவர்
http://i61.tinypic.com/166zrwz.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
டிசம்பர் 4ஆம் தேதி சட்டமன்ற கூட்டம்
----------------------------------------------------------------------
டிசம்பர் 2, 1972 ... கருணாநிதிக்கு நினைவில் இருக்க வேண்டிய தினம் ... தமிழக சட்டப் பேரவை கூடியது , 184 உறுப்பினர்கள் என்று அசுர பலம் கொண்ட இயக்கமாக தி மு க அமர்ந்திருக்க .. அதை ஒன்றிரண்டு உறுப்பினர்களுடன் எதிர்கொள்ள சபைக்குள் நுழைந்தார் மக்கள் திலகம் ... அவரை பேச விடாமல் மைக் பிடுங்கப் பட்டது , அவர் மீது செருப்பும் வீசப் பட்டது ....
சட்டப் பேரவை செத்து விட்டதாகவும் மீண்டும் முதல்வராக மட்டுமே அவைக்குள் நுழைவேன் என்று சபதமிட்டு வெளியேறினார் மக்கள் திலகம்
டிசம்பர் 4 , 2014 .... அதே மக்கள் திலகத்தின் இயக்கம் ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கிறது ... துணிவிருந்தால் கருணாநிதி சபைக்குள் வரட்டும் ...
http://i60.tinypic.com/2hevtki.jpg
FROM TODAY ONWARDS -KADAYAM NEW BOMBAY THEATRE A/C Dts, FB
http://i60.tinypic.com/2yozhon.jpg
http://i57.tinypic.com/1hfmnd.png