-
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
"கட்டபொம்மன்" காவிய சிறப்பு மலரிலிருந்து சில பக்கங்கள்
வரலாற்று ஆவணம் : கலைத்தோட்டம் : 15.6.1959
தலையங்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5888-1.jpg
"கட்டபொம்மன்" காவியம் குறித்து 'கட்டபொம்மன் ஆராய்ச்சியாளர்' சிலம்புச் செல்வர்
http://i1110.photobucket.com/albums/...GEDC5889-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5890-1.jpg
கதாசிரியர்-வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் உரை
http://i1110.photobucket.com/albums/...GEDC5891-1.jpg
"வீரபாண்டிய கட்டபொம்மன்" மிகமிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தபோது வெளியான சிறப்பு மலர் இது.
இன்னும் வரும்...
கட்டபொம்மன் களைகட்டுவார்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
heartfelt thanks pammalar sir for bringing in to the limelight of VPKB, another magnum opus of NT in the combination of BRB. The expectations to see this wonderful movie famous for its dialogues and the electrifying dialogue delivery by NT with absorbing close=up shots, soon in digital/3D format, is rising high in our minds. NT is ready to stir the movie arena with another blockbuster. This silver jubilee movie will certainly break the records of Karnan and more and more younger generation will get embedded in their hearts and minds with the action dictionary defined by our NT forever
-
-
-
ஆஹா... சூப்பரோ சூப்பர் வாசு தேவன் சார்...
இளைய தலைமுறைக்கு இளைய தலைமுறை அறிமுகம் அட்டகாசம்
-
இன்று 10.06.2012 தேதியிட்ட சன்டே டைம்ஸ் பத்திரிகையில் சிவாஜி-எம்.ஜி.ஆர். இன்றும் தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் பெற்றிருக்கும் இடத்தைப் பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் நிழற்படம் இதோ
http://i872.photobucket.com/albums/a...CLE100612i.jpg
-
'இளையதலைமுறை' படத்தில் 'சங்கீதா' என்னும் நடிகை அறிமுகமானார். அதே கால கட்டத்தில் திரு எம்ஜிஆர் அவர்களின் ஒரு திரைப்படத்தில் அனேகமாக 'அண்ணா என் தெய்வம்' என்று நினைக்கிறேன்... மற்றொரு சங்கீதா என்ற போட்டி நடிகை அறிமுகப்படுத்தப்பட்டார். இரண்டு சங்கீதாக்களுக்கும் என்ன பெயர் தெரியுமா? இளைய தலைமுறையில் நடித்தவருக்கு 'சிவாஜி சங்கீதா' என்றும், 'அண்ணா என் தெய்வம்' படத்தில் நடித்த நடிகைக்கு 'எம்ஜிஆர் சங்கீதா' என்றும் பத்திரிக்கைகளின் கைங்கரியத்தால் பெயர்கள் சூட்டப்பட்டன. ஒரே போட்டா போட்டி. சிவாஜி சங்கீதா, எம்ஜிஆர் சங்கீதா என்று போட்டி போட்டுக்கொண்டு சில பத்திரிகைகள் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் பெட்ரோலை ஊற்றின. எப்படியோ இரு நடிகைகளுக்கும் இரு பெரும் நடிகர்களின் தொழில் போட்டியினால் நல்ல விளம்பரம்.
எம்ஜிஆர் சங்கீதா என்ற அந்த நடிகை பாலாஜியின் 'தீபம்' படத்தில் தலைவரின் தங்கையாக ஒப்பந்தம் செய்யப்பட்டு புகழ் பெற்றார். ஸ்ரீதரின் 'அண்ணா என் தெய்வம்' வெளிவராமல் போனதால் தலைவர் படத்தின் மூலம் அந்த நடிகை பிரபலமானார். பின்னாளில் பாக்யராஜ் அவர்கள் இயக்கி நடித்த 'அவசர போலிஸ் 100' என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் அவர்களின் 'அண்ணா என் தெய்வம்' படத்தின் எடுக்கப்பட்ட சில காட்சிகள் மட்டும் கதைக்காக தனியாக சேர்க்கப்பட்டன. சங்கீதா புகழ் பெற்ற பிறகுதான் அவர் அறிமுகமான 'அண்ணா என் தெய்வம்' காட்சிகளை 'அவசர போலிஸ் 100' இல் காண முடிந்தது. இதே சங்கீதா இளையராஜாவின் இசையில் மெகா ஹிட்டான "கண்மணியே... காதல் என்பது கற்பனையோ" என்ற பாடலில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். (படம்: ஆறிலிருந்து அறுபது வரை).
'சிவாஜி' சங்கீதா
http://i1087.photobucket.com/albums/...an31355/s2.jpg
'எம்ஜிஆர்' சங்கீதா 'தீபம்' படத்தில் நடிகர் திலகத்துடன்
http://i1087.photobucket.com/albums/...n31355/s-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
சங்கீத மழை பொழிந்து விட்ட வாசு சாருக்கு இந்தாருங்கள் பிடியுங்கள் பூங்கொத்து... கலக்குங்க...
இதோ பின்னாளில் வந்த மேலும் சில சங்கீதாக்கள்
http://t0.gstatic.com/images?q=tbn:A...IMwKqjx1Yni05w
http://1.bp.blogspot.com/-_km43VsQna...Pk/s1600/2.jpg
ஒரே பெயரில் நடித்த நடிகைகளின் பெயர்களைக் கூறுக என்று புதிர்ப் போட்டியே வைக்கலாம் போல் இருக்கிறது.
-
16-8-81 ஆனந்த விகடன் இதழில் வெளியான 'நான் ரசித்த வசனம்' என்ற தலைப்பில் திரு.'வியட்நாம் வீடு' சுந்தரம் அவர்கள் ரசித்த அவருடைய வசனம். (13.6.2012 'ஆனந்த விகடன்' இதழில் மறுபதிப்பாக)
http://i1087.photobucket.com/albums/...06-2012-29.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்பு பம்மலார் சார்.
தங்கள் உயரிய பாராட்டிற்கு நன்றி!
'வீரபாண்டிய கட்டபொம்மன்' 'கலைத்தோட்டம்' சிறப்பு மலர் உண்மையிலேயே சிகர மலர். உள்ளதை உள்ளபடி உளமாரப் பாராட்டும் கலைத்தோட்டத்தின் பாங்கு பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது. சிறப்பு மலர் ஏன் என்பதற்கான விளக்கம் அருமை.
'கட்டபொம்மனும் காந்தியும்' என்ற தலைப்பில் சிலம்புச் செல்வர் அவர்களின் கருத்தாழமிக்க கட்டுரை கவனத்தை ஈர்க்கிறது. கட்டபொம்மனாக நடிகர் திலகம் வாழ்ந்து காட்டியதை அற்புதமாகப் பாராட்டி சிலம்புச் செல்வர் நம் எல்லோரது மனதிலும் இரண்டறக் கலந்து விட்டார். சிலம்புச் செல்வர் மட்டுமா! அருமையான பதிவுகளை அளிக்கும் பதிவுச் செல்வராகிய தாங்களும்தான்.
கதாசிரியர்-வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் உரை உண்மைக்கோர் உரைகல்.
நடிகர் திலகத்தின் நடிப்புக்கு உவமை கூற முடிந்தால் பம்மலார் அவர்களின் ஆவணப்பதிவு சேவைக்கு உவமை கூற முடியும்.
நன்றி!