நடிகர் சிவாஜி கணேசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட போது அவரைப் பாராட்டும் வகையில், சாராத ஸ்டுடியோவில் மறைந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தலைமையில் மாலை 6 மணிக்கு ஒரு விழா நடந்தது. அன்று எம்.ஜி.ஆருக்கு
இரவு 9.00 மணி வரை தேவர் பிலிம்ஸ் ஷூட்டிங் வாகினி ஸ்டுடியோவில் இருந்தது.
தேவர் பிலிம்ஸ் அதிபர் மறைந்த சின்னப்பா தேவரிடம் எம்.ஜி.ஆர். அவர்கள், "இன்று மாலை தம்பி சிவாஜிக்கு பாராட்டு விழா நடக்கிறது. சக கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடக்கும் போது அதில் நாம் எல்லோரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு பெருமை. ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்றால் ஷூட்டிங்கை நள்ளிரவு வரை நடத்துவோம். அதனால் ஏற்படும் செலவுகளை நானே ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறி அவரை ஒப்புக் கொள்ள வைத்தவுடன், சின்னப்பா தேவர், அசோகன் உட்பட அப்படத்தில் நடித்த அத்தனை
பேரையும் அந்த விழாவுக்கு அழைத்து வந்து விட்டார் எம்.ஜி.ஆர்.
என்னே அவர் பாசம்.
அதுதான் எம்.ஜி.ஆர்.
http://i46.tinypic.com/35laxdh.png
பத்திரிகையாளர் திரு. வி. ராமமூர்த்தி அவர்கள் - " தமிழர் வாழ்வில் எம்.ஜி.ஆர்." என்ற பத்திரிகை கட்டுரையில் தெரிவித்தது.
================================================== ================================================== ==========
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்