Quote:
நமது நாடு அடிப்படையில் வேளாண்மை சார்ந்ததே
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்வர் என்பது வள்ளுவரின் மறை வாக்கு
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பது பாரதியின் வேத மந்திரம்
கழனிவாழ் உழவன் சேற்றிலே கால் வைத்தால்தான் நாமெல்லாம் சோற்றிலே கை வைக்க முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
உழவின் மேன்மை உணர்ந்த நடிகர்திலகம் உழவுத் தொழில் செய்பவராக பெருமைப்படுத்திய பாத்திரப் படைப்புக்களை பழனி, மக்களைப் பெற்ற மகராசி, நவராத்திரி சவாலே சமாளி, தாய் .....எண்ணற்ற படங்களில் கண்டு மகிழலாமே!