நன்றி சிஷ்யா :) அதுல இந்தக் கருவின் கரு .. என்னவா இருக்கும் நு சிந்தைல ஓடறது.. சாயந்தரம் போய் ஆம்லெட் சாண்ட்விச் சாப்பிட்டுக்கிட்டே யோசனை செய்யணும்.. :)
Printable View
நன்றி சிஷ்யா :) அதுல இந்தக் கருவின் கரு .. என்னவா இருக்கும் நு சிந்தைல ஓடறது.. சாயந்தரம் போய் ஆம்லெட் சாண்ட்விச் சாப்பிட்டுக்கிட்டே யோசனை செய்யணும்.. :)
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 1. "பூமாலையில் ஓர் மல்லிகை."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~
ஊட்டி வரை உறவில் வந்த கவியரசரின் பாடல். நடிகர் திலகமும் புன்னகை அரசியும் தோன்றும் இனிமையான பாடல். பாடகர் திலகமும் இசை அரசியும் பாடிய மெல்லிசை மன்னரின் பாடல். இயக்குனர் ஸ்ரீதர் எவ்வளவு ரசித்து லயித்து எடுத்தாரோ சொல்லத் தெரியவில்லை. அழகாக ஜோடி தெரிய பாடல் நம்மை அப்படியே எங்கேயோ அழைத்துச் செல்வது மட்டும் உண்மை. கவியரசர் நீண்ட வார்த்தைகளை கொடுத்து பாட வைத்து நம்மை மயக்கம் கொள்ள வைக்கிறார்.
https://www.youtube.com/watch?v=7Nh-sQJC8IE
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 2. "பூமாலையே தோள் சேரவா."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~
இயக்குனர் மணிரத்தினத்தின் முதல் தமிழ்ப்படம். இளையராஜவின் இசையில் முரளியும் ரேவதியும் பாட ச்சே. நடிக்க, இளையராஜாவுடன், ஜானகி அம்மா பாடி மயக்கும் அடுத்த பூமாலைப் பாடல். காதல் பாடல்களை எப்படி எப்படியெல்லாம் எடுக்கிறார்கள் அடேயப்பா. அருமை. அருமை. பாடல்கள் அனைத்தையும் கங்கை அமரன் எழுதியதாம். சி.க. அல்லது ராஜேஷ் ஜி உறுதிப் படுத்தவும்.
https://www.youtube.com/watch?v=pEsT0vIfHvI
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 3. "பூமாலை வாங்கி வந்தான் பூக்கவில்லையே"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~
மீண்டும் ராசாவின் புகழ் பெற்ற பாடல். நடிகர் சிவகுமாருக்காக கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடல்.
https://www.youtube.com/watch?v=3lAEYIpVNnI
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 4. "பூமாலை ஒரு பாவையானது. பொன் மாலை ஒரு பாடல் பாடுது"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மறுபடியும் ராசாவின் புகழ் பெற்ற பாடல். சூப்பர் ஸ்டாருக்கான பாடல். உடன் ஆடுபவர் பூர்ணிமா பாக்கியராஜ். இது போட்டி நடனப் பாடல். கண்டு களியுங்கள்.
https://www.youtube.com/watch?v=KzwoBGQ_KQw
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 5. "பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~
அதிகம் கேட்கப் படாத ஒரு பாடல். அஜித் மற்றும் ரம்பாவின் நடிப்பில் உருவான பாடல். படத்தின் பெயர் 'ராசி'.
https://www.youtube.com/watch?v=pNjay_ELhxs
Dear Ravi sir,
Your 100+ songs about 'Ravi' (Sooriyan) are very very nice.
I always like sooriyan, especially 'udhaya sooriyan'
sila nerangalil ilaigal maraiththaalum adhaiyum thaandi mele ezhundhu oLi kodukkum.
indru asthamanam aanaalum naalai meendum udhikkum.
andha sooriyanai paadiyadharkaaga paaraattukkal.
Ambikapathi pola avasarappattu maattikkollak koodaadhu endru 2 alladhu 3 adhigamaagave paadi vitteergal.
vaazhga.... valarga....
//Ambikapathi pola avasarappattu maattikkollak koodaadhu endru 2 alladhu 3 adhigamaagave paadi vitteergal. //ஆதிராம்.. பாவம் ஸின்சியரா அங்கிட்டு இங்கிட்டுப் பார்க்காம வீடியோல்லாம் எடுத்து எழுதிப் பாடியிருக்கார்..கணக்கு 101 தானே போட்டார்..எதுலயாவது ரிப்பீட் நம்பர் போட்டுட்டாரா.. மறுபடி போய்ப் பார்க்கணும்..
ஹப்புறம்..
கல் நாயக்.. ம்ம் ஃப்ரெஷ்ஷா பூமாலை தொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களே..அது என்ன நீண்ட குறுந்தொடர்..கவிதைல வந்தா கவி முரண் எனலாம்..வசனத்துல வந்தால்.. வசன முரண்..:)
கோர்க்கின்ற பூமாலைக் கொத்துக்கள் கண்டிங்கு
ஆர்ப்பரிக்கும் நெஞ்சமும் ஆம்.
வந்தாரே கல் நாயக் வந்தாரே .. வாங்க வாங்க கல் நாயக் ஐயா வழக்கு என்ன கேளுங்கய்யா :)
R - ரம்மியமான நண்பர்களின் ஊக்கம்
a - ஆதவனின் தாக்கம்
v - வேண்ட வேண்ட தோன்றும் அவனுடைய புகழ்மாலை
i - "i " என்ற எண்ணம் இல்லாத எழுத்தோட்டங்கள்
--------------
ரவி சார், ஆயிரம் கரங்கள் நீட்டி பதிவுகளை ஏதாவது சிறப்பாக சொல்லி பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். எதைச் சொன்னாலும் அது குறைவாகவே தோன்றுகிறது.
1968ம் ஆண்டு ஜனவரி முதல் நாளில் பேரறிஞர் அண்ணா ஆட்சியில் சென்னையில் உலகத்தமிழ் மாநாடு. அந்த மாநாட்டில் கவிதையைப் பற்றி புரட்சித் தலைவர் பேசும்போது,... ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை’ என்று குறிப்பிட்டார். உண்மைதானே. எவ்வளவு எளிமையாக சொல்லி விட்டார். மக்களும் அதை ரசித்து கரகோஷம் செய்தனர்.
பின்னர் பேச வந்த பேரறிஞர் அண்ணா, ‘‘அழகும் உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று புரட்சி நடிகர் கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். யோசித்துப் பார்த்தேன். பிறகுதான் தெரிந்தது, நீங்கள் எதற்காக கைதட்டினீர்கள் என்று. அவர் தன்னைப் பற்றி கூறியிருக்கிறார். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த அவரே ஒரு கவிதைதானே’’ என்றார்.
அதுபோல, நீங்கள் வேறு கதிரவன் வேறு அல்ல. ரவி என்றால் கதிரவன்தானே. கதிரவன் வேறு, ரவி வேறு என்று இல்லாத காரணத்தால் கதிரவனைப் பற்றி சொல்லும்போது உங்களை அறியாமல் நீங்கள் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். ஒரு தலைப்பில் 100 பாடல்களை நினைவுக்கு கொண்டு வந்து அதற்கேற்ப நல்ல கருத்துக்களோடு குறுகிய காலத்தில் அவற்றை பதிவிடுவது அசாதாரணம். இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள உங்களுக்கு, நீங்கள் குறிப்பிட்டபடி, r a v i க்கு உள்ள விளக்கமே உங்களுக்கு நான் அளிக்கும் பாராட்டு.
அதிகம் இங்கு வரக்கூடாது என்று இல்லை சார், வேலைகள் அதிகமாக உள்ளது. நன்றி.
வாசு சார்,
நானே அடிக்கடி நினைவில் கொள்ளாத தலைவன் படத்தின் பாடலை குறிப்பிட்டு தரவேற்றிய உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்னபிறகுதான் நினைத்துப் பார்த்தேன். அறிவுக்கு வேலை கொடு, நீராழி மண்டபத்தில், பாய் விரித்தது பருவம் போன்ற பாடல்களும் நன்றாகத்தான் இருக்கும். என்றாலும் சூப்பர் ஹிட் ஆகவில்லை.
யாரும் அதிகம் அறிந்திராத பாடல்களை பதிவிடுவதன் மூலம் எதிர்காலத்தில் வருபவர்களுக்கு இதுபோன்ற பாடல்களை களஞ்சியமாக அளிக்கும் நீங்களே ஒரு பழைய பாடல்களின் களஞ்சியமாக விளங்குகிறீர்கள். நன்றி.
கல்நாயக்,
நிலா தொடரில் சதம் அடிக்கப் போவதற்கும், பூக்களைப் பற்றிய புதிய தொடருக்கும் உங்களுக்கு முறையே அட்வான்ஸ் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
சின்னக்கண்ணன்,
/எனக்கு அடுத்த பாகத்தை நெனச்சு இப்பவே கலங்குது/.......... கலங்காதீர்கள். நாங்கள்லாம் இருக்கோம்.
எஸ்.வி சார்,
உங்களை இங்காவது பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்