https://scontent.fyto1-1.fna.fbcdn.n...81&oe=5F38476E
Thanks V C G Thiruppathi
Printable View
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...81&oe=5F38476E
Thanks V C G Thiruppathi
16-7-20ன் தொடர்ச்சி.... 2010... எண்ணங்கள் எழுத்துக்கள் வலை...
இந்திரா அம்மையார் மறைந்தபிறகு நடந்த 1984 தேர்தலில், சிவாஜி மன்றத்தினர் தேர்தலில் சீட் கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டதற்கு காரணமே, நடிகர் திலகத்துக்கும் காங்கிரஸுக்கும் இருந்த நீண்டகால உறவை பற்றி ராஜீவுக்கு தெரியாததே.
தமிழ்நாட்டில் காங்கிரஸின் மிகப்பெரிய தொண்டர் படையாக விளங்கிய சிவாஜி மன்றத்தினர், 1984 தேர்தலில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டனர். சிவாஜிமன்றத்தினர் பற்றி தெரிந்திருந்த பெருந்தலைவரும், இந்திரா அம்மையாரும் இயற்கை எய்தியதால் அவர்களின் அருமை ராஜீவுக்கு தெரியவில்லை. வெகுண்டெழுந்த சிவாஜி மன்றத்தினர், தலைவர் தளபதி சண்முகம் தலைமையில் கூடி முடிவெடுத்து தமிழ்நாடு முழுக்க 99 போட்டி வேட்பாளர்களை அறிவித்தனர். சிலர் வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டனர். புரசை குமரன், அப்பன்ராஜ், செங்காளியப்பன், ராஜசேகரன், அடைக்கலராஜ், மாரிசாமி, பொன்.தங்கராஜ், சந்திரசேகரன், புவனேஸ்வரி ஆனந்த் போன்றோர் அதில் அடக்கம்.
பதறிப்போன மூப்பனார், டெல்லியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி சொல்ல, சிவாஜி மன்றத்தினருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ராஜசேகரன், திருச்சி எம்.பி.தொகுதிக்கு அடைக்கலராஜ் உள்பட சிவாஜி மன்றத்தினர் பலர் காங்கிரஸ் கட்சியால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றனர். சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் சிவாஜிமன்ற வேட்பாளராகப் போட்டியிட்ட (இன்றைய காங்கிரஸ் பிரமுகர்) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெருவாரியான வாக்குகளில் வெற்றியடைந்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு இரா. அன்பரசு சொல்கிறார்....
நடிகர்திலகத்தின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் ரசிகர்களும் அன்னை இல்லத்தில் காலைமுதல் இரவு வரை அவருக்கு வாழ்த்துச்சொல்லிச் சென்ற வண்னம் இருப்பார்கள். அனைவரும் சென்ற பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற செருப்புக்கள் இரவில் ஒரு லாரியில் ஏற்றி வெளியேற்றப்படும். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் இல்லத்தில் விருந்துக்கழைக்கப் படுவோரில் நானும் கண்டிப்பாக இருப்பேன். பிறந்தநாளின் போது அவருக்கு அளிக்கப்படும் பல்வேறு பரிசுப்பொருட்களை அவர் தனக்கென்று வைத்துக்கொள்ளமாட்டார். அங்கு வந்திருக்கும் ரசிகர்களுக்கு அளித்துவிடுவார்.
எப்போதுமே மிகவும் வெளிப்படையாக மனதில் இருப்பதை அப்படியே பேசும் வழக்கமுள்ளவராக இருந்தார். மனதில் ஒன்றை மறைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப்பேசி நிஜவாழ்க்கையில் நடிக்கத்தெரியாதவராக இருந்தார். அதனாலேயே அரசியலில் பலரால் ஏமாற்றத்துக்குள்ளானார்.
Thanks Palaniappan Sbbu
அவ்வளவு அறியாதவர்களா என்ன ஆட்சியில் இருப்பவர்கள், இருந்துவிட்டு போனவர்கள்,
மணி மண்டபத்தில் நடிகர் திலகம் தொடர்பான பெருமைகளை காட்சிப் படுத்தினால் எதிரே படிக்கும் ஜானகி- எம்ஜிஆர் மகளிர் கல்லூரி மாணவிகள் அதைப் பார்த்து படித்து தெரிந்து கொண்டு மறுநாள் வகுப்பில் சிவாஜியின் பெருமைகளை விவாதிப்பார்களே,
முதலில் சர்வதேச உலக விருது பெற்ற தமிழர்,
இந்திய நடிகர்களில் சுதந்திர போராட்டத் தியாகிகளாக நடித்த ஒரே ஒப்பற்ற நடிகர்,
வரலாற்று புராண இதிகாசங்களில் நடித்து மக்களிடம் வரலாற்று நாயகர்களை கொண்டு சென்றவர்,
285 திரைப்படங்களுக்கும் அதிகமாக நாயகனாக ஜொலித்த ஒரே தமிழ் நடிகர்,
150க்கும் மேலான நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படங்களையும், 30 க்கும் மேலான வெள்ளி விழா காவியங்களையும் கொடுத்த ஒரே இந்திய நடிகர்,
90 படங்களில் சண்டைக் காட்சிகளை இடம் பெறாமல் செய்து வெற்றி கண்டவர், 45 படங்களுக்கும் மேல் கதாநாயகி இல்லாமலும் டூயட் பாடாமலும் ஹிட் கொடுத்த ஒரே உலக நடிகர்,
ஒரே நாளில் இரண்டு இரண்டு படங்கள் என 17 முறை ரிலீஸ் செய்து அதிசயம் ஏற்படுத்திய வசூல் சக்கரவர்த்தி,
அமெரிக்க நகரான சுற்றுலாத் தளமான நயாகரா நகரின் மேயராக கௌரவிக்கப் பட்டவர்,
அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் வரவேற்பை பெற்றவர்,
எகிப்து அதிபர் நாசர் அவர்கள் சிவாஜியின் வீட்டிற்கே வந்து பாராட்டி இருக்கிறார்,
சிவாஜியின் நடிப்பில் லயித்துப் போன தலாய்லாமா படப்பிடிப்பு தளத்திற்கே வந்து பாராட்டி இருக்கிறாரே,
இந்தியாவின் ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள் என அவர் காலத்தில் அனைவரும் நட்புறவு கொண்டாடியவர்கள்,
முதல் உலகத்தமிழ் மொழி மாநாட்டிற்கு முதல்வர் அறிஞர் அண்ணாவிடம் முதல் ஆளாய் ஐந்து லட்சம் கொடுத்ததோடு திருவள்ளுவருக்கு மெரினாவில் சிலை வைத்து பெருமைப் படுத்தியவராயிற்றே,
கட்டபொம்மனுக்கு நினைவு மண்டபம் அமைத்தது, பாரதி, வ.உ.சி க்கு விழா
எடுத்தது,
தான தர்மங்கள் எனச் சொல்லும் போது 1950 களிலேயே எந்த நடிகர்களும் லட்சங்களை கொடுக்காத போது லட்சங்களை. அள்ளிக் கொடுத்து இருக்கிறாரே- இதை பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வடித்தும் இருக்கிறாரே,
பெரியார், காமராஜர், அண்ணா, ராஜாஜி என அனைத்து தலைவர்களின் கொள்கைகளுக்கும் பாலமாய் தேய்ந்து இருக்கிறாரே,
ஊழலற்ற ஆட்சி வேண்டும் தமிழகத்தில் என பெருந்தலைவர் காமராஜர் பின்னால் கடைசி வரை வெற்றி தோல்விகளைப் பற்றி எண்ணாமல் உறுதுணை இருந்து இருக்கிறாரே,
செவாலியே, பத்மஸ்ரீ, பதம பூசன், தாதா சாகேப் பால்கே, என ஏராளமான விருதுகளை குவித்து இருக்கிறாரே,
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மியான்மர், பர்மா, அரசுகள் எல்லாம் அழைத்து கௌரவம் செய்து இருக்கிறார்களே,
கேரளம், ஆந்திரா, மராட்டியம், பெங்காள் என பிற மாநில அரசுகள் விருது கொடுத்து பாராட்டி இருக்கிறார்களே,
நான்கு தலைமுறை ரசிகர்களை கொண்டிருக்கும் ஒப்பற்ற கலைத் தாயின் மூத்த மகன்,
இத்தனை பெருமைக்குரிய மாமேதையை இந்தத் தமிழகம் தவர விட்ட பிழைதானே
தற்போது நாம் காணும் ஊழல் நேர்மையற்ற ஆட்சிகள்,
இவர்களிடம். சிவாஜியின் பெருமைகளை முழுமையாக காட்சிப் படுத்துங்கள். என எப்படி கேட்க முடியும்??
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...fc&oe=5F37B698
நன்றி சேகர் பரசுராம்
இறந்து 19 ஆண்டுகள் ஆகியும் ரசிகர்களின் பக்தி குறையாமல் ஒவ்வொரு வருடமும் 10க்கும் மேற்பட்ட டிசைன்களில் திருச்சி நகரில் சிவாஜி ரசிகர்களால் போஸ்டர் வெளியிடப்படுகிறது https://scontent.fmaa1-4.fna.fbcdn.n...bf&oe=5F39D9FBhttps://scontent.fmaa1-1.fna.fbcdn.n...f7&oe=5F3862CB
21-07-2020
நடிகர் திலகத்தின் 19 வது ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு தொலைக்காட்சி சேனல்களில் திரைக்காவியங்கள்!!
* கீழ்வானம் சிவக்கும்- காலை 10 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்,
* கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி- காலை 10:30 க்கு கேப்டன் டிவியில்,
* தவப்புதல்வன்- காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்,
* நவராத்திரி - பிற்பகல் 1:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
* வா கண்ணா வா- மாலை 3:30 க்கு முரசு தொலைக்காட்சியில்,
* திருவருட்ச்செல்வர் - இரவு 7 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்,
* சரஸ்வதி சபதம்- இரவு 9:30 க்கு சன் டிவியில்,
* கிருஷ்ணன் வந்தான்- இரவு 10 மணிக்கு ராஜ் டிஜிட்டல் தொலைக்காட்சியில்,
* அம்பிகாபதி- இரவு 11 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில்,
Thanks Sekar