Originally Posted by
Murali Srinivas
[B]1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
மதுவிலக்கைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரோல் மாடல் மாநிலமாக தமிழகத்தை விளங்க வைத்த அன்றைய காங்கிரஸ் அரசாங்கமும் மூன்று தலைமுறை மனிதர்களை குடி என்றால் என்னவென்றே தெரியாமல் வைத்திருந்து ஆட்சி புரிந்த பெருந்தலைவரும் மூதறிஞரும் பெரியவர் பக்தவத்சலமும் கட்டிக் காத்த மதுவிலக்கு கொள்கை திராவிட தலைவர்களால் காற்றிலே பறக்க விடபப்ட்டு தமிழகமெங்கும் மதுக் கடைகள் திறக்கப்பட்ட நாள் 1971 ஆகஸ்ட் 31. தமிழக மக்களை நிரந்தரமாக "குடிமகன்களாக" ஆக்கிய அவலம் அன்றுதான் ஆரம்பித்தது. கொட்டும் மழையில் கோபாலபுரத்திற்கு ஓடோடி சென்று மதுவிலக்கை ரத்து செய்யாதீர்கள் என்று மன்றாடிய மூதறிஞரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. "என் எதிரி கூட குடிக்க கூடாது என்று நினைக்கிறவன் நான்" என்று சினிமாவில் வசனம் பேசியவர்கள், சினிமாவில் மட்டும் வசனம் பேசி விட்டு நிஜ வாழ்க்கையில் அதிகாரம் கையில் வந்த போது 7 வருடங்களாக [1974 செப்டம்பர் 1 முதல் 1981 ஜூன் 30 வரை] மூடிக் கிடந்த மது கடைகளை எல்லாம் திறந்து விட்ட காட்சியையும் தமிழகம் வேதனையோடு வேடிக்கை பார்த்தது. ஆயிற்று, 1981 ஜூலை 1-ந் தேதி அன்று திறக்கப்பட்ட கடைகள் இந்த 2014 ஜூலை 1-ந் தேதியுடன் 33 வருடங்களை கடந்து, இன்னும் செயல்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. சமூக அக்கறை உள்ள எவரும் நாளைய சமுதாயத்தை நம்பிக்கையோடு எதிர் நோக்கும் எவரும் இன்றைய இளைஞர் நிலை கண்டு வேதனையும் வருத்தத்தையும் அடைவதுதான் மிச்சம். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. மதுபானம்தான் ஆறாக ஓடுகிறது.
அன்புடன்