-
பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகிறதே..
வளையல் துண்டுகள் கண்டு நான் உடைந்துபோனேனே.. அஜித்..சோகம்..இது நான் கேட்டிராத பாட்டு..
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது... நல்லபாட்டு.. இருந்தாலும்...அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்குமிரண்டு பேருக்காக..ரொம்பப் பிடிக்கும்.. (ஹாப்பி இன்று முதல் ஹாப்பியும் கூட பூமாலைக்கு அடுத்து தான்.. ராஜ ராஜ்ஸ்ரீ ராணி வந்தாள்..ராட்சஸி குரல் (தானே) மயக்க்கும்+ எல்.விஜயலஷ்மியும் என என் சித்தப்பா சொல்லியிருக்கிறார்..!)
பூமாலையே தோள் சேரவா.. - நல்ல பாட்.. மணிரத்னத்தின் முதல் படம் என்றாலும் சில பல கமர்ஷியலாகவும் எடுத்திருப்பார்..வழக்கம்போலசவ சவ சரத்பாபு உண்டு..
பூமாலை வாங்கி வந்தன் பூக்கள் இல்லையே.. வைரமுத்துவின் கவித்துவ மிக்க வரிகள் கொண்ட பாடல்..
நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
இனிக்கின்ற விஷத்திற்குள் இறங்கிவிட்டான்..
.
கடற்கரை எங்கும் மணல் வெளியில் காதலி காலடி தேடினான்..
மோகனம் பாடிடும் வேளையிலும் சிந்துவில் ராகம் தேடினான்..
..போதையினால் புகழிழந்தான்.. மேடையில் அணீந்தது வீதியில் விழுந்திட...
*( நினைவிலிருந்து எழுதுகிறேன்.. தவறிருக்கலாம்)
நல்ல பாடல்..
பூ மாலை.. ஒரு பூவை ஆனதோ பொன் மாலை ஒரு பாடல் பாடுதோ..
நல்ல போட்டிப் பாடல்.. இறுதியில் ஜெயிக்கும் விதம் மட்டும் எனக்கு அன்றும் சரி இன்றும் சரி பிடிக்கவில்லை....வேறு ஏதாவதுயோசனை செய்திருக்கலாம்..
ஆகக்கூடி ந.பா தந்ததற்கு நன்றி கல் நாயக்..:)
-
திரு ஆதிராம் - உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி .
எதையும் எதிர்பார்க்காமல் , எதையும் சேர்த்துக்குவிக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் , இருள் நிறைந்த இந்த உலகத்தை தன் கரங்களால் விலக்கி , எல்லோருக்கும் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டிவிட்டு , தனது கடமையை சாதித்த மகிழ்ச்சியில் , மடியில் ஒரு கணமும் இல்லாமல் , நாளையும் உதயமாகி உனக்கு தன்னம்பிக்கையைத்தருவேன் என்று சிரித்துக்கொண்டே மறையும் அவனுக்கு ஒரு சிறிய , என் அறிவிற்கு எட்டிய வரை ஒரு புகழாஞ்சலியைத் தொடுக்கலாம் என்று ஆசைப்பட்டேன் - உங்கள் எல்லோருருடைய அரவணைப்பினாலும் , ஆதரவினாலும் ஓரளவுக்கு என்னால் அவனை வணங்க முடிந்தது - இதற்காக மீண்டும் எல்லோருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்ள விழைகிறேன் .
அன்புடன்
-
திரு கல்நாயக் - எப்படிசார் உங்களால் இரண்டு பெரிய பொறுப்புக்களையும் அழகு குறையாமல் எடுத்துச்செல்ல முடிகின்றது?? - நிலா பாடல்களை ரசித்து பதில் பதிவு போடுவதற்கே எனக்கு ஒரு யுகம் ஆகும் என்று நினைக்கிறேன் - நீங்கள் எழுதும் விதம் , பாடல்களை தேர்ந்து எடுக்கும் விதம் , கருத்துக்களை தொகுத்துப்போடும் அழகு - இதற்காகவே ஒரு தனி திரி தொடங்கலாம் . இனிப்பை சுவைத்து முடிப்பதற்குள் மீண்டும் புதிய இனிப்புக்குள் நுழைவது போல உள்ளது - எழுதும் ஆர்வத்தை குறைத்துக்கொண்டு நாள் முழுவதும் உங்கள் பதிவுகளை படித்துக்கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன் ( பாழாய்ப்போன வேலை குறுக்கிடுகின்றது )
பூமுடிப்பாள் ----- இந்த பாடலை உங்கள் வர்ணனையில் கேட்க்க விரும்பிகிறேன்
-
திரு k .v - அழைத்தவுடன் மற்ற எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இங்கு வந்து உங்கள் முத்திரையைப் பதித்ததற்கு மிகவும் நன்றி - உங்கள் பாராட்டுகளின் சுவையே அலாதி , தனி அழகு . மக்கள் திலகத்திற்கு நீங்கள் ரசிகர் என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல - அவருக்கு இப்படிப்பட்ட , எதையுமே அவரையே மையமாக வைத்து எழுதும் ஒரு அருமையான ரசிகர் கிடைத்ததற்கு அவருக்குக்குத்தான் அந்த பெருமை ,அவர் தான் பெருமை பட வேண்டும் . கண்டிப்பாக பெருமை படுவார் .
நன்றி மீண்டும் .
-
வாசு ஜி
இதோ ஒரு அருமையான இசையரசியின் பாடல்
https://www.youtube.com/watch?v=B_y0XQMxNiw
-
பாடுகின்ற பாவையவள் பார்வை வழியாக
ஊடுதே ஆசையும் தான்..
இளமைக் கோவில் ஒன்று இரண்டே தீபங்கள்
இரண்டும் எரிகின்றன..
உறவில் தெரிகின்றன எந்தன் கனவில் வருகின்றன..
(விஜயகுமார் நிர்மலா..வாவ் வாட் எ ரேர் காம்பினேஷன்)
https://youtu.be/pS3sX2yN3Ns
-
இரவின் மடியில்..( ராகவேந்திரரிடமிருந்து சுட்டு)
இந்த ராதாகிருஷ்ணன் காதல் என்பது ரகசியமானதல்ல
https://youtu.be/96_2vevM_Ws
சொந்தமடி நீ எனக்கு (என்ன அழகான டைட்டில்) ஜெய்ஷங்கர் ஸ்ரீப்ரியா
-
சி.க வழக்கம்போல் அருமையான நடையில் எழுதும் உமக்கு பாராட்டுக்கள்
இதோ இன்னொரு அருமையான பாடல்
https://www.youtube.com/watch?v=X7NG0PmZEds
-
வாசு ஜி,
உம்ம லட்டு இதோ
கூடவே பிரமீளா மற்றும் உன்னி மேரி
ரம்பா ஊர்வசி மேனகா
ஹம்மிங் பெண் குரல் சில நேரம் இசையரசி போலும் சில நேரம் வாணிஜெயராம் போலவும் உள்ளது
https://www.youtube.com/watch?v=25Qmd6U_qWc
-
ராஜேஷ் நன்றி.. முதலில் போட்ட கலர்ப்பாட்டு டப் படமா..ஆடி வந்த நாளிலே ஆனந்தம் கண்டோம்
ஆஹா..ரேடியோ சிலோன் பாட்டு..ரம்பா ஊர்வசி மேனகா.. நிறைய வாட்டி கேட்டிருக்கேன் இப்பத் தான் பார்க்கிறேன்..லட்டு சரி மத்தவங்களுக்கு என்ன பேராம்..:) எனக்கென்னவோ நேத்துப் போட்ட டிரம் பாட்டு நினைவுக்கு வருது :)
இந்தாங்க இன்னொரு சிலோன் ரேடியோ பாட்டு..(அடிகிகடி போடுவாங்கன்னு நினைவு..)
https://youtu.be/qQTPVO8N3Bs